Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. பி எம் எம் பெரோஸ் நளீமி ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர், மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்­களில் இடம்­பெற்ற பொழுது வீட்­டுக்குள் ஒழிந்து கொண்­டி­ருந்­த­வர்கள் இப்­போது முகப்­புத்­தக பொது வெளியில் மல்­யுத்த வீரர்­க­ளாக பிர­கா­சிக்­கி­றார்கள்.. கடந்த பல தசாப்­தங்­க­ளாக அம்­பாறை மட்­டக்­க­ளப்பு திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்­களின் காணி பிரச்­சி­னைகள் வட­மா­காண முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சினைகள் இன்னும் வட கிழக்­குக்கு வெளியில் வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளு­டைய கல்வி, பொரு­ளா­தார, பாது­காப்பு பிரச்­சி­னைகள், வியா­பா­ரங்­களை சுதந்­தி­ர­மாக செய்ய முடி­யாமல் வியா­பார தலங்கள் பள்­ளி­வா­சல்கள் வீடுகள் எரிக்­கப்­பட்ட பல பிரச்­சி­னைகள் எல்லாம் இடம்­பெற்­றன. கலாச்­சார உரிமை மத உரிமை மத வணக்க வழி­பா­டு­களை செய்­வ­தற்­கான உரிமை மார்க்க கல்­வியை கற்­ப­தற்­கான உரி­மைகள் அதற்­கான கலா­பீ­டங்­களை நடத்­து­வ­தற்­கான உரி­மைகள் எல்லாம் அப்­பட்­ட­மாக மீறப்­பட்­டன. தேர்­தல்கள் வரு­கின்ற பொழுது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான, இஸ்­லா­மிய மார்க்­கத்­துக்கு எதி­ரான இனத் தேசியவாத தீவிர சிந்­தனை உள்ள பல நபர்­களின் வெறுப்பு பேச்­சுக்கள் மார்க்­கத்தை நமது கலாச்­சார உடை­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­பா­டுகள் எல்லாம் இடம்­பெற்ற பொழுது அன்­றி­ருந்த அர­சாங்­கங்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக எதுவும் செய்­யாமல் சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாமல் அமை­தி­யாக வேடிக்கை பார்த்த பொழுது இந்த போரா­ளிகள் எங்­கி­ருந்­தார்கள்…? இந்த பிரச்­சி­னைகள் சிறு­பான்மை சமூ­கத்தின் சமத்­துவ உரிமை, சட்­டத்தின் முன் சம­மாக நடத்­தப்­ப­டு­வ­தற்­கான உரிமை, சட்­டப்­பா­து­காப்பை பெறு­வ­தற்­கான உரிமை, பாது­காப்பு உரிமை கலா­சார உரிமை மத உரிமை என பல்­வேறு உரி­மைகள் மீறப்­பட்­டன. அப்­பொ­ழு­தெல்லாம் இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கு எதி­ராக இவர்கள் வாய் திறக்­காமல் எங்­கி­ருந்­தார்கள்? மிகவும் சந்­தோ­ஷ­மான செய்தி தற்­பொ­ழு­தா­வது நம்­ம­வர்கள் விழித்­தி­ருக்­கி­றார்கள் …. எனவே விழித்த கையோடு மேற்­படி உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­தற்கு தயா­ரா­குங்கள். உங்கள் போராட்­டங்கள் முகப்­புத்­த­கத்­திலோ அல்­லது ஜும்மா முடிந்­த­வுடன் சில பதா­கை­களை தூக்­கிக்­கொண்டு வீடு செல்­கின்ற வழியில் ஒன்று சேர்ந்து கோச­மிட்டு விட்டுச் சென்­று­வி­டுதோ அல்ல.. இந்தப் பிரச்­சி­னை­களை ஆவண படுத்­து­வ­தற்கு தயா­ரா­குங்கள்.. நீதி­மன்­றத்தில் வழக்­கி­டு­வ­தற்கு தயா­ரா­குங்கள் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டாக பதிவு செய்­வ­தற்கு வெளி வாருங்கள். இவை­களால் முடி­யாத பொழுது சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்பு வரைக்கும் கொண்டு செல்­வ­தற்கு முன் வாருங்கள் இவற்றைச் செய்­வ­தற்கு நிதிப்­பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாறுங்கள் கல்­வித்­து­றையில் அல்­லது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்­கின்ற மாண­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யான சமூகப் பிரச்­சி­னை­களை ஆய்வுத் தலைப்­பு­க­ளாக எடுக்­கும்­படி ஆலோ­சனை கூறுங்கள். இவைகள் உருப்­ப­டி­யான முன்­னெடுப்­பு­க­ளாக அமையும். இவை­களை விட்டு விட்டு சில்­ல­றத்­த­ன­மான விட­யங்­களை சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளாக இந்த பொது வெளியில் பயன்­ப­டுத்­தா­தீர்கள். நவீன தொழில்­நுட்ப சாத­னங்கள் மூலம் நம்­மு­டைய எழுத்­துக்கள் எல்லாம் யாருக்கு என்ன மொழியில் வேண்­டுமோ அவைகள் அடுத்த கணம் மொழி பெயர்க்­கப்­பட்டு பார்ப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருக்­கின்­றன. நாம் அறி­வில்­லாத சமூகம் என பிறர் சிந்திக்கும் வகையில் நடந்து கொள்­ளா­தீர்கள். புதிய அர­சாங்கம் இன­வா­தத்தை ஒழித்து ஊழ­லையும் ஒழித்து சிறந்த நாட்டைக் கட்டி எழுப்­பு­வ­தற்­கான முயற்­சி­களை செய்வதாக கூறுகிறார்கள். இவர்களுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியும். நமது உரிமைகளை இழந்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுமாக இருப்பின் அப்பொழுது விலகிக்கொள்ள முடியும்.மூன்றில் இரண்டை அவர்கள் வைத்திருக்கின்ற பொழுது நாம் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18154
  2. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணி திரட்டிப் போராடுவோம்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும். தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை. எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா? வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார். https://madawalaenews.com/9470.html
  3. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்­துள்­ளனர். குறிப்­பாக குரு­நாகல் யுகத்­தின்­போது அர­ச­னா­கவும் குராசான் மன்­னரின் கதையும் இருக்­கி­றது. இருப்­பினும் பிரித்­தா­னியர் 1833 இல் அறி­மு­கப்­ப­டுத்­திய கோல்­புறூக் அர­சியல் யாப்பின் படி ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் இலங்கை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சியின் தந்­தை­யான எம்.சி.சித்­தி­லெப்பை போன்­றோரின் போராட்­டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்­புறூக் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு பிர­தி­நி­தித்­துவம் எட்­டப்பட்டது. இதன்­போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூ­பன சபையின் உத்­தி­யோகப்பற்­றற்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார். 1910 ஆம் ஆண்டு குரு­மக்­கலம் யாப்­பிலும் 1921 தற்­கா­லிக மெனிங் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டது. எனினும், 1924 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மனிங் டெவொன்­சயர் அர­சியல் சீர்­தி­ருத்தம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை மூன்­றாக உறுதி செய்­தது. இவ்­வாறே 1931 இல் டொனமூர் சீர்­தி­ருத்தம் முன்­வைத்த நிர்­வாக முறையில் மந்­திரி சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருந்­தது. இத­னி­டையே, 1947 சோல்­பரி யாப்பு, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான அமைச்­ச­ர­வையில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­து­வந்­துள்­ளனர். எந்­த­வித அழுத்­தங்­களும் இன்றி நாட்டின் இன பல்­வ­கை­மையை கருத்­திற்­கொண்டு ஒவ்­வொரு அர­சாங்­கமும் நாட்டின் நிர்­வா­கத்­து­றையின் பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யொன்றை உள்­ளீர்க்கும் நடை­முறை இருந்து வந்­துள்­ளது. எனினும், முதன் முறை­யாக இலங்கை சோச­லிச ஜன­நா­யக குடி­ய­ரசின் பத்­தா­வது பொதுத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்டின் ஒன்­ப­தா­வது ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட 22 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், தேசிய மக்கள் சக்­தியை 61 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்குப் பலத்­துடன் மூன்றில் இரண்டு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைப் பெற்று வலு­வான ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்கு பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை பல்­வேறு வகை­யிலும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. வாக்­க­ளித்த, வாக்­க­ளிக்­காத, ஆத­ர­வ­ளித்த, ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்கும் நிலையில் அர­சாங்கம் இதற்கு பதி­ல­ளிக்கும் விதம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரை­யின்­போது தனது உரையின் ஆரம்­பத்­தி­லேயே இன­வாதம், மத­வாதம் பற்­றி­யெல்லாம் பேசி­யி­ருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்­கிய அமைச்­ச­ரவை நிய­மனம் குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கத்தான் இந்த பதிலை குறிப்­பிட்­டாரா என்ற கேள்­வியும் எழுந்­தது. இதை­விட கடந்த வார இறு­தியில் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திடம் இது விட­ய­மாக முஸ்­லிம்கள் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்­டு­மென கேட்­கா­தீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்­ச­ராக இருந்­த­போது, முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு ஹிஜாப் அணி­வ­தற்­கான துணியை வழங்க வேண்­டு­மென அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தேன். நான் சிங்­கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்­லவே?அம்­பா­றையில் எங்­க­ளுக்கு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­க­வில்லை. ஆனால் நாங்கள் ஆதம்­பா­வாவை தேசி­யப்­பட்­டி­யலில் நிய­மித்தோம்.மேல்­மா­காண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இலை­யென்று, அந்த விட­யத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்டாம்” என குறிப்­பிட்­டி­ருந்தார். இது இப்­ப­டி­யி­ருக்க கடந்த திங்­க­ளன்று சபா­நா­யகர் அசோக்க ரன்­வல அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்­வாக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது, நாட்டில் சகல இன மக்­களும் தங்கள் மத, கலா­சார அடை­யா­ளங்­களை பேணி வாழும் உரிமை பெற்­றுள்­ளனர். ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற அக்­கி­ரா­சன உரையை மேற்­கோ­ளிட்டு, நாட்டில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும். இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை தூண்டி மக்­களை பிரிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினார். எனினும், அவர் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாமை குறித்து எந்த கருத்­தையும் நேர­டி­யாக குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. இத­னி­டையே, இது­வி­ட­ய­மாக நேற்­றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் நலிந்த ஜய­திஸ்­ஸ­வினால் சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டது. ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நிதி இல்­லாமை தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்­லது சாதி அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வில்லை. அமைச்சு அதி­கா­ரங்­களை கையாள்­வதில் மிகவும் திற­மை­யான நபர்­களை நாங்கள் தேர்ந்­தெ­டுத்தோம். மேல் மாகாண ஆளு­ந­ராக முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிரதி சபா­நா­யகர், பிரதி அமைச்சர் போன்ற பத­வி­களை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் வகிக்­கின்­றனர். மேலும், முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒருவர் தேசியப்பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்டார். குறிப்­பிட்ட இனங்கள், மதங்கள் அல்­லது சாதிகள் அன்றி ஒட்­டு­மொத்த இலங்கை தேசத்­துக்கும் சேவை செய்­வ­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்” என்றார். அத்­துடன், தற்­போ­தைய நிலை­மையை இனம் அல்­லது மதத்தின் கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்­றி­ணைந்த இலங்கை தேசம் என்ற தொலை­நோக்கு பார்­வை­யுடன் புதிய அர­சாங்­கத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் நாங்கள் நிறு­வி­யுள்ளோம். இந்த அணு­கு­மு­றை­யா­னது பிரச்­சி­னை­களை மிகவும் திறம்­பட கையாள்­வ­தற்கு எமக்கு இட­ம­ளிக்கும்” என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தாரம் மற்றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ கூறினார். இங்கு அமைச்­சர்­க­ளான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜய­திஸ்ஸ ஆகியோர் ஒரே மாதி­ரி­யான பதில்­க­ளையே குறிப்­பிட்­டுள்­ளனர். எனவே, இந்த விவ­கா­ரத்­திற்கு இப்­ப­டித்தான் பதி­ல­ளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்­தி­யினால் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்ற வினா எழு­கி­றது. இத­னி­டையே, மிகவும் தகு­தி­யு­டைய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அமைச்சுப் பத­வி­களும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­கினர். இவர்­களில் ஒருவர் மாத்­திரம் பிர­தி­ய­மைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­ன­வ­ராக இருந்­துள்ளார். அத்­தோடு, பிரதி சபா­நா­யகர் பத­வியே இன்­னொரு முஸ்லிம் பிர­தி­நி­தியின் தகு­திக்கு பொருத்­த­மா­ன­தாக இருந்­துள்­ளது. எனினும், இலங்கை நிர்­வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதி­கா­ரிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இம்­முறை பொதுத் தேர்தல் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. இந்த மாற்­றத்தை விரும்­பியே பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களும் தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். இந்­நி­லையில், அவர்கள் பாராம்­ப­ரி­ய­மாக ஆத­ரித்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது அந்த கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த ஐக்­கிய மக்கள் சக்­தி­யையும் முஸ்­லிம்­ கட்­சி­க­ளையும் விட்டு வெளி­யேறி புதிய அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். ஜனா­தி­பதி அநுர மீதான நம்­பிக்கை மற்றும் முஸ்லிம் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யினால் மக்கள் இந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­பட்­டனர். மோச­மான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டு­களை பிழை என்று கருதி தமது பாதையை மாற்­றிக்­கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொட­ர்ந்தும் தக்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18149
  4. இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் - பொதுஜன பெரமுன விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரையறைகளுடன் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க எவ்வாறு இடமளிக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் மனோஜ் கமகே (Manoj Gamage) கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இலங்கையில் ஒசாமா பின் லேடனையும் அனுஷ்டிக்க நேரிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கயைில், ”வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இம்முறை வடக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுபாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் வடக்கு மக்கள் இம்முறை போராளிகளையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் பகிரங்கமாக நினைவு கூர்ந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து உலகில் 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை எவ்வாறு வரையறைகளுடன் அனுஷ்டிக்க இடமளிக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் ஒசாமா பின் லேடனையும் இலங்கையில் அனுஷ்டிக்க நேரிடும். தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். தமிழ் மக்களின் ஆணையை அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் நாட்டு பற்றுள்ள இலங்கையர்களுக்கு கிடையாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளே நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி அக்காணிகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மாதமளவில் பெருமளவான இராணுவ முகாமைகளை வடக்கில் இருந்து அகற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றி, காணிகளை பகிர்ந்தளித்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய மீளாய்வுகளுக்கு பின்னர் பொறுப்புடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். இச்செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்பு சிறிதளவேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இலங்கையில் 30 ஆண்டுகள் நீடித்த பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கமும் அரச தலைவர்களும் மறக்க கூடாது“ என தெரிவித்தார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_706.html
  5. (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, மேலும் கூறியிருப்பதாவது, நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும். இருப்பினும் இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது. மாறாக அத்தகைய நடவடிக்கைகள் கடந்தகால வலிகளையும், தேவையற்ற பதற்றங்களையும் தோற்றுவிப்பதுடன், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன. வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ளமுடியும். அதேபோன்று தெற்கில் உள்ள கடும்போக்கு சக்திகள் இனவாதத்தைப் பரப்புவதற்கு ஏதுவான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்குவதைத் தவிர்ப்போம். அதேவேளை , பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய 'இலங்கையர்' என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_953.html
  6. Less than a minute wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார். https://madawalaenews.com/9360.html
  7. கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கொழும்பு – அல் ஹிக்மா நிறுவனத்தின் அனுசரணையில் ஜும்மா பள்ளிவாசல் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஷேஹுத்தீன் (மதனி) அவர்கள் கலந்து திறந்து வைத்தார். மேலும் கெளரவ அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களும் அனைத்து பீட பீடாதிபதிகளும் மூவின மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நான்கு மதத்தினருக்கும் சரிசமமாக தலா 2 ஏக்கர் காணி, அவரவர் மத ஸ்தலங்களை அமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா அவர்கள் ஒதுக்கி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்போது 4 மத ஸ்தலங்களும் அமைக்கப்பட்டு மத நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. *கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்* https://lankasri.com/srilanka அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடி வரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்கையும் தேடி வரும் பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்பும் பள்ளி செல்ல மனமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ பள்ளி செல்ல மனமில்லையோ படைத்தவன் நினைவில்லையோ யாழில் தக்பீர் முழங்கட்டும், பாங்கோசை கேட்கட்டும்
  8. நூருல் ஹுதா உமர்- நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார். இன்று ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு வாக்களிக்காத ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கும் இருந்தது. அவர்களது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து வீணான செலவுகள் கட்டுப்படுத்துவதில் அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி நம்பிக்கையை கொண்டு வந்துள்ளதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய உரிமையை வழங்க மறுத்ததனூடாக முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தியையும் அவர்கள் எதிர் கொண்டுள்ளார்கள். நாங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் நாட்டுக்கு நன்மையான வேலைத்திட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் ஆதரிக்கிறோம். உதாரணமாக குறைந்த செலவில் தேர்தல் நடத்தியது, வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்தியது, வாக்காளர்களுக்கு தேர்தல் கால லஞ்சத்தை வழங்காமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளில் கட்டுப்பாடு போன்ற பல விடயங்களை கூறலாம். இப்படியான முன்மாதிரிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஏன் கணிசமான வாக்குகளை வழங்கினார்கள் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தமது சமூக அரசியல் தலைமைகளிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த அரசியல் அடைவுகளை அவர்கள் ஒழுங்கான முறையில் கடந்த காலங்களில் வழங்காமையினாலும், அரசியல் தலைவர்கள் சமூகம் எதிர்பார்த்த விடயங்களில் சிறப்பாக செயற்படாமையினாலும் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்தியை நோக்கி சிறுபான்மை மக்கள் அணி திரண்டார்கள். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு பிரதிநிதியையாவது அமைச்சரவைக்குள் உள்வாங்காமல் விட்டது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறான நிலைகளிலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகள் சிறுபான்மை முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்லும் விதமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கூட அமைச்சரவையில் ஒரு சமூகம் சார்ந்தவர் இருப்பது என்பது அந்த சமூகத்துக்கான அங்கீகாரம் என்பதை ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அவ்வாறான அங்கீகாரம் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைக்கப்பட்ட சகல அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் இடம்பெற்று வந்ததுடன் அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும், தன் சமூகத்திற்கும் நிறையவே சேவையாற்றியுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 10-15 வருடங்களில் அமைச்சராக இருந்த ஒரு சிலரை தவிர வரலாற்று நெடுகிலும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டுக்கும், முஸ்லிம்களுக்கும் நிறைய சேவைகளை வழங்கி உள்ளதை நாம் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மேலும், நாட்டின் அந்நிய செலாவணி ஒழுங்குபடுத்தல் கள், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி விடய சீரமைப்புகள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை சிறப்பாக முன்னேற்ற தேசிய மக்கள் சக்தி எடுக்கும் முயற்சிகள் மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் சிறுபான்மை சமூகமொன்று பாதிக்கும் விதமாக அரசாங்கம் நடப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் சிறப்பாக அமையாது என்றார். https://www.importmirror.com/2024/11/blog-post_872.html
  9. முகவர் மூலமாக 60 இலட்சம் கொடுத்து போனது தப்புதானே. பின்பு ஆபத்தில் சிக்கியவுடன் சிங்கள ஜனதிபதிக்கு மகஜர். இலங்கை தியேட்டர்களில் தற்போது சிடிசன் எனும் ஒர் சிங்கள படம் ஓடுகின்றது. மிகவும் விறுவிருப்பன படம். இவ்வாறு சட்டவிரோதமாக வெளினாடு செல்லுபவர்களின் கதை. ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.
  10. றிப்தி அலி கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பாரிய வெற்­றி­யினை ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி சுவீ­க­ரித்­தது. செப்­டம்­பரில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் அநுர குமார திசா­நா­யக்க பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களின் அடிப்­ப­டையில் சுமார் 120 ஆச­னங்­க­ளையே அக்­கட்சி பெறும் என ஆய்­வா­ளர்கள் எதிர்­வு­கூ­றி­யி­ருந்­தனர். இந்த எதிர்­வு­­கூ­ற­லுக்கு முற்­றிலும் மாற்­ற­மா­கவே பொது­மக்­களின் வாக்­க­ளிப்பு அமையப் பெற்­றி­ருந்­தது. இலங்கை வர­லாற்றில் எந்­த­வொரு தனிக் கட்­சியும் கைப்­பற்­ற­தாக 159 ஆச­னங்­களை தேசிய மக்கள் சக்தி கைப்­ப­றி­யுள்­ளது. இந்த எண்­ணிக்கை பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யினை விட அதி­க­மான ஆச­னங்­க­ளாகும். எதிர்க்­கட்­சிகள் மத்­தியில் ஒற்­று­மை­யின்­மையின் கார­ண­மா­கவே ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இந்­த­ளவு அதிக எண்­ணிக்­கை­யான ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் இன்று அவர்­க­ளினால் ஆட்­சி­யினை கைப்­பற்­றி­யி­ருக்க முடியும். அந்தத் தேர்­தலில் தனித்துப் போட்­டி­யிட்­டது போன்று பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் தனித்து போட்­டி­யிட்­ட­மை­யினால் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதில் எந்தப் பிர­யோ­ச­னமு­மில்லை என பொது­மக்கள் உணர்ந்­து­விட்­டனர். இதே­நிலை தான் சிறு­பான்மை அர­சி­ய­லிலும் காணப்­பட்­டது. குறிப்­பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சிகள் பிரிந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­கின. இதன் கார­ண­மா­கவே அக்­கட்­சி­களின் வாக்­கு­களில் பாரிய சரிவு ஏற்­பட்­டது. குறிப்­பாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி – அதன் கோட்­டை­யான யாழ். மாவட்­டத்­தி­னையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் – அதன் கோட்­டை­யான அம்­பாறை மாவட்­டத்­தையும் இன்று இழந்­துள்­ளன. இவ்­வாறு சிறு­பான்மைக் கட்­சிகள் எதிர்­கால தேர்­தல்­களில் பிள­வு­பட்டு கள­மி­றங்­கினால், அக்­கட்­சிகள் முக­வ­ரி­யற்றுப் போய்­விடும் என்­ப­தனை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். வட மாகா­ணத்தில் யாழ். மற்றும் வன்னி ஆகிய இரண்டு மாவட்­டங்­க­ளையும் ஒரு தேசியக் கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது இலங்கை வர­லாற்றில் முதற் தட­வை­யாகும். அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் ஒரு தேசியக் கட்சி வெற்றி பெற்­ற­மையும் முத­லா­வது சந்­தர்ப்­ப­மாகும். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகா­ணங்­களை வெற்­றி­யீட்­டிய ஐக்­கிய மக்கள் சக்­தி­யினால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­யீட்ட முடி­ய­வில்லை. இதற்­கான காரணம் ஐக்­கிய மக்கள் சக்­தி­யி­லுள்ள பங்­காளிக் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யிட்­ட­மை­யாகும். இதன் கார­ண­மா­கவே கிழக்கு மாகா­ணத்தில் இரண்டு ஆச­னங்­களை முஸ்லிம் சமூகம் இழந்­துள்­ளது. குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் கிழக்கு மாகா­ணத்தில் அதிக ஆச­னங்­களை நிச்­ச­ய­மாக கைப்­பற்­றி­யி­ருக்க முடியும். கடந்த பாரா­ளு­மன்­றத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இரண்டு முஸ்லிம் ஆச­னங்­களும், அம்­பாறை மாவட்­டத்தில் நான்கு முஸ்லிம் ஆச­னங்­களும் காணப்­பட்­டன. எனினும் இந்தத் தேர்­தலில் திரு­கோ­ண­ம­லையில் ஒரு முஸ்லிம் ஆச­னத்தையும், அம்­பா­றையில் இரண்டு முஸ்லிம் ஆச­னங்­களையும் மாத்­தி­ரமே பெற முடிந்­தது. குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து தேசிய மக்கள் சக்­திக்கு 75,000க்கு மேற்­பட்ட வாக்­குகள் வழங்­கிய போதிலும் ஒரு முஸ்லிம் ஆச­னத்­தினை பெற முடி­ய­வில்லை. இதற்கு பிர­தே­ச­வா­தமும், வேட்­பா­ளர்­க­ளி­டையே நிலவிய ஒற்­று­மை­யின்­மை­யுமே பிர­தான கார­ண­மாகும். இதே­வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்தால் இரண்டு ஆச­னங்­களை நிச்­ச­ய­மாக கைப்­பற்­றி­யி­ருக்க முடியும். எனினும், முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலியின் பிழை­யான வியூ­கத்­தினால் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மட்டு. மாவட்­டத்தில் ஆச­னத்­தினை இழந்­துள்­ளது. இந்தத் தவ­றினை தற்­போது அக்­கட்­சி­யினர் உணர்ந்­துள்­ளனர். கடந்த பாரா­ளு­மன்­றத்தில் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஜனாஸா எரிப்பின் போது வாய்­மூடி மௌனி­யாக இருந்­த­வர்­களில் காதர் மஸ்­தானைத் தவிர ஏனைய அனை­வரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதே­வேளை, சில முஸ்லிம் தலை­வர்­களை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நோக்கில் சில கட்­சி­களும், சுயேட்­சைக்­கு­ழுக்­களும் இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கின. குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீ­மினைத் தோற்­க­டிப்­ப­தற்­காக கண்டி மாவட்­டத்தில் உதை­பந்துச் சின்­னத்தில் சுயேட்­சைக்­கு­ழு­வொன்று போட்­டி­யிட்­டது. இந்த சுயேட்­சைக்­குழு பெற்ற வாக்­கு­களின் எண்ணிக்கை 13,378 ஆகும். இது 5 சத­வீ­தத்­தினைக் கூட தாண்­ட­வில்லை. இது போன்று தான் புத்­தளம் மாவட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் (7,083 வாக்­குகள்), ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பும் (6,410 வாக்­குகள்) தனித்­த­னி­யாக போட்­டி­யிட்­டன. இந்த இரண்டு கட்­சி­களும் 5 சத­வீ­தத்­திற்கு குறை­வான வாக்­கு­க­ளையே பெற்­றி­ருந்­தன. குறித்த 13,493 வாக்­கு­களும் ஐக்­கிய மக்கள் சக்­திக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் அக்­கட்­சியின் ஆச­ன­மொன்று அதி­க­ரிக்­கப்­பட்டு முஸ்­லி­மொ­ருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இதே­வேளை, களுத்­துறை, கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம் மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய மாவட்­டங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்­கீமும் றிசாத் பதி­யு­தீனும் இணைந்து ஒரு வேட்­பா­ளரை மாத்­திரம் நிறுத்­தி­யி­ருந்தால் ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஊடாக நிச்­சயம் ஒரு ஆச­னத்­தினைப் பெற்­றி­ருக்க முடியும். இந்தத் தவ­றினை தேசிய மக்கள் சக்தி மேற்­கொள்­ளா­மை­யினால், மாத்­தறை, குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் தலா ஒரு ஆச­னத்­தினைப் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் ஊடாக குறித்த மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மக்­களின் நீண்ட கால தாகம் தீர்க்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, கடந்த பாரா­ளு­மன்­றத்தில் 22 முஸ்­லிம்கள் அங்கம் வகித்தனர். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு வரை வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தல்­களின் ஊடாக 17 முஸ்­லிம்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த எண்­ணிக்கை 20 ஆக அதிகரிப்பதற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்­ளன. இதனிடையே அநுர குமார திநாசாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை பாரிய கருத்தாடலொன்றை இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அமைச்­சுக்­களின் செய­லாளர் நிய­ம­னத்­திலும் முஸ்லிம் அதி­காரி உள்­ள­டக்­கப்­ப­டாமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். எனினும், நாங்கள் இன­வாத அடிப்­ப­டையில் செயற்­ப­ட­வில்லை. பிரதி அமைச்சர் நிய­ம­னத்தில் முஸ்­லிம்கள் நிச்­சயம் உள்­ள­டக்­கப்­ப­டுவர் என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. எப்­ப­டியோ இந்த ஜனா­தி­ப­தியின் வெற்­றியில் முஸ்­லிம்­களும் பங்­கா­ளி­க­ளாக உள்­ளனர். இதனால் அனைத்து நிய­ம­னங்­க­ளிலும் முஸ்லிம் சமூ­கத்­தினையும் உள்வாங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/18123
  11. இதற்கு முன் நீங்கள் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் ஐயா. அசானி என்னும் மலையக சிறுமி பாடல் போற்றியொன்றில் வெற்றிபெற்றபோது இவ்வாறனதொரு கருத்தைதான் எழுதினீர்கள். நான் பலமுறை இதை அவதானிதுள்ளேன்.
  12. @வைரவன் நன்றி உடனடி பதிலுக்கு. எப்பொழுதாவது இருந்து வருவீர்கள். உங்கள் பதில்கள் வெடி மாறி இருக்கும். ஒரு இந்திய வம்சாவளி தமிழனான நான் அல்வாயனினாலும் மீராவினாலும் மேலே எழுதப்பட்ட இரண்டு கருத்துக்களை வாசித்தபோது மனம் வேதனைப்பட்டது. வீடியோவை பார்க்க‌வில்லை. கடந்த இரண்டு வாரமாக கடும்மழை, வீடுகளில் எல்லாம் நீர் நிரம்பிபுள்ளது. மக்கள் எவ்வ்ளவோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். யாரோ ஒரு மனிதர் வ‌ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள், கூறுகின்றார், தேற்றுகின்றார். மக்களும் அவர்மீது அன்புகொள்வார்கள். இதுதானே மனித இயல்பு. யாரா இருந்தால் என்ன. ஒரு வார்த்தை பாராட்டலாமே? அப்பட்டமான ஒரு யாழ்பாண இனவாதத்தை கக்கியுள்ளீர்கள். ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும். எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?
  13. நல்ல விரிவான பதில் கோஷன். ஆனால் இது பிரக்டிகலாக இருக்காது என நினக்கின்றேன். என்னுடைய பிறப்பத்தட்சி பதிவில். என்னை இல‌ங்கை தமிழர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். என்னுடை பெற்றோர் இருவரும் கொழும்பிலே பிறந்தவர்கள். ஆனால் என்னுடையா தாய்வழி, தந்தைவழி தாத்தா, பாட்டிமார்கள் பிரித்தானிய காலனித்துவகாலத்தில் தொழிலுக்காக‌ இங்கு வந்து தங்கிவிட்டவர்கள். குடியுரிமை கிடைத்த பிற்பாடு அவர்கள் தாங்களை இலங்கை தமிழராகவே அடையாளப்ப்டுத்தி கொண்டார்கள். நீங்கள் இந்திய permanent residence பற்றி குறிப்பிட்டது உண்மை, என்னுடைய இளைய தங்கையிடம் இந்த PR உண்டு என நினக்கின்றேன். மதுரையில் என்னுடைய பாட்டியின் deed extract மூலம் இதை நிருபிக்க கூடியதாக இருந்தது என நினக்கின்றேன். ஆக பிறப்பத்தாட்சி பேப்பரில் நான் இலங்கை தமிழன், ஆனால் உண்மையில் இந்திய வம்சாவளி தமிழன். ஐசே, மச்சான் பேரு மதுர....வா, மைனர் குஞ்சி வா...
  14. வாசுகி சிவகுமார்- மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவலுகள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது. 26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது. தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது? எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை. ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன. https://www.importmirror.com/2024/11/mp.html
  15. கோசான் எனக்கொரு ச‌ந்தேகம். இல‌ங்கை வம்சாவழி தமிழவர்கள் என்பவர்கள் யார்? என்ன வரைவிலக்கணம்? (இங்கு நீங்கள் வடக்கு கிழக்கு என ப்ரக்கடில் போட காரணம் என்ன?)
  16. அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா? “அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?” இன ரீதியான அமைச்சர் நியமனம் மக்கள் ஆணைக்கு முரணானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவையில் முஸ்லீம் அமைச்சர் நியமனம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தனது கருத்தாக கூறியிருந்தார். அவ்வாறெனில் புதிய அமைச்சரவையில் புத்தசாசன அமைச்சு ஒன்று வழங்கப்பட்டுள்ளதே. இதனை எந்த இனவாதமாக நோக்கமுடியாதா? இது மிகத் தெளிவான அநீதியான மனநிலையாகும் ஒரு தேசியமாக தேசியமக்கள் சக்தி பயணிக்கும் என்ற கூறிய விமல்ரத்நாயக்க அவர்கள் புத்தசாசன அமைச்சை மறந்துவிட்டாரா? அல்லது பெளத்த தேசியமாகத்தான் இந்த நாட்டவர்கள் பயணிக்க வேண்டும் என்று கூறு வருகின்றாரா? என்ற சந்தேகம் எமக்கு எண்ணத் தோன்றுகிறது. புத்தசாசனத்திற்குப் பதிலாக மத நல்லிணக்க அமைச்சு அல்லது சமய விவகார அமைச்சு என்று பொதுவான அமைச்சு வழங்கப்பட்டிருந்தால் விமல் ரத்நாயக்க அவர்களின் கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவரின் கூற்று பெளத்த இனவாதத்தையே பிரதிபலிக்கின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இனவாதம் இருக்கக் கூடாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அப்பட்டமான இனவாதத்தை திணிப்பதானது, இனவாதத்திற்கூடாக ஆட்சிபீடமேறியவர்களைவிட மிகவும் மோசமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம். பல்லின இலங்கையில் பன்மைக் கலாசாரங்களுடன், சமய நம்பிக்கைகளுடன் பல்லின சமூகமாக வேறுபாட்டில் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் இலங்கையர்கள் என்ற உணர்வுகளுடன் ஒரேநாட்டவர்களாக அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பங்குபற்றுவதுதான் அழகாக இருக்கும். இதிலும், பெளத்த தேசியவாத கருத்துக்களை தெளிவாகப் போசி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களில் கூட இவ்வாறு முஸ்லீம்கள் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவிடயமாகும். இது போன்ற இனவாத விடயங்கள் system change க்கூடாக நடைபெறலாம் என்பதற்காகத்தான் எந்தவித அரசாங்கத்திற்கும் 2/3 பெரும்பாண்மை சென்றுவிடக் கூடாது என்றும் அவ்வாறான அபரிவிதமான அதிகாரங்கள் ஆட்சியாளர்களை மனிதர்கள் என்ற அடிப்படையில் பிழையான நடைமுறைகளுக்குள் இட்டுச் செல்லும் என்பது இவ்வளவு விரைவாக அமுல்ப்படுத்தப்படும் என்று கூட நாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் கவலை இவைகளுக்கு மத்தியில் NPP க்கு வெளியிலிருந்து வேறுகட்சிகளுக் கூடாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது பாராளுமன்றத்திலாவது குரலாக இருக்கும் என்ற ஆருதலாவது இருக்கிறது.இவ்வாறான சந்தர்பத்தில் முஸ்லீம்கள் சார்பாக NPP க்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடந்தகால தவறுகளை, பிழைகளைத் திருத்தி இதயசுத்தியுடன் எமது சமூகத்திற்காக துணிவுடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம். MLM.சுஹைல் https://madawalaenews.com/8706.html
  17. பாராளுமன்றத்திற்குள் இப்படியும் நடந்தது பாராளுமன்ற சபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார் டாக்டர் அர்ஜுனா இராமநாதன். அது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசனம் எழும்புங்கள் என்று பணியாளர்கள் கூற, அப்படி எங்கே எழுதியுள்ளது என்று கேட்கிறார் அர்ஜுனா.. புதிய அமர்வில் எம்.பிக்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம்... ஆனால் ஜனாதிபதி , பிரதமர் , எதிர்க்கட்சித் தலைவர் ஆசனங்களுக்கு வரையறை உள்ளது..சம்பிரதாயம் உள்ளது என்று பணியாளர் கூற ,சம்பிரதாயத்தை மாற்றத்தானே வந்திருக்கிறேன் என்கிறார் அர்ஜுனா... அநேகமாக இனி சபைக்குள் சரவெடிதான்... (நன்றி - Siva Ramasamy) https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_129.html
  18. அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல ! இனவாதி என கூறப்பட்ட மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த எமது பா.உ. கள்* 1.ALM.அதாஉல்லா 2.ரிசாட் பதியுதீன் 3.றஊப் ஹகீம் (தபால்) 4.பேரியல் அஸ்றப் 5.AHM.பெளசி 6M.H.முஹம்மட் *Deputy -பிரதி அமைச்சர்கள்* 1.Basheer 2.Husain bahaila 3.MIM.Hizbullah 4.abdul Majeed 5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி) 6.Faizer Mushthafa (*மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள்*). 1.AHM.பெளசி 2.றஊப் ஹகீம் (நீதி) 3ALM.அதாஉல்லா 4.ரிசாட் பதியுதீன் 5.Abdul Cader கண்டி 6.Abdul haleem கண்டி 7.Basheer segudawuth *பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள்* 1.பைசர் முஸ்தபா 2.ஹிஸ்புல்லா 3.அமீர் அலி 4.ஹசன் அலி 5.பசீர் சேகுதாவூத் சரி இப்ப விசயத்துக்கு வருவோம், இதெல்லாம் பிழ ஆகவே சிஸ்டம் சேஞ்ச் (சிலருக்கு சிஸ்டமே விளங்கல்ல அப்ப எப்புடி சேஞ்ச் விளங்கும் என்பது வேற கத) .நாட்டில் சட்டத்தை இயற்றுவது பாராளுமன்றம்.ஆனால் ஆளுகின்ற *ஒழுங்குவிதிகளை* ( by- laws / regulations ) உருவாக்கும் மிக மிக முக்கியமான இடம் அமைச்சரவையாகும்.அமைச்சரவை முடிவுகள் கூட்டுப்பொறுப்புடையதாகவும்,சில போது இரகசியமானதாகவும் பேணப்படவேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும். இப்படியான மிக மிக முக்கியமான 21அமைச்சர்கள் நியமனங்களில் ஒண்றுகூட முஸ்லிம் இல்லை என்பது சாதாரணமாக கடந்துசெல்லும் விடயமல்ல.அனுரவிற்கும் அங்குள்ள அத்தனைபேருக்கும் இது தெரிந்தும் தைரியமாக முஸ்லிம் ஒருவரும் இல்லாமல் நியமணங்களை வழங்கியுள்ளார்கள். இதற்கு பிறகு அவர்கள் ஒருவரை நியமிக்கலாம் ஆனால் அதற்கே பலமட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதென்பது நுட்பமான அழுத்தங்களின் ஆரம்பகட்டமாகவே தோன்றுகின்றது.அமைச்சரவையில் முஸ்லிம்களின் விடயங்கள்தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்த ஓரிருவராவது அவசியம் அல்லவா. தமிழ் சமூகத்தில் இருவரை நியமித்து விட்டு (அவர்களுக்கு அப்படி என்னதகுதியோ தெரியாது,இவ்வாறு சொல்வதனால் சகோதர அந்த இனத்தை கொச்சைப்படுத்தும் அர்த்தமாகாது) இன்னொரு சமூகத்தை அவமானப்படுத்தக்கூடாது.அல்லது முஸ்லிம்கள் இங்கு ஒரு இனமல்ல அவர்கள் சாதாரண ஒரு குழுதான் என உலகிற்குச்சொல்லும் உள்குத்தா என்றும் புரியவில்லை.எமது முந்தைய அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்கலாம், அவர்கள் அமைச்சரவையில் எம் சமூகம் சார்ந்த நிலைப்பாட்டை ஆகக்குறைந்தது தெளிவாவது படுத்தின பல சந்தர்ப்பங்கள் உண்டல்லவா (இதில் விமர்சனங்கள் இல்லாமலில்லை) அதேநேரம் தமது அமைச்சுக்கள் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகளைப்பயன்படுத்தி எமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சேவைகளையாவது செய்தார்களல்லவா(ஒரேயடியாக நண்றிமறத்தலும் பிழைதானே). ஒருவருடைய பிரதிநிதித்துவம் என்பது அங்கீகாரம்,கெளரவம் அதனை இல்லாமல் செய்ததை நியாயப்படுத்த நினைக்கும் சில முகநூல் NPP போராளிகள் கொள்ளை அழகு. எந்தகட்சியாக இருந்தாலும் பிழையை பிழை என்று கூறும் மனநிலைப்பக்குவம் நம் அனைவரிடமும் இருக்கவேண்டும்.இவர்களது கொம்மியூனிச சாயல் சிலபோது மதவிடயங்களில் தலையிட்டாலும்,மம மாலிமாவ மாத்தயா எண்டுக்கு நிக்கமுடியாது என்பதும் வெளிப்படையானது. இலங்கை அரசியலில் வடகிழக்கு தவிர்ந்த அரசியல்வேறு ,வடகிழக்கு அரசியல்வேறு.வடகிழக்கு 30 வருட யுத்தத்தையும்,31 ஆயிரம் பிரச்சினைகளுடனும், இரத்தம் தோய்ந்த வரலாற்றுடனும் நிற்கின்ற பூமியாகும். இங்கு மேட்டுக்குடி அரசியலின் இயல்பில் அல்லுண்டு *கண்மூடித்தனமாக* போவதும் சிக்கலாகிவிடலாம். *அழகிய வண்ணாத்துப்பூச்சியும் ஒரு புழு தான் சகோதரயா* ML.M.Jahid- (B.A) Varipathanchenai https://madawalaenews.com/8766.html
  19. 10 இலட்சம் முஸ்லிம்கள் NPP க்கு வாக்களித்தனர், உணர்வுகளைப் புரியாது செயற்படுவது கவலைக்குரியது இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரசைகள். அந்த வகையில் இந்த சமுகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை. பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது. அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது. இப்படியிருந்தால் இந்த ஆரம்பத்திலேயே இது கலையப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை நுணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெவித்தார் https://www.jaffnamuslim.com/2024/11/10-npp.html
  20. A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளது ஆடை - உரிமையை உறுதிப்படுத்துவாரா பிரதமர் ஹரினி..? அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி) உயர்தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளது ஆடை விவகாரத்தில் அரச சுற்றுநிருபத்தினை அமுல்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுமா? எதிர்வரும் 25-11-2024 முதல் இலங்கையில் உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற ஏற்பாடாயிருக்கிறது. பரீட்சையில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்களையும், வளமான பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய பரீட்சைகள் வரும்போது கடந்த பல வருடங்களாக, முஸ்லிம் மாணவிகளின் ஆடை விவகாரம் சில பரீட்சை மண்டபங்களில் வைத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருதும், இதனால் முஸ்லிம் மாணவிகள் சங்கடங்களுக்குள்ளாவதும் வழமையாகிவிட்டது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாரிய எதிர்பார்ப்போடு, ஒருவித மனதயக்கத்தோடே முகம்கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவிகள் இதில் ஓரளவு அதிகமான மனஅழுத்தத்துடனும், பயத்துடனுமே பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர். இவ்வாரான நிலையில் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கும் ஆடை குறித்த (பர்தா-தலையை மறைக்கும்) தெளிவான நிலைப்பாட்டை கல்வி, உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூர்ய அவர்கள் பரீட்சை ஆணையாளருக்கும், பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுருத்தல்கள் வழங்க அவரச நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பரீட்சை மண்டபத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவிகளது பர்தாக்கள், பரீட்சை மண்டப அதிகாரகளால் களையப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பரீட்சைக்கு தோற்றாமல் இருந்ததாகவும் கடந்த காலங்களில் பேசப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களது பிள்ளைகள் பெரும்பாலான ஆண் பரீட்சாத்திகளுடன் (வகுப்பறைகளில்) அமர்த்தப்பட்டு பரீட்சைக்கு தோற்ற பணித்துள்ளனர். இதனால் அம்மாணவிகள் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். எனவே மாணவர்களுக்கு தங்களது பாடசாலை சீருடையோடு பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான சட்டபூர்மான அனுமதியினை (சுற்றுநிருபத்தை) அரசு வழங்கியிருக்கும் போது, அதற்கு மாற்றமாக செயல்படும் அதிகாரிகள் தண்டிக்கப்டவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா (தலை மற்றும் காதுகள் மறைக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை சீருடை) அணிந்து வருவதால் அவர்கள் கதைப்பதாகவும், Headset போன்றவற்றை பயண்படுத்துவதாகவும், பர்தாவினுள் பார்த்து எழுதுவதற்கான துனுக்குகளை மறைத்து வருவதாகவும் பரீட்சை மண்டப அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறான நிலைமைகளில் அதன் நம்பகத் தன்மை உறுதிப்டுத்தப்பட்டால், அவ்வாரு பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது பரீட்சை தடைசெய்யப்பட்டு, பரீட்சைகளில் தோற்றுகின்ற அவகாசம் மறுக்கப்படவும் வேண்டும். நேற்றைய (18-11-2024) தினம் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகள் 21 பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரு முஸ்லிம் உறுப்பினருக்காவது அவ்வாரான ஓர் அமைச்சுப் பதவியை வழங்காத இந்த அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை சற்று தளர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளின் போதாவது முஸ்லிம் மாணவிகளது ஆடைவிவகாரத்தில் அரச சுற்றுநிருப்த்தின்படி பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இப்போது தேசிய மக்கள் சக்தியே ஆளும் கட்சியாக இருக்கின்றது என்று சாக்குபோக்கு கூறாமல், எதிர்கட்சிகளில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருக்காமல், இம்மாணவர்கள் தோற்றும் பாடசாலைமட்ட இறுதிப் பரீட்சையாகவும், தங்களது எதிர்காலத்தை தீர்மாணிக்கின்ற மிக முக்கியமான பரீட்சையாகவும் இது இடம்பெற இருப்பதால் இதுவிடயத்தில் அக்கரை செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு வேண்டிக் கொள்கிறோம். https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_335.html
  21. NPP யின் இடதுசாரிக் கொள்கை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் ? “நாங்கள் கலக்கலாம் ஆனால் அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது எமது நாட்டில் பல்கலைக்கழக மானவர்களாக இருக்கும்போது JVP யின் கொள்கையில் கவரப்பட்டு இடதுசாரியாகவும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்பு வலதுசாரியாகவும் மாறிவிடுகின்றனர். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் JVP யின் ஆதிக்கத்துக்கு வந்தபின்பு அம்மாணவர்கள் தொடர்ந்து அதே கொள்கையில் இருந்திருந்தால், எப்பவோ இந்த நாட்டை JVP ஆட்சி அமைத்திருக்கும். வலதுசாரிக் கொள்கையில் இருப்பது இலகு. கட்டுப்பாடுடன்கூடிய இடதுசாரிக் கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது கடினம். JVP யின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் பின்னாட்களில் JVP யின் கொள்கையை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ வாதிகளாக மாறினர். அந்தவகையில் JVP தலைவரே இனவாதியாக மாறிய வரலாறுகள் இன்றுள்ள முஸ்லிம் புதிய போராளிகளுக்கு தெரியாது. அதாவது நீண்டகாலங்கள் JVP யின் தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் JVP வளர்ச்சிக்காக இன்று உள்ளவர்களைவிட அரும்பாடுபட்டவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின்னாட்களில் கொள்கையினை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாது இனவாதியாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். விடையம் அவ்வாறிருக்கும்போது, தேசிய அரசியலை கூர்ந்து கவனிக்காமல், ஊழலை ஒழித்தல் என்ற பிரச்சாரத்துக்கு மயங்கி எங்களது தனித்துவ அடையாளத்தினை இழந்துவிட முடியாது. சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது. ஏனெனில் அனைவரும் மனிதர்கள். அவர்கள் எந்நேரமும் கொள்கை மாறலாம் அல்லது மரணிக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/11/npp_14.html
  22. முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும்.- முபாற‌க் முப்தி முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வுக்கு க‌டித‌ம் அனுப்பியுள்ள‌து. இது ப‌ற்றி ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்த‌தாவ‌து, ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ உள்ள‌து. இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌மை மூலம் த‌மிழ் ம‌க்க‌ள் கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் இன்றைய‌ அமைச்ச‌ர‌வை நிய‌மிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வில் யார் முஸ்லிம் அமைச்ச‌ர் என்ப‌தை முழு முஸ்லிம்க‌ளுட‌ன் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ன‌ர். ஆனாலும் எவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌லைக்குரிய‌தாகும். இது விட‌ய‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் க‌டுமையான‌ க‌வ‌லையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. முத‌ல் நிக‌ழ்விலேயே இந்நிய‌ம‌ன‌ம் இட‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். ஆனாலும் இன்ன‌மும் கால‌தாம‌த‌ம் ஆக‌வில்லை. ஆக‌வே கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் ஒருவ‌ரை அமைச்ச‌ராக‌ நிய‌மிப்ப‌துட‌ன் முஸ்லிம் ச‌ம‌ய‌ விவ‌கார‌த்துக்கென‌ பிர‌தி அமைச்சு ஒன்றை உருவாக்கும்ப‌டியும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியை கேட்டுக்கொள்கிற‌து. https://www.importmirror.com/2024/11/blog-post_336.html
  23. வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை 🧭 தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும் முதலாவதாக இது பல்லின பலமத பல மொழி பலகலாசார பண்புகளைக் கொண்ட தேசம் என்பதனைப் பிரதிபலிக்கும் அரசியலமைப்பை அரசை அரச யந்திரத்தை கொண்டிருக்க வேண்டிய தேசம் என்பது அரசியல் அரிச்சுவடிப் பாடமாகும். அத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கு மதிப்பளிப்பது அறிவியல், உளவியல், சமூகவியல், விஞ்ஞான, நிபுணத்துவ அடிப்படைகளுக்கு புறம்பானதென எவரேனும் அதிகப்பிரசங்கித் தனமாக நியாயப்படுத்தினால் அவர்களது அறிவியல் நிபுணத்துவ தராதரங்களை மீள்பரிசீலனை செய்தல் வேண்டும். இனவாதம், மொழிவாதம், மதவாதமில்லாத இலங்கையர் நாம் என்ற அடையாளத்தை முன் வைத்து சகல சமூகங்களுக்கும் பொதுவான சவால்களுக்கு ஓரணி நின்று முகம் கொடுத்தல் என்பது சமூகம்சார் தனித்துவங்களை சமரசம் செய்து கொள்வதல்ல என்பதனை நாம் புரிந்து கொள்தல் வேண்டும். இனவாதம், மொழிவாதம், மதவாதம், பிரதேசவாதம் வேறு சமூகங்களின் இனத்துவ உரிமைகளை அடையாளங்களை அவற்றிற்கான அங்கீகாரங்களை, நியாயமான பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்வது என்பது வேறு என்பதனை எமது தோழமைகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனைப் புரிந்து கொள்ள நாம் சமூகங்களாகவும் தேசமாகவும் கொடுத்த பாரிய விலைகளின் பின்விளைவுகளே எமது தாய்நாட்டை இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதனை நாம் அறிவோம், சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றை மீள எழுத முன்வந்துள்ள நாம் அதே ஆரம்பப் புள்ளிகளில் மீண்டும் சங்கமம் ஆகி விடலாகாது. ஒரு தேசத்தில் அமைதி சமாதானமும் சகவாழ்வும் நிலவினால் மாத்திரமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட முடியும் அதன் அடிப்படையிலேயே பொருளாதார சுபீட்சம் ஏற்பட முடியும், அதுவே சர்வதேச அளவில் அரசியல் சாசனங்களின் அடிப்படை சித்தாந்தமாகும். இத்தகைய அடிப்படை பண்புகள் இல்லாது போகின்ற பொழுது அந்த இடைவெளிகளூடாக தேசிய பிராந்திய சர்வதேச சதிகார சக்திகள் ஊடுருவி தலையீடுகளை மேற் கொண்டு தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும், மேலாதிக்க போட்டிகளுக்கும் கூலிப்படைகள் கொண்டு சதித்திட்டங்களை தீட்ட முனைகின்றன, அது இன்று ஒரு தேசமாக எமக்குப் புதிய விடயமல்ல. ஒரு தேசமாக 2015 ஆம் ஆண்டு அழிவின் விளிம்பில் இருந்து நாம் எழுந்து நிற்க முனைந்த பொழுது, வங்குரோத்து நிலையில் இருந்து மீள எத்தனித்த பொழுது எத்தகைய சதித்திட்டம் 2019 இல் அரங்கேறியது என்பதனையும் தொடர்ந்து சுனாமிபோல் எம்மைக் காவிக் கொண்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும் நாம் நன்கு அறிவோம்.. அதன் விளைவாக நாம் ஒரு தேசமாக மக்கள் எழுச்சியிற்கு முகம் கொடுத்தோம், அரகலய எனும் மக்கள் எழுச்சியின் ஜனநாயக பரிமாணங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியேயும் உருக் கொடுத்த தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தந்தோம்.. தேசிய மக்கள் சக்தியின் மீதும் அதன் தலைமை மீதும், குறிப்பாக ஜனாதிபதி தோழர் அநுர மீதும் நாம் வைத்துள்ள நம்பிக்கை கிஞ்சித்தும் பழுதடைந்து விடக்கூடாது, சர்வதேச சமூகத்தில் குறிப்பாக அரபு முஸ்லிம் உலகில் அது ஒரு கேள்வியாக இருக்கக் கூடாது என்பதில் அதன் ஆதரவாளர்களாக செயற்பட்ட தொண்டர்களும் தோழர்களுமாக நாம் உறுதியாகவே இருக்கின்றோம், அத்தகைய திடமான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. உரிமைகளுக்கான, அடிப்படை உரிமைகளுக்கான ஜனநாயக அரசியல் போராட்ட வடிவங்கள் என்றவகையில் அதன் மைய நீரோட்டத்தில் இணைந்து கொண்டு எமது நியாயமான மனக்குறைகளை அபிலாஷைகளை அடைந்து கொள்ளவே நாம் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் அணிதிரண்டிருக்கிறோம். “நாம் ஆட்சிக்கு வர முன் எமக்கு ஒரு அரசியல் இயக்கமாக முன்னுரிமைகள் கடப்பாடுகள் இருந்தன, ஆனால் இன்று மக்கள் ஆட்சியை எம்மிடம் தந்துள்ளார்கள், மூன்றில் இரு பெரும்பான்மையையும் தந்துள்ளார்கள், தற்போது ஒரு அரசாங்கமாக எமது முன்னுரிமைகள் கடப்பாடுகள் பற்றி நாம் ஒட்டு மொத்த தேச மக்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்” என ஜனாதிபதி தோழர் அநுர வலியுறுத்தியது போல் இந்த தேசத்தின் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்துள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு அரசு முன்நோக்கி நகரும் என்ற நம்பிக்கையில் அதனை பாதுகாக்கவும் நாம் ஒரு தேசமாக ஒன்றினைந்து பயணிப்போம். புதிய அமைச்சரவையில் இன்று எமது பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்ற பிந்திய தகவலுக்கு நன்றி கூறி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து புதிய அமைச்சர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! *மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்* ✍️ 18.11.2024 || SHARE முன்னாள் பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை முன்னாள் ஸவூதி அரேபிய ஜித்தா நகரிற்கான கொன்ஸல் ஜெனரல் முன்னாள் அரசியல் நிபுணத்துவ ஆய்வாளர் ஸவூதி மற்றும் கத்தார் தூதரகங்கள். முன்னாள் கொன்ஸுலர் அதிகாரி குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள். https://madawalaenews.com/8595.html
  24. ஒன்றாக பொங்கல் பொங்க வாருங்கள். ஒன்றாக கயிரிழுகும் போட்டிக்கும் வாருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.