Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!

Featured Replies

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை சிறிலங்கா அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது சந்தேகப்படவைக்கத்தக்க விடயங்களே. இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.

தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகியோரும் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர். (இருவரும் ஒன்றாக சென்றனர்) லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார். அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார். இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் குறித்த விபரங்கள் வருமாறு,

மணலாறு கட்டளைபணியகத்தளபதிகளில் ஒருவரான செல்வராசா

மணலாறு கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்

இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்

தளபதி லோறன்ஸ்

தளபதி குமரன்

விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன்

மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா

தமிழீழ அரசியல் துறைதுணைப்பொறுப்பாளர் சோ.தங்கன்

வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்

நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு

தமிழீழ வைப்பகப்பொறுப்பாளர் வீரத்தேவன்

தமிழீழ விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் கி.பாப்பா

தமிழீழ விளையாட்டுத்துறை துணைப்பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.

தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்

தமிழீழ கல்விக்கழகப்பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்

தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா

விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்

தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப்பணிப்பாளர் சொ.நரேன்

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்

தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்

தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்

தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்

தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி

தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை

திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் எழிலன்

யாழ்.மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி

அரசியல்துறைநிர்வாகப்பொறுப்பாளர் விஜிதரன்

தளபதிகளில் ஒருவரான வீமன்

வனவளபாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்

சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி

முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சஞ்சை

நீதிநிர்வாகப்பொறுப்பாளர் பரா

சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி

ராதா வான்காப்புப்படையணிபொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்

தமிழீழ மருத்துவப்பிரிவுப்பொறுப்பாளர் ரேகா

மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்

மாலதி படையணித்தளபதிகளில் ஒருவரான சுகி

கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்

மருத்துவப்பிரிவைச்சேர்ந்த மனோஜ்

நிதித்துறையைச்சேர்ந்த லோறன்ஸ் உட்பட்டவர்களின் நிலை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thenralkkaatru.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-40%E0%AE%B1%E0%AF%8D/

http://thenralkkaatr...ணாமல்-போன-40ற்/

இந்த பட்டியலில் உள்ள இளம்பரிதி யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருடனும், சுதந்திரக் கட்சியின் அதரவாளர்களுடனும் சேர்ந்து இயங்குவதை பல நூறு மக்கள் பார்த்துள்ளனர். பாப்பா பற்றியும் இதே போன்ற செய்திகள் பல தடவை வந்துள்ளன. இவர்களும் இந்த பட்டியலில் இருப்பதால் இந்த பட்டியலில் வேறு ஏதும் உள்நோக்கத்துடன் வெளிவந்திருக்குமா என சந்தேகமாக இருக்கு. உயிருடன் உள்ளவர்களையும் பட்டியலில் போட்டு விட்டு பின் அவர்களை உயிருடன் உள்ளார்கள் என்று காட்டுவதன் மூலம் மிச்சம் உள்ளவர்களைப் பற்றி கேள்வி கேட்பதை தடுப்பதற்காகவும் இவ்வாறு செய்யலாம். பல ஆயிரம் முறை அடு பட்டு அனுவம் முற்றி விட்டதால், கவனம் தேவை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அதே போன்ற சந்தேகம் இருக்கின்றது,

இந்த செய்தியை நான் படித்த பொழுது இந்தப்ட்டியலில் சிலர் இப்பொழுது உயிருடன் இருப்பதை நான் அறிந்திருந்ததின் காரணமாகவே இந்த செய்தியினை இணைக்காது தவிர்த்திருந்தேன்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=14210:---40-----&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

இந்த பட்டியலில் உள்ள பெயர்கள் சரியே!

இங்கு குறிப்பிட்டது போல இதில் சிலர், தத்தமது மன உறுதி கோளாறுகளுக்கேற்ப சிங்களப் பயங்கரவாதிகளின் எடுபிடிகளாக மாறியதுவும் உண்மை.

இதிலுள்ள சிலர் இன்னமும் உயிருடன், மனம் சோர்ந்த நிலையில் சிங்களப் பயங்கரவாதிகளின் தொடர் சித்திரவதைகளை எதிர் கொள்வதாக விடுதலையான மருத்துவர் ஒருவர் எம்மிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சில விடயங்களை குழப்பிக் கொண்டிருந்தார் - அதனால் நம்பகத்தன்மை குறைவு.

ஓரளவு சரிபார்க்கப்பட்ட தகவல்களின் படி, உதவியாளர்கள், குடும்பத்தினர் உட்பட குறைந்தது 188 பேர் ஐ. நா. சபை / நோர்வே உறுதி மொழிகளுக்கமைய அரச பயங்கரவாதிகளின் பகுதிக்கு ஆயுதங்களை மௌனித்தபின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றுள்ளனர்.

இதில் இராணுவப்பிரிவினர் சரணடந்திருப்பர்கள் என்பது நம்பமுடியாமல் உள்ளது .

அவர்களுக்கு தெரிந்த விடயம் தானே , சரணடைந்தால் என்ன முடிவு என்று .

இதில் உள்ளத்தில் சிலரை சொல்லமுடியவில்லை . காலம்தான் சொல்லவேண்டும்

இந்தப் பட்டியல் யாரால் வெளியிடப்பட்டது என்ற தகவல்கள் ஏதும் இல்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.