Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. நினைவு இல்லமாக்குக - வருங்கால சந்ததிகள் பார்த்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
  2. மழைகாலம் - சளி இருமலை விரட்டும் முசு முசுக்கை இலை தோசை..
  3. பெங்கல் புயல் இம்சைய விட இவுங்க (சானல்) இம்சை தாங்க மிடியல .. அரசியல்வியாதியல் வழமை போல வெட்டிய மடித்து கட்டி வெள்ளம் பார்க்க வெளிக்கிட்டினம் ..
  4. இதுவரை யாரும் கேள்விபடாத கீரை - வண்டி கீரை பிரட்டல்..
  5. வெம்பகோட்டை அகழாய்வு: 6000 ஆண்டு அபூர்வ கற்கள் கண்டெடுப்பு - புகைப்படங்கள்..! புதுப்பிக்கப்பட்டது 08 Nov 2024 14:25 IST வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன்கள் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வில் இதுவரை உடைந்த நிலையிலுள்ள சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச்சில்லு உள்ளிட்ட, 2600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர்,சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கள் அந்த காலத்தில் விலங்குகளை வேட்டையாடவும், கற்கருவிகள் தயாரிக்கவும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ''இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,'' என்றும் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறினார். https://tamil.indianexpress.com/tamilnadu/vembakottai-excavation-unearths-6000-year-old-rare-stones-discovered-tamil-news-7564767
  6. சம்பந்தம் இல்லாம உலக -அரசியல்- வரலாறு புத்தகமெல்லாம் மேசையில் கிடக்கு .. ? முக்கியமானது இல்லையாப்பா..!
  7. எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்! மதுரை: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 66. மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா சௌந்தரராஜன் மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார். இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். இவருடைய மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்களை எழுதியுள்ளார். இன்றைய தினம் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த அதிர்ச்சியிலிருந்த மீளவதற்குள் இந்திரா சௌந்தரராஜனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 700 சிறுகதைகள், 340 நாவல்களையும் எழுதிய இந்திரா சௌந்தரராஜன், 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். https://tamil.oneindia.com/news/madurai/famous-novelist-indra-soundararajan-passed-away-653309.html
  8. 3 நாட்களாக ஏற்பட்ட கஷ்டம்.. இரவு 11.30 மணிக்கு நடந்த சம்பவம்.. டெல்லி கணேஷ் மறைவிற்கு என்ன காரணம்? சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் மரணம் நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ்(80) காலமானார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்தவர். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் படுத்தப்படுக்கையானார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர் பெரிதாக நகராமல் ஒரே பக்கமாக படுத்ததாக கூறப்படுகிறது. 9 மணிக்கு உறங்க சென்றவரை சோதித்ததில் 11.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமாக அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் மரணம் அடைந்தார். மற்றபடி அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு முன்பு, அவர் டெல்லியை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். கணேஷ் இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றினார், அதற்கு பின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த பணியில் இருந்து விலகினார். விலகினார். இவருக்கு டெல்லி கணேஷ் என்ற மேடைப் பெயர் கே.பாலசந்தரால் வழங்கப்பட்டது. பட்டின பிரவேசம் (1976) திரைப்படத்தில் கே.பாலசந்தரால் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 1981ல் எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் கணேஷ். பெரும்பாலும் துணை நடிகராக அல்லது நகைச்சுவை நடிகராக நடித்தார். ஏன் நிறைய குறும்படங்களில் கூட நடித்துள்ளார். அதே சமயம் அவர் அபூர்வ சகோதரர்கள் (1989) போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். இது போன்ற வேடங்கள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டன. பாசி (1979) திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசைப் பெற்றார். அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி (1994) போன்ற பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றார். சிந்து பைரவி (1985), நாயகன் (1987), மைக்கேல் மதன காம ராஜன் (1990), ஆஹா..! (1997) மற்றும் தெனாலி (2000) ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் படுத்தப்படுக்கையானார். இதையடுத்து நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது என்று குடும்பத்தினர் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-the-demise-of-delhi-ganesh-653241.html ஆழ்ந்த அஞ்சலிகள்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.