Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  15528
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

 1. IMF கடன் வசதியை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும்: Fitch Ratings தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும், கடன் மீள்கட்டமைப்பை மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. IMF இலங்கையின் கடன் சுமையை 'தாங்க முடியாதளவு' உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிருந்து 15% ஆக உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய வரி பதிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. ''அரசாங்கத்திற்கு மூலதன செலவினை குறைக்க சில வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதன் தேவையற்ற செலவினம் மிக அதிகம். கூடுதல் வருவாயை அதிகரிப்பது நிதி ஒருங்கிணைப்பின் முக்கிய உந்துதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க சமூக செலவினங்களை மறு ஒதுக்கீடு செய்வதாக வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது'' சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தாலும் அரசியல் ஸ்திரத்தன்மை IMF நிதி வழங்கலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுக்க கூடுதல் சமூகச் செலவுகள் போதுமானதாக இருக்காது எனவும் அரசாங்கத்தின் பொது ஆதரவு பலவீனமாகத் தோன்றுவதால், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மீட்சியானது வலுவான நிதி ஒருங்கிணைப்பால் கட்டுப்படுத்தப்படும் எனவும் Fitch Ratings நிறுவனம் கூறியுள்ளது https://aruvi.com/article/tam/2022/09/02/47485/
 2. பெருவெள்ளத்தில் கரைந்துவிடுமா சிறு துளி? ஐஎம்எஃப் நிதி உதவி இலங்கையை காக்க முடியுமா ? கொழும்பு: இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அந்நாடு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் 48 மாத காலத்திற்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.23 ஆயிரம் கோடி) நிதி இலங்கைக்கு கிடைக்கும். இந்த நிதி நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிதி இலங்கை அரசின் கைகளுக்கு கிடைப்பதற்கே சுமார் 6 மாத காலம் ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்பு ஏறத்தாழ இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் சமீப நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏற்கெனவே நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிவிட்ட நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக செயலாற்றி வருகிறார். ஆனாலும் இலங்கை இந்த பாதிப்புகளிலிருந்து முற்றிலுமாக மீளவில்லை. இலங்கையின் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவிகிதமானோர் உணவு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மேலும், ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் உண்பதற்கு வசதியாக உணவைத் தவிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது. வேலையின்மை, வருவாய் இழப்பு, ஊதிய பற்றாக்குறை, பணவீக்கம், இவையெல்லாம் அந்நாட்டில் உள்ள மக்களையும் உள்நாட்டு போரின்போது அகதிகளாக சென்று மீண்டும் நாடு திரும்பியவர்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதி பேரை வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான இந்திரஜித் குமாரசுவாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மின் கட்டண உயர்வு தற்போது இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இந்திரஜித் இந்த கூற்றை கடந்த ஜூலையில் கூறியிருந்தார். அப்போது நாட்டின் பணவீக்கம் பணவீக்கம் 66.7 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் தேசிய உணவுப் பணவீக்கம் 82.5 சதவீதமாக இருந்தது. அரசுக்குச் சொந்தமான இலங்கை மின்சார சபை கடுமையான கடனில் இருந்ததாலும், தொடர்ந்து இந்த கடனிலும் மின்சாரம் தயாரித்ததாலும் இதனை ஈடுகட்ட மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. அரசும் இதனை அங்கீகரித்தது. தண்ணீர் கட்டணம் உயர்வு இதுபோன்று எரிபொருள், தண்ணீர் என எல்லாவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்த நிலையில் நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க சில தொண்டு நிறுவனங்களும் உருவாகின. ஆனால் தொண்டு நிறுவனங்கள் நடத்துபவர்கள் உலகம் முழுவதும் இருந்து நிதி பெற்றாலும் அவர்களால் உணவு விநியோகத்தை தொடர முடியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் சத்துள்ள உணவு விநியோகத்திற்கான சாத்தியம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வருமானம் இழப்பு மாணவர்களின் உணவுக்கான நிதி ஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு இரு மடங்காக உயர்த்தி இருந்தாலும், அது போதுமானதாக இருக்கவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் எரிபொருள் விலை விண்ணை தொட்டுள்ளது. பொதுவாக வாரத்திற்கு தோராயமாக 82 அமெரிக்க டாலர் (ரூ.6,533) வரை வருமானம் ஈட்டும் வண்டி ஓட்டுநர் இந்த விலையுயர்வு காரணமாக வெறும் 14 அமெரிக்க டாலர் மட்டுமே வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளார். இந்திய மதிப்பில் இது வெறும் ரூ.1,115 மட்டுமே. வேளாண் தொழில் இலங்கையின் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் முயற்சியாக, பால் பொருட்கள் மற்றும் மின்னணு சர்வர் உபகரணங்கள் உட்பட 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் காலவரையின்றி தடை விதித்தது. இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இன்னும் தெரியவில்லை. உணவு பொருட்களை பொறுத்த அளவில் கோழி முட்டை விவசாயம் பிரதானமாக இருந்து வந்த நிலையில் அரசு அதற்கும் விலையை நிர்ணயித்தது. இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டையை உற்பத்தி செய்ய தோராயமாக 50 ரூபாய் ஆகும் நிலையில் அரசு 1 முட்டைக்கு 43 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகள் திணறி வருகின்றனர். கால்நடை வளர்ப்பு தீவன செலவுகளும் அதிகரித்துவிட்டதால் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் பெரும் சிக்கல் மேலெழுந்துள்ளது. உள்நாட்டில் பரவலாக கிடைக்கும் சோளம் கூட தற்போது கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோழி பண்ணை வைத்துள்ளவர்கள் அதனை தொடர்ந்து நடத்த முடியாமல் அதை மூடி வருகின்றனர். இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து உதவியை பெற இலங்கை அரசு தொடர்ந்து முயன்று வந்திருந்தது. பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் தற்போது இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஊழியர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இலங்கை தனது நிரந்தர நிதி மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்களையும் நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வரி வருவாயை உயர்த்துதல், எரிசக்தி விலைகளை உயர்த்துதல், அதனால் செலவுகளை ஈடுகட்டுதல், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மத்திய வங்கி மற்றும் நாணயக் கொள்கை ஆணையத்தின் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் ஆகியவை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதில் முக்கியமானதாகும். எதிர்காலம் இவ்வளவு நிபந்தனைகளுடன் வழங்கப்படும் கடன் உடனடியாக கிடைத்துவிடாது. எப்படியாயினும் இது இலங்கை அரசின் கைகளில் கிடைப்பதற்கு 4-6 மாதங்கள் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த தொகையானது இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சிறுதுளிதான் என்றாலும் அதனை வைத்து தொடர்ந்து முன்னேறுவது அரசின் கடமையாகும். இலங்கைக்கு வெளிநாட்டு கடன் தற்போது 51 பில்லியன் டாலர் இருக்கிறது. இதில், 28 பில்லியன் டாலரை வரும் 2027 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/colombo/how-will-sri-lanka-use-the-imf-aid-473823.html
 3. இலங்கையின் இறையாண்மை மீறப்படுவதை சீனா எப்போதும் சகித்துக் கொள்ளாது - சீன தூதர் ஷி ஷென் ஹொங்.! சில நாடுகள் அருகில் இருக்கலாம் அல்லது தொலைவில் இருக்கலாம். பல்வேறு அடிப்படையற்ற காரணங்களை முன் வைத்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மிதித்து, அசௌகரியங்களுக்கு அவை உள்ளாக்கி வருகின்றன" - என்று சீனத் தூதுவர் ஷி ஷென் ஹொங் கூறியுள்ளார். சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின் ஊடாக அவர் இதனைத் தெரியப்படுத்தியுள்ளார். "இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாட்டு மீறப்படுவதை சீனா எந்த சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது. நாங்கள் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமை சம்பந்தமாக பேசப்படும். ஏற்கனவே இலங்கை மக்கள் கடும் பொருளாதார மற்றும் மனிதாபிமான கஷ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இந்தநிலையில், எப்போதும் மனித உரிமை சம்பந்தமாக உபதேசம் செய்யும் நாடுகள் உண்மையில் இப்போது என்ன செய்ய போகின்றன என்பது தெரியாதுள்ளது" - என்றும் சீனத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார் https://aruvi.com/article/tam/2022/08/27/47149/ டிஸ்கி : இப்படியே உருட்டி மிரட்டிகிட்டு இருந்தா மால தீவு பக்கம் போய்டுவேன் ..ஆமா..
 4. ஒரே வெங்காயம் , உருளை என்று சலித்து போனவர்களுக்கு .. காளான் சமோசா..
 5. சீன நிறுவனத்திடமிருந்து உரமும் இல்லை, பணமும் இல்லை - நிர்க்கதியான இலங்கை.! சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சீனா உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாம் திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக சீன நிறுவனம் வேறு உரம் எதனையும் வழங்க இதுவரை முன்வரவில்லை. இது தொடர்பான நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையிலான குழுவினர் அந்நிறுவனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது பலனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சியாக குறித்த நிறுவனத்திடம், திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக இரசாயன உரம் கோரப்பட்ட போதும் அதற்கு இணங்கவில்லை. எமது தரத்துக்கு அமைய உரம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அவற்றை சரியான தர மதிப்பீடுகளுக்கு உற்படுத்தக்கூடிய வசதிகள் எமது தர நிர்ணய நிறுவனத்திடமில்லை. நாட்டுக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமக்குரிய பெருந்தொகையான டொலரை வெளிநாட்டில் செயலற்ற வகையில் வைத்திருப்பது நாட்டுக்கு பாரிய நட்டம். இந்த விடயத்தில் இவற்றை தவிர என்னால் வேறு எந்த முயற்சிகளையும் செய்யமுடியாது. எனவே, நீதிமன்றத்தின் ஊடாக இதற்கான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார். https://aruvi.com/article/tam/2022/08/24/47016/ டிஸ்கி :
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.