Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்

Featured Replies

Backache.jpg

முதுகை ஒரு புறம் வளைத்து, கால்களைப் பரப்பி, அடி மேல் அடி வைத்து அவதானமாக நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும், இவரது பிரச்சனை நாரிப் பிடிப்புத்தான் என்று சொல்வதற்கு வைத்தியர்கள் தேவையில்லை. நீங்கள் கூட உடனே சொல்லி விடுவீர்கள். காலையில் குளித்துவிட்டு, குனிந்து உடுப்பு அலம்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு பிடித்தததாம்.

இன்னொருவன் மாணவன். கால்பந்து விளையாடும் திடீரெனப் பிடித்ததாம். என்னிடம் வந்து ஊசி போட்டு மருந்தும் சாப்பிட்ட பின்தான் அவனது முதுகு நிமிர்ந்தது. மற்றொருவருக்கு ஏன் வந்தது எப்படி நேர்ந்தது ஒன்றும் புரியவில்லை. காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லையாம்.

எப்படி ஆனதோ?

நாரிப்பிடிப்பு ஏன் வருகிறது?

இவ்வாறு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்பிடிப்புக் காரணமான ஏற்படலாம். சவ்வுகளில் சுளுக்குக் வந்ததன் காரணமாக இது ஏற்படலாம். அல்லது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் தோன்றலாம். முள்ளந் தண்டின் இடைத்தட்டம் விலகுவதாலும் ஏற்படலாம்.

lumbar_ADR_anatomy02.jpg

இதில் கடைசியாகக் கூறிய இடைத்தட்டம் விலகுவது என்பது சற்று பாரதூரமான பிரச்சனையாகும். விளக்கப் படத்தைப் பாருங்கள் முள்ளந்தண்டு எலும்புகளினிடையே (Vertebra) இருப்பது இடைத்தட்டம் (Disc) ஆகும். சிமென்டு கற்களை முள்ளந்தண்டு எலும்புகளாக கற்பனை பண்ணினால் அவற்றை இணைக்கும் சாந்து போன்றது இடைத்தட்டம். இந்த இடைத்தட்டம் ஊடாக முண்நாணிலிருந்து நரம்பு (Nerve) வெளிவருகிறது தெரிகிறது அல்லவா?

9-13.jpg

நீங்கள் வழமைக்கு மாறாக குனிந்து வேலை செய்யும்போது அல்லது உங்களுக்குப் பழக்கமற்ற பார வேலை செய்யும்போது எலும்புகளிடையே இருக்கும் இடைத்தட்டம் சற்றுப் பிதுங்கி வெளியே வரக் கூடும். அப்பொழுது அது அருகிலிருக்கும் நரம்பை அழுத்தலாம். பொதுவாக முதுகை வளைத்துத் தூக்கும் போதே இது நிகழ்வதுண்டு. இது திடீரென நிகழும். அந்நேரத்தில் சடுதியான கடுமையான வலி ஏற்படும். எந்தக் கணத்தில் இது நிகழ்ந்தது என்பதை பாதிக்கப்பட்ட நபர் துல்லியமாகக் கூறக்.கூடியதாக இருக்கும்.

ஆனால் இது எப்பொழுதுமே இவ்வாறுதான் நிகழும் என்பதில்லை.

பெரும்பாலனவர்களுக்கு என்ன செய்யும் போது அல்லது எந் நேரத்தில் இது நிகழ்ந்தது என்பது தெரிவதில்லை. படிப்படியாகவும் நாரிப்பிடிப்பு வரலாம். ஆயினும் வலியின் கடுமை எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. பரசிட்டமோல் போட்டு சமாளிக்கக் கூடியளவு லேசாக இருக்கலாம். அல்லது வலியின் உபாதை தாங்க முடியாத அளவிற்கு கடுமையாக இருக்கலாம். உங்களது நாளாந்தக் கடமைகளைச் செய்ய முடியாது படுக்கையில் சில நாட்களுக்குக் கிடத்தவும் கூடும்.

இருந்த போதும் சில இலகுவான நடைமுறைப் பயிற்சிகள் செய்தால் அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபட முடியூம்.

நிற்பதுவூம் நடப்பதுவும்

இவ்வாறான பிடிப்பு ஏற்படும்போது நீங்கள் எவ்வாறு நிற்கிறீர்கள், படுக்கிறீர்கள், உட்காருகிறீர்கள் என்பன யாவும் முக்கியமானவைதான். படுக்கும்போது உங்கள் பாரத்தை முள்ளந்தண்டில் சுமக்க விடாது பாதுகாப்பது அவசியமாகும்.

இதனை எவ்வாறு செய்வது?

படுக்கும்போது, நேராக நிமிர்ந்து படுங்கள். இப்பொழுது உங்கள் முழங்கால்களுக்கு கீழே, விளக்கப் படத்தில் காட்டியவாறு, ஒரு தலையணையை வையுங்கள். இவ்வாறு முழங்கால்களைச் சற்று மடித்துப் படுப்பது சுகத்தைக் கொடுக்கும்.

CAKDQJST.jpg

தலையணை கிடைக்காவிட்டால் முழங்கால்களைக் குத்தென நிமித்தியபடி மடித்துப் படுங்களேன்.

அதுவும் முடியாவிட்டால் தரையில் படுத்தபடி உங்கள் கால்மாட்டில் ஒரு நாற்காலியை வையுங்கள். இப்பொழுது உங்கள் தொடைகள் நிமிர்ந்திருக்க கீழ்கால்களை உயர்த்தி நாற்காலயில் வையுங்கள். இடுப்பும் முழங்கால்களும் இப்பொழுது மடிந்திருப்பதால் முள்ளெலும்பின் பழுக் குறைந்து வலி தணியும். ஓரிரு நாட்களுக்கு இவ்வாறு ஆறுதல் எடுக்க குணமாகும்.

ஆனால் நாரிப்பிடிப்பு எனக் கூறி நீண்ட நாட்களுக்கு படுக்கையிலிருந்து ஆறுதல் எடுப்பது அறவே கூடாது. ஏனெனில் நீண்ட ஆறுதல் எடுத்தல் உங்கள் தசைகளைப் பலவீனப்படுத்திவிடும். அதனால் குணமடைவதும் தாமதமாகும். வலியிருந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு சற்று உலாவுவது நல்லது. மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது எழுந்து அவ்வாறு நடப்பது அவசியம்.

சுடுதண்ணி ஒத்தடம் கொடுப்பது அல்லது சிவப்பு லைட் (Infra Red Light) பிடிப்பதும் வலியைத் தணிக்க உதவும். மாறாக ஐஸ் பை வைப்பதுவும் உதவாலாம். வலி கடுமையாக இருந்தால் அஸ்பிரின், பரசிட்டமோல் அல்லது இபூபுறுவன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க நேரிடலாம்.

நாரிப்பிடிப்புக்கு டொக்டரிடம் செல்ல வேண்டுமா?

நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நாரிப் பிடிப்புகள் அனைத்துமே இவ்வாறு உங்கள் சுயமுயற்சியால் குணமாக்கக் கூடியவை அல்ல!

வலி தாங்க முடியாததாக இருக்கலாம்.

அல்லது உங்கள் நாரிப்பிடிப்பிற்கு வேறு பாரதூரமான அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவ்வாறான தருணங்களில் ஹலோ டொக்டர் என அழைத்து உங்கள் வைத்தியரை நாட வேண்டியதுதான். வேறு வழியில்லை.

அவ்வாறு வைத்திய ஆலோசனை பெற வேண்டிய தருணங்கள் எவை?

உங்கள் நாரிப்பிடிப்பின் வலியானது பிடித்த இடத்தில் மட்டும், மட்டுப்பட்டு நிற்காமல் கால்களுக்கு, அதிலும் முக்கியமாக முழங்கால்களுக்கு கீழும் பரவுமானால் நரம்புகள் முள்ளெலும்புகளிடையே அழுத்தபடுவது காரணமாகலாம். அவ்வாறெனில் வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

 உங்கள் கால், பாதம், பிறப்புறுப்புப் பகுதி அல்லது மலவாயிலை அண்டிய பகுதிகளில் உணர்வு குறைந்து மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுமாயின் அது நரம்புகள் பாதிப்புற்றதால் இருக்கலாம். நீங்கள் நிச்சயம் வைத்தியரை அணுகவேண்டும்.

 அதேபோல உங்களை அறியாது, அதாவது உங்கள் கட்டுப்பாடின்றி மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது மிக பாரதூரமான அறிகுறியாகும். அதாவது மலம் அல்லது சிறுநீர் வெளியேறுவது முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பது நரம்புகள் பாதிக்கக்பட்டதின் அறிகுறியாகும். கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றே தீரவேண்டும்.

 காய்ச்சல், ஓங்காளம், வாந்தி, வயிற்று வலி, உடற் பலயீனம், கடுமையான வியர்வை போன்ற அறிகுறிகள் நாரிப்பிடிப்புடன் சேர்ந்து வருமாயின் அது தொற்று நோய், சிறுநீரகக் குத்து, சதைய நோய் போன்ற எதாவது ஒன்றின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதால் வைத்திய ஆலோசனை அவசியம் தேவை.

 வீட்டிற்குள்ளேயே நடமாடித் திரிய முடியாதபடி வலி மிகக் கடுமையாக இருந்தாலும் நீங்கள் வைத்தியரைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

 பெரும்பாலான முதுகு, நாரி வலிகள் மேற் கூறிய நடைமுறைச் சிகிச்சைகளுடன் ஓரிரு வாரங்களுக்குள் குணமாகிவிடும். அவ்வாறு குணமடையாவிட்டாலும் வைத்தியரைக் காண்பது அவசியம்.

மாத்திரைகள், வெளிப் பூச்சு மருந்துகள், பயிற்சிகள் முதல் சத்திர சிகிச்சை வரை பல விதமான சிகிச்சைகள் உண்டு. உங்கள் நோயின் நிலைக்கு ஏற்ற சிகிச்சையை வைத்தியர் தீர்மானிப்பார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி

Posted by டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

http://wedananasala....20-47&Itemid=58

  • கருத்துக்கள உறவுகள்

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100220

  • கருத்துக்கள உறவுகள்

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/...howtopic=100220

:lol: :lol: :lol:

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/...howtopic=100220

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/...howtopic=100220

ஐயெ ஐயோ ஐயோபா puking.gif

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/...howtopic=100220

ஐயோ இதைவிட குண்டனின் மெதட் நல்லாயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை....:(

குண்டன், மூத்திரத்தில் முட்டை அவித்துக் குடித்தால்... நாரிப்பிடிப்பு கிட்ட நெருங்காதாம்.

http://www.yarl.com/...howtopic=100220

தமில்சிரி நீங்கள் எழுதிய வசனத்தில் comma மட்டும் விடுபட்டுருந்தால் குண்டன் உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார் :icon_mrgreen:

Edited by nadodi

:D சரி தமிழ்சிறி ஆனால் இப்போது இது தனிப்பட்ட தாக்குதல் ஆச்சே. குண்டன் விட்டாலும் மட்டுஸ் உங்களை சும்மா விடமாட்டார்கள். Comma வை தள்ளி போட்ட உங்களை அவர்கள் போட்டு தள்ளாவிட்டால் சரி :)

Edited by nadodi

  • கருத்துக்கள உறவுகள்

:D சரி தமிழ்சிறி ஆனால் இப்போது இது தனிப்பட்ட தாக்குதல் ஆச்சே. குண்டன் விட்டாலும் மட்டுஸ் உங்களை சும்மா விடமாட்டார்கள்.

மட்டூசுக்கும், முட்டை.... அரை அவியலில் கொடுத்தால்... தெம்பு வரும் தானே...

:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட அரசியல்வாதிகளுக்கு தேவையான செய்தி.  குனிந்து, நிமிர்ந்து காலில் வீழ்ந்து என்று ஒரே நோ அவையளுக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.

டாக்டர்: என்ன இவை?

சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க

http://www.tamilkalanjiyam.com/jokes/sardarji_jokes/joke24.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.