Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

01 வாத்தியார்

1910_Raleigh_01-copy.jpg

1910_Raleigh_01-copy.jpg

02 ரதி

10319038.jpg

http://www.sciencemuseum.org.uk/images/ManualSSPL/10319038.aspx

03 நிலாமதி

21.jpg

21.jpg

04 தமிழ் அரசு

DSC06693.JPG

http://www.alaveddy.ch/?p=11091

பரிசுபெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் .

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]08 அக்காக்குருவி அல்லது பெண்குயில் ( [/size][size=5]Eudynamys scolopacea ) [/size]

2199802378_6a9108f7bc.jpg

2199802378_6a9108f7bc.jpg

மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

பெண் குயில் பழுப்பு நிற உடலும் அதில் வெண் புள்ளிகள் நிறைந்தும் இருக்கும்.

தனியாகவோ இணையுடனோ மரங்கள் நிறைந்த தோட்டம், தோப்புகளில் இவற்றைக் காணலாம்.

இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் scolopacea வகை தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் காணப்படுகின்றன.

குயில் ஒரு அடையுருவி ('brood parasite').

இது மரத்தில் வாழும் பறழ்பறவை -- அதாவது தரையில் காணப்படாது.

பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை.

(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.

தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.

ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%28%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%29

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பூங்குயில் . :)

வண்டில் சோக்காய் இருக்கு ,

நன்றிங்கோ கோமகன் . :)

மாங்குயில் என்றும் கூறலாம் . :D

குயில்

  • தொடங்கியவர்

கருத்துக்களை இட்ட தமிழ் , அரசு குளக்காட்டான் ஆகியோருக்கு நன்றிகள் . விடைசம்பந்தமாக நாளைதான் நான் வாய் திறக்க முடியும் .

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் இறுதிப்படத்திற்கன சரியான விடையைச் சொல்கின்றேன் . வெல்லப் போவது யார் ????????????? பொறுத்திருங்கள் .

  • தொடங்கியவர்

படம் எட்டிற்கான சரியான தூயதமிழ் " அக்காக்குருவியாகும் " .இக்குருவி " குயில் " என்றே பலராலும் அறியப்பட்டுள்ளது . இதற்கான சரியான விடையை தமிழ் அரசு , குளக்காட்டான் , வாத்தியார் ஆகியோர் வழங்கியிருந்தாலும் , வாத்தியாரே " பெண்குயில் " என்று மிகச்சரியாக அடையாளம் கண்டுள்ளார் . எனவே வாத்தியாருக்கு சிறப்புப்பரிசும் , தமிழ் அரசு குளக்காட்டானுக்கு ஆறுதல்பரிசும் வழங்கிக் கௌவரவப்படுத்துகின்றேன் .

01 வாத்தியார் ( சிறப்புப்பரிசு ) .

rolls_royce_10hp.jpg

http://www.cbx.ro/up..._royce_10hp.jpg

02 . குளக்காட்டான்

1904_RollsRoyce_10HP1.jpg

03 தமிழ் அரசு .

Rolls-Royce-Silver-Ghost.jpg

http://static-jpeg.s...ilver-Ghost.jpg

பரிசில்களைப் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]09 கருங்கொட்டு கதிர்க்குருவி ( Zitting Cisticola ) .[/size]

Zitting_Cisticola_-_Cisticola_juncidis.JPG

கருங்கொட்டு கதிர்க்குருவி (ஆங்கிலம்: Zitting Cisticola) தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா தொடங்கி வட அவுஸ்திரேலியா வரை காணப்படும் ஒரு சிறிய பறவை. இது மேய்ச்சல் நிலங்களில் காணப்படும். சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பின்புறம், கழுத்துப் பகுதியில் குறைவான பொன்னிறம், வெள்ளையுடன் சேர்ந்த பழுப்பு என்பனவற்றால் இதனை எளிதில் அடையாளம் காண முடியும். இனப்பெருக்க காலத்தில், ஆண் வளைந்து நெளிந்து பறந்து ஒருவித ஒலியெழுப்பும்.

கருங்கொட்டு கதிர்க்குருவியின் மேற் பகுதி பழுப்பு நிறமும் கருமையான கோடுகளும் உடையது. கீழ்ப் பகுதி வெள்ளையும் அகன்ற வாலையும் உடையது. ஆண் தலையில் குறைந்த கோடுகளைக் கொண்டும், பெண்ணை விட அதிக அடையாளத்தைக் கொண்டும் காணப்படும். ஆனாலும், அவை பெரிய வித்தியாசமாக இருப்பதில்லை. இனப்பெருக்கமற்ற காலங்களில் பற்றைகளுக்குள் மறைவாக வாழும் இவற்றைக் காண்பது கடினம்

இவை பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களிலும் நீர் நிலைகளை அண்மித்தும் காணப்படும். இவை நிரந்தரமாகத் தங்கி வாழ்பவை. ஆனால் சில கிழக்காசியப் பறவைகள் குளிர் காலத்தில் வெப்பத்திற்காகத் தென் பகுதிக்குச் செல்கின்றன.

கருங்கொட்டு கதிர்க்குருவி சிறிய பூச்சியுண்ணும் பறவையாகும். சில நேரங்களில் சிறு கூட்டமாக வாழும். மழைக்காலமே இவற்றின் இனப் பெருக்க காலமாகும். பல பகுதிகளில் உள்ள இப் பறவைகள் வருடத்திற்கு இரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

ஆண்கள் பல பெண்களோடு இனப்பெருக்கத்திற்காக இணையும். ஆனாலும் சில ஒன்றுடன் மட்டுமே சேரும்.பற்றைகளின் ஆழத்தில் ஆரம்ப கூடு கட்டலை ஆண்களே செய்து, சிறந்த காட்சியுடன் பெண்ணை அழைக்கும். ஆணை ஏற்றுக் கொண்ட பெண் கூடு கட்டலை நிறைவு செய்யும். மெல்லிய நார், சிலந்தி வலை, புற்கள் மற்றும் பச்சை இலைகளினால் கூடு கட்டப்படும். கிண்ணம் போன்ற அமைப்புடைய கூடு புற்கள் அல்லது இலைகள் மூலம் மூடப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டு காணப்படும். அதனுள் 3 தொடக்கம் 6 வரையான முட்டைகளை இடும். பெண்கள் அடிக்கடி தன் துணையினை மாற்றிக் கொள்ளும். அத்துடன் அவை குறித்த பிரதேசத்தில் வசிப்பது மிகக் குறைவு. ஆனால், ஆண்கள் இடம்மாறுவது குறைவு.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தூக்கணாங்குருவி

சிறு குறிப்பு . தென் ஐரோப்பாவிலேயே அதிகம் உள்ள அருகிவரும் ஒரு குருவியினம் . இதற்கும் ஒரு தூயதமிழ் உண்டு . முயற்சி செய்யுங்கள் வாத்தியார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

எங்கள் ஊரில் இந்தக் குருவியைத் தூக்கணாங்குருவி

என்று தான் சொல்லுவார்கள்.

நான் ஒரு தடவை சொன்னால் சொன்னது தான். :D:lol:

மாற்றம் எல்லாம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Zitting_Cisticola_-_Cisticola_juncidis.JPG

துக்கணாங்குருவி(ஊர்க்குருவி.) என்றும் ஒரு பெயர் இருப்பதாக படிச்சிருக்கிறன்.எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு புரிய இல்லை.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊர்குருவி என நம்புகின்றேன் .

பரிசுற்கு நன்றிகள் . :)

  • தொடங்கியவர்

ஐரோப்பாவைப்பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

எங்கள் ஊரில் இந்தக் குருவியைத் தூக்கணாங்குருவி

என்று தான் சொல்லுவார்கள்.

நான் ஒரு தடவை சொன்னால் சொன்னது தான். :D:lol:

மாற்றம் எல்லாம் இல்லை.

உப்புடியெல்லாம் வெருட்டக்கூடாது சொல்லப்போட்டன் . வடிவய் யோசியுங்கோவன் .

  • கருத்துக்கள உறவுகள்

Zitting_Cisticola_-_Cisticola_juncidis.JPG

"உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா" என இந்தக் குருவியைப் பார்த்துத் தான் சொல்வார்கள் :lol:

  • தொடங்கியவர்

"உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா" என இந்தக் குருவியைப் பார்த்துத் தான் சொல்வார்கள் :lol:

பழமொழியால் அளாப்பின ரதி அக்கை நாளைக்குப் பாக்கலாம் .

சிட்டுக்குருவி (Sparrow )

எனக்கு என்ன பரிசு????????

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்குருவி (Sparrow )

எனக்கு என்ன பரிசு????????

:lol:

யாழ்ப்பாணச் சாப்பாடுகள் (வட்டிலப்பம் செய்முறை உட்பட) செய்முறைப் புத்தகம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுக்குருவி (Sparrow )

எனக்கு என்ன பரிசு????????

:lol:

அலையக்கா ஏற்கனவே சிட்டுக் குருவி பக்கம் 3ல் வந்துட்டு போய்ட்டு பாருங்கோ...:)

  • தொடங்கியவர்

அலையக்கா ஏற்கனவே சிட்டுக் குருவி பக்கம் 3ல் வந்துட்டு போய்ட்டு பாருங்கோ... :)

அலைக்குத் தேவியில்லாத வேலை . சின்னப்பிள்ளையள் எல்லாமல்லோ பகிடி விடுகினம் .

அலைக்குத் தேவியில்லாத வேலை . சின்னப்பிள்ளையள் எல்லாமல்லோ பகிடி விடுகினம் .

:(

[size=5]நானும் சின்னப்பிள்ள தானே[/size]!

  • கருத்துக்கள உறவுகள்

:(

[size=5]நானும் சின்னப்பிள்ள தானே[/size]!

:rolleyes: :rolleyes: !

  • தொடங்கியவர்

குருவிக்கூட்டிற்கு வருகை தந்து குருவிகளுடன் கிள்ளைமொழி பேசிய வாத்தியார் , யாயினி , தமிழரசு , ரதி அலைமகள் , புங்கையூரான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . நான் படம் ஒன்பதில் குறிப்பிட்ட குருவிக்கான சரியான தூயதமிழ் கருங்கொட்டு கதிர்க்குருவி (Zitting Cisticola) ஆகும் . இந்தக் குருவியினம் இன்றைய உலகில் அழிந்து கொண்டு வருகின்ற இனங்கள் என்று , பறவைகள் ஆராட்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்கள் . இங்கு நீங்கள் எல்லோரும் ஒரே குரலில் தூக்கணாங்குருவி என்று சொல்லியிருந்தீர்கள் . சில படங்கள் உண்மையிலேயே பொருள் மயக்கத்தைத் தரக் கூடியன . அதற்கு நான் குறிப்பிட படமும் ஒரு உதாரணம் . இரண்டு குருவிகளும் தோற்றத்தில் ஒன்றுபோல் காட்சி அளித்தாலும் , அவற்றின் ( சொண்டு ) அலகுகளில் மாற்றம் உள்ளது . எனவே இந்தமுறை உங்கள் ஒருவருக்கும் பரிசில்கள் தரமுடியாமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றேன் .

தூக்கணாங்குருவி ( பெண் ) .

baya_weaver_female1.jpg

http://yananwritings...ver_female1.jpg

தூக்கணாங்குருவி ( ஆண் ) .

Baya_Weaver_%28Ploceus_philippinus%29-_Male_W_IMG_0709.jpg

http://upload.wikime..._W_IMG_0709.jpg

எனது முடிவில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் பரிசீலனைசெய்கின்றேன் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]10 . சிவப்பு மூக்கு ஆள்காட்டி ( Red wattled Lapwing ) .[/size]

583px-Red-wattled_Lapwing_cropped.jpg

http://upload.wikime...ing_cropped.jpg

சிவப்பு மூக்கு ஆள்காட்டி ( Red wattled Lapwing ) என்பது ஒரு கரைப்பறவை. இது மனிதர்களையோ அல்லது எதிரிகளையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதனால் இப்பறவை ஆள்காட்டி என்றும் ஆள்காட்டிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

ஆட்காட்டிகள் அளவில் பெரிய கரைப்பறவைகளாகும். இவை 35 செமீ நீளம் இருக்கும். இதன் இறக்கைகளும் முதுகுப் பகுதியும் ஊதா நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் தலை, மார்பு, கழுத்தின் முன்பகுதி ஆகியன கருப்பு நிறத்திலும் இவ்விரண்டு நிறங்களுக்கு நடுவில் உள்ள பகுதி வெண்ணிறமாகவும் இருக்கும். இதன் கண்ணைச் சுற்றிலும் சிவப்பு நிறத்திலான தோல் இருக்கும். அலகுகள் சிவப்பாக நுனி மட்டும் கருப்பாக இருக்கும். கால்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஆட்காட்டிகள் பலவகையான பூச்சிகள், நத்தைகள், மற்றும் சிறு நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும். இவை தானியங்களையும் சில சமயம் உண்ணும். பெரும்பாலும் இவை பகலிலேயே இரை தேடும்.

http://ta.wikipedia....ூக்கு_ஆள்காட்டி

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.