அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது. மகாபாரதத்தில் துரியோதனனின் நண்பன் அஸ்வத்தாமனுக்கு சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்..