Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை!

* `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு

* யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு

உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

p10tr.jpg

உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும்.

பழிதீர்ப்பதற்காக எதிரிகளை நோக்கி பொதிகளூடாக அல்லது தபால் மூலமாக பெரும்பாலும் அனுப்பப்படும் இது, பல நாடுகளிலும் பீதியை கிளப்பி வருகின்றது. தூதரகங்கள், பாதுகாப்பு மையங்களென முக்கிய அலுவலகங்கள் இதன் பீதியால் அடிக்கடி இழுத்து மூடப்படுகின்றன.

2001 இல் அமெரிக்காவில் `அந்திரக்ஸ்' தாக்குதல் இடம்பெற்றது. இலங்கையில் கூட `அந்திரக்ஸ்' அச்சத்தால் அலுவலகங்கள் மூடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நோர்வே தூதரகம் `அந்திரக்ஸ்' பீதியால் சில நாட்கள் மூடப்பட்டன. இவ்வாறு `அந்திரக்ஸ்'ஸின் அடாவடித்தனங்கள் பலவுள்ளன.

அது என்ன அந்திரக்ஸ்?

பஸிலஸ் அந்திரக்சிஸ் (Bacillus anthracis) எனும் பக்ரியாவால் ஏற்படுகின்ற, தொற்றக் கூடிய நோயே `அந்திரக்ஸ்'. வளியில் பரவக்கூடிய இவ்வகை பக்ரீறியா உயிர்களை குடிக்கவல்லது என்பதால் பயங்கரவாதிகளால் நாசகார ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது.

வேறு பொருட்களுடன் இக் கிருமியையும் பொதியாக்கி தமது இலக்குகளை நோக்கி அனுப்பி அங்கு அழிவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைக்காக இது பயன்படுத்தப்படுகின்றது.

கடிதங்கள், பொதிகளூடாக உயர் அதிகாரிகளின் முகவரிகளுக்கு இதை அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தே அவர்களை கொல்லக்கூடிய சதித் திட்டத்துக்கும் இந்த கொடிய பக்றீரியா உதவுகின்றது.

அஞ்சல் அலுவலகங்கள், விமான நிலையங்கள், அரசியல் தளங்கள் என முக்கிய இடங்களுக்கு இது அனுப்பப்பட்டிருக்கின்றது. இதேவேளை, கடிதங்கள்/பொதிகளில் தூள் போன்ற பொருளை கண்டதும் `அந்திரக்ஸ்' வந்துவிட்டதென கிலிகொண்டு ஓடிய சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இதை உடனடியாக எப்படி இனங்கண்டு கொள்வதென்பது சவாலாகவே இருந்து வந்துள்ளது.

இந்த உயிர்கொல்லி "ஆயுதத்தை" எதிர்கொள்ள அரசாங்கங்களின் பாதுகாப்புப் பிரிவுகள் இருவேறு முதற்கட்ட திட்டங்களை கொண்டிருக்கின்றன. முதலாவது, மேலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் இடம் பெறுவதை முறியடிப்பது. மற்றையது `அந்திரக்ஸ்'ஸின் அச்சறுத்தலால் ஏற்படும் விளைவுகளை குறைத்தல் - இதற்கு உரிய நேரத்தில் சரியான தகவல்களை வழங்கி பொது மக்களுக்கு உண்மை நிலையை புரியவைத்தலே முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, எம்மை நெருங்கிவந்த பொருள் `அந்திரக்ஸ்' கிருமியா? அல்லது வேறெதுவுமா? என்பதை உடனடியாக கண்டறியக்கூடிய தேவையே அரசாங்கங்களால் உணரப்பட்டுள்ளது. ஏனெனில், பல இடங்களில் `அந்திரக்ஸ்' புரளிகள் ஏற்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்ட சம்பவங்களே அதிகம்.

`அந்திரக்ஸ்' கிருமியா? என்பதை அறிவதற்காக ஏற்கனவே தொழில்நுட்பமுள்ளது. ஆனால், அது மிகவும் சிக்கலானது. வேறு பொருட்களில் கலந்திருக்கும் `அந்திரக்ஸ்' கிருமியை பிரித்தறிவதற்கு புளோரொசன்ஸ்ஸுடன் வெப்பம்/ கழிஒலியை பயன்படுத்துதல் அல்லது ஈர இரசாயன முறையை பயன்படுத்துதல் தொழில் நுட்பமே இதுவரை காலமும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இத் தொழில்நுட்பத்தை சிறந்ததொன்றாக நிபுணர்கள் கருதவில்லை. ஏனெனில், இச் சோதனைக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. அதீத பணம் செலவளிக்கப்படுகின்றது. அத்துடன், இச் சோதனை முறையும் சிக்கலானது.

ஆகவே, ஓர் புதிய தொழில்நுட்பமொன்றை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உலகெங்கிலுமுள்ள விஞ்ஞானிகள் செற்பட்டு வருகின்றனர். இவர்களை முந்திக் கொண்ட `அந்திரக்ஸ் கண்டுபிடித்தல்' தொழில்நுட்பமொன்றை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் தமிழரொருவர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளர் சரசானந்தராசா சிவானந்தன் தான் இப் புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்.

நியூஸிலாந்தின் கன்ரபறி பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கற்கையை மேற்கொண்டு வரும் சிவானந்தனின் இப் புதிய கண்டுபிடிப்பை அமெரிக்க பாதுகாப்புத்துறை நிறுவனமான `பென்ரகன்' மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `நாசா' போன்றவை முக்கியமானதொன்றாக வரவேற்று ஆவணப்படுத்தியுள்ளன.

கன்ரபறி பல்கலையின் அறிக்கை

கன்ரபறி பல்கலைக்கழக பேராசிரியர் லூ றெய்னிஸ்ஸின் மேற்பார்வையில் சிவானந்தன் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலம் `அந்திரக்ஸ்' உயிர்கொல்லி பக்ரீறியாவை மாத்திரமன்றி, பல்வேறு வகையான பக்ரீறியாக்களை குறித்த மாதிரியிலிருந்து விரைவாக பிரித்தறிந்து இனங்காண முடியுமெனவும் சாதாரண கலங்களிலிருந்து புற்றுநோய்க் கலங்களை வேறுபடுத்தி பார்க்கக் கூடிய திறன் இப் புதிய தொழில் நுட்பம் மூலம் கிடைத்திருப்பதாகவும் கன்ரபறி பல்கலைக்கழத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கழியூதாக் கதிர்வீச்சை பயன்படுத்தி புளோரொசன்ஸ் (FluoreScence) எனப்படும் முறை மூலம் இக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திலும் பார்க்க இது மிக எளிதானதென தெரிவிக்கும் அவ்வறிக்கை, இவ் புதிய கண்டுபிடிப்பு நம்பகமான மற்றும் வினைத்திறனான தொழில்நுட்பமாக இருக்கும் என்பது ஆய்வு கூடத்தில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த சிவானந்தன்?

யாழ்ப்பாணம் - வலிகாமம் - தொல்புரத்தை சேர்ந்த காலஞ்சென்ற தபாலதிபர் சரசானந்தராசா மற்றும் நாகேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரான இவர் யாழ்.மருத்துவ பீடத்தின் மருத்துவ பௌதீக விரிவுரையாளர்.

p25ap.jpg

நியூஸிலாந்தின் கன்ரபறி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீகவியல் துறையில் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கற்கையை மேற்கொண்டுவரும் சிவானந்தன், யாழ்.பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டதாரியாகி பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பௌதீக துறையில் முதுமாணி பட்டத்தை பெற்றதுடன் கன்ரபறி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பௌதீக டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

சுழிபுரம் - விக்ரோறியாக் கல்லூரி மற்றும் யாழ். இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் இதுவரை பத்துக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்கா அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நியூஸிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றி தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகில் உயர்ந்து செல்லும் விஞ்ஞான வளர்ச்சியில் தமிழர் நாமும் பங்காளிகளே என்பதை சிவானந்தன் நிரூபித்துள்ளார். மாற்றான் மகுடத்தை எழுதி புளித்த எமக்கும் நம்மவரின் சாதனையை எழுத இனிப்பாகவேயுள்ளது.

நன்றி தினக்குரல்...

உண்மையில் ஒவ்வொரு தமிழனும் பெருமைபடவேண்டிய செய்தி,,

சிவானந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் சேவை,, :idea:

அந்திராக்ஸ் உயிர்கொள்ளி தொடர்பில் புதியகண்டுபிடிப்பு.

ஈழத்தமிழர் சிவானந்தனின் சாதனை

http://www.nitharsanam.com/?art=15870

அந்திராக்ஸ் உயிர்கொள்ளி தொடர்பில் புதியகண்டுபிடிப்பு.

ஈழத்தமிழர் சிவானந்தனின் சாதனைhttp://www.nitharsanam.com/?art=15870

தகவலுக்கு நன்றி.

சிவானந்தனுக்கு வாழ்த்துக்கள்..........

இக் கண்டு பிடிப்பு

மிக முக்கியமான ஒன்று என்பதால்

இது தொடர்பாக ஆங்கிலத்தில் வந்த ஆக்கங்களை இணைத்தால் இதை ஏனையவர்கள் முன் உறுதிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

செய்வீர்களா அரவிந்தன்................?

தகவலுக்கு நன்றி.

சிவானந்தனுக்கு வாழ்த்துக்கள்..........

இக் கண்டு பிடிப்பு

மிக முக்கியமான ஒன்று என்பதால்

இது தொடர்பாக ஆங்கிலத்தில் வந்த ஆக்கங்களை இணைத்தால் இதை ஏனையவர்கள் முன் உறுதிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

செய்வீர்களா அரவிந்தன்................?

http://www.phys.canterbury.ac.nz/people/sa...arajah%20.shtml

அவர் கலாநிதிபட்டத்திற்கான ஆய்வு செய்யும் கன்ரபரி பல்கலைகழக இணையப்பக்கத்தில் அவரது விபரம்.

Lou Reinisch, Joseph Kunnil and Sivananthan Sarasanandarajah. Anthrax detector development. New Zealand Science Review, Volume 62, Issue 1-2, 23-25 (2005).

Joseph Kunnil, Sivananthan Sarasanandarajah, Easaw Chacko, Barry Swartz and Lou Reinisch. Identification of Bacillus spores Using Clustering of Principal Components of Fluorescence Data. Aerosol Science and Technology. Volume 39, Number 9, 842-848 (2005).

Sivananthan Sarasanandarajah, Joseph Kunnil, Burt V.Bronk and Lou Reinisch. Two dimensional Multi Wavelength Fluorescence Spectra of Dipicolinic Acid and Calcium Dipicolinate. Applied Optics, Volume 44, Issue 7, 1182-1187 (2005).

Sivananthan Sarasanandarajah, Joseph Kunnil, Easaw Chacko, Burt V.Bronk and Lou Reinisch. Reversible changes in fluorescence of bacterial endospores found in aerosols due to hydration/drying. Journal of Aerosol Science (Elsevier). Volume 36, Issue 5-6, 689-699 (2005).

மேலே தரப்பட்டவை அவரது கட்டுரைகள் விஞ்ஞான ஆய்வுகள் சம்பந்தமான சஞ்சிகைகளில் அவரது கட்டுரைகள் வந்தமைக்கான ஆதாரங்கள். அக்கட்டுரைகள், மின்னூல் வடிவில் இருந்தால் கட்டணம் செலுத்தியே உட்சென்று அந்த கட்டுரைகளை பார்வையிட முடியும்.

தகவலுக்கு நன்றி குளக்காட்டான்.

மீண்டும்

சிவானந்தனுக்கு வாழ்த்துக்கள்..........

  • கருத்துக்கள உறவுகள்

இதை நானும் அறிந்தேன்.நாம் எல்லாம் பெருமை படவேன்டிய விசயம்.தமிழனின் இப்படியான திறமைகளை கன்டு தான் எல்லாரும் பயப்படுகிறாங்கள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் சிவானந்தனுக்கு வாழ்த்துக்கள்.. சாதனைகள் தொடரட்டும். :P

இவரைப் பற்றிய தகவல் தந்த அனைவருக்கும் நன்றிகள். சிவானந்தத்துக்கு வாழ்த்துக்கள். மேலும் இத் துறையில் சிறந்து விளங்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவானந்தத்துக்கு வாழ்த்துக்கள்

imcover32vv.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.