Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் போராளிகளின் நியாயங்களை மதிக்கின்றேன்:-ஆனந்தசங்கரி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

anandashangari_seithy.jpg

நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனல்லன். ஆனால் போராளிகளை மதிக்கத் தவறியதில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவருமான உதயன் என்றழைக்கப்படும் பெரியதம்பி பரம்சோதியின் இறுதிச்சடங்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது அஞ்சலி உரையாற்றுகையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான வீ. ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;

"நான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனல்லன். அவர்களை மதிப்பதற்கு நான் தவறியதில்லை. அவர்களின் தியாகத்தை நான் பெரிதும் மதிப்பவன். என்னைப் போன்றவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் எங்களுக்கு ஆயிரம்பேர் தெரிந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் ஒருவரும் வந்து எம்மைப் பார்க்க மாட்டார்கள். இங்கு இயக்கங்களின் தலைவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர்களுக்கு உண்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ நேரம் இருக்காது. எங்கிருந்தோவெல்லாம் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தும் அவர்களைத் தேடிவந்து அவர்களைச் சந்திப்பதையும் பல சந்தர்ப்பங்களில் தங்களது இடத்திற்கே அவர்களை அழைத்துச் செல்வதையும் நான் அவதானித்திருக்கின்றேன்."

"மிதவாத சக்திகளிடம் மக்கள் வைத்துள்ள அன்பு வித்தியாசமானது. இயக்கங்களின் மீது மக்கள் வைத்திருக்கின்ற அன்பு உண்மையில் விசுவாசமானது. இயக்கங்களில் இருந்தவர்கள் உண்மையான தேசப்பற்றும் அன்பும் கொண்டவர்கள் என்பதை நீங்கள் யாரும் சொல்லி நான் தெரிந்துகொள்ளவில்லை. நீங்கள் யாரும் அறியாதவகையிலே நான் அறிந்திருக்கின்றேன். இதில் யாரும் என்மீது குற்றம் கூறக்கூடாது. உதயன் போராளியாக இருந்ததால்தான் அவர்மீது மக்களுக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டுள்ளதை எனது அனுபவத்தினூடாக நான் கண்டுகொண்டேன்."

மக்களின் பற்றும் பாசமும் போராளிகள் மீது தான் அதிகமாக இருக்கின்றது. எனக்கும் தம்பி உதயனுக்கும் ஏறக்குறைய 25வயது வித்தியாசம். இன்னமும் 25 முதல் 30 ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடிய ஜீவன் இது.ஏன் எனக்கு அந்த மரணம் வரவில்லை? இந்த இளைஞர்களுக்கு ஏன் வருகின்றது? இது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயம். இவர்கள் வேலையில்லாமல் இயக்கங்களில் சேர்ந்தவர்களல்லர். உண்மையான மண்பற்றும், தேசப்பற்றும் , இனப்பற்றும் கொண்டதால்தான் அவர்கள் இயக்கங்களில் சேர்ந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும். இயக்கங்களை விட்டுச் சென்றவர்களில் சிலர் ஒருசில மாதங்களில் பெரிய பணக்காரர்களாக ஆகியிருக்கின்றனர்."

"ஆனால் போராளிகள் மட்டும் ஏன் பணக்காரர்களாக முடியவில்லை? ஏனெனில் அவர்கள் பெற்ற பயிற்சி அத்தகையது. அவர்கள் கைகள் சுத்தமானவை. அவர்களது எண்ணம் தூய்மையானது. அவர்கள் ஏமாற்றப் பழகவில்லை. தமது உயிரைத் துச்சமென மதித்தவர்கள். தங்களது குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைதான் மிகப்பெரியது என்று நினைத்து இயக்கங்களில் சேர்ந்தவர்கள்."

"உதயன் நினைத்திருந்தால் நல்லதொரு வேலைக்குப் போயிருக்கலாம். அல்லது நல்லதொரு தொழிலை ஆரம்பித்திருக்கலாம். தனது பதினெட்டு வயதில் ஆரம்பித்து 28 ஆண்டுகள் ஓர் இனத்திற்காக உழைத்தவன் என்றால் அவன் பூப்போட்டு வணங்கப்பட வேண்டியவன். இவரைப்போன்று எத்தனையோ இளைஞர்கள் எம்மை விட்டுப் போய்விடுகின்றார்கள். இது மிகவும் சோகமானது. ஏன் இந்த இளையவயது மரணங்கள் நிகழ்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள். இது அவர்களிடம் உள்ள பெரிய குறைப்பாடு. சிலவேளைகளில் நேரத்திற்குச் சாப்பிடுவதற்குச் சாப்பாடு இருக்காது. பட்டினி கிடக்க வேண்டிய நிலை வந்தால் திரும்பிக்கூடப் பாராமல் ஓடிவிடும் இந்த நாட்டில், இந்த சமூகத்தில் பட்டினியையும் தாங்கி தங்களது குடும்பங்களுக்கு ஏற்பட்ட பல இன்னல்களையும் பொருட்படுத்தாமல், சோகம் நிறைந்த உள்ளத்தோடு மண்ணைக்காக்க வெளிக்கிட்ட உத்தமர்களில் தம்பி உதயனும் ஒருவர். இவரைப் போன்ற பலர் எம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்கள்."

"சரியான நேரத்திற்கு உணவின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்கள் இறந்தது எனக்குத் தெரியும். என்னால் உங்களுக்கு ஆறுதல்தான் கூற முடியுமே தவிர வேறு எதனையும் செய்ய முடியாது. அவரைப் பிரிந்து வாடுகின்ற அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், குடும்பத்தவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.

http://www.seithy.co...&language=tamil

எல்லாருக்கும் கருநாநிதியின் வருத்தம் வந்துட்டுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாரை போராளி என்று இங்கு குறிப்பிடுகின்றார் அரசுடன் இணைந்து உண்மையான போராட்டத்தை ஒடுக்கியவர்களையா ? <_<

வயசுபோனாதால் பாவம் எதோ புலம்புகின்றார் :D

'நான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் போராளிகளுக்கு கடிதம் எழுதுபவர்களை மதிக்கிறேன்'

என்று நினைத்துச் சொல்லியிருப்பார். :icon_mrgreen:

"போராடவில்லை, ஆனால் தள்ளாத வயதிலும் சிங்கள - ஹிந்திய காட்டுமிராண்டிகளின் கைக்கூலியாக அலைந்து திரிந்தேன்!",

"சாதிப் பிரச்னையை தூண்டி குளிர்காய நினைத்தேன் - நடக்கவில்லை",

"வெளிவிவகார அமைச்சர், பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டதால், இன்று போராளிகளை மதிக்கிறேன் என்று மாறி நிற்கிறேன்"

என்று ஒருசில உண்மையைச் சொல்லியிருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போகப் போக, உடம்பு மெல்ல மெல்லத் தளரும்!

அப்போது , ஒருவர் தன் வாழ்நாழில் செய்த, நீதியற்ற செயல்கள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து, மனத்தை வருத்தும்!

அப்படியான ஒரு நிலைக்குத் தான், சங்கரியும் போய்க் கொண்டிருக்கின்றார் போல உள்ளது!

இதையே பாமர மக்கள், பின்வரும் பழமொழியால் அழைப்பதுண்டு என எண்ணுகின்றேன்!

' அரசன் அன்று கொல்வான்"

தெய்வம் நின்று கொல்லும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.