Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்கள் முடிந்தால் இலங்கைக்கு வரட்டும் – ஐ.தே.க சவால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jon-100x100.jpg

இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு நாமும் பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவருக்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

இவ்வவவாறு அவர்களுடைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

அத்துடன் சார்க்கிற்கான வீசாவின் மூலம் இவர் இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இருப்பினும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே நாடு கடத்தப்பட்டார். இது ஓர் பிழையான அணுகுமுறை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை அரசியல்வாதிகளினுடைய பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அந்நாட்டு மத்திய அரசாங்கத்தின் கடமையாகும். இந்த நடவடிக்கைக்கு இந்திய உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்றம் கண்டனத்தை வெளியிடவேண்டும்.

அத்துடன் அண்மையில் லண்டன் சென்றுள்ள ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்ட விவகாரமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.saritham.com/?p=61720

தமிழகத்து தலைவர்கள் கோமாளிகள் என்ற காலமும், தமிழகத்து மீனவரை பண்டிகளை சுடுவது போல்சுடலாம் என்ற காலமும் போய் தமிழகம் வருவோர் தமிழக அரசுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு வரவேண்டும் என்று ஒரு கோரிக்கை பிறகத்தொடங்கியிருக்கிறது. இதற்கு இலங்கை அரசு மறுதலிப்பு செய்தால் நாரயணங்களும் கிருஸ்ணாகளும்...., எங்கே தமது தானப் பொங்கல் தீவனத்திற்கு போவர்களோ?

அத்துடன் அண்மையில் லண்டன் சென்றுள்ள ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்ட விவகாரமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இதற்கு யார் என்ன பண்ண முடியும். கமலேஸ் ஸ்ர்மா தன்னுடைய மிடுக்கை காட்ட, மகிந்தாவை முன்னுக்குதள்ளி,அவரின் வேட்டியை இழுத்து உரிய வைப்பித்திருக்கிறார். ஏன் மகிந்தாவுக்கு இலங்கையில் அரசியல் ஆலொசகர்கள் யாரும் இல்லையா, கமலேஸ் ஸர்மா இப்படி மகிந்த மீது வலையெறிந்து அவரை பிருத்தானியாவில் மாட்டி துகிலுரிபடுவதை தடுத்திருந்திருக்க? ஸர்மா இதற்கு வகை கூற முன்வரத்தாயா?

Edited by மல்லையூரான்

இந்தியர்கள் முடிந்தால் இலங்கைக்கு வரட்டும் – ஐ.தே.க சவால்

!

சரியான முடிவு ஆம் முடிந்தால் வந்து பாருங்கள் .........நாம் என்ன சிறிலங்கனா ,கொக்காஆஆஅ .............

இயன்றளவு எண்ணெயை ஊற்றுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம் தான் ஐ தே க தன் இனவெறியை அடக்கி வைத்திருப்பது.

சிங்களவனுக்கு இப்படி ஏதாவது சொன்னால்த் தான் அடுத்த முறை

தேர்தலில் 50 பேராவது வெல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனை சுட்டுக் கொல்லும்...

போர்ப்பயிற்சி செய்வதற்கு, இந்தியா வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஐ தே க வுடனும் மகிந்தவுடனும் கூட்டுச் சேர்ந்திருக்கும்

தமிழ் அரசியல்வாதிகளை அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும்

இந்தியாவிற்கு வரும் பொது நாடு கடத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிப்போட்டு நேர்த்திகடன் செய்ய இந்தியாவுக்குதானே போகவேண்டும் மறந்து போட்டார்களா ஐக்கிய தேசிய கட்சியினர் சரி அதைத்தான் விடுவோம் பருப்புக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் :icon_mrgreen:

முதலில் ஐ தே க வுடனும் மகிந்தவுடனும் கூட்டுச் சேர்ந்திருக்கும்

தமிழ் அரசியல்வாதிகளை அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும்

இந்தியாவிற்கு வரும் பொது நாடு கடத்த வேண்டும்.

அப்படிஎன்றால் முதலில் கடத்தப்படபோகின்றவர் தொண்டமானாகத்தான் இருக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவெல்லா ஈழத்தமிழனை வைச்சுத்தான் எல்லா அரசியல்வாதியளும் அரசியல் பண்ணுறாங்கள்.....எங்கடை ஒருசில ஆக்கள் புலியை நக்கலடிச்சு...நக்கலடிச்சு சீவியம் நடத்தேல்லையே....அது மாதிரித்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீது மகிந்தவிற்கு இப்போது இருக்கும் ஆத்திரத்திற்குத்

தொண்டைமானை இலங்கையிலிருந்து நாடு கடத்தினாலும்

ஆச்சரியப்படுவதற்கில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.