Everything posted by குமாரசாமி
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
இதுக்கெல்லாம் ரியூசன் எடுக்கேலாது 🤣
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
உக்ரேன் யுத்த ஆரம்பத்தில் நான் சொன்னதெல்லாம் பலிக்கின்றதே...🤣 இருந்து பாருங்கள் இந்த உலகம் ஒரு கோட்டுக்குள் வரும் காலம் அதிக தூரமில்லை. 😉
-
யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
இரண்டுமே பாவிக்காதீர்கள்....🤣
-
முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி
தமிழர்களுக்கு உண்ணாவிரத கொடுமை என்பதும் ஒரு வித தலையெழுத்து....😥
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான் தம்பி செலென்ஸ்கிக்கு.....😁 பாவம் ஐரோப்பிய ஒன்றியம். அடுத்த நான்கு வருடத்திற்கு பல்லை கடித்துக்கொண்டு இருங்கள்.😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.💐
-
யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
அவர்களின் மனப்பயம் இமயமலையை விட பெரியது. அதை வெளியில் காட்டிக்கொள்வதில்லை.அதனால் தான் கண்ட இடமெல்லாம் விகாரை கட்டுவதை கைங்கரியம் என நினைக்கின்றார்கள். 🤣
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
எனது அயல் நண்பர் ஒருவர் ஊருக்கு போய் விட்டு சென்றகிழமை திரும்பி வந்தார். அவரிடம் என்ன ஊர்ப்புதினம் என விசாரித்தேன். பெரிதாக ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு..... இங்கிருந்து தன் பாவனைக்காக கொண்டு சென்ற கைத்தொலைபேசியை வெளியில் எடுக்கவே தனக்கு வெட்கமாக இருந்தது என கூறினார். அவ்வளவுக்கு அங்கை வேற லவல்.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மேற் சட்டையின் முதல் பொத்தானை போடாத ஆணை பார்த்து ஒழுங்கில்லாதவன் என சொல்லும் சமூகம் ... ஜன்னல் வைத்து மேற் சட்டை அணியும் மாதரை பார்த்து எதுவுமே சொல்வதில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாராவது மேலதிகமாக வந்தால் என் பெயரை நீக்கி விடுங்கள்.
-
நடனங்கள்.
உங்கடை ஊர்(france) பிள்ளையள் தானே? 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மோகன் அவர்களுக்கு இன்றைய நிலை சம்பந்தமாக மேலும் சங்கடங்களை கொடுக்காமல் தற்போதைய நிலையில் இருப்பதுதான் எனக்கு அழகு.உங்கள் கரிசனைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙂
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், SA அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் IND அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Arshdeep Singh 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Kane Williamson 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? NZ 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Fazalhaq Farooqi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AFG 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Hardik Pandya 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
வழமை போல் உங்கள் எழுத்துக்களும் கதை சொல்லும் விதமும் மிகப்பிரமாதம்.👍🏼
-
இடியப்பமும்.. முரல் மீன் சொதியும்.
ஏனெண்டால் நம்ம மிளகாய்த்தூளின்ர மகிமை அப்பிடி....😎 எதுக்கெடுத்தாலும் செத்தல் மிளகாய்,பச்சை மிளகாய்..... கெட்ட கேட்டுக்கு போத்தில் மிளகாய்த்தூள் வேற.....நம்மளாலேயே மிளகாய்த்தூள் கொடுமை தாங்கேலாமல் கிடக்கு....😔 வெள்ளைக்காரன் எங்கட உறைப்பு கறியளிலை வாய் வைப்பானே?😂
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
அவர்கள் பூனையும் எலியும் விளையாட்டு விளையாடுவார்கள்.அவர்களுடன் எமது தமிழ் அரசியல்வாதிகளும் சேர்ந்து விளையாடுவார்கள்.
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
போயும் போயும் சிங்கள இனவாத அரசு அல்லது இராணுவம் கட்டிய விகாரையை இடிக்கும் சந்தர்ப்பம் வருமென நினைக்கின்றீர்களா பாஞ்ச் ஐயா? 😀 இனிமேலாவது நடக்கிற கதையை கதைப்பம்.
- நடனங்கள்.
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
தமிழர்களின் வாக்குகளை கவர நடத்தும் அனுதாப நாடகம்.
- கல்லறையின் காவலன் – சிங்கண்ணா ( கோமகன்)
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.- தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும். இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள். - தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.