Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கை கண்காணிக்க டில்லியில் விசேட அலுவலகம்.

Featured Replies

வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்குப் புதுடில்லியில் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவியான சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தபோது இது தொடர்பான யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார். இதற்கமையப் புதுடில்லியில் இந்தக் கண்காணிப்பு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்தியுள்ளதாகப் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தக் கண்காணிப்பு அலுவலகம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அது தொடர்பில் இந்திய அரசுக்குத் தெரியப்படுத்துவதற்கு விசேட பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=17378

  • கருத்துக்கள உறவுகள்

சுக்ஷ்மா தலைமையிலான குழு, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் கடந்து கட்ச்சி அரசியலுக்கும் மேலாக உருவாகும் ஒரு இந்திய அக்கறையை இலங்கைக்கு உணர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு உருவாகி வருகிறதும் தெரிகிறது.

இந்த சமயத்தில் இந்தியா இலங்கை தொடர்பான ஒரு கண்காணிப்பகத்தை நிறுவுவதை வரவேற்க்கிறேன். அதில் அர்த்தம் உள்ளது. இலங்கை தொடர்பான மேற்குலக நாடுகளதும் ஐநா மனித உரிமை அமைப்பினதும் நடவடிக்கைகளுக்கும் இத்தகைய கண்காணிப்பு அவை சாதகமாக அமையும் என நம்புகிறேன்.

நமது மக்கள் மனதில் இன்னும் அச்சங்கள் கேழ்விகள் உள்ளன. அதைவிடவும் எந்த விலைகொடுத்தாவது நமது மண்ணை காப்பாற்றியாக வேண்டிய நிலையில் நாம் உள்ளோம் என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருகின்றனர்.

. தமிழரதும் முஸ்லிம் மக்களதும் இணைந்த வடகிழக்கு மாகாணத்தை நிலத்தை நீரைக் உடனடியாகக் காக்கவும் நீண்டகால அடிப்படையில் மீட்க்கவும் வேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன் உள்ளது.

நம் தொடர்பான சர்வெதேச நகர்வுகளை உன்னிப்பாகவும் மிகுந்த ஆர்வத்துடனும் கவனித்து வருகிறவன் என்கிற முறையில் இந்தியாவின் புதிய நகர்வுகள் ஆர்வம் தருகிறது என்பதை களம் புலம்வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் கவனத்துக்கும் கொண்டுவர விரும்புகிறேன்.- வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்குக் கண்காணிப்பகத்தை வடகிழக்கில எங்கேயுமெல்லோ வைக்க வேணும். டெல்லியில ஏன் வைக்கினம். இப்ப யாழ்ப்பாணத்திலயும் கொழும்பிலயுமிருக்கிற தூதரகங்களும் உந்த வேலையைச் செய்யலாம்தானே! உதுக்கேன் புதுசா ஒரு கண்காணிப்பகம்? இலங்கைத் தமிழரின்ர உரமைகளில அக்கறை செலுத்தி அவர்களை இந்தியாவுடைய நேரடிக் கண்காணிப்புக்குக் கீழ கொண்டுவரவேணுமெண்டால் ஏற்கனவே செய்திருக்கிற ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தைக் கையிலெடுத்து அதைத் திரும்பவும் நடைமுறைப்படுத்துற வழியைப் பார்க்கலாமே! இப்ப இருக்கிற மனிதவுரிமை மீறல் சூழ்நிலையை அதற்கு உகந்த சூழ்நிலையாகப் பாவிச்சு, இலங்கையில உருவாகிற சீனத் தலையீட்டையும் மேற்கு நாடுகளிட்ட காரணமாக் காட்டி, இந்தியாவுடைய பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி மெதுவாக உள்நுழையிறதுதான் சரியான வழிபோல தெரியுது. அதைவிட்டுப்போட்டு, விருந்துக்கு அடிக்கடி ஆட்களையனுப்பி இலங்கையரச அதிபரிட்ட பல்லிளிச்சுக்கொண்டு என்ன செய்யப் போகினமோ தெரிய இல்ல.

தமிழின விரோத, தமிழினப் படுகொலையில் இதுவரை கூட்டுச் சேர்ந்திருந்த சிங்கள - ஹிந்திய அரச காட்டுமிராண்டிகளின் கூடுச் சதித்திட்டங்கள் அமெரிக்க மற்றும் மேற்குலக நடவடிக்கைகளால் தொடர்ந்தும் தோல்வியடையும் நிலையில், தமிழக மக்களும் நயவஞ்சக மத்திய அரசு பற்றிய விழிப்புணர்வு பெறும் நிலையில், ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் இன்னுமொரு ஏமாற்று வித்தையே இந்த அலுவலகம்.

ஹிந்திய பயங்கரவாதிகளின் வழிநடத்தலில் கொலைஞர் கருணாநிதியின் ஈழக் கோரிக்கை, TESO மீளமைப்பு போன்ற சலசலப்பு எடுபடாத நிலையில், முன்னர் வேறு வழியில்லாமல் ஜெனீவாவில் வாக்களித்தது போல, ஹிந்திய காட்டுமிராண்டி அரசுக்கு இப்படி தொடர்ந்தும் கதை அளக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

போன வருசம் வரையில் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்றார்கள்..! :D இப்ப அலுவலகம் அமைக்கினமாம்.. :wub: கேட்கிறவன் கேணையன் என்றால்... :rolleyes:

இப்ப இங்க(யாழில) இருக்கிற துணைத்தூதரகம் என்னத்துக்கு இருக்குதாம் ! நான் நினைக்கிறான் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க அங்க(டெல்லில) ஒரு அலுவலகமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனைகள், உலகின் காதுகளில் விழ்கின்றபோது, அதனை ஆறப் போடுவதற்கு, இந்தியா எடுக்கும் முயற்சி!

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒரு விசேட அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியா... ஆனால் தமிழர்கள் இம்முறை அவதானமாக இருப்பார்கள் என நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.