Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனியன்று கூடுகிறது மு.கா உயர்மட்டம்! முக்கிய முடிவுகள் வரலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SLMC.jpg

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்புள்ளை பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்து வருவதாகவும் தங்களது அரசியல் இருப்புக்கு அதனை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் அதன் அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பௌத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.

அப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாவிட்டால், அது பலவந்தமாக அகற்றப்படும் என்று பிக்குகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரிய முஸ்லிம் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச்சம்பவம் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அந்தப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை காப்பாற்ற முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், நாடுகள் முன்னின்று உழைத்ததாகவும் அது அவ்வாறிருக்க கேவலம் ஓரிரு பிக்குகள் கிளப்பியுள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியாவிட்டால் இனியும் அவர்களுடன் இணைந்திருந்து என்ன பயன்? என்ற கேள்வி பெரும்பாலும் இந்த கூட்டத்தின்போது எழுப்பப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.saritham.com/?p=57968

  • கருத்துக்கள உறவுகள்

அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பௌத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.

காளி கோவில் சிங்களவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

SLMC.jpg

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை காப்பாற்ற முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், நாடுகள் முன்னின்று உழைத்ததாகவும் அது அவ்வாறிருக்க கேவலம் ஓரிரு பிக்குகள் கிளப்பியுள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியாவிட்டால் இனியும் அவர்களுடன் இணைந்திருந்து என்ன பயன்? என்ற கேள்வி பெரும்பாலும் இந்த கூட்டத்தின்போது எழுப்பப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு மட்டுமல்ல முஸ்லீம்கள் சிங்கள அரச பயங்கரவாதத்துக்கு ஆதரவு கொடுத்ததாக குறைத்து மதிப்பிடக் கூடாது.

முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக கொண்டு வந்த தீர்மானத்தையும், "சனல் 4" வெளிக்கொணர்ந்த போரியல் ஆவணங்களுக்கும் சிங்களவருடன் சேர்ந்து தமிழனுக்கு எதிராக குரல் கொடுத்தை நாம் மறக்கவில்லை. அதற்குரிய பலனை... அதே சிங்களத்தால் அனுபவிக்க வேண்டும்.

சனியன்று கூடுகிறது மு.கா உயர்மட்டம்! முக்கிய முடிவுகள் வரலாம்!

குலைக்கின்ற நாய்கள் கடிப்பதில்லை, பார்க்கலாம் சனியன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளியே போக மாட்டோம் - ரவூப்..! ஈழதேசம் செய்தி...!

eeladhesam%20seythi%20aaivu.jpg

இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மகிந்தாவின் அரசில் அமைச்சராக கூட்டணி வைத்துள்ளது. ரங்கிரி தம்புலுவில் நடைபெற்ற பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் மேலும் ஒரு பள்ளிவாசலை இடிப்போம் என்று சொல்லிவரும் தேரர்கள், இவர்களை எதிர்த்து இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் போராடி வருகையில், திரு சம்பந்தன் அவர்கள் வாருங்கள் முஸ்லிம்களே...! சேர்ந்து போராடுவோம் என்று அறிவித்த வேளைகளில், ஏனைய முஸ்லிம் கட்சியினரும் தலைவர்களும் நாங்கள் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதற்காக என்னென்னவெல்லாம் செய்தோம், அதை மறந்து விட்டு 60 ஆண்டு கால பள்ளிவாசல்களை இடித்து விட்டீர்களே என்று, கதறி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், சரி இந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகின்றன என்று உற்று நோக்கும் சமயத்தில் தான், இலங்கையின் நீதித்துறை அமைச்சர் அதாவது சட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உடனே அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். எங்கள் கட்சி என்ன கருதுகிறது என்றால், எப்பவெல்லாம் கருத்து வேறுபாடு அரசுக்கும் எங்களுக்கும் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்கிறார். அதாவது இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தொண்டைமான் அவர்களும் எப்பொழுதுமே பதவியில் இருப்பது ஒன்று தான் முக்கியமான கொள்கையே. பள்ளிவாசலை இடித்தால் என்ன, முஸ்லிம்களை கொன்றால் என்ன..? முன்பு தமிழர்கள், இப்பொழுது முஸ்லிம்கள்..? நாளை கிறிஸ்துவர்கள்..?

சங்கிலிக்கருப்பு

சனியன்று கூடுகிறது மு.கா உயர்மட்டம்! முக்கிய முடிவுகள் வரலாம்!

இவர்கள் அனைவரும் மறக்காமல் தொப்பி போட்டுக் கொண்டுதான் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சொம்படிப்பதா அல்லது சொறிந்துவிடுவதா..? இப்படித்தான் நடக்கும் இந்த கூட்டம்..

சொம்படிப்பது:

--------------

ஆளும் கட்சி ,சிங்களன் எது செயதாலும் ஆமாம் சாமி எடுத்துவிடுவது.. கூடுமானவரை லாபம் காண்பது

சொறிந்துவிடுவது:

------------------

தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையில் சொறிந்துவிட்டு இடையில் கூடுமானவரை லாபம் காண்பது

டிஸ்கி:

இரண்டும் மிக்ஸ் பண்ணவும் வாய்ப்புகள் அதிகம்..

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமைகளில் தான் முக்கியமான கூட்டங்களை

நடாத்தி அதன் பின்னர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இவர்கள் சனியில் கூடுவதால் உள்ளே எதோ ஒரு சதி இருக்கின்றது.

எவரின் அடிமட்டம், உயர்மட்டம் கூடினாலும் பிற மதவழிபாட்டுத் தளங்கள் புனித பூமியிலிருந்து அகற்றப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகமான முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமைகளில் தான் முக்கியமான கூட்டங்களை

நடாத்தி அதன் பின்னர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இவர்கள் சனியில் கூடுவதால் உள்ளே எதோ ஒரு சதி இருக்கின்றது.

இது, சதியில்லை வாத்தியார்.

உண்மையான இஸ்லாமியன் ஜீம்மா தொழுகையின் பின், ஆவேசம் கொண்டு பக்கத்தில் உள்ள புத்த விகாரைக்கு பெற்றோல் குண்டு வீசும், போராட்டத்தில் ஈடுபட்டால்....

தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்று... அரசுடன் ஒட்டியுள்ள, இஸ்லாமிய தலைவர்கள் அஞ்சி... அடுத்த சனிக்கு ஒத்தி வைக்கிறார்கள்.

நாங்கள் காணாத, சனியையா... முஸ்லீம்கள், சிங்களவனிடம் காணப் போகின்றார்கள்.

"ஆறின கஞ்சி, பழம் கஞ்சி" சனியை விட... வெள்ளி ஜீம்மா தொழுகையின் பின் இஸ்லாமியர் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

சைவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் வெள்ளி வணக்க நாள் என்பதால்... வரும் வெள்ளி, பெரிய வெள்ளியாக அமையவேண்டும்.

அது தான்... சிறுபான்மை இன இணக்கத்துக்கு அடையாளம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.