Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரின் பிரதான இலக்கு 13ஆவது திருத்தச் சட்டம் தானாம் – பிரித்தானிய அதிகாரி அம்பலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan-6_CI-100x100.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கில் மாற்றம் தென்படுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் தொடர்பில் திறந்த மனப்பாங்கு, ஒத்துப்போகும் தன்மை, நல்லபிப்பிராயம் என்பனவற்றை வெளிப்படுத்துவதாகவும் காலமாகும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இலங்கை நட்புறவுக் கழகத்தின் ஸ்தாபகரான நேஸ்பி பிரபு மைக்கல் மொரிஸ் கூறியுள்ளார்.‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் சில நல்ல வேலைகள் செய்யப்படுவதாக அவர் ஏற்றுக்கொண்டார். இருப்பினும் சிவில் நிர்வாகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். அவர், 13 ஆவது திருத்தத்தை தனது இலக்காக வைத்திருப்பதாகவும் எனக்கு மிகத் தெளிவாக கூறினார்’ என நேஸ்பி பிரபு தெரிவித்தார்.

சகல கட்சிகளும் 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் நாடாளுமன்ற தெரிவுக்குழு தேவையற்றது என த.தே.கூட்டமைப்பு தலைவர் கருதுவதாக நேஸ்பி பிரபு கூறினார்.

‘கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும்போது, ஐக்கிய இராச்சியத்தில் காலத்தை விரமாக்குவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கையில், இது செயற்படுவதற்கான காலமாகும் என அவர் கூறினார்.

இலங்கையின் வடபகுதிக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டுவந்த நேஸ்பி பிரபு, அங்கு நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் பணிகள், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை வியந்து பேசினார். இந்த செயற்பாடுகளின் கடினத்தன்மையை சர்வதேச சமூகம் அறியாதுள்ளது என அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியை தான் சந்திக்கும்போது பேசவுள்ளதாக அவர் தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை என்பவற்றின் செல்வாக்கு மண்டலத்துக்கு அப்பால் த.தே. கூட்டமைப்பு இருப்பதாக தான் கருதுவதாக நேஸ்பி பிரபு கூறினார்.

சனல் 4 வீடியோ குறித்து அவர் கருத்துக் கூறிபோது, பகுதியளவில் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு தொலைக்காட்சி இவ்வாறான உண்மைக்குப் புறம்பான விடயங்களை கொண்ட ஆவணத்தை வெளியிட்டமை சரியானது அல்ல என அவர் கூறினார். இலங்கையில், நடைபெறும் இலங்கை – இந்திய போட்டிகளை பிபிசி ஒளிபரப்புவதை தடுக்க சனல் 4 முயன்றமை தொடர்பான பிரச்சினையை தான் கருத்திலெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது இலங்கை விஜயத்தின்போது அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், வாசுதேவ நாணயக்கார, பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அவர் சந்தித்தார்.

யாழ்ப்பாணம், வவுனியா, ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த அவர், யாழ் ஆயர், வடமாகாண ஆளுநர், யாழ். கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள், வர்த்தக – கைத்தொழில் சம்மேளனம், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆகியோரையும் சந்தித்தார்.

http://www.saritham.com/?p=56341

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் பிரதான இலக்கு 13ஆவது திருத்தச் சட்டம் தானாம் – பிரித்தானிய அதிகாரி அம்பலம்!

வானத்திற்கு ஆசை படுங்கப்பா... அப்பதான் நட்சதிரமாவது கிடைக்கும்...

சிறிலங்கா அரசால் வெகு காலமாக லஞ்சம் கொடுத்து வளர்க்கப்படுபவர் தான் இந்த நெஸ்பி, லியம் ஃபொக்ஸுக்கு செய்ததைப் போல் இவரையும் அம்பலப்படுத்த வேண்டும்.சிறிலங்காவில் இவருக்கு எங்கு எங்கு விருந்து கொடுக்கப்பட்டது என்னும் விபரம் தெரிந்தால் வெளியிடவும்.

இவனையெல்லாம் சம்பந்தன் சந்திப்பது மடத்தனம்.காசுக்கு நன்றாக வேலை செய்பவர் நெஸ்பி.கூட்டமைப்பு அவரின் கூற்றுக்கள் பற்றி அறிக்கை விட வேண்டும்.அல்லது புல அமைப்புக்களுக்கும் மக்களுக்கும் இடையில் இவர் இலகுவாகவே பிளவுகளை உருவாக்கும் வகையில் இவ்வாறான அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் போராடிய போராட்டத்துக்கு 13ஆவது திருத்தச் சட்டம் போதுமாக்கும் !

நாம் எமது விலைமதிப்பற்ற போராளிகளை தமிழ் ஈழத்துக்காகவே இழந்துள்ளோம். அதன் அருமை இந்த சம்மந்தம் இல்லாத சப்பந்தனுக்கு எப்படி புரியப்போகின்றது.

எமக்கு எது தேவையோ அதை சாதுரியமாக சர்வதேச 'அஜண்டாவுக்குள்' புகுத்தவேண்டியதே கூட்டமைப்பு செய்யவேண்டிய வேலை, அவ்வளவும் தான்.

சம்பந்தர் கேட்க கூடாது. அவர்களாக 13ம் திருத்தம் கொடுக்க வேண்டும். சம்பந்தர் பொறுப்பெடுத்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் LLRC அறிக்கையில் இல் காட்டப்பட்டிருக்கும் விசாரணைகளுக்கு தமிழ் நீதிபதிகளை நியமித்து நடத்தி முடிக்க வேண்டும். SEPOE அறிக்கையில் கட்டப்பட்ட போர்குற்ற விசாரணைகளை நடாத்தவேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.