குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்
Everything posted by குமாரசாமி
-
கனடாவும் கண்டறியாத சினோவும். ....
இன்றுதான் என் கண்ணில் பட்டுது. இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு? மற்றவர்களை சிரிக்க வைத்தால் அதுவும் சந்தோசம் தானே...😀 உங்கள் சிந்தனைக்கு பாராட்டுகள்.👍
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
விசுகர்! நான் புட்டினின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை. டொனால்ட் ரம்பின் வெற்றிக்காக உழைக்கவுமில்லை.செலென்ஸ்கியின் கொள்கைக்காக உழைத்து பாடுபடவுமில்லை. இன்றைய அரசியலில் எது நடக்கின்றதோ அதை வைத்தே என் கருத்துக்களை எழுதினேன்.உக்ரேன் போரை எதிர்த்தவர்கள் காசா அழிவை ஆதரித்தார்கள் அல்லது வேடிக்கை பார்த்தார்கள். அவ்வளவுதான்.நாம் அந்த இரு யுத்தங்கள் பற்றி கருத்துக்கள் எழுதலாமே ஒழிய வரலாறுகள் எதுவுமே படைக்கப்போவதில்லை.அது முடியாத விடயம். இந்த பிரச்சனை ஐரோப்பாவிற்கு புதிதான ஒன்றல்ல. டொனால்ட் ரம் முதல் நான்கு வருடம் ஆட்சியில் இருந்த போதும் அல்லல் பட்டதுதான்.ரம்ப் அன்று விட்ட குறையை இன்று தொடர்கின்றார்.அவ்வளவுதான். அடுத்த நான்கு வருடங்களுக்கு பல்லைக்கடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மற்றும்படி ரஷ்யா ஐரோப்பாவை தன் கைக்குள் கொண்டு வரும் என்ற கருத்துக்கள் எல்லாம் ஒரு வித தேவையில்லாத பகல் கனவுகள் தான். அன்று நான் ரஷ்யா சார்பாக கருத்துக்கள் எழுதியிருக்கா விட்டால்....... பந்தி பந்தியாக உக்ரேன்,ரஷ்ய,ஐரோப்பிய வரலாறுகள் ஆவேசமாக எழுதப்பட்டிருக்காது.மாற்றுக்கருத்துக்கள் எழுதப்பட்டதால் தான் நல்லகெட்ட கருத்துக்கள் வெளியே வந்தது. நீங்களும் நானும் ஒரே மாதிரியாக எழுதினால் சுவாரசியம் இருக்குமா விசுகர்? 🤣 இப்போது ஏதோ காணி,கதியால்,வரம்பு பிரச்சனை மாதிரி உக்ரேன் பிரச்சனை எமக்குள் வந்து நிற்கின்றது.😉
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
செலென்ஸ்கி நாட்டை விட்டு ஓடலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனும் பாணியில் செய்தி ஒன்று ஜேர்மன் பத்திரிகையில் உலாவுகின்றது. ஆதாரம்
-
பெரியார் தொண்டர்
பிராமண ஐயர் வைச்சு பூசையாக்காட்டில் கோயிலுக்கு மரியாதை இல்லையாம் 😂
-
சும்மா ஒர் பதிவு
ஒரு 30,40 வருடங்களுக்கு முன்னர் ஊர் மக்களிடம் சிரமதான பணி எனும் நடைமுறை ஒன்று இருந்தது.குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள்,ஏரிகள் என தூர்வாரும் செயல்கள் சிரமதான பணியாக ஊர்மக்களே சேர்ந்து செய்தார்கள். சிரமதான ஆட்களுக்கு ஊரில் இருப்பவர்களே ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமையல் சாமான்கள் கொண்டுவந்து சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள்.தனிமனித செலவுகளும் இருக்காது. அப்பப்ப அரசாங்கத்தால நடத்தப்படும் சிரமதான வேலைகளுக்கு வண்டுகள் நிறைந்த கூப்பன் மாவும் புளுக்கள் நெளியும் கருவாடும் கொடுப்பது வேற விசயம். நல்லதொரு சிந்தனைப்பதிவு புத்தன் 👍
-
உண்மை தெரிந்தாகனும்
ஐயோ நான் கந்தையா இல்லை குமாரசாமி 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறித்தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐 நொடிக்கு நொடி வயதும் ஏறிக்கொண்டு போகுது என்ன? 🙂
-
உண்மை தெரிந்தாகனும்
வணக்கம் வாருங்கள். சந்திப்பதில் சந்தோசம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ...அவரா? அவர் அதே இடத்தில நிண்டால் அடியார் மடத்தில ஒரு மாசம் தொடந்து அன்னதானம் 😂
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
எமக்குள் ஈழம்,ரஷ்யா,உக்ரேன்,அமெரிக்கா என பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..... டொனால்ட் ரம்ப் அவர்கள் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பதை மறக்க முடியாது. அதன் படி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் படியே தற்போதைய உலக அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார் என நினைக்கின்றேன்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
இந்த கொலை யாருக்காக , ஏன் நடத்தப்பட்டது என ஏன் யாரும் ஆராயவில்லை?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உதில 17வதாய் நிக்கிறவர் புடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி விளையாட்டு முடியும் மட்டும் அதே இடத்திலை நிண்டார் எண்டால் தில்லையம்பல பிள்ளையாருக்கு 1000 மோதகம் நேர்த்தி வைச்சிருக்கிறன்
-
எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
இலங்கையில் கிட்டத்தட்ட இனப்பிரச்சனை இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்கி விடுவார்கள்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
வணக்கம் ரஞ்சித்! நீங்கள் சொல்வதும் சரி.உங்கள் ஆதங்கமும் சரியானதே.ஆனால் அன்றைய காலங்களிலும் சரி இன்றைய காலங்களிலும் சரி பிராந்திய அரசியலும் அதிகார அரசியலும் தான் முக்கியத்துவமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது(வைத்திருக்கின்றது). அதே வழியில் சிற்றரசர்களாக பிராந்திய நாடுகளில் வல்லமை உள்ள அரசுகள் தங்கள் அண்டை நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அண்மையில் மோடி - ரம்ப் சந்திப்பின் போது பங்களாதேஷ் பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது...... நண்பர் மோடி அதை பார்த்துக்கொள்வார் என வெளிப்படையாகவே பதிலளித்தார்.இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும் என நினைக்கிறேன். அதாவது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியா பதில் சொல்லும். சீனா பார்வையாளராக இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது.👈 அடுத்தது அமெரிக்கா இன்று வரைக்கும் நீதி நியாய பக்கம் நின்றது போலவும் கோமாளி டொனால்ட் ரம்ப் வந்த பின்னர்தான் எல்லாம் தலை கீழாக மாறியது போலவும் எழுதியிருக்கின்றீர்கள். அமெரிக்கா என்றும் தன் சுய நல அரசியலை கைவிட்டதுமில்லை. இனியும் கை விடப்போவதுமில்லை. இலங்கைக்கு இந்தியா அரசன்🤣 ஐரோப்பாவிற்கு அமெரிக்கா அரசன்😂 மத்திய கிழக்கிற்கு இஸ்ரேல் அரசன்😃 ஆபிரிக்காவிற்கு மும்முனை போட்டி நடக்கின்றது😎 அனைத்தும் எனது சுய கருத்துக்கள்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கனக்க யோசிக்க வேண்டாம் விசுகர் 😀 நானும் சாவகச்சேரி அர்ச்சுனாவும் சாவகச்சேரி 😁 இப்ப உங்கட மனசுக்குள்ள என்ன சிந்தனை அருவியாய் ஓடும் எண்டு எனக்குத்தெரியும்...😜
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக..... இதுதான் உலகம். எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
சினிமாவில் வருவது போல் உள்ளது.
-
வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் - ஐங்கரநேசன்
என்று நாம் எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்களை கை விட்டமோ அன்றிலிருந்து இனம் புரியாத நோய் நொடிகளும் எம்மை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. உணவே மருந்து எனும் காலம் போய் மருந்தே உணவு என்ற காலத்தில் நிற்கின்றோம். வெளிநாட்டவர்கள் கூட துரித உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டி வருகின்றனர்.
-
புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
இந்தக் அருந்தமிழ் இடம்பெற்ற நிகழ்ச்சி மீது எனக்கு வெறுப்பிருந்தாலும்..... அந்த தமிழை மீண்டும் மீண்டும் கேட்க ஆர்வமூட்டியது.💪 பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி 👈
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு!
தேசம் விட்டு தேசம் வாழ்ந்தாலும் மூக்கில் அந்த நெற்கதிர் வாசனையும் மண்வாசனையும் வீசுகின்றது.🥰
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
இதுக்கெல்லாம் ரியூசன் எடுக்கேலாது 🤣
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
உக்ரேன் யுத்த ஆரம்பத்தில் நான் சொன்னதெல்லாம் பலிக்கின்றதே...🤣 இருந்து பாருங்கள் இந்த உலகம் ஒரு கோட்டுக்குள் வரும் காலம் அதிக தூரமில்லை. 😉
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.