Everything posted by ரசோதரன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் வயது போகப் போக, அப்பாக்கள் மீது பெரிய அபிமானமே பிறக்கும் என்கின்றார்கள். 'என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே தெரியும்.......' என்ற ஒரு சிறுபராயம், பின்னர் 'அவருக்கு ஒன்றுமே தெரியாது..........' என்ற இளையபராயம், கடைசியில் 'அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருந்தது........' என்று ஒரு சுற்று சுற்றி வந்து விடுவோம் போல......... ஆனாலும், ஊரிலேயே மட்டுமே வாழ்ந்த என்னைப் போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் வேறுபட்டும் இருந்தது. நான் விளையாடுவேன் என்றே வீட்டில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் எந்நேரமும் கிரவுண்டிலேயே இருந்தேன். வீட்டில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர், உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் ஒரு தகராறு வந்து, வீடு வரை விசயம் போன பின் தான், 'அட................. இவனும் விளையாடுகின்றானா...........' என்று முழித்தார்கள்................ அந்தப் பிரச்சனையிலும் 'என்னவோ................... உன் இஷ்டம்..........' என்று விட்டுவிட்டார், அப்பா......... அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருக்கின்றது............🤣.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
🤣................ நீங்கள் பரவாயில்லை, அண்ணா.......... அக்காவை உங்களுக்கு முன்னரே தெரியும் தானே........ நாங்கள் பலர் உலகத்தின் ஒரு பக்கம் என்னவென்றே தெரியாமலேயே வளர்ந்தோம்..................
-
பாட்டுக் கதைகள்
🤣.......... இரண்டு பஸ்கள் பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன போல.......... பழைய பஸ் டிப்போ கதை ஒன்று இப்ப நினைவில் வருகின்றது.......🤣. அசத்தலான படங்கள் வில்லவன்.........👍.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
மூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வரட்டும் அண்ணா இவர்களும், இந்த வடிவான பிள்ளைகளும் நிற்கும் படங்கள்................ அதே படத்தில் இவர்களை துக்கிப் போட்டு, எங்களைப் போட்டு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.............🤣. கொஞ்சம் சகிப்புத்தன்மை வேண்டும் தான் போல.................😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஸ்கண்டினேவியன் மக்கள் நல்ல மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்................ சுத்தமான அப்பாவிகளும் என்று இன்று தான் தெரிகின்றது..............🤣. இங்கெல்லாம் ஒரு தடவை ஹாய் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருப்பார்கள்...... இரண்டாவது ஹாய் சொன்னால், சுட்டாலும் சுடுவார்கள்..........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்று தெரிந்திருந்தால், பிந்திப் பிறந்து கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் போல.......................😜.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், நீங்கள் எவ்வளவு தான் ஆறுதல்படுத்தினாலும், நான் பாகிஸ்தான் கொடியை ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுவதாக உள்ளேன்................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் போக வைப்பார்.................... ஆனால் பரிசுப் பணத்தில் பாதிக்கு மேலேயே கேட்பார்...... 🤣......... நான் இன்னும் இன்னா இல்லை ஏற்கனவே அவுட்டா........
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு முதல்வருக்கு இருக்க வேண்டிய அடக்கமும், பணிவும் இல்லாததால், இன்றைய முதல்வர் முன்னால் நடந்து கொண்டு போக, பின்னால் அவருக்கு குழி தோண்டுவதாக சமூகம் முடிவெடுத்திருக்கின்றது...............🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
களத்தில் என்னுடன் போட்டியில் நிற்பவர்கள் எல்லாம் என் உறவுகள், நட்புகள், ஐயாமார்கள், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் என்றவுடன் கையில் இருக்கும் காண்டீபம் நழுவி நழுவி விழுகின்றதே........ இதில் அம்புகளை எடுத்து அவர்களுக்கு நான் எங்கே விடுவது..... என் உறவுகளுக்காக என்னையே நான் தீக்குண்டத்தில் அமிழ்த்தப் போகின்றேன்.............🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னுடைய விளையாட்டு நேரம் வந்துவிட்டது....................... அங்கே போய் விராட் கோலி போல இன்றைக்கு நல்லா விளையாடப் போகின்றேன்...........🤣. அல்வாயன் அங்கேயே நிற்பார் போல................👍.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அரியும் சிவனும் ஒன்று, இதை அறிந்தவனுக்கு முட்டை...................... என்று தொடர்வதாக இருக்கின்றேன்...........🤣. திடீரென்று கண்கள் பரந்து விரிந்து, எல்லாமே சொந்தபந்தமாகவும் தெரிகின்றது..........🤣.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
தவெகவில் பெண் ஆளுமைக்கு மட்டும் இல்லை, பல வெற்றிடங்கள் இருக்கின்றன. இன்னமும் 25 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்கவில்லை. செயலாளர்கள் கூட்டம் என்று விட்டு, அதை இப்போது பிற்போட்டுவிட்டார்கள். 'நீங்கள் கூட்டதை கூட்டுங்கள், நான் தலைமையேற்க வருகின்றேன்...........' என்று சொன்ன ரஜனியிலிருந்து ஒரு அடி முன்னுக்கு போயிருக்கின்றார் விஜய். ஆனால் இன்னும் நூறு அடிகள் போகவேண்டும் வேகமாக. நேற்று கமல் அவர் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசியிருந்தார். தான் ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி என்று சொன்னார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்றும் சொன்னார். இவர் அரசியலுக்கு வந்த போதே இதைத்தானே நாங்களும் சொன்னோம்........ என்ன ஆனாலும், நேற்று கமலின் பேச்சைக் கேட்டபோது கவலையாக இருந்தது. கமல் இறங்கிய அளவுக்கு கூட விஜய் இன்னும் இறங்கவில்லை. அவர் இறங்கி வரவேண்டும்.......... கிஷோர் தவெகவிற்கு 20 வீதம் அளவு வாக்கு வங்கி இருக்கின்றது என்கின்றார். இது உண்மையென்றால், இது ஒரு பெரிய எண். அதிமுகவின் அளவே அது தான். தவெக நடவடிக்கைகளை ஒழுங்காக்கி விரைவில் ஒருங்கிணைத்தால், அவர்கள் பலமான ஒரு மாற்றுச் சக்தியாக வரலாம். காளியம்மா போன்றவர்கள் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பார்கள்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
பையன் சார், வழமையாக எழுதுவதை போலல்லாமல் நிதானமாக எழுதியிருக்கின்றீர்கள்...........👍. பொதுவாகவே பல இடங்களிலும் விவாதங்கள் ஒரு நாயக வழிபாடு அல்லதோ கொள்கை பரப்புச் செயலாளரின் அறிக்கை போன்று இருக்கும், முற்று முழுதாக ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்திருக்கும், கருத்துகளால் நிறைந்திருக்கின்றன. என் தலைவர், என் கட்சி தப்பே செய்ய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தான் எல்லாவற்றையும் முந்தைய நிலைப்பாடாக பல இடங்களிலும் இருக்கின்றது. என்ன சாட்சி என்ற கேள்விக்கு ஆதாரம் காட்டினால் கூட, அது பொய் ஊடகம், இது உண்மையான ஊடகம் என்றும், நீங்கள் அதை நம்புவது போல நாங்கள் இதை நம்புகின்றோம் என்றும் போய்க் கொண்டேயிருப்பார்கள். நீங்கள் இன்று அங்கேயும் தப்பு இருக்கின்றது என்று சொன்னது மிக நல்லதொரு ஆரம்பம், ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு. இவர்கள் எவரும் பிரிந்து போவது நாதகவிற்கு குறுகிய காலத்தில் இழப்பே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போனது போலவோ அல்லது மஹிந்த சுதந்திரக்கட்சியிலிருந்து போனது போலவோ அல்ல. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத அல்லது மிகவும் குறைவாகவே வெளியில் தெரிந்த இளைஞர்கள் நாதகவை விட்டுப் போவதும், அதற்கான காரணம் அவர்கள் எதிர்பார்த்து வந்த நாதக இதுவல்ல என்பதும் நீண்ட காலத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும். இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும். சுற்றிவர நிற்பவர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கலாம். ஆனால் இந்த ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலிலும் இன்னும் நாலு பொதுமக்கள் தூரத்தே போய்விடுவார்கள். இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி எல்லாம் அவராக பதவி விலகிப் போகமுடியாது.................. பையன் சாரிடம் நாங்கள் சொன்னால், அவர் அவரைப் பிடித்து ஒரு சந்தைக்கு அனுப்புவார்............🤣. குல்தீப் என்றால் தெரியாது, சுப்மன் ஹில் என்றால் தெரியாது................. ஆனாலும் இந்தக் கலகலப்பிற்காகத்தானே இங்கே போட்டியில், விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது போல, நாங்கள் சிலரும் கலந்து கொள்ளுகின்றோம்................
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்கா உக்ரேனுக்கு கொடுத்த மொத்த உதவிகள் 500 பில்லியன்கள் அல்ல. இது அமெரிக்கா உக்ரேனிடம் இருந்து இலாபத்துடன் சேர்த்து எடுக்க நினைக்கும் தொகையின் அளவு. அமெரிக்கா கொடுத்தது கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர்கள். அதிலும் 119 பில்லியன் டாலர்களே கணக்கில் வந்திருக்கின்றது. மிகுதி இன்னும் அங்கே போய்ச் சேரவில்லை. அதற்கிடையில் பென்டகனில் ஆடிட்டிங் ஆரம்பமாகிவிட்டது. கொடுத்த உதவிகளில் பெரும்பங்கு அமெரிக்க ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் பாகிஸ்தானை தெரிவு செய்துவிட்டு பதுங்கி இருக்கின்றேன், எனக்கு என்ன வாழ்த்துகள், பையன் சார் .............🤣. எவ்வளவு ரன்கள் அடிக்கின்றார்கள்............... இந்த பந்து வீச்சாளர்கள் போட்டி முடிய, எங்கேயாவது தனியப் போய் அழுவார்களா.................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
'It is not over until it is over.................' என்பது விளையாட்டு வீரர்களின் ஒரு தாரகமந்திரம்.................. மனதை விடக்கூடாது.................
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். 2026ம் ஆண்டில் எந்த வெற்றிடமும் இல்லை, எந்த அலையும் இல்லை, அந்த தேர்தல் ஒரு சரியான நிலவரத்தை காட்டும் என்று நினைக்கின்றேன். அதுவரை இப்படியே போய்க் கொண்டிருப்போம்..........👍.
-
ஓயும் ஊசல்
இது பல இடங்களிற்கும் ஒரு பொதுவான பண்பு போல, வில்லவன்....... எனக்கும் இதே தெருவில் ஆரம்பத்தில் இதே அனுபவம் தான். இங்கிருந்த மற்றவர்கள் எல்லோரும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அப்ப 25 வருடங்களின் முன்னரேயே 50 வயதுகளை தாண்டியவர்கள். மிகவும் வசதியானவர்களும் கூட. 'யார் இவன் ஒரு சின்னப் பொடியன் இங்கே.......' என்ற பார்வையிலேயே ஆரம்ப காலங்கள் கடந்து கொண்டிருந்தது. உரையாடல்கள் இல்லாமல், ஒற்றை வரி அல்லது சில வரிகள் என்றும் பின்னர் மாறியது. வலியதும், கொடியதும் விதி என்பார்கள். காலம் என்றும் சொல்லலாம். சில வருடங்களின் பின்னர், தொடர்ச்சியாக ஓரிரு நாட்களுக்கு என்னைக் காணாவிட்டால், 'சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டாய்.................' என்று உரிமையாக கோபப்படுவார்கள்................... அவர்களின் பேச்சு துணை நான் தான்................. தெருவில் 12 வீடுகள், எழுதினால் சுராவின் 'ஒரு புளியமரத்தின் கதை' போல ஒரு பெரும் நாவலே எழுதலாம்...................... அவ்வளவு கதைகள் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும். அதுவே தான் சுவி ஐயா........🙏. பலதும் பொருளற்றவை போல என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாமே கடகவென்று நடந்து முடிந்து, கொஞ்சம் வேகமாகவே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேனோ என்றும் தோன்றுகின்றது............🤣
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
இது நாள் வரை பலரும் கேட்கும் ஒரு கேள்வி ஏன் அமெரிக்கா உலகம் முழுவதும் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிடுகின்றது. இந்த வாரம் வந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தின் படைபலம், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் பற்றிய கட்டுரைகள் ஒரு தெளிவைக் கொடுத்தன. உண்மையிலேயே ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்தும் வெறும் வெற்றுக் கோதுகள் தான். அவர்கள் இன்றிருக்கும் நிலையில் அவர்களால் எவரையும் எதிர்க்கமுடியாது. அமெரிக்காவின் பின்னால் பதுங்கி நிற்பது தான் அவர்களால் செய்யமுடிந்தது. இனிமேலாவது வேறு திசையில், சொந்தக் கால்களில் செல்ல முயற்சி செய்யலாம். கடந்த வாரம் ஜே டி வான்ஸ் இதையே தான் இப்படிச் சொன்னார், 'பெரியவர்களின் மேசையில் சிறியவர்களுக்கு இடமில்லை......'
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கிலாந்து மட்டும் இன்றைக்கு தோற்றது என்றால், அப்படியே அவர்கள் எல்லோரையும் கீரைச் சந்தைக்கு அனுப்பி விடுவார் பையன் சார்............
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல். இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார். சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............
-
ஓயும் ஊசல்
உயிர்களுக்கு பொதுவாகவே வயதானால் ஒரு அனுபவமும், பக்குவமும் வரும் போல.............. ஆனால் மனிதர்களுக்கு மருத்துவர்கள் சொல்ல வேண்டும், இன்னும் இத்தனை நாட்கள் தான் இருக்கின்றது என்று............ அதன் பின் தான் வரும் ஞானம்........ வயதாகிப் போனது அண்ணா....... பாய முடியாது............. நாங்களும் அப்படித்தானே.... எல்லாமே ஆடி அடங்கத்தான் வேண்டும்....................