Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ

vaiko-150x150.jpg

video-icon.gifசென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும் அதற்கு உந்துதலாக பழ.நெடுமாறன் எழுதிய இந்நூல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

http://www.tamilveli.com/showurl.php?url=http://feedproxy.google.com/~r/meenakam/PJVH/~3/03mBVsma7As/must-decide-whether-to-take-up-weapons-again.html&type=P&itemid=218200

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வைக்கோ இந்த மாறி கர்ஜிப்பதை நிறுத்தவேண்டும் .. உலக நாடுகள் ..! இவனுங்கள சாவுக்கு வர சொன்னா கருமாதிக்கு வர பயலுகள்..அதிலும் குறிப்பாக கிந்தியாக்காரன்.. வேர்கடலை செடி பயிர் செய்தால் அப்படியேத்தான் இருக்கும் .கிந்தியாக்காரன் அந்த தோட்டத்துக்கு வந்தால் அப்போதும் செடி அப்படியேதான் இருக்கும் ஆனால் மண்ணுக்குள் இருக்கும் கடலை இருக்காது. இவனுங்க ஊழல் மட்டுமில்லை .. உள்ளடி வேலைகள்.. கைத்தேர்ந்தவர்கள்..அப்ப்டியே அகிம்சை பேசுவான் .. உள்ளே பின்லெடனே பிச்சை வாங்கணும் உள்ள அந்த அளவுக்கு கில்மாதானம் இருக்கும்..

டிஸ்கி:

இவனுங்கள் கேண்டில் பண்ணுவதற்கு காட்டுக்குள்ள போய் நரியோட ஜீனை எடுத்து அதில் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி புதுசா ஏதாவது தயார் பண்ணணும்.

(சிங்களன vs கிந்தியன்) இவனுங்கள் இருக்கும் நிலமை இப்போ. மார்கழி மாசத்தில் சேர்ந்த நன்றியுள்ள நாலு கால் பிராணிகள் பிரியமுடியாது இருப்பது போல . பிரியவும் முடியாது ..அந்த பக்கம் போனால் இது இழுக்கும் இந்த ப்க்கம் போனால் அது இழுக்கும். அதற்காக இதுகள் இருக்கும் வழி வருவோர்களை பார்த்து சும்மா இருக்கவும் முடியாது.இரண்டும் சேர்ந்து குரைக்க வேண்டியது... :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்! இன்றைய நிலையில்...யாரையும் மனம்திறந்து பாராட்டவோ......இல்லை வாய்திறந்து திட்டவோ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டான்.......தலைவன் இல்லாத இருண்ட உலகில் எல்லோரும் நல்லவர்களாகவே தெரிகின்றார்கள்.

அடுத்த தலைமுறை ஆயுதம் எந்த இடம் வைக்காமல் இன்றைய உலக - மகிந்த முரண்பாட்டுக்குள் நாம் அதிகபட்சமான, தாயக மக்கள் ஏற்கக்கூடிய, ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

ஆயுதத்தை மறுபடியும் ஏந்தினால் தற்போது எமக்குள்ள ஆதரவும் இல்லாமல் போய்விடும்...... அதன் பின் உலக நாடுகளின் ஆதரவின்றி தமிழீழம் கனவாகவே போய்விடும்.

இப்படியான கதைகளால் புலிகள் மீண்டும் வந்துவிடுவார்களா என்ற சந்தேகம் உலகநாடுகளுக்கு வந்தாலே மீண்டும் தமிழரை கைவிட்டு சிங்களவனுக்கு உதவி செய்ய தொடங்கி விடுவார்கள்.

எனவே இப்படிப்பட்ட தேவையற்ற கதைகளை காலநேரமுணர்ந்து கதைக்காமல் விடுவதே நன்று.

நன்றாக சொன்னீர்கள் காதல். இதைவிட வேறொன்றும் சொல்வதற்கில்லை.

வைகோ அண்ணா, ஈழத் தமிழர்களுக்கு உங்கள் ஆதரவும் அரவணைப்பும் மிக்க அவசியம். தயவு செய்து நீங்கள் ஆயுதம், வன்முறை என்ற சொற்களை தவிர்க்கப் பாருங்கள்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையார் அவர்கள் தொடர்ந்தும் எமக்காக குரல்குடுக்குமாறு உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். இது உங்களிடம் நான் உரிமையுடன் வைக்கும் வேண்டுகோள்.

நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

காதல் மற்றும் கயென்

உங்கள் கருத்தே எனதும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன்! இன்றைய நிலையில்...யாரையும் மனம்திறந்து பாராட்டவோ......இல்லை வாய்திறந்து திட்டவோ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டான்.......தலைவன் இல்லாத இருண்ட உலகில் எல்லோரும் நல்லவர்களாகவே தெரிகின்றார்கள்.

100%உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.