Everything posted by குமாரசாமி
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
மேடை வீராவேச பேச்சுக்களில் இன்னும் 70,80களில் இருந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் நம்ம சுமந்திரன். இவருக்கு பாடம் எடுத்த வாத்தியார் அந்த மாதிரியான ஆள் தானே 😁
-
யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து!
பாவம் ஐரோப்பிய யூனியன் (ஜேர்மனி) 🤣
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன். எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும். ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்? அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார். ஏனைய இசையமைப்பாளர்கள் அப்படி பொது வெளியில் சொல்லியதாக தெரியவில்லை.
-
பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உத்தரவு - காப்புரிமை சர்ச்சைகள் தொடர்வது ஏன்?
இளையராஜாவை வறுத்தெடுக்கும் ரகுமான் ரசிகர்கள் இனி என்ன சொல்லப்போகின்றார்கள்? https://youtu.be/TeOBakLZI_k?si=bXPieV8cBqHE1YI_
-
நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா?
நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜெற்றிய ஜட்டி எண்டு மாறிச்சொல்லிப்போட்டன் தங்கச்சி.....அதுக்கு வரிசை கட்டி மாறி மாறி அடிக்கிறானுவள் தங்கச்சி......😂
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
வாக்கு லஞ்சத்திற்கும், கொள்கையற்ற வாக்களிப்புகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஒருவர் சீமான் கட்சியை எதிர்க்கின்றார் என்றால் அவர் மாற்றுக்கட்சியை ஆதரிக்கின்றார் என்பதே பொருள் படும். சீமான் கட்சி ஆரம்பித்த காலங்களிலிருந்து வளர்ச்சியே தவிர வீழ்ச்சி இல்லை என்பதை யாவரும் அறிவர்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
மன்னிக்கவும். இதை நான் கேவலமாக நினைக்கவில்லை.நடத்தை கெட்டதாகவும் நினைக்கவில்லை.இப்படியான சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் பார்க்கக்கூடியதகவே உள்ளது.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
உங்கள் நீண்ட கருத்திற்கு மிக்க நன்றி. சாதிகள் இல்லை என்பது என் வாதமாக நீண்டகாலமாகவே இருந்துள்ளது. இதை யாழ்களத்திலும் பலமுறை எழுதியுளேன்.வலியுறுத்தியுள்ளேன். எனது கேள்வி? இலங்கையில் சாதி ஒழிப்பு ஏன் வெள்ளாளரை நோக்கி மட்டும் இருக்கின்றது? பிராமணர்களை குறி வைத்து எதுவும் பிரச்சனையாக்குவதில்லை? எனது கருத்து:- ஒரு இனத்தை ஒருங்கிணைக்க இன எழுச்சி அவசியம். அது மொழி சார்ந்து மட்டுமே இருக்க முடியும். இங்கே சாதி சமயங்கள் எடுபடாது. மொழி அது தன் வலியது.வலுமை மிக்கது.அங்கே சாதி அது சார்ந்த கட்சிகளுக்கு இடமேயில்லை. இந்த விடயத்தில் இலங்கை தமிழர்கள் இன்று வரைக்கும் புத்திசாலிகள். அப்படி சாதி சார்பு கட்சிகளை உருவாக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். சாதிகள் சம்பந்தமாக இயக்கங்கள் உருவாகியதென அறிந்தேன். அது உண்மையன நான் நம்பவில்லை. தமிழ் பேசி தமிழராய் ஒன்றிணைவோம்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்றே வாங்குங்கள் குறிக்கட்டுவான் ஜட்டிகள் நம்பிக்கையானவை நவீனமானவை நீண்ட காலம் பாவிக்கக்கூடியவை குறிக்கட்டுவான் ஜட்டிகள் 😎
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அது நிறைவேறாமல் போனால் மாற்று வழிகளை தேடலாம். ஆனால் இதற்கு தற்கொலை முடிவல்ல.
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
இலங்கை பத்திரிகைகளில் இந்திய செய்தியாக தலித் பற்றிய செய்திகள் வரும். அது தாழ்த்தப்பட்ட இனம் என பள்ளிக்காலங்களில் அறிந்து கொண்டேன். ஆனால் இலங்கையில் தலித் என்ற சொல் கிராமிய மட்டத்திலும் சரி நகர புறங்களிலும் சரி பேசப்பட்டதாக தெரியவில்லை. சாதிகள் என குறிப்பிடும் போது கரையார்,வெள்ளாளர் என விளிக்கின்றார்.ஏனைய சாதிகளை தலித்துக்குள் அடக்குகின்றாரா தெரியவில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அஞ்சாறு குறிக்கட்டுவான் ஜட்டிக்கு இப்பவே ஓடர் குடுக்கப்போறன் 😁
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
இங்கே தான் இடிக்குது...... நான் எந்தக்கட்சியும் சாராதவனாம். ஆனால் சீமான் எதிர்ப்பாளனாம். இஞ்சை என்ன கோழிச்சண்டையா நடக்குது?
-
தலைவர் ஒரு கடவுள் எம் மண்ணில்...
https://www.facebook.com/watch/?v=651763991167673&rdid=CcSyubaREloxFyFc தமிழ்நாட்டில் தலைவர் படத்தை வைத்து திருமணங்கள் கூட செய்கின்றார்கள்.
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இதுக்குள்ள பார்த்த அளவில கந்தையர்ர கதைதான் பெரிய சோகக்கதை போல கிடக்கு...😂
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா? நிவாரண பொதி கொடுக்குறோம் எனும் பெயரில் கட்சி வளர்ப்பதை கண்டிப்பீர்களா? கண்டிப்பீர்களா?
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
நீங்கள் ஆன்மீகவாதியா? ஆன்மீகத்தவர்கள் தான் சகுனங்களை பார்ப்பார்கள்
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
இதெல்லாம் மூட நம்பிக்கைக்குள் வராதா?
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
உங்கள் நேரத்திற்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரஞ்சித். தம் சொந்த இனத்தையே அழிக்க துணை போனவர்களை என்னவென்பது? பிரதேசவாதம் எனும் போர்வையில் தம் கண்ணை தாமே குத்திக்கொள்கின்றனர். மற்றவர்கள் எதிலும் சழைக்காமல் புலிகளை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் தமது மலத்தை தமது மூக்கில் வைத்து நுகர்ந்தவர்கள் அதன் பலன்களை இன்று அனுபவிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
உண்மைதான் விசுகர்! சீமானின் அரசியல் மேடைகளை தவிர..... அவர் பங்குகொள்ளும் பொது மேடைகளில் அரசியல் சலசலப்பு இல்லாத யதார்த்த பேச்சுக்களால் அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல்கள் வானை பிளக்கின்றது. இதனால் தான் அவர்கள் பதட்டப்படுகின்றார்கள்.
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
வணக்கம் கந்தையர்! ஒரு வயதுக்கு பிறகு 10 வயது வித்தியாசம் கூட பெரிய வித்தியாசமாக தெரியாது.இப்போது சிறு வயதில் ஒரு வயதிற்கும் பத்து வயதிற்கும் இடையில் பெரிய வித்தியாசமாக தெரியும். அதே நபர்கள் 70ம் 80மாக இருக்கும் போது பெரிய வித்தியாசம் தெரியாது. நீங்கள் சம்பந்தமே இல்லாமல் பழையதுகளை வைச்சு கழுத்தறுப்பவர் போல் தெரிகின்றது. 😂
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
நரைய வைத்து வயதை கணிக்கக்கூடாது. 😀 இப்பவெல்லாம் நரை தான் பாஷனாம்....🥰
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
சீமான் அரசியலுக்கு வந்த நாள் தொடக்கம் படபடத்துக்கொண்டு இருக்கிறார்களே ஒழிய......சீமானின் வளர்ச்சியை ஒரு வீதமேனும் தடுக்க முடியவில்லை. 😂 வெற்றிலை பாக்கு புகையிலை சுண்ணாம்பு தடவி மெல்லுவதை போல் மெல்லுகிறார்கள்.🤣