Everything posted by ரசோதரன்
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
🤣..................... எவ்வளவைத் தான் வீடு முழுக்க நிரப்பி வைத்திருக்கின்றோம்............... பல பொருட்களை பத்து வருடங்களுக்கும் மேலாக தொட்டுப் பார்ப்பதும் இல்லை.........
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே ---------------------------------------------- என்ன சத்தம் அது எலியாக இருக்குமோ இரவிரவாக விறாண்டியதே என்று பல வருடங்களின் பின் பரணுக்குள் ஏறினேன் எலி என்றில்லை ஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும் கண்டே பிடிக்க முடியாத ஒரு காடு அது என்று அங்கே நான் விக்கித்து நிற்க 'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார் காடு வளர்த்து எலி பிடிக்க என்னை மேலே ஏற்றிய என்னுடைய கங்காணி முப்பது வருடங்களுக்கு முந்தி இருந்த வாழ்க்கையின் அடையாளம் கூட அங்கே தெரிந்தது பழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும் இந்தப் பூகம்ப தேசத்தில் தலைக்கு மேல கத்தி பரண் தான் போல மொத்தத்தையும் அள்ளி விற்றாலும் சில பணம் கூட தேறாது அள்ளுகிற கூலி நூறு அது அவ்வளவும் நட்டம் ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசை இன்னும் இது இருக்குதே என்று நினைவில் உருகி மெல்லிதாக தொட இரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தன சூட்கேசின் அடுத்த பக்கத்தில் அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால் 'என்னப்பா, அங்கே சத்தம்............ ஏதோ ஓடுதோ.................' 'காலில் தடக்கி ஏதோ சாமான் உருளுது..................' புலியையே முறத்தால் அடித்துக் கலைத்தவர்கள் அவர்கள் நான் எலியையே ஓடவிட்டவன் ஆகக் கூடாது சிஞ்ஞோரே.
- Attic.jpg
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
தேர்தல்கள் நடந்த இடங்கள் எல்லாமுமே ஜனநாயக்கட்சி செல்வாக்குள்ள இடங்களே - நியூயோர்க், நியூ ஜெர்சி, வர்ஜினியா, கலிஃபோர்னியா. ஜனநாயக்கட்சி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டாலும், ஜனநாயக்கட்சி பெற்ற அதிகமான வாக்கு வித்தியாசமே இதை ஒரு கொண்டாடும் வெற்றியாக மாற்றியுள்ளது, கோஷான். அதிபர் ட்ரம்பும், அவரது தீவிர ஆதரவாளர்களும் மம்தானியின் பேச்சை உதாரணமாக காட்டவே போகின்றார்கள். மதம் மட்டும் இல்லை, அவர் ஒரு தீவிர சோஷலிஸ்ட் என்பதும் பிரச்சாரம் ஆக்கப்படப் போகின்றது. ஆனாலும் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுகளும், பொருட்களின் விலைகளும், வேலையில்லாமல் போகின்றவர்களின் எண்ணிக்கையும் குடியரசுக்கட்சிக்கு எதிரான ஒரு பொது மனநிலையை உண்டாக்கியிருக்கின்றது போன்றே தெரிகின்றது.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், ஆளும் குடியரசுக் கட்சிக்கு சார்பானவர்கள் மிக அதிக இடைவெளிகளில் தோற்றுப் போயிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. அந்த இடைவெளியே அதிபர் ட்ரம்பையும், அவருடைய கட்சியினரையும் பதற்றப்படவைக்கின்றது. 'வாக்குச் சீட்டுகளில் என் பெயர் இல்லை. அதனாலேயே தோற்றோம்..................' என்று அதிபர் ட்ரம்ப் காரணம் சொல்வது அவரது சிறுபிள்ளைத்தனமான கூற்றுகளில் ஒன்று. நாட்டின் அதிபராக, குடியரசுக்கட்சியின் முகமாக அவர் எல்லா தேர்தல்களிலும் குடியரசுக்கட்சியின் சார்பாக நிற்கின்றார். அதிபர் ட்ரம்பிற்கு மட்டும் இல்லை, எல்லா நாடுகளிலும், ஆட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களுக்கும் இது பொருந்தும்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
மம்தானியின் முழு உரையும் கீழே இருக்கும் இணைப்பில் இருக்கின்றது. முழு உரையின் சில பகுதிகளை வெட்டி மேலே உள்ளதை உருவாக்கியிருக்கின்றார்கள். மம்தானியின் முழு உரையின் பொருள் வேறு. அவரை நியூயோர்க் மக்கள் தெரிவு செய்ததன் பின்னணியும் அதுவே. அதிபர் ட்ரம்பிற்கும், அவரது கட்சியினரின் அர்த்தமில்லாத நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலையே இன்று இங்கு நிலவுகின்றது. ஏதோ ஒன்று அல்லது சில அடையாளங்களுடன் இந்த வெற்றி மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக, இது பெரும்பாலான, வேறு வேறு அடையாளங்கள் கொண்ட மக்களின் இன்றைய அரசுக்கு எதிரான ஒரு தீர்மானம். எந்த ஊடகங்களாலும் திரிபுபடுத்த முடியாத வாக்குமூலம் ஒன்றை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். https://www.theguardian.com/us-news/2025/nov/05/zohran-mamdani-victory-speech-transcript
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
ஆசிரியர் கலாசாலை அதிபர் லலீசன் சொல்வது சரியென்று தெரியவில்லை. இலங்கை தமிழர்களின் சனத்தொகை 11.1 வீதத்திலிருந்து 12.3 வீதமாக அதிகரித்திருக்கின்றது என்றே பகிரப்பட்ட தரவுகளில் இருக்கின்றது. இது இங்கு களத்தில் கூட ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு செய்தி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையன் சாரை மட்டும் என்றில்லை............ நீங்கள் தான் தீவிரம் அதிகம் என்றாலும், 'பொட்டு வைத்த தங்கம்..............' என்று செம்பாட்டனும் அவர் பங்கிற்கு ஒரு கவிஞராகவும் களத்தில் நின்றார்....................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
❤️.................... களத்தில் போட்டியை வெகுசிறப்பாக நடத்திய கந்தப்புக்கு மிக்க நன்றி..........🙏. போட்டியில் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும். போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் மற்றும் அடுத்த இடங்களைப் பிடித்த அல்வாயன், செம்பாட்டான், ஏராளன், சுவி ஐயாவிற்கு பாராட்டுகள். போட்டியை கலகலப்பாக கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றிகள். மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் மகளிரை தனியாகவும், கிரிக்கெட்டை தனியாகவும் பார்த்து, ஒரே கல்லில் இரண்டு காய்களை விழுத்த முயன்றவர்களுக்கும் விசேட பாராட்டுகள்...................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... என்னுடைய கணிப்பின் படி தென் ஆபிரிக்கா அரையிறுதிக்கே போயிருக்கக்கூடாது.......... ஐந்தாவதாக வந்திருக்கவேண்டும்.............. நான் ஆபிரிக்காவிடம் ஏமாந்துவிட்டேன்..................🤣. அதுவென்றால் உண்மைதான்.................🤣. இந்த 'வசீ ராசி' இருக்குதே, அது ஒரு பூமி ராசி............ இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் தெரிவுகளைப் பார்த்து மஹிந்த அணி அப்படியே மயக்கமாகிப் போனார்களாம்................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
👍............. இப்ப ஞாபகத்தில் வருகின்றது.............. கோஷான் இங்கு களத்தில் ஒரு சிறு போட்டியும் வைத்திருந்தார்............... நான் ஆஸ்திரேலியாவை அன்றும் தெரிவு செய்திருந்தேன்............... என்னுடைய ராசி தான் பொல்லாத ராசி போல இருக்கின்றது, ஆஸ்திரேலியாவையே அடிவாங்க வைக்கின்றது..................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............. அப்படி நடந்தால் சந்தோசமே, அண்ணா............. ஆனால் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு கப்பை கண்டாலே வயிற்றைக் கலக்கி, தலையைச் சுற்றி, வாந்தி எடுத்து, மயக்கம் வந்து............ இது எதுவும் அவர்களுக்கு வராவிட்டால், ஒரு மழையாவது வந்து அவர்களின் வெற்றியை தடுத்து விடுமாமே..................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣........... இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றால் 'இந்திய பெண்கள் அணிக்கு வயது போய்விட்டது. இளம் வீராங்கனைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.......' என்று சொல்வார்கள் போல....................🤣. பையன் சார் வேற அங்கே ஒரு 18 வயது வீராங்கனை இருக்கின்றார், இங்கே ஒரு 20 வயது வீராங்கனை இருக்கின்றார் என்று இமயம் முதல் குமரி வரை ஒரு லிஸ்ட்டே வைத்திருக்கின்றார்...................😜.
-
🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தில்லை ஐயா! நதியின் ஓட்டத்தில் அதன் மேல் மிதந்து செல்லும் இலை போலவே வாழ்க்கை அதுவாகவே ஒரு பாதையில் போய்க் கொண்டிருக்கின்றது, அப்படியே அது முடியும் என்ற எண்ணம் இருந்தாலும், உங்களின் கவிதையில் இருக்கும் இது போன்ற வரிகள் மனதை துணுக்குற வைக்கின்றது................❤️.
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!
ஆரம்பத்தில் இளங்குமரனின் சில பேட்டிகளையும், பேச்சுகளையும், பாராளுமன்ற உரையையும் கேட்ட பின், இவர் எப்படி அந்தக் கட்சியில் ஒரு முக்கியஸ்தர் ஆனார் என்றே தோன்றியது. ஆள் சுத்தமானவர் போல, அதனால் தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் போல என்று நினைக்கவைத்தார். பின்னர் அவரின் பேட்டி, பேச்சு எதையும் பார்க்கவில்லை. அவர் இந்த விடயத்திலும் கற்றுத் தேர்வது நல்ல ஒரு விடயம்..................👍.
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
ஞானசார தேரர் மிகவும் கவலைப்படப் போகின்றார். இந்தக் கணக்கெடுப்பின் படி இஸ்லாமிய மக்களும், இலங்கை தமிழ் மக்களும் அதிகமான சனத்தொகை வளர்ச்சியினையும், சிங்கள மக்கள் குறைவான சனத்தொகை வளர்ச்சியினையும் கொண்டிருக்கின்றார்கள். தேரர் ஏற்கனவே சிங்கள மக்களை இந்த விடயத்தில் எச்சரித்து இருக்கின்றார். அவரின் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.................🤣. மலையக தமிழ் மக்களுக்கு என்னவானது............... அவர்களின் வளர்ச்சி வீதம் எப்படி எதிர்மறையானது (- 2.6)................. அவர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறவும் இல்லை........ ஒரு வேளை அவர்களில் பலர் தங்களை வேறு விதமாக அடையாளப்படுத்தியிருக்கக்கூடும். உலகெங்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சனை இலங்கையிலும் வந்திருக்கின்றது. முதியவர்களின் விகிதம் அதிகரிக்க, சிறுவர்களின் விகிதம் குறைந்திருக்கின்றது. அதிகரித்த வாழ்க்கை செலவுகளும், அதிகரிக்கும் தனிநபர் வாழ்க்கை முறைகளும்/தெரிவுகளும் இந்த இடைவெளியை இன்னும் கூட்டும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் இந்தியா இறுதிப் போட்டிக்கு போய், அங்கே ஆஸ்திரேலியாவிடம் தோற்கும் என்று தெரிவு செய்திருந்தேன்.............ஆனால் நாலு பேர்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கே போகாது என்று தெரிவு செய்திருக்கின்றார்கள்.............. இந்த உலகத்தில் எப்போதும் நாலு பேர்கள் நம்மள விட கஷ்டமான நிலையில் இருக்கின்றார்கள் போல.................😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣............... 🤣............... நான் இப்பொழுது எவருடனும் பேசும் மனநிலையில் இல்லை. சிறுவயதில், பெரும் வயதில் என்று நான் வழியே வழியே தோற்ற ஆயிரக்கணக்கான போட்டிகள் என் ஞாபகத்தில் இப்பொழுது வந்துவிட்டன. சில நாட்களின் பின் ஒரு வீடியோவை வெளியிடுவதாக உள்ளேன்......................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளேன்................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
❤️.......................... ஏராளன், பையன் சார் - நானும் ஒரு பகிடியாகவே கேட்டிருந்தேன்...............👍. கடவுள்கள் மனிதர்களை தண்டிக்க ஆரம்பித்தால், பூமியில் கை விரல்களால் எண்ணக்கூடிய மனிதர்கள் கூட மிஞ்சுவார்களோ தெரியவில்லை............ 3 x 3 = 9 என்று கணக்கு சரியாகத்தான் இருக்குது...........ஆனால் முடியாது............🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
🤣................... அதுக்காக ரத்தம் கக்குவேன் என்று என்னை வெருட்டக் கூடாது................ எத்தனை ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள், ஒரு கடல் அளவு மீன்கள்............... இப்படி ஏராளமாக சாப்பிட்டுச் சேர்த்த சுத்தமான ரத்தத்தை வீணாக்கலாமா...............😜.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆஸ்திரேலிய கடுகதிப் புகையிரதம் வந்து கொண்டிருக்கின்றது................ பார்த்து நிற்கவும்....................🤣.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதற்குப் பிறகு தானே தென் ஆபிரிக்கா அணிக்காக ஈழப்பிரியன் அண்ணா கேட்டு நாங்கள் ஒரு யாகம் செய்தோம்...................🤣. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அஞ்ஞாத வாசம் போக வேண்டியது தான்............🤣. ஆனாலும் இந்தியாவில் நம்பிக்கை இருக்கின்றது, அது எப்படியும் தோற்று விடும் என்று...........😜.
-
தவெக உட்கட்சி மோதல்
மிக்க நன்றி அண்ணா உங்களின் கருத்துகளுக்கு......................❤️. தமிழ்நாட்டில் முதலில் களையப்பட வேண்டியது சாதியப் பாகுபாடுகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லவே இல்லை, அண்ணா. தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அந்தப் பாகுபாடுகளை இல்லாதொழிக்கலாம் என்று முன்வரும் எந்த ஒரு தமிழக தலைவருக்கும் என்னுடைய பூரண ஆதரவும், பிரார்த்தனைகளும் என்றும் உண்டு. அப்படியான ஒரு தலைவர் இன்றைய தமிழகத்தில் இல்லை. இன்று அங்கு தமிழ்த்தேசியம் பேசும் தலைமைகளும் உண்மையில் குறுஞ்சாதியவாதமே பேசுகின்றார்கள். இன்று திராவிடம் என்பது அரசியலுக்கான ஒரு முகவரியே என்பதில் எனக்கும் முழு உடன்பாடே. ஊழலும், லஞ்சமும், இவற்றை ஒரு சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளும் அன்றாட வாழ்க்கை முறைகளும் கூட தமிழகத்தில் மாற்றப்படவேண்டும். ஊழல் என்னும் போது எல்லாமே ஊழல் தான் - 120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாவிற்கு விற்கும் முதல் நாள் - முதல் காட்சி கூட ஊழலின் ஒரு வடிவம் தான். ஒரு சமூகத்தின் தலைவர்களுக்கு பொதுவெளியில் அடிப்படை நாகரிகம் இன்றியமையாத ஒன்று. பல தலைவர்கள் இதை ஒரு பொருட்டாக நினைப்பதேயில்லை. மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று மனதார விரும்புகின்றேன். காலப்போக்கில் இது ஒரு கட்டுக்கடங்காத கும்பல் மற்றும் பழங்குடிகளின் மனநிலையை சமூகத்தில் உண்டாக்குவது மட்டும் இல்லாமல், கும்பல் மனநிலையே சரியான ஒரு பாதை என்ற ஆபத்தான எண்ணத்தையும் உண்டாக்கிவிடுகின்றது. இலங்கையில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும், இஸ்லாமிய மக்களும் ஒரே தெரிவுகளை முதன்மையாகக் கொண்டவர்கள் அல்லர். தமிழ் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின் இன்றைய மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனை பிரதானமானது. சிங்கள மக்களுக்கு அன்றாட வாழ்க்கையும், அன்றாட நுகர்வுகளும் பிரதானமானது. இஸ்லாமிய மக்களுக்கு அவர்களின் மார்க்கமும், வியாபாரமும் பிரதானமானது. ஒவ்வொருவரின் பெரும்பாலான முயற்சிகளும் அவர்களின் தெரிவுகளை நோக்கியே இருக்கின்றது. நிச்சயமாக இவர்களில் ஒருவர் இன்னொருவரை விட சிறந்தவர் அல்லது திறமைசாலி என்பதற்கு இங்கு இடமில்லை. உலகெங்கும் மொழிவாரிக் கொள்கைகளே நாடுகளிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றன என்பது மிகச் சரியான கூற்று, அண்ணா. இவ்வளவு பெரிய ஜனநாயக தேசமான அமெரிக்காவில் கூட ஆங்கிலத்தையே ஒரு ஒற்றை மொழியாக முன்னிறுத்துகின்றார்கள். சீனாவில் அதன் பிரதேச மொழிகளே வெளி உலகில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன. இதுவே தான் ரஷ்யாவிலும். தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி கொள்கைகளை வகுப்பதில் பிழையேதும் இல்லை, மாறாக அது தேவையான ஒன்றும் கூட. ஆனால் 'உன்னுடையா அப்பா தமிழ் இல்லை............. உன்னுடைய தாத்தா தமிழ் இல்லை................ ஆகவே நீ தமிழ் இல்லை.............. நீ இங்கு வாழலாம், ஆனால் ஆளக்கூடாது................' என்பன போன்ற நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை இல்லை, அண்ணா.
-
இனிய தீபாவளி
❤️................... எனக்கு பத்து வயதளவில் இருக்கும் போது வீட்டில் ஒரு கோழி வாங்கிக் கொடுத்தார்கள். அப்பொழுது மூன்றோ நாலு மாதக் குஞ்சு. மஞ்சள் நிறத்தில் வெள்ளை வெள்ளைப் புள்ளிகள் போட்டது. இன்றுவரை வாழ்நாளில் நான் கண்டவற்றில் மிக அழகானவற்றில் இதுவும் ஒன்று. இந்த கோழியிலிருந்து எத்தனையோ கோழிகளை உருவாக்கினோம். ஆரம்பத்தில் கமபர்மலைப் பகுதிக்கு போய் அடைக்கு முட்டைகள் வாங்கியதை தனிக் கதையாகவே எழுதலாம். அப்பொழுது அங்கு பலர் முட்டைகளை குலுக்கிவிட்டே கொடுப்பார்கள்...............😒. தளும்ப தளும்ப இறைச்சியையும் முட்டைகளையும் சுமந்து கொண்டு முற்றத்தில் உலாவித் திரிந்தது இந்த 'ஆதித்தாய்' எங்கள் வீட்டில் அன்று.......................