Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய் சொல்கிறாரா சுஷ்மா??

Featured Replies

13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே பேசவே இல்லை?..

பொய் சொல்கிறாரா சுஷ்மா??

இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து ராஜபக்சே எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசு நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு 13-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாகாண அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன் காவல்துறை, நிலம் போன்றவை தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகள் மறுத்தன. நிலம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கூறினர். இலங்கையைப் பொருத்தவரை 80 சதவீத நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. மீதியுள்ள 20 சதவீத நிலம் தனியாருக்குச் சொந்தமானது. மாகாண அரசுகளுக்கு நிலங்கள் மீது எந்த வகையான உரிமையும் கிடையாது.

இந்த சட்டத் திருத்தத்தை இதுவரை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத்தான் இந்தியா அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஐலண்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்படியொரு உறுதிமொழி கோரப்படவுமில்லை, தரப்படவுமில்லை என்று இலங்கையின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் ராஜபக்சே கூறியிருக்கிறாராம். இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது அவர் கூறுகையில், 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே மீது இந்தியா திணித்தது என்று கூறிய அவர் அதை எப்படி செய்தது இந்தியா என்றும் விளக்கியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் ராஜபக்சே.

கடந்த மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 13-வது திருத்தம் குறித்து உறுதி தரும்படி இலங்கைக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியைப் பார்க்கும்போது 13வது சட்டத் திருத்தம் குறித்து இந்திய எம்.பிக்கள் குழு ஆணித்தரமாக எதையும் பேசவில்லை என்பது தெளிவாகிறது.



http://tamil.oneindia.in/news/2012/04/25/srilanka-indian-mps-didn-t-discuss-13th-amendment-with-rajapakse-aid0091.html

http://tamil.oneindia.in/news/2012/04/25/srilanka-indian-mps-didn-t-discuss-13th-amendment-with-rajapakse-aid0091.html

  • தொடங்கியவர்

இலங்கை ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள்; கருணாநிதி குற்றச்சாட்டு

“தனித் தமிழ் ஈழம்’ தான் என்பது 1977 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

இலங்கைக்குச் சென்ற இந்திய பாராளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலேயே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தைக் கோரவில்லை என்பதைப் போல சொல்லியிருக்கிறார்கள்.

1987 இல் ராஜீவ்காந்திஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13 ஆவது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால், அந்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதைத் தெளிவாக்கி வருகிறது.

அதனால், தான் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ “இலங்கையில் தமிழர்களுக்கு அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும் இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும் சாத்தியம் தானா?’ என்று வினவியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாகக் கொண்டிருக்கும் வரலாற்றினைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால், தற்போது சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

டி.கே. ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. “மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்றபோது எங்களுக்குத் வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில்13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே.ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு 1976 இல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோருமே ஒன்றிணைந்து “தனித் தமிழ் ஈழம்’ தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து அதனையே முன்øவைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள். தமிழ்ப் பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

“தனித் தமிழ் ஈழம்’ தான் என்பது 1977 ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடக்குமுறை அடாவடிகளாலோ அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ, தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது.

http://www.thinakkural.com/news/all-news/india/13542-2012-04-25-07-57-46.html

  • தொடங்கியவர்

பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்படிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டார்களா?: சம்பந்தன்

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, இந்தியா மற்றும் நாடுகளுக்கு சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு எம்மிடம் தான் வரவேண்டும் என்று அரசாங்க அமைச்சர்கள் இப்போது கூறத்தொடங்கியுள்ளனர். அன்று தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1957 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் இருந்த இலங்கை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட பண்டா-செல்வா உடன்படிக்கை மற்றும் டட்லி-செல்வா உடன்படிக்கை ஆகியவற்றுக்கு என்ன நடந்தன என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா? அவ் உடன்படிக்கைகளை கிழித்தெறிந்துவிட்டு தமிழ் மக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது யார் என்பதை மறந்து விட்டார்களா?' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருகோணமலை நகர மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாநாயகத்தின் 35 ஆவது சிரார்த்த தினக் கூட்டத்தில்; உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தந்தை செல்வநாயகத்தின் பாதையில் தான் நாம் இன்று பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தந்தை செல்வாவுடன் அன்று செய்து கொண்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் இலங்கை அரசாங்கங்கள் சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்குரிய தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்காது.

இலங்கை அரசாங்கம் இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. தமிழ் மக்களுக்கு நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான தீர்வை இலங்கை அரசு முன்வைக்குமானால் நாம் அதனை நிராகரிக்க மாட்டோம். நாம் இன்று தந்தை செல்வா காட்டிய பாதையில் பக்குவமாகவும் நிதானத்துடனும் தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் இ.விஜேந்திரன் மற்றும் வெருகல் பிரதேச சபையின் தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/39911-2012-04-25-07-54-30.html

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் இங்க வந்து நல்லா விருந்து சாப்பிட்டுப்போட்டு கையை மணந்துகொண்டு இருந்திருப்பினம். இலங்கை ஜனாதிபதியின்ர மனம் நோக - அதாவது 13 வது திருத்தம் அது இது எண்டு எதையும் கதைச்சிருக்க மாட்டினம். இன்னும் என்ன வரப்போகுது எண்டுதான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருப்பினம்.

சிங்களப் பயங்கரவாதி மகிந்த சுஷ்மாவை தனியா கூப்பிட்டு தமிழினப் படுகொலைகளில் இந்தியப் பயங்கரவாதிகளின் நேரடி பங்களிப்பை ஆதாரங்களுடன் காட்டியதாக கேள்வி!

இந்தியப் பயங்கரவாத கும்பலின் ஆதரவாளர்களான பி. ஜே. பி. யைச் சேர்ந்த சுஷ்மா ஆடிப் போயிருப்பார்! இனி அவரிடம் நியாயத்தை எதிர்பார்ப்பவர்கள் தலையில் குல்லாயைப் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டில்லியின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது; இப்படித் தெரிவித்தார் சுஷ்மா சுவராஜ்

111.jpg

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக புதுடில்லி வாக்களித்தது கொழும்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியக் குழுவின் தலைவருமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்றுமுன்தினம் இலங்கை பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சுஷ்மா தெரிவித்தவை வருமாறு வடக்கில் இருந்து இலங்கைப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்என்று இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டோம்.

பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு இலங்கைப் படையினர் அழையா விருந்தாளிகளாக வருகின்றனர் என்றும், ஆலயங்களுக்குள் நுழைகின்றனர் என்றும் அங்குள்ள பொதுமக்கள் எம்மிடம் சுட்டிக்காட்டினர்.

13 ஆவது அரசமைப்புத் திருத்தம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் பேசப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு ஒன்றை எட்டவே விரும்புகின்றது. தாம் இலங்கையர்கள் என்பதில் பெருமைப்படுகின்றனர் என அதன் உறுப்பினர்கள் கூறினர்.

அவர்கள் வன்முறைகளை எதிர்க்கின்றனர். பிளவுபடாத இலங்கை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். எனவே, என்ன தடை உள்ளது என்று இலங்கை அரசை நாம் கேட்டோம்.

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுமாறு நாம் இருதரப்புகளையும் கேட்டுக்கொண்டோம். அதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை எட்டுவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்க மட்டுமே தன்னால் முடியும். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார் ராஜபக்ஷ.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது குறித்து இலங்கைத் தலைவர்கள் எம்முடன் விவாதித்தனர். தீர்மானத்திற்கு ஆதரவாகப் புதுடில்லி வாக்களித்தது கொழும்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தீர்மானம் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவே சொல்கிறது. இது ஒன்றும் இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல. நீங்கள் அமைத்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நீங்களே நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் கூறுகிறதே என்று அவர்களிடம் கூறியபோது பதில் பேசாமல் இருந்தனர் என்று மேலும் கூறினார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=375191009326561823

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.