Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் தேர்தல் 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தேர்தல் 2012

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

hollande.jpg 28.5

nicolasarkozy.jpg 27

marine-le-pen.jpg 18.1

பிரான்ஸ் மக்களும் உலக நாடுகளும் ஆவலுடன் பரப்பரப்பாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த பிரான்சின் தேர்தல் முதல் சுற்று நடைபெற்று முடிந்து விட்டது. ஊடகங்கள் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படியே பிரான்சின் சோசலிசக் கட்சி வேட்பாளர் François holland 28.5 வாக்குகளை பெற்று முதலாமிடத்திலும். வலதுசாரி கட்சியான ( U.M.P ) வேட்பாளர் nicola sarkozy 27 சதவீத வாக்குகளை பெற்று இடண்டாமிடத்திலும் தீவிர வலதுசாரிக் கட்சியான (F.N ) கட்சி வேட்பாளர் marin le pen அவர்கள் 18.1 வீத வாக்குகளை பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்திருக்கின்றார்கள்.

இனிவரும் 6 ந்திகதி மேமாதம் இரண்டாவது சுற்றில் முறையே முதலாமிடத்தில் உள்ள சோசலிசக் கட்சிக்கும் இரண்டாமிடத்தில் உள்ள வலதுசாரிக் கட்சிக்கும் பலமான போட்டி நிகழப் போகின்றது.

பிரான்சில் வாக்களிப்போரின் எண்ணிக்கை வீதம் வீழ்ச்சியடைந்து செல்வதோடு மட்டுமல்லாமல் இளையோர் சமூகத்தில் தேர்தல் மீதான ஆர்வம் இல்லாமிருப்பதாகவும் தேரதல் ஆணையம் கவலை வெளியிட்டுள்ளது. பிரான்சில் 55 சதவீதமானோரோ வாக்களிப்பு செய்கின்றனர். அதற்காக இந்த தடைவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தினையும் சில பொது அமைப்புக்கள் மூலமாக தேர்தல் ஆணையம் செய்திருந்தது. ஆனால் அதில் பெரியளவு முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அதுவும் தமிழர்களை பொறுத்தவரை வாக்களிப்பு என்பது மிகமோசமான நிலையிலேயே உள்ளது. குடியுரிமையை எடுத்துக்கொண்டு இங்கிலாந்தில் போய் குடியேறிவிடுவது அல்லது ஒருக்கால் ஊருக்கு போய் வந்து விடுவதோடு அவர்களது குடியுரிமை பெற்றதன் நோக்கம் முடிந்துவிடுகின்றது.

இனி நடந்து முடிந்த தேர்தலிற்கு வருவோம் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் சோசலிசக் கட்சி வெற்றி பெற்றால் தான் பதவிக்கு வந்ததும் முதலாவது வேலையாக ஆப்கானிலிருந்து பிரெஞ்சு இராணுவத்தை திரும்பப் பெறபோவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்காகவே பிரான்சில் இருக்கும் அறுநூறிற்கும் அதிகமான பள்ளிவாசல்களில் கூட்டமைப்பு சோசலிசக் கட்சிக்கு ஆதரவு வழங்கியதோடு சோசலிசக் கட்சிக்கு வாக்களிக்குமாறு பகிரங்க அறிக்கையும் விட்டிருந்தது. காரணம் சார்க்கோசியின் ஆட்சியிலேயே முஸ்லிம் பெண்கள் பிரான்சில் பர்தா (முக்காடு போடுதல்) அணியக்கூடாது என்கிற சட்டத்தை கொண்டுவந்திருந்தில் கடுப்பாகியிருந்தனர்.அதே போல பெரும்பாலான முஸ்லிம்களும் சோசலிசக் கட்சிக்கே வாக்களித்திருந்ததுடன் இரண்டாவது சுற்றிலும் சோசலிச கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பதும் உறுதி. ஆனால் சோசலிசக் கட்சி ஆட்சிக்கு வந்து ஆப்கானிலிருந்து இராணுவத்தை திரும்ப பெற்று விட்டால் மட்டும் பிரான்சில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள். கட்டுப்பாட்டிற்குள் வருமா??என்பது கேள்விக்குறியே..

அது மட்டுமல்ல மீண்டும் முக்காடு போடுவதற்கான அனுமதி கேட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

வலது சாரிகட்சியின் வேட்பாளர் அதிரடியான பல திட்டங்களை அறிவித்தபடி தேர்தலில் இறங்கியிருந்தாலும். கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரிகளிடம் ஆட்சியை ஒப்படைத்திருந்த பிரான்ஸ் மக்களிற்கு அலுப்புத் தட்டியிருந்தது அவர்களிற்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. கட்சிகளில் வாக்குறிதிகள் திறைமையான தலைவர்கள் என்பதற்குமப்பால் பிரான்சில் தொடர்ச்சியாக ஒரு கட்சியை ஆட்சியில் வைத்து அழகு பார்த்து நாட்டில் குடும்ப அரசியலையோ அல்லது ஒருவரின் சர்வாதிகார ஆட்சிக்கு வழியமைக்க பிரான்ஸ் மக்கள் வழிசமைப்பதில்லை. அதே நேரம் பிரான்ஸ் பொருளாதார ரீதியாக தள்ளாடிக்கொண்டிருக்கும் போது சார்க்கோசி அவர்களினதும் அவரது மனைவியினதும் ஆடம்பர வாழ்ககை முறையும் சொகுசு பயணங்களும் பிரெஞ்சு மக்கள் அவ்வளவாக இரசிக்கவில்லையென்பதும் உண்மை.

அடுத்ததாக பிரான்சில் வேகமாக முன்னேறி வரும் அபாயம் என்னவெனில் இந்தத் தடைவை 18.1 வீத வாக்குகளை பெற்று மூன்றாவது சக்தியாக வளர்ந்து நிற்கும் ஜரோப்பாவின் அடுத்த பெண் கிட்லர் என வர்ணிக்கப்படும் F.n கட்சியின் மரின் லுப்பனை பற்றியது. பிரான்ஸ் பிரெஞ்சு மக்களிற்கே என்கிற கோசத்துடன் வெளிநாட்டவர்களிற்கெதிரான கடும்கொள்கைகளுடன் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றது இந்தக் கட்சி.பெரும்பாலும் பிரான்சில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரானதான பிரச்சாரத்தினையே இவர்கள் கடுமையாக முன்னெடுத்தாலும் ஒரு சமூகம் அல்லது இனத்திற்கெதிரான பிரச்சாரமாக அது அமைந்து விடாமல் பொதுவாக வெளிநாட்டவர்கள் குடியேறிகளிற்கெதிரானதாகவே இருப்பதால் அதில் நாங்களும் அடக்கம்.இந்தக் கட்சியினை இவரது தந்தையான Le pen நடத்தியகாலத்திலும் விட அவரது மகளான Marine பொறுப்பெடுத்த பின்னர் அதன் வளர்சி வேகமாக அதிகரிபதற்கு காரணம் மற்றைய கட்சித் தலைவர்களிடம் இல்லாத அரசியல் கவர்ச்சி பேச்சாற்றல்.பத்திரிகையாளர்களிற்கு சளைக்காமல் பதில் சொல்லும் திறைமை என்பன கட்சியை வேகமாக வளர்க்கின்றது.

நான் வசிக்கும் நகரத்தில் இந்தத் தேர்தலில் இவரே அதிக வாக்குகளை பெற்றுள்ளார் என்பதோடு அவரது பேச்சாற்றலில் மயங்கி அவருக்கே ஓட்டு போடுவமா என்றும் நான் யோசித்திருந்தேன். அனால் அவர் ஆட்சிக்கு வந்தால் முதல்வேலையாக என்னை நாட்டை விட்டு துரத்திவிடுவார் என்கிற பயத்தில் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போடவேண்டியிருந்தது.அடுத்தடுத்த தேர்தலிகளில் இவரது கட்சி ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால் பிரான்சில் ஒரு உள்நாட்டு கலவரம் கட்டாயம் நடக்கும்.என்பது உறுதி.எது எப்படியோ இந்த தேர்தலில் சார்க்கோசியை பதவியால் இறக்குவது என்பதையே குறிக்கோளாக கொண்டு அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கியிருந்தால் இரண்டாவது சுற்றில் போட்டியிடாத மற்றைய அனைத்து கட்சிகளிற்கு வாக்களித்தவர்களும் பெரும்பாலும் சோசலிசக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்பதை எதிர் பார்க்கலாம். அதே நேரம் அவர்களின் வெற்றி வாய்ப்பும் உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிலையில். இனி 5 வருசத்திற்கு சோசலில றோசாப்பூ மலர்ந்திருக்கப் போகின்றது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதை யார் யார் பிடுங்கி எப்படி பாவிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்தே அடுத்த தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்

Edited by sathiri

நன்றி சாத்திரியார். இரண்டு நாட்கள். முடிவு ஐரோப்பிய பொருளாதார, அரசியல் கொள்கைகளில் பாரியதாக்கம் ஏற்படுத்தக் கூடிய தேர்தல். இது அமெரிக்காவின் பொருளாதாரம், சீனா எதிர்ப்பு கொள்கை என்பவற்றில் தாக்கம் ஏற்படுத்தலாம். இருந்தாலும் இலங்கை சம்பந்தமான மேற்கு நாடுகளின் அரசியல் கொள்கைகளை பாதிக்காது என்று நம்பலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் சோசலிஸ்டுக்கள் ஆட்சியை பிடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்கோசி மனைவியுடன் நடந்துவரும் அழகே ஒரு தனி அழகு

ஒலொன்ட் என்ன செய்கின்றார் எனப் பார்ப்போம்.

அரசமைக்கும் புதிய அரசால் அங்கு வாழும் மக்களுக்கு நன்மைகள் ஏற்படுமா? அல்லது வலதுசாரிகளின் ஆட்சியின் மேல் உள்ள வெறுப்பால் / சலிப்பால் ரொட்டியை திருப்பிப் போட்டுள்ளார்களா?

மேற்கத்திய நாடுகளில் வாக்களிக்கும் மக்களின் வீதம் மிகக் குறைவாகவே உள்ளது. ஐந்து வருடங்கள் தங்கள் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கப் போகும் பொறிமுறையைப் பற்றிக் கவலைப்படாமல் அசட்டையாக உள்ளார்கள்.

Far-right National Front கட்சியின் வெற்றியை இங்கு அலட்சியம் செய்ய முடியாது. வெளிநாட்டவர்களின் குடிவரவால் பாதிக்கப்பட்டு வெறுப்படைந்துள்ள மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குரலாக இருக்கிறது. இதே ஆதங்கம் இங்கிலாந்திலும் உள்ளது. பொருளாதாரம் சீராக இருக்கும் பொழுது வந்தேறு குடிகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள் மத்தியில், பொருளாதார மந்த நிலையில் சிறு சலசலப்புத் தோன்றியுள்ளது.

நியூயோர்க்கின் வானொலி நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய குழப்பம்(Major upset in Europe) என்று கூறிவிட்டுத்தான் செய்தியை ஒலிபரப்பியது. சோசலிஸ்டுக்களின் வெற்றி அவர்களுக்கு பிடிக்காத செய்தி என்றபடியால் வெகுவிரைவில் இருடடிப்பு செய்து விடுவார்கள்.

120506064830-sarkozy-concedes-t1-main.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

marsa.jpg

நம்ம ஆள் நிக்கோலாவுக்கு விழுந்துவிழுந்து சப்போர்ட் பண்ணியும் ஒரு பலனுமில்லை. ஏனெண்டு தெரியேல்லை என்ரை மூனா சார்க்கோசி தோல்வியெண்டவுடனை ஆகாயத்தை பார்த்து சிரிச்சான்?........என்னத்துக்கு சிரிக்கிறாய் எண்டு கேட்டாலும்பதில் சொல்லுறானில்லை.

இந்த கிழமை விடுமுறைநாடகள் இரண்டும் உலக பொருளாதாரத்திற்கு சவால் விடும் நாடகளாக அமைந்திருக்கின்றன. போனமாதவேலை இலலாதோர் புள்ளிவிபரம் வெளிவந்ததால் டவ் ஜோன் 170 புள்ளிகளை இழந்து திரும்பவும் பதின்மூவயிரத்திற்கு வந்து நிற்கிறது. உபஅதிபர் ஜோ பைடன் இதை விளங்க படுத்த கஸ்டப்படுகிறார். பல மாதங்களாக டவ் ஜோன் பதின்மூவாரம் புள்ளிகளுக்கு மேல் எழமுடியாமல் தவிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்க தேர்தல் பல சங்கடங்களை சந்திக்கும். அதை ஊதி பெருப்பிப்பது போல் தான் மூன்று நிகழ்சிகள் இவர்களுக்கு பிடிக்கதவை நடந்திருக்கின்றன.

1.பிரான்சில் முதலாலித்துவம் சார்ந்த அதிபர் பதவி இழந்தமை.

2.கிரீசில் கடன்களுக்கு பொறுப்பு சொன்ன கட்சிகள் பதவி இழந்தமை.

3.ரூசியாவில் புட்கின் அதிபரானமை.

எல்லாம் எதிர் பார்த்தவைகள் தாம். ஆனால் பங்கு சந்தை இதற்கு தனது தாக்கத்தை காட்டி பதின் மூவாயிரத்திறகு கீழ் விழும் என்பதை எதிர் பார்க்கலாம். இன்னும் சிறுது நேரத்தில் ஆஸ்திரேலியா, யப்பான் போன்ற் என்றவற்றில் என்ன நடக்கிறது என்பது சுவாரசியமான விவகாரமாக அமையலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கிழமை விடுமுறைநாடகள் இரண்டும் உலக பொருளாதாரத்திற்கு சவால் விடும் நாடகளாக அமைந்திருக்கின்றன. போனமாதவேலை இலலாதோர் புள்ளிவிபரம் வெளிவந்ததால் டவ் ஜோன் 170 புள்ளிகளை இழந்து திரும்பவும் பதின்மூவயிரத்திற்கு வந்து நிற்கிறது. உபஅதிபர் ஜோ பைடன் இதை விளங்க படுத்த கஸ்டப்படுகிறார். பல மாதங்களாக டவ் ஜோன் பதின்மூவாரம் புள்ளிகளுக்கு மேல் எழமுடியாமல் தவிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்க தேர்தல் பல சங்கடங்களை சந்திக்கும். அதை ஊதி பெருப்பிப்பது போல் தான் மூன்று நிகழ்சிகள் இவர்களுக்கு பிடிக்கதவை நடந்திருக்கின்றன.

1.பிரான்சில் முதலாலித்துவம் சார்ந்த அதிபர் பதவி இழந்தமை.

2.கிரீசில் கடன்களுக்கு பொறுப்பு சொன்ன கட்சிகள் பதவி இழந்தமை.

3.ரூசியாவில் புட்கின் அதிபரானமை.

எல்லாம் எதிர் பார்த்தவைகள் தாம். ஆனால் பங்கு சந்தை இதற்கு தனது தாக்கத்தை காட்டி பதின் மூவாயிரத்திறகு கீழ் விழும் என்பதை எதிர் பார்க்கலாம். இன்னும் சிறுது நேரத்தில் ஆஸ்திரேலியா, யப்பான் போன்ற் என்றவற்றில் என்ன நடக்கிறது என்பது சுவாரசியமான விவகாரமாக அமையலாம்.

அடக்கொடுக்கமான பொருளாதார,அரசியல் ஆய்வு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.