Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. “தியாக வானிலே பூத்த முழுநிலா! காதல் இலக்கியத்திலே புதிய உலா” என்ற தலைப்போடு புரட்சி தலைவர் நடிக்கும் படம் என அட்டகாசமான விளம்பரங்களோடு படப்பிடிப்பு தொடங்கியது. எம்.ஜி.ஆர். புதிதாகக் தொடங்கிய கட்சிப் பணியில் முழுகவனத்தைச் செலுத்தியதால் இந்த படமும் வெளிவராமல் நின்று போனது. ரவிந்தரின் எதிர்காலக் கனவு தூள் தூளாகிப் போனது.
  2. பேராசை எனும் பிணியிற் பிணிபட் டோரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர் படவேல் எறியுஞ் சூரா சுர லோக துரந்தரனே!
  3. அப்பா எந்தன் அப்பா 👍🔔❤️❤️❤️❤️❤️❤️👍🔔 உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நானும் உந்தன் உள்ள தந்தைபோலே நியூமெந்தன் செல்லமான மகனை போலே மாறி நின்றோம் இருவரும் ஒருவரானோம் காலமேனோ நம்மை பிரித்தடவிட்டது விழியிலே நீரோடு வழியெங்கம் உனைத்தேட நினைவுகள் மட்டும் துணை நிக்குதே உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நான் கொஞ்சம் தூங்கிட நீ பாடிய பாட்டும் நான் நன்றாய் வளர்ந்திட நீ பட்ட பாடும் நீ கொஞ்சம் மாறிட நான் பட்ட பாடும் மனதினில் தீயாய் வந்தென்னை வாட்ட தலைவனும் நீயே தந்தையும் நீயே அரசனும் நீயே ஆசானும் நீயே அண்ணனும் நீயே தோழனும் நீயே குழந்தயும் நியானாய் ராஜகுமாரா ஆளில்லா காட்டிலே தனியாக நின்றுவிடடேன் மீண்டும் உன்பிரிவினால் நான் குழந்தையாய் ஆகிவிட்டேன் எடுத்தடி வைத்தனிமேல் நான் அடுத்தென்ன செய்திடுவேன் வலி தாங்கி சுமை தாங்கி உனைதாங்கி நின்றேன் நீ ஏனோ உனக்கேதானோ உனக்காக எனைத்தேத்தி மீண்டும் நான் வருவேனே அப்பா எந்தன் அப்பா தடை தாண்டி ஜெயம் கொண்டு உன்பெயர் நான் காப்பேனே அப்பா எந்தன் அப்பா உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ Appa Ennum Sakaptham Studio Video Song | Nallaiya Kajeepan | A.R.Raj Production Music : ARUNAN (AP) DIRECTON : NALLAIYA KAJEEPAN Lyrics : A.R.RAJ Singer : A.R.RAJ Producer : A.R.RAJ Cinematographer : ANGUSAN Editor/ Colourist : MIRUNAN Media Sponsors : Analai Experess and Montamil.Ca • Appa Ennum Sakaptham Studio Video Son... 👍🔔
  4. 2000 ஆண்டு பழமையான இந்த விபூதி குங்கும பாத்திரத்தில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டுள்ளது இதில் தண்ணீரை ஊற்றிய உடன் அது என்னென்ன வண்ணங்கள் மாறுகின்றன அந்த அதிசயத்தை கண்டு மகிழுங்க 👍🔔
  5. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது. நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது. ” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல. இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முடிவு : நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை. 54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது. மூலம்:-https://youturn.in/factcheck/kasi-tem... 👍🔔
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.