-
Posts
5555 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by அன்புத்தம்பி
-
Song Title : Arokiya mathave Album : Annai Neyea ஆரோக்கிய மாதாவே உமது புகழ் பாடித் துதித்திடுவோம் -எந்நாளும் பாடித் துதித்திடுவோம் (2) அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே வசித்திட ஆசை வைத்தாயே (2) பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட அனைவருக்கும் துணை புரிந்தாயே (2)
-
-
Naam Iruvar Starring: T. R. Mahalingam, T. A. Jayalakshmi, T. R. Ramachandran, Kumari Kamala Director: A. V. Meiyappan Music: R. Sudarshanam Year: 1947 ஈருடலும் ஓர் உயிருமாகவே இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே ஈருடலும் ஓர் உயிருமாகவே இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே லாலாலலலாலா லாலாலா லாலாலலலாலா லாலாலா இருவர் : இக வாழ்வினிலே ஆனந்தம் ஈடேறு காதலே இன்பம்
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Album Name: Soundaryame Varuga Varuga Starring: Sivachandran, Sripriya Composer: Vijaya Bhaskar Album Year: 1979 இதோ உன் காதலி கண்மணி இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது ஆசை என்பது அமுதம் அதில் ஆடி வந்தது குமுதம் -
-
Bombay Saradha மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 1. வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம் பெரும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை. உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்று இருந்து தவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லை. அவர்கள் நிலை இப்படி இருக்கும் போது மிகத்தாழ்ந்த, பிழைகள் புரிந்தவர்கள் ஏதாவது பேச முடியுமா?. மிகவலிமையான பகைவர்களை அழிக்க வயிரத்தால் செய்த படைவாளினை எமனாக பற்றி எடுத்தவளான அன்னையே! உன்னை வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், வற்றாத சுனையைப் போல அருள்புரியும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 2. நீலம் மூலக் கணலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம் நீலத்திரு மேனியிலே நினைவாய் நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மூலாதாரம் என்னும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி என்னும் சக்தியே உன்னை சரணடைகிறேன்.முதலும் முடிவும் ஆனவளே உன்னை சரணடைகிறேன். அழகியே கிளி போன்றவளே உன்னைச் சரணடைகிறேன். குன்றாத ஒளியின் கூட்டாமாகத் திகழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். உன்னுடைய நீல நிறமான திருமேனியை நினைத்து தியானித்து மற்ற நினைவுகள் இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரா சுந்தரி எனும் வாலை குமரி எனக்கு காட்சி அளிப்பாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 3. முத்து முத்தே முத்தொழில் ஆற்றிடவே முன்னிற்று அருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய தனயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய் மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் குறைவறச் செய்யும் வண்ணம் கடவுளர்களுக்கு அருள் செய்த முதலான தெய்வமே, முத்தினைப் போன்றவளே உன்னை சரணடைகிறேன். எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் காரணமானவளே உன்னைச் சரணடைகிறேன். வேதங்கள், உபநிடதங்கள் என எல்லாவற்றிலும் நிலைத்து வாழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். நீயே தஞ்சம் என்று சரணடைந்த உன் மகனான எனக்கு தாயாகிய நீ என்றும் அழியாத வரத்தைக் கொடு. மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் அங்கும் இங்கும் அலையும் வாழ்வு இல்லாமல் என்றும் அழியாத வாழ்வை எனக்கு அருள வேண்டும். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 4. பவளம் அந்தி மயங்கிய வானம் விதானம் அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள் மந்திர வேத மயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே அந்தியாகிய மாலைப்பொழுது வானம் அன்னை நடனஞ் செய்யும் ஆனந்த மேடையாகும். சிந்தையாகிய மனம் மகிழும்படி வளம் பொழிந்து இந்த உலகத்தை ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ?. அன்னையே, என்தந்தையாகிய இறைவனான சிவபெருமானின் இடப்பாகத்திலும், என் மனதிலும் இருக்கின்றாய். உன்னை எப்போதும் எண்பவர்களுக்கு என்றும் மிகுதியான அருளைப் பொழிகின்றாய். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளினைக் கொண்டுள்ள அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 5. மாணிக்கம் காணக் கிடையா கதி ஆனவளே கருதக் கிடையாக் கலை ஆனவளே பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே புனையாக் கிடையாப் புதுமைத்தவளே நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாத அவளே மாணிக்க ஒளிக் கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எளிதில் காண்பதற்கு கிடைக்காத நற்கதியிவீனை உடையவளே. எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலையின் வடிவானவளே. அணிவற்கு அரிதான அழகு அணியானவளே. கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே. உன்னுடைய திருநாமத்தையும், துதிகளான பாடல்களையும் பாடமுடியாமல் குறைபடுபவர்களை நீ என்றும் நாடமாட்டாய். மாணிக்கத்தின் ஒளிக்கதிரினைப் போன்றவளே. அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 6. மரகதம் மரகத வடிவவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் சுதிஜதி லயமே இசையே சரணம் அரஅர சிவ என்று அடியவர் குழும அவர்அருள் பெற அருள்அமுதே சரணம் வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மரகத பச்சை நிறத்தினை உடையவளே உன்னை சரணடைகிறேன். தேன் பொழியும் உன்னுடைய திருவடிகளைச் சரணடைகிறேன். தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னுடைய பாதங்களை பணிய திகழ்ந்திருக்கும் அம்மையே உன்னை சரணடைகிறேன். சுதி, ஜதி, லயம் போன்ற இசையின் உறுப்புகளாகி, இசையின் வடிவாக திகழ்பவளே உன்னை சரணடைகிறேன். அரஅர சிவ என்று பாடிக் கொண்டு வரும் அடியவர் களுக்கு இறைவனின் அருள் பெறும்படி அருள்புரியும் அமுதமானவளே உன்னை சரணடைகிறேன். ஒன்பது விதமான செல்வங்களுக்கு அதிபதியே உன்னை சரணடைகிறேன். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 7. கோமேதகம் பூமேவிய நான் புரியும் செயல்கள் போன்றாது பயன் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெய சக்தி எனத் திடமாய் அடியேன் பொழியும் திறமும் கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே வருவாய் தருவாய் மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே இந்த புவியில் நான் புரியும் எல்லாச் செயல்களும், எந்த வித குறைகள் இல்லாமல் எல்லா பயன்கள் குறைவின்றி கிடைக்க வரத்தினை அருளுபவளே. தீயிலிட்டு என்னைப் பொசுக்கினாலும் ஜெயசக்தி என்று உன்னை அடியேன் சொல்லக்கூடிய வீரத்தை தாயே நீ அருளுவாய். கோமேதகமே, வானத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவே, குழலைப் போன்று இனிய வாய்மொழியினை உடையவளே, மாமேரு மலையில் வாழும் கிளியாகிய அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 8. பதுமராகம் ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாச வியாபனி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே இன்பத்தினை அருளுபவளே, இன்பத்தின் வடிவானவளே, அழகிய கண்களை உடையவளே, பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே அம்மையே. நிலையில்லாத மனநோய்களை நீக்குபவளே. அனைத்து கலைகளையும் அறிந்தவளே. சம்புவின் சக்தியான சாம்பவியே. பிறைச்சந்திரனை அணிந்தவளே. தலைவியாக விளங்குபவளே. கருநிறத் திருமேனியைக் கொண்டவளே. எல்லா விதமான அணிகலன்களும் அணிந்து இருப்பவளே. மரணமில்லா பெரு வாழ்வின் உருவே. என்றும் மங்கலகரமானவளே. அழகிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து வசிக்கும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும். 9. வைடூர்யம் வலைஒத்த வினை கலைஒத்த மனம் மருளப் பறையா ஒலிஒத்த விதால் நிலையற் எளியன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய் அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
-
ENNA சொல்லப் போகிறாய்
-
பெயர்: பக்தா குசேலா ஆங்கில பெயர்: Bhakta Kuchela மொழி: Tamil நடிகர்கள்: பாபநாசம் சிவன் , எஸ்.டி.சுப்புலட்சுமி & more இயக்குனர்: கே.சுப்ரமணியம் இசை: பாபநாசம் சிவன் தயாரிப்பு: Madras United Artist Corporation வெளியீடு: 01-01-1936
-
Starring: M. K. Radha,V. Gopalakrishnan Director: A. S. Nagarajan Music: Viswanathan-Ramamoorthy Year: 1956 அருமையான பாடல் குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம் தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம் உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Erikkarai Thottathile Ezhai Vaicha Singers : P. Susheela Lyrics : Alangudi Somu Music : Shankar Ganesh Movie : Oli Piranthathu (1980) Cast :Vijayan,Menaka ஏரிக்கரை தோட்டத்திலே ஏழை வைச்ச -
பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே… பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2)
-
மாதாவே ! துணை நீரே உம்மை மாதாவே ! துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும் ஈதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா ! ஏற்றன்பாக எமைப் பாரும்.
-
நல்ல மனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிகிறான்... அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை... ஒருநாள் அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்... ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்... அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான், அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்து வந்தார்கள்... அரசன் அவர்களிடம் இவற்றிலிருந்து இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன். ஒருவர் கடவுள் பெயரை சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்தது காரணம் என்ன? என்று கேட்டான் அரசன்... அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன்." அரசே இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான். இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால்தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான். மற்றொரு பிச்சைக்காரன். "அரசே ! இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன். ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே. அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெற முடியும் அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்... அரசன் இருவரையும் அனுப்பி விட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்... அமைச்சர் அரசனிடம், "அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி. இறைவன் அருள் இருந்தால்தான் அந்த உதவியை பெற முடியும்" என்றார் அமைச்சர்... அரசனும், "இறைவன் அருளா ? அல்லது அரசனின் அருளா ? என்று சோதித்துப் பார்க்க தீர்மானித்தான்... சில நாட்களில் அந்நாட்டிலுள்ள கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப் போவதாக அறிவித்தான்... பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர். அவர்களும் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்... அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான். அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க , வைர நகைகளை வைத்து பரிசளித்தான். கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்... சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான்... அப்போது அரசன் பெயரைச்சொல்லி பிச்சை எடுப்பவன். சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு வியப்பு தோன்றியது. " தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்க வேண்டிய காரணம் என்ன? ' என்று அரசனுக்கு தோன்றியது. உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம், "நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே, அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டான்... அந்த பிச்சைக்காரனும் "அரசே ! நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தார்கள். அதை நான் ஐந்து வெள்ளிக் காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன். அந்த ஐந்து வெள்ளிக் காசுகளை வைத்து எத்தனை நாட்கள் நான் உண்ண முடியும்? அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்து விட்டேன்" என்றான்... அதைக் கேட்ட அரசன் கோபமுற்று, "அடேய் மூடனே ! நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள். தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே. நீ அதனை வெட்டி பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!" என்று அவனை திட்டி விட்டு நகர்ந்தான்... சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பேரைச்சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்து கொண்டான்... அரசன் அவனிடம் சென்று, " ஐயா! நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா ? இப்போது எப்படி செல்வந்தனாகி விட்டீர்கள்? என்று கேட்டான்... அதற்கு அவனும் "அரசே ! நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக் காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன். அதனை சமைப்பதற்காக வெட்டியபோது. அதனுள் தங்க வைர நகைகள் இருப்பதைக் கண்டேன். இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன் என்று கூறினான்... இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெற முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான். நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அவன் அறிந்து கொண்டான்... நல்ல மனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் புரிகிறான்...
-
அரங்க ரங்கன் திருவரங்கன்
-
தவில் மற்றும் நாதஸ்வரம்
-
எனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்
அன்புத்தம்பி replied to வாலி's topic in இனிய பொழுது
Vayasu Ponnu Staring : Muthuraman, Roja Ramani, Thengai Srinivasan, Jai Ganesh, Latha. -