Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣..... அச்சு அசலாக இதே போல ஒரு குளம் தீருவில் வயல்களின் நடுவிலும் இருக்கின்றது. அதன் முந்தைய பயன்பாடும் நீங்கள் சொல்லியிருப்பது போன்றே. பின்னர் அங்கே தூபி கட்டப்பட்டு, அருகில் இருக்கும் வயலூர் முருகன் கோவிலும் பெரிதான பின், குளம் சுத்தமாகியது. அந்த நாட்களில் ஜப்பான் மீன் குஞ்சுகளை யாரோ வருடா வருடம் அந்தக் குளத்தினுள் விடுவார்கள். பின்னர் ஒரு நாளில் போய் வளர்ந்த மீன்களை பிடிப்பார்கள். குளத்து மீன் என்று நாங்கள் பலர் ஒதுங்கி விடுவோம். தமிழ்நாட்டில் நடக்கும் மீன்பிடித் திருவிழா போல. நன்னீர் மீன்கள் கடல் மீன்களை விட சிறந்தவை என்று சில தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இவர்கள் கடலே பார்க்காதவர்கள் போல என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
  2. 🤣..... இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது..... ஆதவன் அந்தச் செய்தியில் 'மனித குளம்' என்று எழுத்துப்பிழை விட்டு இருப்பார்கள். அங்கேயிருந்து தான் 'அமீபா குளம்' என்ற இந்த தலைப்பு உருவானது...
  3. 👍.... வேற யாரும் எங்களை அப்படிக் கேட்டால், 'நீங்க தான் அடுத்த ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கும்....' என்று ஒரு எதிர்க் கேள்வி கேட்டு விடுவோமே....🤣
  4. 👍... அடி வாங்கிப் பறந்து போய் விழுகிற தமிழ்ப்பட அடியாட்கள் போலவே செய்கின்றார்கள்..... நடிப்புத்தான்...
  5. அமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின்றது என்று செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பயப்பட வேண்டாம், இது எல்லோரையும் தாக்காது என்கின்றார்கள். மூளை இருப்பவர்களை மட்டும் தான் இது தாக்கும் என்று சொல்ல வருகின்றார்களா என்று குறுக்குமறுக்காக யோசிக்கக்கூடாது. அழுக்கு நீரில் குளித்தால், அதுவும் அதில் ஒருவரையோ அல்லது மிகச் சிலரையோ மட்டுமே இது தாக்குகின்றது. அழுக்கு நீரில் இருக்கும் அமீபா மூக்கினூடு அல்லது வாயினூடு உள்ளே போய், மூளை வரை போகும் என்கின்றனர். மாரியில் பெய்யும் மழை தான் ஊர்க் கோவில் குளங்களின் ஒரே ஒரு நீர் ஆதாரம். எந்தக் குளத்திலும் இயற்கையாக நீர் ஊற்று இருந்ததை நான் காணவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெய்யும் மாரி மழையில் கோவில் குளங்கள் நிரம்பும். சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம். குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தில் ஏறிக் குதிப்பது, கோவில் கூரையில் ஏறிக் குதிப்பது, எல்லாப் படிகளையும் நீளவாக்கில் தாண்டிக் குதிப்பது என்று மூளை கெட்ட தனமாக பலவற்றைச் செய்திருக்கின்றோம். ஒரு குளத்தின் அருகில் நின்ற கத்தேக்க மரத்தில் உயரத்தில் பலகையை கிடையாக கட்டி, அதில் இருந்து துள்ளிக் கூட குதித்திருக்கின்றோம். அமீபாவும் அங்கு குடியிருந்திருக்க வேண்டும் இப்பொழுது தெரிகின்றது. நிற்கும் அழுக்குத் தண்ணீர், இளஞ்சூடு என்று அமீபா வளர்வதற்கேற்ற எல்லா காரணிகளும் சரியாகப் பொருந்துவது மட்டும் தான் ஒரு காரணம் என்றில்லை. 'உன்ரை மூளையும் இரும்புச் சூளையும் ஒன்று............' என்று திட்டுகள் பல தடவைகள் விழுந்திருக்கின்றது. அமீபா தான் ஒரு பகுதியை எடுத்து விட்டதோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கின்றது. 'உங்களுக்கு மூளையே இல்லை.............' என்று இன்று அடிக்கடி வரும் வரியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. ஐந்தாம் வகுப்பில் இருந்த வருடம். ஒரு கோவிலின் ஐயர் மகனும் எங்களின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பெரிய கோவில் ஒன்றிலும், சில சின்னக் கோவில்களிலும் அவர்களின் குடும்பம் பூசை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய கோவில் குளத்தில் எங்களுடன் குளித்தான். பல மணி நேரங்களின் பின், போதும் என்று நாங்கள் வெளியில் வந்து விட்டோம், அவன் வரவேயில்லை. குளித்துக் கொண்டேயிருந்தான். பின்னர் சில நாட்கள் சின்ன ஆஸ்பத்திரி, பெரிய ஆஸ்பத்திரி என்று படுக்கையில் கிடந்தான் ஐயர் நண்பன். அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டான். சன்னி ஆக்கி விட்டது என்று ஊரில் சொன்னார்கள். சிறுவர்களுக்கு என்று இருக்கும் இடுகாட்டில் ஒரு பெரிய சமாதி அவனுடைய பெயரில் கட்டினார்கள். இன்றும் அது அங்கே இருக்கின்றது. சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.
  6. எல்லோரும் ஃபுட்பால் பார்க்கிறாங்களே என்று நானும் பார்ப்பமே என்று தேட............ இது தான் என் தேடலில் வந்தது.......🤣
  7. ஒரு புறம் ஆதவன் மறு புறம் தமிழ்வின் இரண்டுக்கும் நடுவே அழகிய தமிழ்.........
  8. 🤣...... அப்ப பஸ்ஸூக்குள்ள இருந்த சிலர் பின்னர் ஒரு நாளில் இப்படி எதிர்க்கட்சி சாட்சிகளாக மாறுவார்கள் என்ற அறிவு அப்ப இருக்கவில்லை......... ஒருவருக்கு பெண் நிச்சயமானது. என் நண்பன் ஒருவனுக்கு அந்தப் பெண் உறவினர். பெண் வீட்டார் பேசிய மாப்பிள்ளை எப்படி என்று நண்பனை விசாரித்தனர். 'அந்த ஆளுக்கு அக்காவை கட்டிக் கொடுப்பதை விட நீங்களே அக்காவை கிணத்துக்குள்ளே தள்ளி விடலாம்..........' என்ற மாதிரி நண்பன் நன்னடத்தை சான்றிதழ் ஒன்று கொடுத்தான். கல்யாணம் நின்று போனது........ அந்த மாப்பிள்ளையாகி இருக்க வேண்டியவர் 'எவண்டா, அவன்..........' என்று கொலைவெறியுடன் என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தார்..........
  9. நன்றிகள் ஜஸ்டின். நல்ல காலம், நாய் பூனைகளில் இந்த ஜீன்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மரத்திற்கு மேலே இருந்து ஒன்று சவால் விட, மரத்திற்கு கீழே இருந்து இன்னொன்று பதில் சவால் விட.......... எப்படி இருக்கும் இவை எல்லாம் பேச ஆரம்பித்தால்.......😀.
  10. 🫣.......... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் ஆதவனை சரியாக 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி நேரடியாகத் தாக்குவதற்கு 50 வீதம் சாத்தியம் இருக்கின்றது............... இந்த விண்கல் பற்றிய நாசாவின் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது. 2068இல், அது கூடமிகக் குறைந்த சாத்தியமே, பூமிக்கு அருகே வருவதால் ஒரு தாக்கம் இருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். அந்த விண்கல்லை ஈலான் மஸ்க்கே தனியாளாக சமாளித்து விடுவார்........ ஆனால் இந்த ஆதவனை எவராலும் சமாளிக்க முடியவே முடியாது............🤣. https://science.nasa.gov/solar-system/asteroids/apophis/
  11. 🤣........ வெறும் அப்சவேர்ஷன் தானுங்க.......... மற்றபடி இந்த ஏரியாவிற்கு சுத்தமாக லாயக்கில்லாத ஆளுங்க.......
  12. ஒருவர் தன் தந்தைக்கு உணவு கொடுக்கும் சட்டியை அவரின் மகன் பாதுகாப்பாக எடுத்து வைக்கும் ஒரு நிகழ்வு ஒரு பிரபல சிறுகதையில் இருக்கின்றது. அதன் இன்னொரு வடிவம் இது. சொல்லிச் சொல்லி தீராது மனித வாழ்வில் அறம்.........
  13. 🤣........... 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........
  14. ❤️..... இவைகளும் கதைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.... அவைகளின் சைஸிற்கு ஒரு கதை வேற....🤣
  15. அவருக்கு சுவாசம் சம்பந்தமான ஒரு நோய் ஏற்கனவே இருந்தது என்றும், கோவிட் தொற்றால் வந்த பாதிப்பில் இருந்து பல காலம் மீள முடியாமல் அவதிப்பட்டார் என்றும் இருந்தது. பின்னர் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கக்கூடும்.
  16. ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள். பனம் ஓலைகளை, இவை மாடுகளிற்கு, ஒரு வண்டிலில் பின்னேரங்களில் பொலிகண்டிப் பக்கம் இருந்து கொண்டு வந்து விற்பார்கள். அதையும் ஊரவர்கள் வாங்குவார்கள். நீங்கள் சொல்லும் இந்தச் சின்னக் கிளிகள் பலவற்றை இங்கு கடைகளில், சந்தைகளில் பார்த்திருக்கின்றேன். ஆஸ்திரேலியாவில் இவைகளில் சில வகை சுதந்திரமாக பறந்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கு ஒரு பறவைகள் பூங்காவில் எத்தனையோ வகையான இந்தச் சின்னக் கிளிகள் இருக்கின்றன. கை பெருவிரல் அளவில் கூட அங்கு பச்சைக் கிளிகள் இருக்கின்றன. பல தனி வெள்ளை மயில்களும் அங்கு நின்றன.
  17. 🤣........... ஒரு 'ஆடு ஜீவிதம்' கூட எழுதலாம்.......... பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பருத்தித்துறைச் சந்தையிலிருந்து ஆட்டுக்கு குழை வாங்கி வரவேண்டும். அதில் இரண்டு சிக்கல்கள்: முதலாவது, அந்தக் கூட்டத்தில் குழையையும் காவிக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது. இரண்டாவது, 'என்னடா, உங்கள் ஊரில் குழையும் கிடையாதோ........' என்ற வேறு ஊர் நண்பர்களின் கேலி...........🤣
  18. 🤣.... அவர்கள் இரண்டு பேரும் தான் அந்த ஜோடி....👍 இந்த படம் முதலில் வந்த போது நான் பிறக்கவேயில்லை.....😀.
  19. 🤣..... பொய் என்று சொன்னால் பிரச்சனை வந்தாலும் வரும் போல.... பல ரசிகர்கள் இங்கே இருப்பார்கள்....
  20. லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........' என்று ஒரு பாடலுக்கு சுற்றி சுற்றி துள்ளிக் குதித்து ஆடுவார். கண்ணை கடகடவென்று வெட்டுவார். அவர் முகத்தை குளோஸ்அப்பில் காட்டுவார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும். எலுமிச்சை நிற எம்ஜிஆருக்கு சோடியாக கலர்ப் படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு ஒப்பனையை கன்னடத்து பைங்கிளிக்கு செய்தார்கள் போல. படம் பார்த்த பின், எப்படியாவது லவ் பேர்ட்ஸ் வாங்குகின்றோம், வளர்க்கின்றோம் என்று முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதியும், காசும் கேட்கும் போது இன்னும் மேலதிகமாகவே சொன்னோம் - வாங்குகின்றோம், வளர்க்கின்றோம், பெருக்குகின்றோம், விற்கின்றோம் என்று. வீட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவர், வழமை போலவே, இதையும் நம்பவில்லை. மற்ற பொறுப்பாளர், அவரும் வழமை போலவே, இதையும் நம்பினார். முதலில் கூடு செய்தோம். தச்சு வேலை தெரிந்தவர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவர் அவருக்கு உதவியாளர்கள். அப்பொழுது கூட்டுக் கோழி வளர்ப்பது சரியான பிரபலம். கோழிக் கூடு செய்தது போக மிகுதியாக 'கோழி வலைகள்' சில தெரிந்தவர்களிடம் இருந்தது. இலவசமாகவே கொடுத்தார்கள். யாழ் கொட்டடியில் இருக்கும் ஒருவர் தான் மிகப் பிரபலமான லவ் பேர்ட்ஸ் விற்பனையாளர் என்று அறிந்து அங்கு போனோம். அவர் வீட்டில் இரண்டு கூடுகள். இரண்டும் பெரியவை. ஒன்றுக்குள் விற்பதற்கென்றே நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார். இன்னொன்றில் அவரின் ஆசைக் கிளிகள். அவை விற்பனைக்கு இல்லை என்றார். மொத்தமாகவே இரண்டு தான் வாங்கப் போயிருந்தோம். எப்படி ஆண், பெண் பார்ப்பது என்று தெரியவில்லை. கோழி, சேவல் போல தெளிவாக வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. அவரே சொல்லித் தந்தார். மூக்கின் நிறம் தான் அந்தச் சூத்திரம். நீல மூக்கு ஆண், வெள்ளை மூக்கு பெண். ரோஸ் கலர் மூக்கும் வரும், அதுவும் பெண் தான். ஒரு நீல மூக்கும், ஒரு வெள்ளை மூக்கும் சிமெந்துப் பைக்குள் போட்டுக் கொடுத்தார். இரண்டிலிருந்து நாலாகி, நாலிலிருந்து பதினாறு ஆகி என்று பவளக்கொடி போலவே சிந்தனை ஓடியது. பலர் வந்து பார்த்து போனார்கள். ஊரில் எவரிடமும் லவ் பேர்ட்ஸ் இருக்கவில்லை. கொட்டடியில் ஒரு குவியலாக இவை இருக்கின்றன என்ற விபரமும் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திணை மட்டும் தான் சாப்பிடும், சாமை சாப்பிடாது என்று நாங்கள் கொடுத்த விளக்கம் கேட்டு அவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறை. எது திணை, எது சாமை என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய இயற்கை அறிவாகிக் கொண்டிருந்தது. லவ் பேர்ட்ஸ் சோடி மாறாது, அவை ஒன்று போனால் மற்றதும் போய் விடும் என்ற விளக்கமும் நன்றாகவே விலை போனது. ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. கோழி வளர்த்திருந்தாலும் வீட்டிற்கு ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஒரு பொறுப்பாளர் அடிக்க வந்தார். 'பிள்ளைகள் ஆசைப்பட்டுதுகள்.......' என்று மற்ற பொறுப்பாளர் அன்றும் காப்பாற்றிவிட்டார். அந்தக் குருவிகள் லவ் பேர்ட்ஸ் இல்லை என்று வளர்ந்த பின்னர் தெரிய வந்தது. 'அன்பே வா' படத்தில் அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். அந்தக் குருவிகள் பரகீட். லவ் பேர்ட்ஸ் என்பவை வேறு. ஆனாலும் எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.
  21. 🤣........... கடவுளும் இறங்கி வந்து எத்தனை அதிபர்களிடம் தான் தனித்தனியாக 'சரி சரி, போதும் போதும், காணும் போங்கோ....' என்று சொல்ல முடியும்? எவரும் ஒரு தடவை வந்தால், அதற்குப் பிறகு விட்டு விட்டுப் போக மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்களே. நல்ல காலம் அமெரிக்காவில் இரண்டு தடவைகள் தான் என்ற அரசியல் சட்டம் ஒன்று இருக்கின்றது. இவர் மீண்டும் வந்தாலும் இங்கு ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. 'கடுமையான குளிர்' என்று ஜோ சொல்லவில்லை, தனக்கு தடிமன்/ஜலதோசம் என்று தான் சொல்ல வந்தவர். மொழிபெயர்ப்பில் ஜோவின் தடிமன் அமெரிக்காவில் கடும் குளிர் என்று ஆகிவிட்டது. இங்கு கோடை காலம்.........வெயில் பல இடங்களில் உச்சியை பிளக்கின்றது..........🤣 ஜோ தன்னால் இப்பொழுது 110 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஓட்டம் ஓட இயலாது, ஆனால் மற்றபடி எல்லாம் செய்ய முடியும் என்றும் சொன்னார்............ முக்கியமாக ட்ரம்பை தன்னால் வெல்ல முடியும் என்று சொன்னார்......😜.
  22. 😔.......... ஆழ்ந்த இரங்கல்கள். 2016ம் ஆண்டில் இவரின் 'கம்பிகளின் மொழி' என்னும் முதலாவது நூல் வெளியிடப்பட்டது. 'குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை' என்னும் நூலை எழுதி முடித்துள்ளார், இன்னும் வெளியிடப்படவில்லை.
  23. 🤣.......... கிட்டக் கிட்ட வந்திட்டீர்கள்........... 'சிலுப்பா ராயர்' என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.
  24. 🤣.... அந்தக் கண்ணாடிக் கூரை.... தள்ளி நின்று சில தடவைகள் பார்த்திருக்கின்றேன்.....
  25. மருத்துவர் கேதீஸ்வரவின் பிறந்தநாள் விழா, 60வது என்று நினைக்கின்றேன், ஒரு இரண்டு மாதங்களின் முன் கொண்டாடப்பட்டது என்று ஞாபகம். அப்பொழுது அவரின் சேவைகளைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றைப் பார்த்திருந்தேன்................ எல்லாமே பொய்யா.......?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.