வெம்பகோட்டை அகழாய்வு: 6000 ஆண்டு அபூர்வ கற்கள் கண்டெடுப்பு - புகைப்படங்கள்..!
புதுப்பிக்கப்பட்டது 08 Nov 2024 14:25 IST
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்கள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது.
இந்த அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட, 2600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கற்கள் அந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடவும், கற்கருவிகள் தயாரிக்கவும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ''இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றும் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறினார்.
https://tamil.indianexpress.com/tamilnadu/vembakottai-excavation-unearths-6000-year-old-rare-stones-discovered-tamil-news-7564767