Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலிப்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

வாழ்க்கையை அனுபவிச்சு ரசிச்சு வாழத் தெரிஞ்ச பெட்டையள் அவளவை அண்ணை......சண் கிளாஸ் போட்டவை சும்மா அவங்களைப் பாத்து பொறாமைப் படாமல் நல்லாயிருங்கோ எண்டு வாழ்த்திப் போட்டு போகவேண்டியதுதான்.. :lol::D

Edited by சுபேஸ்

மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .

அதற்கெல்லாம் மச்சம் வேண்டும் .

நீங்கள் ரொம்ப பீல் பண்ணுறது புரியுது...

'மோட்டார் சயிக்கிளில டிப் டாப் ஆக உடையணிந்து சண் கிளாசுடன் வெட்டிப் பந்தா காட்டி மினக்கெட்டவரை விட்டு விட்டு,

சாறத்துடன் வாயில் பீடாவுடன் சயிக்கிளில் யதார்த்தமாகச் சுத்தியவனுக்கு கடிதம் கொடுத்த பெட்டைகளும் இருக்கினம் .'

இப்படிப் போட்டுப் பாருங்கோ பெண்கள் செய்தது சரிதானே? என்ன பண்ணுறது, ஒரு சில பெண்கள் எப்பவுமே ரொம்ப அலர்ட்டா இருக்கிறாங்க... :D:lol::icon_idea:

....

ஏன் இவ்வளவு கொலைவெறி என்மேல் அண்ணே... நான் ஒரு பட்டாம்பூச்சி காதல் வலையில் சிக்கப்போவதில்லை..

இல்லை, இதை ஆண்களுக்கு எழுதி இருக்கிறார்கள்... அதை நீங்கள் இங்கு இணைத்தீர்களா.. அது தான் கேட்டேன் இப்படி ஒருத்தரைப் பார்த்தல் உங்களுக்கும் காதல் வருமா என்று? சும்மா சிரிப்புக்காகத் தான் கேட்டேன், ஏன் டென்சன்?? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உண்மையா எப்பிடிக் காதலிக்கிறது என்கிறதை உங்கட அனுபவத்தில் இருந்து எழுதுங்கோவன்..! :D

இதுவரை.. நானாக.. யாரையும் காதலிக்கனும் என்று இருக்கவும் இல்லை.. அதற்கென்று தனி முயற்சிகள் எடுத்ததும் இல்லை. ஆனால் நான் எனக்கு தெரியாமல் சிலரால் காதலிக்கப்பட்டிருக்கலாம்.. அல்லது தெரிய காதலிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு நான் பதில் அளித்திருக்கிறேனே தவிர.. நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

  • தொடங்கியவர்

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்):icon_mrgreen:

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

http://www.youtube.com/watch?v=9xIiWtoPd7o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாக விரும்பி காதலிக்கிக்கிற அளவுக்கு யாரையும் காணவில்லையா இவ்வளவு வருசத்தில்...

சரி என்னதான் அப்படி விரும்புகிறீர்கள் என்று சொன்னால்தானே உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். :lol:

கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும்.

குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவும் இருக்கனும்.

குழந்தைகளோட நாங்களும் சமனா நடந்துக்க சந்தர்ப்பம் அளிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். குழந்தைகளை காட்டி அட்வான்ரேஜ் எடுத்துக்கிற கேர்ள் பிரண்ட் வேணாம்.

கிச்சன் டிப்பாட்மெண்டை நீங்களே குத்தகைக்கு எடுத்து தாஜா பண்ண கூஜா தூக்கிறது கேவலம். அதே நேரம்.. தேவைக்கு அவசியத்துக்கு ஏற்ப இருவரில் எவரும் அதைப் பொறுப்பெடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை நிறுவனும். அதை விட்டிட்டு மனிசி குசினில சமைக்க.. காலை நீட்டி நெளிவு முறிக்கிறது எல்லாம் ஒரு ஆம்பிளைக்கு அழகல்ல. அதேபோல.. மனிசி சீரியல் பார்க்க மனிசன் கிச்சனில நிற்கிறதும்.. அழகல்ல.

ஒரு நாளைக்கு ஒருவர் அல்லது எல்லா நாளும் இருவரும் என்று சமைச்சுப் பார்க்கிறதுக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேணும். அவாக்கு பிடிச்சதை அவா செய்யனும்.. எனக்கு பிடிச்சதை நான் செய்யனும்.. இருவரும் தாங்கள் தங்கள் ரேஸ்ருக்கு சமைச்சதை பரிமாறனும்.. சுவைக்கனும். அப்படி ஒரு கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

இந்த தாஜா.. கூஜா வேலைகள் வேண்டாம். ஒரு செயலை பிடிச்சா செய்யனும் பிடிக்கல்லைன்னா விட்டிடனும். வற்புறுத்தாத கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாம படிக்கிறதுக்கு நம்ம கோம் வேர்க்கில உதவக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். நாங்க படிக்கிறதை விடுப்புப் பார்த்துக்கிட்டு தனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கிறது வேணாம்.

நாங்க உழைக்கிறதில சாப்பிட காரோட நினைக்கிறது வேணாம். தன் உழைப்பையும் சேமிப்பை கடந்து.. நம்மோடு எதிர்பார்ப்பில்லாம இயல்பா பங்கிட்டு என்ஜோய் பண்ணுற.. தன் உழைப்பில நம்ம ரேஞ்சுக்கு அல்லது அதுக்கு மேல கார் வாங்கி ஓடிக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல நம்ம பங்களிப்பை ஈகோ இன்றி இயல்பாக அங்கீகரித்து அதிலும் கூட இருந்து என்ஜோய் பண்ணக் கூடிய கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க கொலிடே போகக் கூப்பிட பெட்டியை தூக்கிற கேர்ள் வேணாம். எங்களுக்குப் போட்டியா தானும் தன்ர ரசனைக்கு ஏற்ப எங்களை கொலிடே கூட்டிக் கொண்டு போகக் கூடிய தற்சிந்தனை உள்ள கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நாங்க தப்புப் பண்ணினா தட்டிக் கேட்டு வழிகாட்டும் அதேவேளை அவா தப்புப் பண்ணினா நாங்க சொல்லுறதையும் கேட்டு எவருமே மனம் நோகாம வாழ நினைக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

ஒரு வீட்டில வாழ்ந்தாலும்.. தனக்கென்று தனி அழகோட ஒரு பகுதி வீட்டை வைச்சிருக்கும் கேர்ள் பிரண்ட் தான் வேணும். அதேபோல எங்களையும் எங்கட பங்கிற்கு எங்க ரேஸ்டுக்கு வீட்டில ஒரு பகுதியை வைச்சிருக்க அனுமதிக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம். தனக்குள் உதிக்கிற புதிய புதிய ஐடியாக்களை சேர்த்து புதிய கண்டிபிடிப்புக்கு சுவாரசியத்துக்கு இட்டுப் போகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

நமக்கென்று ஆன பிறகு.. பிரண்ட்ஸ் கூட பிரண்ட்ஸா (அதுக்கு மேல போகக் கூடாது) பழகிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். பிரண்ட்ஸ் கூட ஒப்பிட்டு நோக்கி அவன் உயர்ந்தவன் இவன் அப்படி.. இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிற.. மட்டம் தட்டிற கேர்ள் வேணாம்.

நம்மள சிறிய முயற்சிலும் ஊக்குவிக்கிற உதவி செய்யுற தானும் பங்கெடுக்கிற கேர்ள் தான் வேணும். சந்தர்ப்பத்தை கண்டு பயந்து ஓடுற ஒளியுற.. உதவி செய்திட்டு சொல்லிக் கொண்டு திரியுற கேர்ள் பிரண்ட் வேணாம்.

தனக்குப் பிடிச்ச உடையில நாகரிகமாக இருக்கனும். அப்பப்ப எது பிடிக்கும் என்று கேட்டும் எங்களைக் கொண்டும் வாங்கி அதை அணிஞ்சு நிஜமாவே மகிழ்ந்தும் காட்டனும்.

தானும் சோம்பேறியா இல்லாமல்.. எங்களையும் சோம்பேறியாக்காத சிலிமான.. உடம்பை சிக்கென்று வைச்சிருக்கிற.. எங்களையும் வைச்சிருக்க தூண்டிற.. ஜிம்.. ஜாக்கிங்.. யோகா என்று செய்து.. இருக்கக் கூடிய.. அழகான கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

படிப்பு.. வேலை.. இதுக்கு மேலதிகமாக... ஏதேனும் சுவாரசியமா மாறுதலா மகிழ்ச்சிக்குரியதா.. செய்யக் கூடியவாவா இருக்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும்.

மொத்தத்தில.. கேர்ள் பிரண்டா.. ஒரு நல்ல மாற்றங்களை விரும்பக் கூடிய.. புத்திசாலியான.. தற்சிந்தனை.. எப்போதும் மகிழ்ச்சியாக நட்போட அன்போட தன் சுய இயல்போட இருக்கக் கூடிய மனிதப் பெண் தான் வேணும்.

இப்படியே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் கேர்ள் பிரண்ட் பற்றிய நிறைய சின்னச் சின்ன ஆசைகள்... சொல்லிக் கொண்டு போகலாம். சொல்லி என்ன பயன். அப்படி ஒரு கேர்ள் கிடைக்கிறது.. ரெம்ப கஸ்டம். அதனால.. நாங்களே எங்க விருப்பத்துக்கு தனிச்சு வாழ்ந்திட வேண்டியது தாப்பா. அதுதான் நல்லது நம்மளப் போல பசங்களுக்கு.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இது தொடர்பான ஒரு ஆக்கமே இங்க போட்டிருக்கனே..! :lol::)

கேர்ள் பிரண்டுண்ணா எப்படி இருக்கனும்..??!

petfriendlycouples.jpg

சொல்லுறதுக்கு எல்லாம் ஆமாப் போடும் கேர்ள் வேணாம்.

அடடா இதை மறந்துவிட்டேன் பிறதர்... எல்லாமே சூப்பராகத்தான் இருக்கின்றது ஆனாலும் இந்த கோட் பண்ணியிருக்கிறனே இந்த விடயம்தான் இடிக்கிது பிறதர்...

நமக்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவது பிடிப்பதில்லைதான் ஆனாலும் இப்படி ஆமாம் போடவில்லையென்றால் ஒருதனும் கூடவே இருக்கமாட்டான் என்று சொல்லுகிறார்களே இதுக்கு என்ன பண்ணுவது?

அது அவங்களுக்கு. நமக்கு.. ஆமாப் போடுறது எல்லாம் வேணாம். நல்ல எதிர்க்கட்சியா இருந்து அன்பும் வழிக்காட்டுதலும்.. வழங்கிற கேர்ள் பிரண்ட் தான் வேணும். கூட்டணியில இருந்து கொண்டு ஆமாப் போட்டு.. ஆளையே கவுக்கிற கேர்ள் பிரண்ட் வேண்டவே வேண்டாம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீரென்று கிருஷ்ணனாகி விட்டீங்கள்? :o :o

இங்கு எதை எடுத்தாலும் அது இலவசமாக எடுக்கப்படவில்லை. அதன் பின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

எடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது கொடுத்தவரின் உழைப்பாக இருக்கலாம் அல்லது அவர்களின் பெற்றோரின் உழைப்பாக இருக்கலாம். :lol: :D

காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று எல்லாம் ஒன்றும் இல்லை.

காதலில் மெய்யான காதல் மட்டுமே உண்டு.

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

உழைப்பை ஏன் காதலுக்குள் புகுத்துகிறீர்கள்? தேவையில்லாத இடைச்சொருகல்களை காதலுக்குள் சொருகுவதால்தான் காதல் கசந்து போகிறது.

காதலுக்கு தேவையானது இரண்டு தூய்மையான மனங்கள் மட்டுமே. காதலிக்க போகும்போது உடலுக்குள் இருக்கும் மனதை கொண்டுபோனால் போதும்.

எடுப்பதும் கொடுப்பதும் காதலாகி போவதால்,,,,,,,,,,,,,,,,

இங்கே ஏமாற்றத்திற்கு இடமே இல்லை.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

"உண்மையான" என்பதற்கும் "மெய்யான" என்பதற்கும் என்ன வித்தியாசம்?

காதலில் உண்மையான காதல், பொய்யான காதல் என்று இருப்பதாக நான் கூறவில்லையே. காதலர்களில் தான் அப்படி உள்ளார்கள்.

நீங்கள் கிருஷ்ணர் போல் ஓதியதற்கு தான் உழைப்பை பற்றி கூறினேன்.

எடுப்பதும் கொடுப்பதும் நடிப்பாக இருந்தால்.....???? அது தான் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் என்பது தானாக வருவது.... பொருளையும் வசதியையும் காட்டி மயக்கி பெறுவதல்ல. அதனால் தூண்டப்படுவது காதல் அல்ல ஆசை.

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

Edited by Maruthankerny

...

உதவி செய்வது அப்படி யாரும் இருந்தால் ஆளை உங்களுக்கு காட்டுவோமில்லை... ( நான் இல்லை இசை அண்ணா உதவி செய்வார் பிறதர்) :icon_mrgreen:

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

ஒருநாளில் பதினைந்து மணித்தியாலங்களை கல்விக்காக செலவிட்டதால்..........

இருபது வருட படிப்பை ஒரு ஐந்து வருடத்திற்குள் முடிக்க கூடியதாக இருந்தது.

அதைவிட தற்போது இன்டர்நெட் பெரும் உதவியாக இருக்கிறது.

அதைத்தவிர ஒரு வயதிற்குள்தான் நிற்கிறோம்.

இருபது வருட படிப்பை 5 வருடத்திற்குள் செலவழித்தவரே.... சொல்லுங்கள்....

உண்மையான காதல் என்பதும் மெய்யான காதல் என்பதும் வேறு வேறு என்கிறீர்கள். இரண்டிற்குமான வித்தியாசம் என்ன என்பதை உங்கள் அறிவை கொண்டு விளங்கப்படுத்துங்களன்... நாங்களும் கொஞ்சம் பார்ப்பம் உங்கட அறிவை.....

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்பல இருந்து இசை? சொல்லவே இல்லை... :lol: :lol: :D இதுக்கும் நேர்முகத் தேர்வு உண்டா?? என்ன கேள்விகள் கேட்பீர்கள்??? :icon_mrgreen: :lol: (சும்மா பகிடிக்கு)

நெடுக்குக்கு வெறும் சப்பை ஃபிகரா பார்த்து கட்டிவைக்கலாம் எண்டு இருக்கிறன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பும் பெண்கள் நம்மளை விரும்பமாட்டார்கள். நாம் விரும்பாத பெண்கள் நம்மளை விரும்புவார்கள். அனுபவத்தில் கண்டது.

காதலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

இதெண்டால், உண்மைதான்..... தப்பிலி. :D

என்னதான் இருந்தாலும், காதலிக்கும் பொழுது உள்ள உணர்வுகள் இருக்கே, அதற்கு இணையில்லை. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

மெய்யான காதல் என்பது இரண்டு மெய்களுக்குள் கலந்து மெய்யாக இருப்பது.

இங்கே உண்மைக்கும்........ பொய்யிற்கும்.... எந்த வேலையும் இல்லை. ஆனால் அதை பொய்கைக்குள் கொண்டுசென்றால் அது பூவாக மலர்ந்துகொள்ளும்.

நான் கருத்து எழுதியபின் அதை நீக்குவது களவிதியை மீறும் செயல். இதையே உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லையே.... :(

அதோட நீங்கள் edit பண்ணி புதிதாக சேர்த்தால் எனக்கெப்படி தெரியும்? quote பண்ணிக்காட்டியிருக்கவாவது வேணும். :wub:

நான் கேட்டது மெய்யான காதல் என்பதற்கும் உண்மையான காதல் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று அதாவது மெய்யான என்பதற்கும் உண்மையான என்பதற்குமான வேறுபாடு? இங்கு நான் எழுவாயாக இருக்கும் மெய்யை பற்றியோ பொய்கையை பற்றியோ கேட்கவில்லை..... அல்லது வரைவிலக்கணத்தை பற்றியோ கேட்கவில்லை.

எடுப்பதிலும்........

கொடுப்பதிலும்......

எப்படி நடிப்பது? சரியாக புரியவில்லை.

ஒருபாத்திரத்தில் உள்ள நீரை வேறு ஒரு இடத்தில் கொடுத்தால்தானே.... அந்த பாத்திரத்தில் தேனையோ வேறு திரவங்கலையோ எடுத்து போட முடியும். இதில் எப்படி நடிப்பது?

மனிதனும் பாத்திரமும் ஒன்றென்று கருதுபவர்களும் இருக்கிறார்கள் தான்...... :(

உங்கள் வழியிலேயே சொல்கிறேன்....

உங்கள் மனதை வேறொருவருக்கு கொடுத்து விட்டு இன்னொருவர் மனதை எடுத்துக்கொள்ளுங்கள்..... :D இது தான் நடிப்பு.

தூங்கிறவங்களை எழுப்பலாம், தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது.... :wub:

அவர்கள் உங்களை புரிந்து கொண்டு விட்டார்கள் போல....

சே அப்படியொன்றும் தப்பானவனா என்னைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். தப்புத் தப்பா சிக்னல் கொடுத்திருப்பேன். விரும்பியது கைகூட மச்சம் வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானாக விரும்பிக் காதலிக்கக் கூடிய அளவிற்கு நான் யாரையும் இதுவரை காணேல்ல..! இது தான் என் வாழ்வில் இந்த விடயத்தில் உண்மை..! :):icon_idea:

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனண்ணை ஒரு வெள்ளை கூடவா கண்ணிலை தட்டுப்படலை.. :unsure::rolleyes: :rolleyes:

வெள்ளை எண்டாப் போல.. பெண் என்றால் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று தான்..! அதுகளும்.. நீங்கள் செலவழிக்கும் வரை தான் உங்களோட ஒட்டுங்கள். இதனை என் கண் முன்னால்.. என் வெள்ளை நண்பனுக்கு நடந்ததைக் கண்டிருக்கிறேன்.

யுனியில்.. முதல் இரண்டரை வருடங்களும் திக்கான காதலர்கள். அவனின்ர கிரடிட் கரைஞ்சு போக.. அவள் பிரேக்கப் ஆகிட்டாள். பாவம் அவன் ஒரு அப்பாவி இளையனும் கூட. வெள்ளைகளுக்குள் நல்ல பொடியன். இருந்தும்.. அவன் அதை ஒரு கொஞ்ச நாள் வலியாக நினைக்கவில்லை. அதை வாழ்க்கையின் அனுபவமாகக் கொண்டு.. வாழப் பழகிக் கொண்டான். என்னென்றால்.... இவற்றை எல்லாம் கண்டு விளங்கிக் கொண்ட நானும் கூட.. ஒரு கட்டத்தில்.. போலிக் காதலைக் கண்டு... ஏமாந்திருக்கிறது தான்..! இருந்தாலும்.. போலி என்பதை மிகத் துரிதமாகவே உணர்ந்துவிட்டேன்..! விலகி இருந்தும் விட்டேன்..! :):lol:

இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம்.. முன்னம் இந்தப் பாடல் வெளிவந்த தருணத்தில்.. புரிந்ததை விட இப்போ.. நல்லா புரியுது..! இதுதான் காதல் என்ற பெயரில்.. மற்றவர்கள் எமக்களிக்கிற முன்னேற்றம்..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.