Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உதயன் பத்திரிகை மீது அமைச்சர் டக்ளஸ் 1000 கோடி ருபா மானநஷ்ட வழக்கு தொடுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Daglas-devanantha150.jpg

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதயன் பத்திரிகை மீது 1000 கோடி ரூபா மான நஷ்டம் கோரி வழக்குத்தொடுத்துள்ளாராம். கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களில் ஈ.பி.டி.பியும் கருணா குழுவும் ஈடுபட்டன என்று தெரிவிக்கும் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக்கின் ஆவணத்தை வெளியிட்டது விக்கிலீக்ஸ் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டமைக்காகத் தனக்கு 1,000 கோடி ரூபா தருமாறு கேட்டு டக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை உதயன் சட்டப்படி எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி சட்டத் தரணி விஜயதாச ராஜ பக்ஷவின் வழிகாட்டலில் சட்டத்தரணி ரகுராஜ் நேற்று முன்தினம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜூலை மாதத்தில் விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.

உதயன் வெளியிட்ட செய்தியால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு "மனச்சஞ்சலமும் அவமானமும்" ஏற்பட்டுள்ளதாம். அதனால் 1,000 கோடி ரூபா நட்டஈடு கேட்டு அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் டக்ளஸைப் பற்றி உதயன் பத்திரிகை அவதூறாக எழுதியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:

வடக்கு, கிழக்கில் ஆள்கடத்தல்கள் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் பெறுதல் என்பவற்றில் ஈ.பி.டி.பியினரும் கருணா குழுவினரும் ஈடுபட்டிருந்தனர் என்று அமெரிக்கத் தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

துணைப்படைகளான கருணா குழுவும் ஈ.பி.டி.பியும் ஆள்களைக் கடத்திக் கப்பம் பெறுவதற்குப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் அனுமதி அளித்திருந்தார் என்று அமெரிக்கத் தூதருக்கு நம்பிக்கையான ஒருவர் தெரிவித்திருந்தார் என்று அந்த ஆவணம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து இயங்குபவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை கடத்துவதற்கும் விடுதலைப் புலிகளுடன் சண்டையிடுவதற்கும் கருணா குழுவினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படும் ஈ.பி.டி.பியினரும் இலங்கை அரசுக்கு உதவிகளை வழங்கி வந்தனர்.

நிதி வளங்கள் இல்லாததால் துணைப் படையினருக்கான நேரடியான கொடுப்பனவுகளை ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான இலங்கை அரசு நிறுத்திவிட்டது. பதிலாகக் கருணா மற்றும் ஈ.பி.டி.பியினர் பணத்துக்காக ஆள்களைக் கடத்தியதை அது கண்டும் காணாது இருந்தது. இப்போதைய அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் துணைப் படைகளுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்தது. அதனடிப்படையில் ஈ.பி.டி.பி. மற்றும் கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அனுமதி அளித்தார் என்று அந்த நபர் குறிப்பிட்டார்.

ஈ.பி.டி.பியும் கருணாவும் தமிழ் இனக் குழுமத்தின் மத்தியிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் ஏனைய தமிழர்களுக்கு எதிராகவே அவர்களால் அனைத்துக் குற்றங்களும் அனைத்துச் சமயங்களிலும் நிகழ்த்தப்பட்டன.

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் துணையுடன் கருணாவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் நம்புகிறார் என ......... என்பவர் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது. அதிலிருந்து பிரிந்த ஒரு பகுதியினர், டக்ளஸ் தேவானந்தா 1994ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானதைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஈ.பி.டி.பியாக இயங்க ஆரம்பித்தனர். அவர்கள் அரசுடன் இணைந்திருந்தனர்.

ஓர் அரசியல் கட்சியாக ஈ.பி.டி.பி. பதிவு செய்யப்பட்டிருந்தபோதும் இராணுவத்தின் அனுமதியுடன் ஈ.பி.டி.பி. இன்னமும் அச்சமூட்டும் ஒரு துணைப் படையாகவே உள்ளது. அதிகாரபூர்வமற்ற வகையில் யாழ். குடாநாட்டின் ஆதிக்கங்களைக் குறிப்பாக தீவுப் பகுதிகளின் அதிகாரங்களை அது தன்னகத்தே வைத்துள்ளது.

பல்வேறு தரப்புகளின் கருத்துப்படி, இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதன் காரணத்தினால் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், கப்பம் அறவிடுதல் போன்றவற்றில் தண்டிக்கப்படுவோம் என்கிற எந்தவிதப் பயமும் இன்றி ஈ.பி.டி.பியினால் ஈடுபட முடிகிறது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியினர் நடத்திய சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்து ..... என்பவர் எம்மிடம் விவரித்தார்.

ஒருவரைக் கொலை செய்வதற்கு ஈ.பி.டி.பியினர் தீர்மானித்துவிட்டால் அது பற்றி முதலில் இராணுவத்தினருக்குத்தான் தகவல் தெரிவிக்கப்படும் என்று ..... தெரிவித்தார். பொதுவாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு சந்தியிலும் படையினரின் நிலைகள் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட ஒரு நேரத்தில் எல்லாப் படையினரும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்வது வழமை. அந்தச் சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வரும் முகமூடி அணிந்த நபர்கள் தாம் நினைத்த நபர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பிவிடுவார்கள்.

இவ்வாறு உதயனில் எழுத்தப்பட்டிருந்ததாலேயே தனக்கு அவதூறு ஏற்பட்டுள்ளதாக டக்ளஸ், நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும் உண்மையான காரணங்களைக் கண்டறியாத வகையிலும் உறுதிப்படுத்தாத வகையிலும் தீய நோக்கத்துடன் உதயன் தனக்கு எதிராகச் செயற்பட்டுள்ளதாகவும், இதனை விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்து டக்ளஸை அவதூறுக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றும் மனு குறிப்பிடுகிறது.

இதற்காக 1,000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி, வழக்குச் செலவு ஆகியன தனக்குத் தரப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தனது மனுவில் கோரி இருக்கிறார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதயன் பத்திரிகை மீது 1000 கோடி ரூபா மான நஷ்டம்

உதயன் வெளியிட்ட செய்தியால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு "மனச்சஞ்சலமும் அவமானமும்" ஏற்பட்டுள்ளதாம்.

இதற்காக 1,000 கோடி ரூபா நட்டஈடு மற்றும் வழக்குத் தொடுக்கப்பட்ட தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரையில் அதற்கான வட்டி, வழக்குச் செலவு ஆகியன தனக்குத் தரப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தனது மனுவில் கோரி இருக்கிறார்.

அப்போ வழக்கு இழுபடப்போகுது.

வட்டி வருமில்ல..

என்ன மாதிரியெல்லாம் உழைக்கிறார்களப்பா...

ஜனநாயகம் என்ற போர்வைக்குள் பதுங்கும் பயங்கரவாதிகளில் டக்கியை விட உலகில் யாரும் முன்னணியில் நிற்கமுடியாது. இந்த தேவாங்குகளை சந்தித்து கை குலுக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கூத்து அதை விட கேவலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லைக்கொடுத்து அடி வாங்கப்போறார் மாமா.

இதெல்லாம் நல்ல தலைவனுக்கு வரவேண்டிய ரோசம்.

பல உண்மைகள் நீதிமன்றம் மூலமாக உலகுக்கு வரலாம்.

அல்லது மாமா மூலம் உதயன் கோடி வாங்கலாம்( வாய் மூடுவதற்காக)

டங்கின்ர மானத்துக்கு 1000ம் கொடியா? அவருக்கே இது ஓவரா இருக்காதா?

ஒரு கொப்பி சென்னை வழக்கு, இன்னொரு கொப்பி LLRC, மேலும் ஒரு கொப்பி சுவிஸ் தமிழ்ஊடகவியாலரின் குற்றச்சாட்டுகளை உதயனின் வக்கீல்கள் நீதிபதிக்கு கையளித்து அவற்றை சட்டப்படி தேவானந்தாவுககு எதிரான ஆவணங்ககளாக இலங்கை கோடு ஒன்றில் பதிய வைத்து விடவேண்டும்.இலங்கை அரசு போய்ச்சேர்ந்த பின் என்றாவது ஒருநாள் தேவனந்தா தப்பிக்கமுடியாமல் அலுவல்கள செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதாவது உதயன் தான் நடத்திய விசாரணைகளின் உள் அறிக்கைகளை மட்டும் காட்டி சிவில் வழக்கிலிருந்து தப்பும் போது தேவானந்தா கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் என்று இலங்கை கோடுகளி பதிவாகிருக்க வேண்டும். அந்த தருணத்தில் நீதவான் அதைவிசாரிக்கும்படி பொலிஸ் திணைகளத்திற்கு ஆணையிடும் படியான நிலைமை வர வேண்டும்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய மனமும் சஞ்சலப்படக்கூடாது.

நஸ்டஈட்டை விரைவில் அளிக்கும்படி கனம் நீதிபதி

அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் :)

  • கருத்துக்கள உறவுகள்

மான நஷ்டமா?

இது மிருகங்களுக்கும் இருக்கா???

அதை முதலில் நிருபிக்கும் படி உதயன் பத்திரிக்கை வழக்கு போடவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.