Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. பல காரணங்களுக்காக கண்ணை மூடிக்கொண்டு, கையை கழுவிட்டு இருந்த தி.மு.க இப்போது எதுக்கு இந்த விடுதலைக்கான உரிமை கோரும் பேடித்தனத்தில் இறங்கியுள்ளார்கள்?? 🤔 இவர்களது விடுதலை குறித்து நெடுமாறன் ஐயா, வைகோ போன்றவர்கள் செய்த கோரிக்கைகள், மேடை முழக்கங்கள் ஓய்ந்த நிலையில், சீமான் மேடை மேடையாக பேசி இந்த விவகாரத்தை வெகுஜன பேசுபொருளாக மாற்றியவர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் இதை நான் தான் செய்தேன் என்று சீமானும் உரிமை கோரவில்லை. பேரறிவாளன், அற்புதம் அம்மா அவர்களின் விடா முயற்சி முதல் காரணமாக இருந்தாலும், தோழர் செங்கொடி போன்றவர்களின் போராட்டமும் அ .தி.மு.கா வின் தொடர் கோரிக்கைகள் இவையும் காரணம்.
  2. இப்படியான சின்ன சின்ன மன மாற்றங்கள் மக்களிடையே நிகழும் பொழுது அதனை தட்டிக்கொடுப்போம். துவேசத்தை தூண்டாத, நம்பிக்கை வளர்க்கும் வகையிலான எமது பணியை தொடர்ந்தும் செய்வோம். பலனை எதிர்பாராது கடமையை செய்வோம். 🙏
  3. சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டதாகவும், உணர்ச்சிபூர்வமாக அஞ்சலி செலுத்தியதாகவும் கூட செய்திகள் வந்தன உண்மையா?
  4. நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.
  5. என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்: ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை. ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு. இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன. இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட்டால் வெண்டும். மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும் பாருங்கள், அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான். கடமையை செய்... பலனை எதிர்பாராதே.
  6. (மேற்கத்திய ஊடகமாம் Channel 4 ) வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.
  7. இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ. ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி காலி முகத்திடலில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமை மஹிந்த ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் கூடி இருந்த போராட்டக்காரர்களை தாக்கினர். இதனையடுத்து இலங்கையின் பல பகுதிகளில் வன்முறை பரவியது. பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் கோட்டாபய ராஜபக்ஷ. அப்போது பேசிய அவர் , நாடு ஸ்திரதன்மை அடைந்த பின்னர், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக இன்று உறுதி வழங்கியுள்ளார்.புதிய அரசாங்கத்தை ஒரு வார காலத்திற்குள் நிறுவி, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
  8. திருகோணமலையில் உள்ள சோபர் ஐலண்டில் ராஜா பட்சிகளின் குடும்பம் தலைமறைவாக இருப்பதாக செய்தி. இங்கே இருக்கும் ஒரு ஹோட்டல் கூட சிராந்தியின் பெயரில் தான் நிர்வாகிக்கப்படுகிறதாம்.
  9. 1-சனத் நிஷாந்தவின் வீடுகள் 2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு 3- குருணாகல மேயர் இல்லம் 4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் 5- மொரட்டுவாவின் மேயர் இல்லம் 6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு 7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு 8- ரமேஷ் பதிரானா வீடு 9- புனித பண்டாராவின் வீடு 10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை நீர்கொழும்பில் 11-அவென்ரா கார்டன் ஹோட்டல் 12- அருந்திகாவின் வீடு 13 கனக ஹேரத்தின் வீடு 14- காமினி லோகுவின் வீடு 15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில் 16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு லான்சாவின் (2 வீடுகள்) 18- பந்துல குணவர்த்தனவின் வீடு 19 - அலி சப்ரி ரஹீமின் வீடு
  10. இந்த போராட்டம் ஆரம்பித்தபோது இதை சிறுபிள்ளைதனமாகவும், நக்கலும் நையாண்டியுமாய் இருந்தவரும் இருக்கிறார்கள்... இன்று நடப்பவைகளை அவர்களும் பார்த்து பரசவமடைவதில் மகிழ்ச்சி 😃
  11. இது சுத்த ஹம்பக் செய்தி. ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்திச்செல்லப்பட்டு அடித்து அம்மணமாக்கப்பட்டே கொல்லப்பட்டுள்ளார், அவரின் மெய்ப்பாதுகாவலம் அடித்து துவம்சம் செய்யப்பட்டுள்ளார்கள்
  12. அமரகீர்த்தி அத்துகோரல - பொலன்னறுவை எம்.பீ, நிட்டம்புவையில் அவரின் பாதுகாப்பாளர்கள், அவர் சகிதம் போராட்டக்காளருக்கு துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தர்ப்பத்தில் அவரை உயிருடன் பிடித்து அங்கே இருந்த ஒரு கட்டிடத்துக்கு கொண்டு சென்று அடித்து கொலைசெய்யப்பட்டதாகவும், மந்திரி நிமல் லான்சா வின் இரண்டு வீடுகள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டுள்ளகவும் தகவல்கள் காலிமுக திடலில் இருந்து செய்திகள்..
  13. ம்ம்ம் ஒரு நேரத்தில் இந்த இந்த போராட்டமே தேவையில்லாத ஆணி என்ற கருத்து, நக்கல், நையாண்டி. இன்னும் ஒரு நேரத்தில் ஒரு சின்ன நட்பாசை. ஒன்றுமட்டும் நிச்சசயம்; தமிழருக்கு தீர்வு இப்ப மட்டும் அல்ல.. எப்பவுமே எட்டாக் கனி தான். 🤷‍♂️
  14. வணக்கம் சகோதரம், உங்கள் முதல் ஆக்கத்தையே மிக ரசனையோடு, அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.!!! நல்லதொரு நேரத்தில் (ரஷிய /உக்ரைன்) போர் சூழலில் உங்களின் ஆக்கம் வருவது இன்னும் சிறப்பு. 👌 உங்களின் நிறைந்த அனுபவங்கள், கற்றல்கள் சார்ந்து கருத்துக்கள் இந்த நாட்டின் இன்றைய சூழ்நிலையை கூட அலசிப்பார்க்கும் என்பது எண்ணம். நீங்கள் நடந்து திறிந்த, சுற்றிய இடங்கள் எல்லாம் இன்று சிதைந்தும், சீமேந்தும், கட்குவியலாகவும் இருப்பது கவலைக்குரியதே. நானும் நுணாவில் பக்கத்தில் ...கைதடி / நாவற்குழி வாசிதான். 😉
  15. சரி பெருமாள்.. வசிஷ்டர் உங்கள் வாயால் "சிங்கள அனுதாபி" பட்டம் வாங்கியாச்சு. இனி என்ன அடுத்து கௌரவ "இனத்துரோகி" பட்டம் தானே. விழாவுக்கு காத்திருக்கிறேன். 😃🤙 "உன்னை அறிந்தால் ... நீ உண்மை அறிந்தால் உலகத்தில் போராடலாம். வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்.
  16. பெருமாள்... இங்கே சிலபேர் அடித்துவிடும் கதைகளை (முள்ளிவாய்க்கால் அவலங்களை எம்மிடமே எமக்கு தெரியாதது போல படம் போட்டு காட்டும் நபர்களின்) கப்ஸாக்களை கேட்டு நொந்துபோய் sarcastic ஆகா சொன்னது தான் எனக்கு ஐயா கலாநிதி, அரசியர் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை இவ்வளவு நாள் தெரியாது என்று நான் கூறியது. அதை நீங்கள் அப்படியே எடுத்துகொண்டு இருக்குறீர்கள். சிறப்பு!!! சரி நீங்கள் எழுதிய " கடைசி சண்டையில் கூட வேற்று நாட்டு படைகளே கூட இருந்தனர்." இதன் தமிழ் அர்த்தம் உள்ளூர் படையணியை விட வெளிநாட்டு படைகள் அங்கு யுத்தம் புரிந்தன என்று தான் நான் புரிந்து கொள்கிறேன். அதை தான் மிகைப்படுத்தல், அல்லது தவறு என்றும் கூறுகிறேன். காரணம் அன்றைய கட்டத்தில் இலங்கை படையின் எண்ணிக்கை சுமார் 300,000. இதற்கு ஆதாரம் இருந்தும் ஒருவர் தருவதில் சிக்கல் என்கிறார். நீங்கள் வேறு எதோ சொல்கிறீர்கள். பரவாயில்லை கடந்து போவோம்.
  17. அதாவது 300,000 ஐயும் தாண்டி அதற்கு அதிகமான தொகை வெளிநாட்டு படைகள் இலங்கையில் இருந்தது. 👌
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.