Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கிஸ்தானில் ஒரு புதிய நாடு தோன்றும் சாத்தியம்! – செண்பகத்தார்

Featured Replies

கிழக்கு பாக்கிஸ்தான் இந்தியாவின் உதவியோடு வங்காள தேசமாக உருவாகியதைப் போல் பாக்கிஸ்தான் எனப்படும் முன்னாள் மேற்கு பாக்கிஸ்தான் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் ஆதரவுடன் மீண்டும் உடையும் வாய்ப்பு இருக்கிறது.

இம்முறை பாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் மிகப் பெரியதும் இயற்கை வளங்களில் பெறுமதி கூடியதுமான பலுச்சிஸ்தான் (Baluchistan) புதிய நாடாக உருவாகும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. பாக்கிஸ்தானின் முழு நிலப் பரப்பில் 44 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் பலுச்சிஸ்தானில் எரிபொருள்களான எண்ணை, எரிவாயு மற்றும் தங்கம், செம்பு போன்ற தனிமங்களும் காணப்படுகின்றன.

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்குப்படி 19 டிரில்லியன் கன அடி (19 Trillion Cubic feet) எரிவாயு பலுச்சிஸ்தான் மண்ணடியில் கிடக்கிறது. மேலும்; சாகாய் மாவட்டத்தில் (Chagai District) பெருமளவு தங்கமும் செம்பும் இருப்பதாகக் கண்டறியபட்டுள்ளது.

balochistan-conspiracy.jpg

பலச்சிஸ்தானின் வருவாய் அந்த மாநில மக்களுக்குச் செலவிடப் படுவதில்லை. மக்கள் வறுமையில் வாழும் போது பாக்கிஸ்தான் அரசு வருவாய் அனைத்தையும் தனது தேவைக்கு எடுத்துக் கொள்கிறது. பலுச்சிஸ்தானின் வர்த்தகம் வந்தேறு குடிகளான பஞ்சாபிகள், சிந்திகள் ஆகியோர் கைகளில் இருக்கிறது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் எல்லைகளாவன மேற்கில் ஈரான், வடமேற்கில் ஆப்கானிஸ்தான், வடக்கில் கைபர் கணவாய் மற்றும் பழங்குடிகள் வாழ்விடங்கள், வடகிழக்கு பாக்கிஸ்தானின் பஞ்சாப், தென்கிழக்கு பாக்கிஸ்தானின் சிந்து மாகாணம்.

பலுச்சிஸ்தானின் தலைநகரம் கோடைகாலத்தில் குவெற்றா (Quetta) குளிர் காலத்தில் குவதார் (Gwadar). துறைமுகமாகவும் குவதார் இடம்பெறுகிறது.

பலுச்சிஸ்தானின் கேந்திர முக்கியத்துவம் அதனுடைய புவியியல் அமைவு காரணமாக எழுந்துள்ளது. அதன் தெற்கில் அரபிக் கடல் இருப்பதால் பலுச்சிஸ்தான் வரலாற்றின் நடுவே இருக்கிறது. மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா என்பன பலுச்சிஸ்தானின் அக்கம் பக்கமாக இருக்கின்றன.

பலுச்சி இனத்தவர்கள் (Baluchi) தென் மேற்கு ஆசியாவின் ஈரான் பீடபூமி என்ற வறண்ட மலைப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள். பலுச்சிகள் தென் கிழக்கு ஈரான், மேற்கு பாக்கிஸ்தான், தென் மேற்கு ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.

இந்த இனம் இப்படிப் மூன்று நாடுகளில் பிளவுபட்டு வாழ்வதற்கு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காரணமாகிறது. 1871ல் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ஈரானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக்கோட்டைக் கீறினார் அவர். பலுச்சிகளின் வாழ்விடப் பெரும்பகுதியை அப்போதைய ஈரான் அரசுக்கு விட்டுக் கொடுத்தார்.

சார் மன்னர்கள் ஆட்சி செய்த ருஷ்யாவின் தெற்கு நோக்கிய விரிவாக்கத்தை ஈரான் அரசின் உதவியோடு தடுப்பதற்காக இந்த விட்டுக் கொடுப்பை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக இன்று ஒரு மில்லியனுக்கும் மேற்;பட்ட பலுச்சி மக்கள் ஈரானில் காணப்படுகின்றனர்.

அவர்கள் தம்மை ஈரான் ஆட்சிப்பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், பலுச்சிகளோடு இணைய விரும்புகின்றனர். ஆனால் விருப்பம் நிறைவேறும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் 1948ம் ஆண்டு தொடக்கம் தேசிய விடுதலைப் போர் தொடர்ச்சியாக நடக்கிறது. 1953ல் அது தீவிரமடைந்து 1960,1970ல் முழுப் போராக வெடித்தது. 1970களில் பாக்கிஸ்தான் அரசு மிகக் கொடிய இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது.

பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறைக்கு ஈரான் அரசு ஆயுத தளபாடங்களும் உலங்கு வானூர்திகளும் ஆளணி உதவிகளும் வழங்கியது. 1979ல் ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெடித்த பிறகு இரு நாட்டு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது.

சியா மத ஈரான் சன்னி மதப் பாக்கிஸ்தானைச் சந்தேகக் கண்ணுடன் நோக்கியதோடு வழங்கிய உதவிகளை நிறுத்தியது.

ஆனால் தனது நாட்டுப் பலுச்சி மக்களின் விடுதலை உணர்வை நசுக்கியது. இருபக்க பலுச்சிகளின் ஒன்றிணையும் துடிப்பு மாத்திரம் தணியாதிருக்கிறது.

பாக்கிஸ்தான் இராணுவமும் ஐஎஸ்ஐ எனப்படும் புலனாய்வுத்துறையும் பலுச்சிஸ்தானில் 1958ம் ஆண்டு தொடக்கம் குவிக்கப்பட்டுள்ளன. படுகொலைகள், காணாமற் போதல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்ற குற்றச்சாட்டுகள் இராணுவத்தின் மீது சுமத்தப்படுகின்றன.

பலுச்சி விடுதலை இராணுவம் (Baluchi Liveration Army) மக்கள் விடுதலைப் போரை நடத்துகிறது. 2006ம் ஆண்டு நடந்த சண்டையில் விடுதலை வீரர் அக்பர் புக்தி (Akbar Bukti) கொல்லப்பட்டார். அவரை முன்நிறுத்தி விடுதலை போர் தொடர்கிறது.

இலங்கையைப் போல் பாக்கிஸ்தான் உருவான போதே பலுச்சிஸ்தான் பிரச்சனையும் உருவாகிவிட்டது. பலுச்சிகளின் சுயாட்சிக் கோரிக்கை வலுத்து வருகிறது. மறைந்த தலைவர் அக்பர் புத்தியின் பேரன் பாஹம்தா புத்தி, ஹர்ப்யார் மாரி ஆகியோர் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர்.

இன்னும் சில தலைவர்கள் அமெரிக்காவில் நிலைகொண்டுள்ளனர். பலுச்சிஸ்தான் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப் படுவதற்கும் தனி நாட்டுக் கோரிக்கைக்கு மேற்கு நாடுகளில் ஆதரவு வலுப் பெறுவதற்கும் பலுச்சிஸ்தானில் சீனப் பிரசன்னம் முக்கிய காரணமாக அமைகிறது.

குவதார் துறைமுக மேம்பாட்டிற்குச் சீனா ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அது சீனாவின் தென் மேற்கு ஆசியாவின் நீலக் கடல் (Blue Water) துறைமுகமாக இடம்பெறுகிறது. இந்தத் துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள சயின்தாக் (Saindak)தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களிலும் சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள குவதார் ஆழ்கடல் துறைமுகம் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் நலனைப் பெருமளவில் பாதிக்கிறது. எண்ணை வளம் நிரம்பிய பாரசீகக் குடாவில்; தனது நடவடிக்கைகளைச் சீனா குவதாரில் இருந்து கண்காணிக்கும் என்ற அச்சம் அமெரிக்காவைத் தொட்டுள்ளது.

அரபிக் கடல் வரை மேற்குச் சீனாவில் இருந்து பலுச்சிஸ்தான் ஊடாகத் தொடரும் கரக்கோரம் நெடுஞ்சாலை பாக்கிஸ்தானைப் பொருளாதார வலுமிக்க நாடாக உயர்த்தும் என்ற அச்சம் புது டில்லிக்கு இருக்கிறது. சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இந்த நெடுஞ்சாலை பெரும் வரப்பிரசாதமாக அமைகிறது. கடல் தொடர்பற்ற மேற்கு சீனாவின் இயற்கை வளங்கள் குவதார் மூலம் வெளி உலகைச் சென்றடைகிறது.

மத்திய ஆசியாவில் கால் பதித்தபடி அங்கு மண்டிக் கிடக்கும் வளங்களை சூறையாடும் அமெரிக்காவின் நெடுங்காலத் திட்டம் நிறைவேறாமல் கரக்கோரம் நெடுஞ்சாலையும் குவதார் துறைமுகமும் தடுத்துள்ளன. இது போதாதென்று பலுச்சிஸ்தான் வளங்களையும் சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

வறுமை தாண்டவமாடும் பலுச்சிஸ்தானின் வளங்களைப் பாக்கிஸ்தானும் சீனாவும் பங்கு போடுகின்றன. சீனாவின் தலைமையில் நடக்கும் மேம்பாட்டுத் திட்டங்களில் பலுச்சி மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப் படுவதில்லை. சீனத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டுப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

பலுச்சிஸ்தான் விடுதலைப் போருக்கு அமெரிக்காவும் இந்தியாவும் தனித் தனியாக ஆதரவு வழங்குகின்றன. சர்வதேசக் கொள்கைக்கான அமெரிக்க மையம் (American Center for International Policy) பலுச்சிஸ்தானில் நிலைகொண்டுள்ள பாக்கிஸ்தான் இராணுவத்தை விலக்கும்படி அறைகூவல் விடுத்துள்ளது.

பாக்கிஸ்தான் எல்லையோரமாக இருக்கும் அப்கானிஸ்தான் – ஈரான் பகுதியில் இந்தியா துணைத் தூதரகங்களைத் திறந்து அங்கிருந்து பலுச்சிஸ்தான் விடுதலைப் போருக்கு உதவுவதாகப் பாக்கிஸ்தான் குற்றஞ் சாட்டுகிறது. இதை இந்தியா மறுத்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் பாக்கிஸ்தானும் இந்தியாவும் முட்டி மோதுகின்றன.

அதைப் போன்ற நிலவரம் பலுச்சிஸ்தானிலும் காணப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பெற்ற பலுச்சிஸ்தான் விடுதலை இராணுவம் சீனத் தொழிலாளர்களையும் பொறியியலாளர்களையும் தாக்குகின்றது. அவர்களுடைய பாதுகாப்பிற்கு சீன இராணுவம் சிறு அணிகளாக வந்துள்ளது.

அமெரிக்காவில் தங்கியுள்ள பலுச்சி விடுதலைத் தலைவர்கள் தமது விடுதலைப் போருக்கு ஆதரவு தரும்படி இந்தியாவைப் பகிரங்கமாகக் கோரியுள்ளனர். இந்த அழைப்பிற்கு காத்திராமல் இந்திய உதவிகள் ஏற்கனவே சென்றடைந்துள்ளன.

அமெரிக்க – சீனப் பனிப் போர் வெளிப்படையாகத் தென்படாவிட்டாலும் அதற்கான அறிகுறிகள் பலுச்சிஸ்தானிலும் இலங்கையிலும் தெளிவாகத் தெரிகின்றன. மியன்மாரில் சீன ஆதிக்கத்தை மட்டுப் படுத்துவதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.

மியன்மாரோடு ஒப்பிடுகையில் இலங்கையில் இருந்து சீனாவை வெளியேற்றும் அமெரிக்க முயற்சிக்குக் கடும் பிரயத்தனம் தேவைப்படப் போவதில்லை. பாக்கிஸ்தானில் இருந்து சீனாவை வெளியேற்றுவதற்கு அமெரிக்க வெளிவிவகார நிபுணர்கள் சத்திர சிகிச்சை செய்வதையே விரும்புகின்றனர்.

அதாவது பலுச்சிஸ்தான் என்ற தனி நாட்டின் தோற்றத்திற்கு உதவியபடி அதைத் தனித்தியங்க விடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திட்டம் அமெரிக்க உயர் மட்டத்தில் தீட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கையும் வெளிப்படுவது உறுதி

www-Tamilkathir.com

நல்ல விடயம். புதிய நாடு மலர்ந்தால்:

- அதுவும் ஒரு தீவிரவாத நாடாக் இருக்காமல் இருந்தால் நல்லம்

- அதுவும் ஒரு அணு ஆயுத நாடாக இருக்காமல் இருந்தால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

புதியநாடு தொன்றவேண்டியது பாகிஸ்தானில் அல்ல அது இந்தியாவில்தான்,

இந்தியாவில் என்றால்தான் நல்லாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது.. நிண்டவன் போனவனுக்கெல்லாம் நாடு கிடைக்குது..! :blink:

ஆசியாவில் எங்கேயாவது ஒரு இடத்தில் தொடங்கட்டும். அப்பொழுதான் மடை திறக்கும்.

அமெரிக்கா ஆதரிக்கும் என்றால் பறவாயில்லை ஆனால் இந்தியா தனக்கு பக்கத்தில் இன்னுமெரு முஸ்லிம்நாடு உருவாகுவதை விரும்புமா?

எப்படி காஷ்மீரை இந்தியா பிரிய விடாதோ ( பிரிவதை விட அதை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கலாம்) அதே போல தான் பாகிஸ்தானில் இருந்து இன்னுமெரு நாடு இனி உருவாகுவது இந்தியாவுக்கே தலையீடியாக அமையும்.....

பாகிஸ்தானில் இருந்து பிரித்துக் கொடுத்த பங்களாதேசம் இந்தியாவோடு எல்லைப் பிரச்சனையில் இருக்கிறார்கள். அப்படி ஒரு மனநிலை முக்காடுகளுக்கு.

ஆகாவே இந்தியா பாகிஸ்தான் பிரிந்து புது தலைவலியை விட ஒரு நாடகா இருந்து கொடுக்கும் தலைவலி பற்வாயில்லை என நினைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது.. நிண்டவன் போனவனுக்கெல்லாம் நாடு கிடைக்குது..! :blink:

அங்கை எண்ணை ஊறும் எண்டுறாங்கள்...எண்ணைக்கிணறு கிண்டலாம் எண்டுறாங்கள்.....எங்கடை இடத்திலை என்னடாவெண்டால் நன்ணிர்க்கிணறும் இன்னும் இருபது வருசத்திலை உப்புநீராய் மாறும் எண்டுறாங்கள் <_<

அங்கை எண்ணை ஊறும் எண்டுறாங்கள்...எண்ணைக்கிணறு கிண்டலாம் எண்டுறாங்கள்.....எங்கடை இடத்திலை என்னடாவெண்டால் நன்ணிர்க்கிணறும் இன்னும் இருபது வருசத்திலை உப்புநீராய் மாறும் எண்டுறாங்கள் <_<

அப்ப இனி உப்பு கிணறு வந்துவிடும். அப்புறம் தான் எண்ணை கினறுவரும்,.

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை எண்ணை ஊறும் எண்டுறாங்கள்...எண்ணைக்கிணறு கிண்டலாம் எண்டுறாங்கள்.....எங்கடை இடத்திலை என்னடாவெண்டால் நன்ணிர்க்கிணறும் இன்னும் இருபது வருசத்திலை உப்புநீராய் மாறும் எண்டுறாங்கள் <_<

வன்னியில இரகசியமான காட்டுப்பகுதியில எண்ணை எடுத்திட்டம் எண்டு அப்ப கதையைக் கிளப்பியிருந்தால் இப்ப நாடு கிடைச்சிருக்குமோ என்னமோ.. :wub:

வன்னியில இரகசியமான காட்டுப்பகுதியில எண்ணை எடுத்திட்டம் எண்டு அப்ப கதையைக் கிளப்பியிருந்தால் இப்ப நாடு கிடைச்சிருக்குமோ என்னமோ.. :wub:

மூலிகை பெற்றோல் போல் காட்டுமரத்தில் இருந்து பெற்றோல் என்றா?

  • கருத்துக்கள உறவுகள்

மூலிகை பெற்றோல் போல் காட்டுமரத்தில் இருந்து பெற்றோல் என்றா?

ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது எரிவாயு வந்தது என்று சொன்னால் நம்பமாட்டினமா? :D

எண்ணெய்,வாயு இருந்தால் உலகநாடுகள் தலையிடும் என்று ஒன்றிற்குமே வக்கிலாத எமது ஆய்வாளர் கூட்டம் கூவிவிட்டு போய்விட்டது ,நாம் இன்னமும் அதை காவிக்கொண்டு திரிகின்றோம்.

பங்களாதேசிலும்,ஈஸ்டிமோரிலும்,கொசோவாவிலும் என்ன கொட்டி கிடக்குது.

இன்று வானொலி ,டி.வி பார்த்தேன் .இரண்டாம் திகதி கனேடிய அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்ல ஒட்டாவா அழைக்கின்றார்கள் .நன்றி சொல்லத்தான் வேண்டும் கனடா இம்முறை யு .என் இல் வாக்களிக்கவில்லை (வாக்கு இல்லை) எனினும் பின்னால் நின்று பல அலுவல்கள் பார்த்தது கனடா .

இந்த மாற்றத்திற்கு எங்கடைகள் சொல்லும் காரணமம் தான் வழக்கம் போல் சம கொமடி.

ஒருவருடமாக றோட்டில் நின்றீர்கள் ,ஒட்டாவா போனீர்கள் எவனும் கிட்டவும் வரவில்லை .திட்டி தீர்த்தீர்கள்.இன்று மூன்று வருடத்தில் அதுவும் ஆழும் கட்சியில் வந்த இந்த மாற்றத்திற்கு காரணமென்ன?

இவ்வளவு காலமுமில்லாத யாராவது வந்து அரசியல் செய்தார்களா? அல்லது கனேடியனுக்கு இப்ப தான் எமது போராட்டம் பற்றி விளங்கியதா?

எதுவுமில்லை ,புலிகள் அழிந்ததுதான் ஒரே காரணம் .பத்து வருடத்திற்கு முதல் புலிகள் அழிந்திருந்தால் ரணிலை நெருக்கியிருப்பார்கள் தீர்வு வைக்க சொல்லி.

எமது பிரச்சனையை உலகறிய செய்ததில் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு ஆனால் நாட்டில் தீர்வு ஒன்று வரமுடியாமல் இருந்ததற்கும் அவர்களின் பங்குதான் முக்கியம்.

சில செய்ய கூடாத செயல்கள் எமது போராட்டத்தை மிக மிக பின் தள்ளிவிட்டது.கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு உந்த வேலையில்லா ஆய்வாளர்களின் கதைகளை கேட்டு எண்ணெய் இல்லை மண்ணாங்கட்டி இல்லை என ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றோம்.

எமது தரப்பில் நியாயமும் இராஜதந்திரமும் இருந்தால் கிடைக்க வேண்டியன எப்போதோ கிடைத்திருக்கும்.

ஆம், அரசியல் செய்தார்கள், செய்கிறார்கள். ஆதாரம் தனிமடலில் விரும்பியவர்களுக்கு தரலாம்.

அப்படி ஒரு சுப்பர்மான் இருக்கின்றார் என்றால் ஒருவருடமாக போர் நடக்கையில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

புலிகள் அழிய மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாரா?

வங்களா தேசத்திலை என்ன இருக்கெண்டு எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்குத் திமோரில என்னையும் இயற்கை வளமும் நிறையக் கிடக்கு.

அப்படி ஒரு சுப்பர்மான் இருக்கின்றார் என்றால் ஒருவருடமாக போர் நடக்கையில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

புலிகள் அழிய மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாரா?

அரசியல் 101

கொட்டிக் களிச்சுப் பார்த்தால் உந்தப் பிரதேசத்தில ஒரு பத்துப் பதினைந்து புது நாடுகள் தோன்றும் போல கிடக்கு.

ஏறக்குறைய எங்கட கதையை ஒத்ததாக் கிடக்கு உந்த பலுச்சிஸ்தாநின்ற கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணெய்,வாயு இருந்தால் உலகநாடுகள் தலையிடும் என்று ஒன்றிற்குமே வக்கிலாத எமது ஆய்வாளர் கூட்டம் கூவிவிட்டு போய்விட்டது ,நாம் இன்னமும் அதை காவிக்கொண்டு திரிகின்றோம்.

பங்களாதேசிலும்,ஈஸ்டிமோரிலும்,கொசோவாவிலும் என்ன கொட்டி கிடக்குது.

இன்று வானொலி ,டி.வி பார்த்தேன் .இரண்டாம் திகதி கனேடிய அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்ல ஒட்டாவா அழைக்கின்றார்கள் .நன்றி சொல்லத்தான் வேண்டும் கனடா இம்முறை யு .என் இல் வாக்களிக்கவில்லை (வாக்கு இல்லை) எனினும் பின்னால் நின்று பல அலுவல்கள் பார்த்தது கனடா .

இந்த மாற்றத்திற்கு எங்கடைகள் சொல்லும் காரணமம் தான் வழக்கம் போல் சம கொமடி.

ஒருவருடமாக றோட்டில் நின்றீர்கள் ,ஒட்டாவா போனீர்கள் எவனும் கிட்டவும் வரவில்லை .திட்டி தீர்த்தீர்கள்.இன்று மூன்று வருடத்தில் அதுவும் ஆழும் கட்சியில் வந்த இந்த மாற்றத்திற்கு காரணமென்ன?

இவ்வளவு காலமுமில்லாத யாராவது வந்து அரசியல் செய்தார்களா? அல்லது கனேடியனுக்கு இப்ப தான் எமது போராட்டம் பற்றி விளங்கியதா?

எதுவுமில்லை ,புலிகள் அழிந்ததுதான் ஒரே காரணம் .பத்து வருடத்திற்கு முதல் புலிகள் அழிந்திருந்தால் ரணிலை நெருக்கியிருப்பார்கள் தீர்வு வைக்க சொல்லி.

எமது பிரச்சனையை உலகறிய செய்ததில் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு ஆனால் நாட்டில் தீர்வு ஒன்று வரமுடியாமல் இருந்ததற்கும் அவர்களின் பங்குதான் முக்கியம்.

சில செய்ய கூடாத செயல்கள் எமது போராட்டத்தை மிக மிக பின் தள்ளிவிட்டது.கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு உந்த வேலையில்லா ஆய்வாளர்களின் கதைகளை கேட்டு எண்ணெய் இல்லை மண்ணாங்கட்டி இல்லை என ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றோம்.

எமது தரப்பில் நியாயமும் இராஜதந்திரமும் இருந்தால் கிடைக்க வேண்டியன எப்போதோ கிடைத்திருக்கும்.

நீங்கள் உங்கை புளுத்த விலைக்கு ஆட்டுறைச்சியொடை இடியப்பமும் சம்பலும் வாங்கி அமுக்கிப்போட்டு கதைக்கிறியள் ... -----?

ஐரோப்பாவில் ஒரு குறுகிய காலத்துக்குள் பல நாடுகள் தோன்றின: செக், சிலவோக்கியா, உடைந்த சோவியத்யூனியன், உடைந்த யுகொசிலவியா.

அவ்வாறு தான் ஆசியாவிலும் நடக்கலாம் என்றில்லை, எதுவும் நடக்கலாம், எப்படியும் நடக்கலாம். ஆனால், நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா.. உங்கள் பொன்னான நேரத்திற்கும், கருத்துக்கும் நன்றி..! :D

  • தொடங்கியவர்

யாழ் களத்தின் எதிர்கட்சி தலைவர் அர்ஜுன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்-

இனத்திற்கான உங்கள் பனி! தொடராட்டும்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் மறைந்தாலும் ஆயிரம் பொன் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே

Edited by யாழ்அன்பு

balochistan-conspiracy.jpg

அமெரிக்க – சீனப் பனிப் போர் வெளிப்படையாகத் தென்படாவிட்டாலும் அதற்கான அறிகுறிகள் பலுச்சிஸ்தானிலும் இலங்கையிலும் தெளிவாகத் தெரிகின்றன. மியன்மாரில் சீன ஆதிக்கத்தை மட்டுப் படுத்துவதில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது.

www-Tamilkathir.com

இதுவரைக்கும்தான் கதை நல்லாய்போனது. பிள்ளையார் கதை முடிய போகுது அவலும் சுண்டலும் வரபோகுது என்று எதிர்பார்க்கும் போது ஆசிரியர் குழப்பிவிடுகிறார்.

மியன்மாரோடு ஒப்பிடுகையில் இலங்கையில் இருந்து சீனாவை வெளியேற்றும் அமெரிக்க முயற்சிக்குக் கடும் பிரயத்தனம் தேவைப்படப் போவதில்லை. பாகிஸ்தானில் இருந்து சீனாவை வெளியேற்றுவதற்கு அமெரிக்க வெளிவிவகார நிபுணர்கள் சத்திர சிகிச்சை செய்வதையே விரும்புகின்றனர்.

ஆசிரியர் பாலுச்சிஸ்த்தானுக்கு வெண்ணையும் நமக்கு சுண்ணாம்பும் என்கிறாரா? மியன்மார் மாதிரி இலங்கையை ஒருநாடாக கருத்தி அங்கே சர்வாதிகார ஆட்சி நடப்பதாகத்தானே சொல்லவருகிறார்.

அதாவது பலுச்சிஸ்தான் என்ற தனி நாட்டின் தோற்றத்திற்கு உதவியபடி அதைத் தனித்தியங்க விடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திட்டம் அமெரிக்க உயர் மட்டத்தில் தீட்டப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கையும் வெளிப்படுவது உறுதி

அவருக்கும் எதுவும் நிச்சயமில்லை போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.