Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

படம் பதின்நான்கிற்கான தூயதமிழ் பனங்காடைக் குருவியாகும் ( Indian Roller ) . இந்தக்குருவி பால்க்குருவி என்றும் அழைக்கப்படும் . பலர் கூட்டிற்கு வந்து குருவிகளை நலம் விசாரித்தபொழுதிலும் , வாத்தியாரும் குளக்காட்டானுமே மிகச் சரியான பதிலை தந்திருந்தார்கள் . எனவே அவர்கள் இருவருமே சிறப்புப் பரிசை பெறத்தகுதியாகின்றார்கள் . வாத்தியாருக்கு , வாத்தியாருக்கே உரிய குடையையும் , குளக்கட்டானுக்கு இடுப்புப் பட்டியையும் சிறப்புப் பரிசிலாக வழங்குகின்றேன் . இருவருக்கும் வாழ்த்துக்கள் .

வாத்தியார் :

173187_mrp_in_xl_1.jpg

http://media2.iwc.co...mrp_in_xl_1.jpg

குளக்காட்டான்:

deer_tan_collars__44813_zoom.jpg

http://www.greentead..._44813_zoom.jpg

Edited by கோமகன்

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]15 பிளித் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )[/size]

Blyth%27s_Reed_Warbler.jpg

http://en.wikipedia....eed_Warbler.jpg

மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லவும் .

http://en.wikipedia....'s_Reed_Warbler

Edited by கோமகன்

புளினி

  • தொடங்கியவர்

புளினி

மிக்க நன்றிகள் கிசோன் வருகைக்கு . மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றுதான் பார்ப்போமே ?

  • தொடங்கியவர்

பார்க்கலாம் . இன்னும் சிறிது நேரத்தில் எனது முடிவையும் , பரிசில்கள் யாராவது பெற்றிருந்தால் அவர்களது பெயரையும் அறிவிக்கின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப் போகின்றீர்கள் ?

  • தொடங்கியவர்

படம் பதினைந்திற்கான சரியான தூயதமிழ் பிளித் நாணல் கதிர்க்குருவியாகும் ( Blyth's Reed Warbler ) . யாருமே பதில்களை சரிவரச் சொல்லாததால் சிறப்புபரிசு அளிக்கமுடியாமைக்கு வருந்துகின்றேன் .

  • தொடங்கியவர்

[size=5]16 . பூநாரை (Greater Flamingo).[/size]

1280px-Flamingos_Laguna_Colorada.jpg

http://upload.wikime...na_Colorada.jpg

பூநாரை (Greater Flamingo) என்பது நாரைக்(Family PHOENICOPRERUDAE) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர்(Phoenicopterus roseus, P. minor) என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது.

பூநாரைகள் எளிதில் நீந்தக் கூடியன. சற்று ஆழமான நீரில் இடை தேடும்போது இதன் வால் மட்டும் நீருக்கு வெளியேயும், உடல் முழுவது நீருக்குள்ளும் இருக்கும். இந்த முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும். ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்துப் பின்னால் நீட்டிக் கொள்ளும். இவை சபதமிடுவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் வாத்துகள் போன்று ஒலி எழுப்பக்கூடியவை. இரை மேயும்போது கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் தொடர்ச்சியாகப் பிதற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.

ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தித் தனக்கே உரிய விந்தையான மேல் அலகைத் தரையில் படும்படி கவிழ்த்து வைத்து முன்னே இழுத்துக் கொண்டு சேற்றைக் கலக்கிய வண்னம் நடக்கும். இந்நிலையில் இதன் மேல் அலகு கிண்ணம் போல் அமைந்து, சேற்று நீர் அதில் சேகரிக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள நாக்கு இந்நீரினுள் ஒரு மத்துப் போல கடைந்தவாறு, புழு புச்சிகளை அலசும். இதன் சீப்பு போன்ற அலகு ஓரங்களில் உள்ள இடைவெளிகள் வழியே நீர் வெளியேறி பூச்சிகள் அலகிலேயே தங்கிவிடும். இதன் அலகு ஒரு வடிகட்டி போல செயல்படும். சிறு நண்டு, கூனிறால்கள், பூச்சிகள், புழுக்கள், நிலபுழுக்கள், நீர்த்தாவரங்களின் விதைகள், அழுகிப் படிந்த பொருட்கள் இவை பூநாரையின் முக்கிய உணவுப் பொருள்களாகும்.

பூநாரைகள் சேறு படிந்த கடற்கரை மேடுகளிலும், உப்புக் க்லப்புள்ள அகன்ற நீர்த் தேக்கங்களிலும் ஆழமிலாக் குளங்களிலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பூநாரைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இடம்பெயராமல் வாழ்பவை. என்றாலும் சிறிதளவு உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வு செய்கின்றன. இவை சிறு சிறு கூட்டங்களாகவோ பெருங் கும்பல்களாகவோ வாழும். சில கூட்டங்களில் ஆயரத்துக்கு மேற்பட்ட பறவைகளும் இருக்கலாம்.

இந்தியாவில் குஜராத்தின் கச்சு (Rann of Kutch) வளைகுடாப் பகுதியில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. அக்டோபரிலிருந்து மார்ச்சு மாதம் வரை ஏராளமான பறவைகள் இங்கு கூடுகின்றன. அப்பொழுது நீரின் தன்மையும் இவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பறவைகள் இங்கு கூடுகின்றன. இக்காலங்களில் குஞ்சு பொரிக்கும் கூட்டங்களில் இது தான் மிகப் பெரியதாகும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும் இது சுமார் 30 செ.மீ உயரமிருக்கும். இனச்சேர்க்கை முடிந்து, இதன் உச்சியிலுள்ள குழிவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடப்படும். முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். அடைகாக்கும் நாரை இதன்மேல் காலை மடக்கிக் கொண்டு தான் உட்கார்ந்து அடைகாக்கும்.

பூநாரைகள் உண்ணும் கூனிறால் -போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மாறிவரும் இயற்கை சமநிலை காலமாக இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டிருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணியே.

http://ta.wikipedia....org/wiki/பூநாரை

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

செங்கால் நாரை என்று நினைக்கின்றேன் . :)

  • தொடங்கியவர்

செங்கால் நாரை என்று நினைக்கின்றேன் . :)

சரி நினையுங்கோ . மற்றவையும் என்ன நினைக்கின்றார்கள் என்று பார்ப்போம் தமிழரசு .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிளமிங்கோ ........எனும் செங்கால் நாரை r[/size]

Edited by நிலாமதி

செந் நாரை

**** [size=2]பறவையின் பெயரை செங்கால் நாரை என தவறாக அடையாள படுத்தியதால் அதை நீக்கியுள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன். [/size]

Edited by KULAKADDAN

[size=5]செந் நாரை[/size]

  • தொடங்கியவர்

குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த தமிழரசு , வாத்தியார் , நிலாமதியக்கா , குளக்காட்டான் , சுடலை ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் எனது முடிவை அறியத்தருகின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப்போகின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

பூநாரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கால் நாரை :rolleyes:

  • தொடங்கியவர்

படம் பதினாறுக்கான சரியான தூயதமிழ் பூநாரையாகும் (Greater Flamingo ) . பலர் இங்கு " செங்கால் நாரை " என்றே சொன்னார்கள் . ஆனாலும் கிருபன் ஒருவரே சிறப்புப் பரிசுக்குத் தகுதியாகின்றார் . நிலாமதியக்கா ஓரளவு சரியாகச் சொன்னதால் ஆறுதல்பரிசிற்குத் தெரிவாகின்றார் . கிருபனுக்கு மோட்ட சைக்கிளையும் நிலாமதியக்காவிற்கு பட்டுபுடவையும் வழங்கிக் கௌரவிக்கின்றேன் .

கிருபன் ( சிறப்புப் பரிசு ) .

BMWMotorcycleR100S.jpg

http://www.goldenrider.com/wp-content/uploads/2009/12/BMWMotorcycleR100S.jpg

நிலாமதி ( ஆறுதல் பரிசு )

Kanchipuram_silk_sarees_3.jpg

http://www.bridgat.com/index.php?page=images&id=128088&f=Kanchipuram_silk_sarees_1.jpg

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

படம் பதினாறுக்கான சரியான தூயதமிழ் பூநாரையாகும் (Greater Flamingo ) . பலர் இங்கு " செங்கால் நாரை " என்றே சொன்னார்கள் . ஆனாலும் கிருபன் ஒருவரே சிறப்புப் பரிசுக்குத் தகுதியாகின்றார் . நிலாமதியக்கா ஓரளவு சரியாகச் சொன்னதால் ஆறுதல்பரிசிற்குத் தெரிவாகின்றார் . கிருபனுக்கு மோட்ட சைக்கிளையும் நிலாமதியக்காவிற்கு பட்டுபுடவையும் வழங்கிக் கௌரவிக்கின்றேன் .

கிருபன் ( சிறப்புப் பரிசு ) .

BMWMotorcycleR100S.jpg

http://www.goldenrid...rcycleR100S.jpg

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் .

அடுத்தமுறை ஹெல்மெட்டும் லெதர் ஜக்கெற்றும் கிடைத்தால் நேரடியாக அமெரிக்காவுக்குத்தான் போவேன்!

  • தொடங்கியவர்

[size=5]17 கூழைக்கடா ( மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு , Spot-billed Pelican ) .[/size]

pelican.jpg

http://lewebpedagogi.../04/pelican.jpg

சாம்பல் கூழைக்கடா ( Spot-billed Pelican or Grey Pelican - Pelecanus philippensis ) என்பது (பெலிக்கனிடே) கூழைக்கடாக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவையை வேடந்தாங்கல் பகுதியில் மத்தாளி அல்லது மத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கின்றனர் . கூழைக்கடாக்கள் பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பறவை. இதன் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். சிறகுகளின் நீளம் 2.7 மீ. மொத்த உயரம் 127 முதல் 182 செ.மீ. அலகு நீளம் 22 செ.மீ. கூழக்கடாக்கள் நெடுந்தூரம் வலசை செல்லும் இயல்புடையவை.இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.

நம் நாட்டில் புள்ளிவாய்க் கூழைக்கிடா, டால்மில்டன், பெரிய வெள்ளைக் கூழைக்கடா ஆகிய மூவகை கூழைக்கடாக்க காணப்படுகின்றன. ஸ்பாட் பில்டு பெலிக்கன் நீண்ட அலகின் இரு பக்கங்களிலும் கறுப்பு புள்ளிகளையுடையது. கூழைக்கடா இனத்திலேயே சிறியதான பழுப்புக் கூழைக்கடா 125–152 செ.மீ. நீளமும் 4.1–6 கி.கி. எடையும் உடையவை. தொங்குபை இளஞ்சிவப்பாகவோ ஊதா நிறத்திலோ இருக்கும். தால்மேசியன் கூழைக்கடா என்பதே இவ்வினத்தில் பெரியதெனக் கருதப்படுகிறது. இது 15 கிலோ எடை வரை இருக்கும். சிறகுகள் விரிந்த நிலையில் 11.5 அடி அகலம் இருக்கும். மற்ற கூழைக்கிடாக்களை விடவும் பழுப்புக் கூழைக்கிடாக்கள் சிறியவை; தாடையின் மேல்பகுதியில் புள்ளிகள் தென்படும். பளிச்சென்ற நிறமில்லாததும் பழுப்பு நிறமும் இவற்றை மற்ற கூழைக்கிடாக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்

கூடைக்கடா நன்றாக நீந்தக் கூடியது. கூழக்கடாக்கள் விண்ணில் தாவிப் பறக்க தொடங்கும்போது, நீரில் தேவைக்கேற்ற தூரம் ஓடி (தேவை ஏற்படும்போது குறுகிய தூரம் நீரில் ஓடி அல்லது தரையில் ஓடி) விண்ணில் சாய்தளப் பாதையில் ஏறுகிறது. விண்ணில் தன்னை சமநிலைப்படுத்தியதும், எந்தவித தடுமாற்றமுமின்றி, சீரான சிறகடிப்பில், தலையை இரண்டு தோள்பட்டைகளுக்கு இடையில் இழுத்து வைத்து பறக்கும். இவ்வாறு பறந்து செல்லும்போது முதலில் பறந்து செல்லும் பறவை அதிக திறனை பயன்படுத்துவதால் ஏற்படும் களைப்பைப் போக்க, பின்னால் பறக்கும் பறவை முதலில் வந்து தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும். கூழக்கடாக்கள் நீர்நிலைகளை அடையும்போது நேர்கோட்டில் பறந்து வரும். நீரில் இறங்கும்போது வட்டமிட்டு அல்லது ஆர ஒழுங்கில் பறந்து சாய்தளமாக இறங்கி கொஞ்சதூரம் ஓடி சறுக்கி இறங்கும்.

பெரிய உடலும் சிறு கால்களும் கொண்டவை கூழைக்கிடாக்கள்; அவற்றின் சிறப்பம்சம் தொங்கும் பை போன்ற தாடை. மேல் அலகின் நுனி கீழ் நோக்கி வளைந்தது. முன்பக்கம் கரண்டி போல் அகன்றும், தட்டையான மேல் அலகு கீழ்கை மூடி போல் மூடியிருக்கும். இதன் காலின் நான்கு விரல்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருப்பதால் நீரில் எளிதாக நீந்தும். உடலிறகுகள் வெள்ளை. ஆனால், சிறகுகளிலுள்ள நீண்ட இறகுகள் கறுப்புநிறம். வாலும் கறுப்புநிறம். சதுரவடிவம். தலையின் மேல் சிகரம் போல் முடிச்சாக காணப்படும். இதன் அதிக எடை, பரந்த உடல் அமைப்பு பறக்கும் வேகம். இது விண்ணில் விபத்துகளைத் தவிர்த்து பாதுகாப்பாக பறக்க உதவும் காரணிகளாகும்.

கூழைக்கடாக்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளர்ந்த நிலையில் வெண்ணிறமாக இருக்கும் பறவைகள் ஒரு வகை. இவை தரையில் கூடு கட்டி வாழ்கின்றன. ஆத்திரேலிய, தால்மேசிய, வெள்ளைக் கூழைக்கடாக்கள் இவற்றுள் அடங்கும். மற்றொரு வகை வளர்ந்த நிலையில் பழுப்பு நிறம் கொண்டிருக்கும். இவை மரத்தில் கூடு கட்டும். பழுப்புக் கூழைக்கடா, புள்ளிவாய்க் கூழைக்கடா போன்றன இவ்வகையைச் சேர்ந்தன. பெருநாட்டுக் கூழைக்கடா கடற்புறங்களில் உள்ள பாறைகளில் கூடு கட்டி வாழும்.

இதன் முக்கிய உணவு மீன்களாகும். தனியாக அல்லது கூட்டமாக குளங்களில் இரைதேடும். நீருக்கடியில் சுமார் ஒரு அடி ஆழத்தில் நீந்தி செல்லும் மீன்களைப் பார்க்கும் கூர்மையான கண்களையுடையது. நீருக்கடியில் மீன்களைக் கண்டதும் அலகை நீருக்குள் நுழைத்து பை போன்ற அலகில் மீனை முகர்ந்து பிடிக்கிறது. கூழக்கடாவின் நீண்ட உணவு குழலில் இருக்கும் அரைக்கப்பட்ட முழுமையாக செரிக்கப்படாத உணவு மீண்டும் வாய்க்குள் கொண்டுவரப்படுகிறது. இதைக் குஞ்சுகள் அருந்துகின்றன. கூழக்கடாக்களால் மீன் பண்ணைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இவை வேட்டையாடும் மீன்கள் பெரிதும் நோய்வாய்ப்பட்ட மீன்களே ஆகும்.

தெற்காசியாவில் தென் பாகிஸ்தானிலிருந்து இந்தியா உள்பட கிழக்கே இந்தோனேசியா வரை கூழைக்கிடாக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. கூழைக்கடாக்கள் அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன. கூழைக்கடாக்கள் டிசம்பர் மாதத்தில் புளியமரங்கள், பனைமரங்களில் குச்சிகளை வைத்து நடுவில் குழிந்த பெரிய மேடை போன்ற கூட்டைக்கட்டும். கூடுகள் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். கூட்டை பத்து நாட்களில் கட்டி முடித்துவிடும். கூடுகளைக் கட்டுவதற்கு முன்னர் ஆண், பெண் இருபறவைகளும் உடலுறவு கொள்ளும். 2 அல்லது 3 முட்டைகள் இடும். ஆரம்பத்தில் வெள்ளைநிறத்தில் இருக்கும் முட்டைகள் நாளாக நாளாக அழுக்கு நிறத்தில் காணப்படும். ஆண்-பெண் இருபறவைகளுமாக சேர்ந்து 21 நாட்கள் அடைகாக்கும். முட்டை பொரித்து ஒரு வாரத்திற்குப் பிறகு குஞ்சுகளுக்கு உணவூட்டும். குஞ்சுகள் முழு வளர்ச்சியடைய ஓராண்டு காலமாகும். கூழைக்கடாக்கள் குஞ்சுகளை தூக்கவரும் பறவைகளை வெறியுடன் தாக்கும்.

பின்வரும் திருக்குற்றாலக் குறவஞ்சிப் பாடல் கூழைக்கடா தென்தமிழகத்தில் அறியப்பட்டிருந்ததைக் காட்டுகிறது.

" வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே! வருகினும் ஐயே! திரிகூட நாயகர்

வாட்டமில்லாப் பண்ணைப் பாட்டப் புறவெல்லாம் குருகும் நாரையும் அன்னமுந் தாராவும் கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும் (வரு) "

http://ta.wikipedia..../wiki/கூழைக்கடா

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. எங்களுக்குக் பழையகுடை ,பழைய சைக்கிள், இத்தியாதி

கிருபனுக்கு மட்டும் ஏன் விசேட சலுகை

மோட்டச்சைக்கிள் அதுவும் புத்தம் புதிதாக

பாராபட்சம் காட்டகூடாது :D:lol::lol:

  • தொடங்கியவர்

இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. எங்களுக்குக் பழையகுடை ,பழைய சைக்கிள், இத்தியாதி

கிருபனுக்கு மட்டும் ஏன் விசேட சலுகை

மோட்டச்சைக்கிள் அதுவும் புத்தம் புதிதாக

பாராபட்சம் காட்டகூடாது :D:lol::lol:

வாத்தியார் எண்டால் உடனை ஞாபகம் வாறது பழைய றலி சைக்கிளும் , நாஷனல் + வேட்டி , மான் மார்க் குடையும் தான் . அதுதான் ஒரு கெத்தா இருக்குமெண்டு தந்தன் மற்றும்படி உங்களை ( கல்லூரி நண்பனை ) இளக்காரமாய் நினைப்பனே .

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் எண்டால் உடனை ஞாபகம் வாறது பழைய றலி சைக்கிளும் , நாஷனல் + வேட்டி , மான் மார்க் குடையும் தான் . அதுதான் ஒரு கெத்தா இருக்குமெண்டு தந்தன் மற்றும்படி உங்களை ( கல்லூரி நண்பனை ) இளக்காரமாய் நினைப்பனே .

:D:D:D

pelican.jpg

கூழை கடா

  • தொடங்கியவர்

கூழை கடா

உங்கள் வருகைக்கும்n , குருவியை நலமா என்று கேட்டதற்கும் மிக்கநன்றிகள் குளக்காட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இது கூழைக் கடா எனும் ஒருவகை நாரை ....................( தங்கள் அழகான சாறிப் பரிசுக்கு நன்றி )[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.