Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை-நடவடிக்கை எடுக்க இலங்கையர் ஒன்றியம்தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ltte%20flag_CI.jpg

பிரித்தானிய சட்டத்திட்டங்களை மீறி, லண்டனில் விடுதலைப்புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பான இலங்கையர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நிலையில், புலிகளின் கொடியை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை ஆகிய இந்த சட்டத்தை மீறி புலிகளின் கொடியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலிகக் கொடியை ஏந்தியிருந்தவர்கள் தமது முகங்களை மூடிக் கொண்டிருந்தனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹித்ரோ விமான நிலையத்தின் 4 இலக்க கட்டடத்தில், 100க்கும் மேற்பட்ட புலிக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்தில் உள்ள சிங்கள அமைப்பின் அதிகாரி, தாம் இது சம்பந்தமாக சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரித்தானிய கொடியுடன் புலிகளின் கொடியை ஏந்தியமை சட்டவிரோதமானது எனவும் இதன் மூலம் பிரித்தானியா பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாக காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

அதன்ன இலன்கையர் அமைப்பு அப்படி ஒரு நாடோ, இனமோ இல்லையே, சிங்கள தேசம், தமிழ் தேசம். அவ்வளவுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன்ன இலன்கையர் அமைப்பு அப்படி ஒரு நாடோ, இனமோ இல்லையே, சிங்கள தேசம், தமிழ் தேசம். அவ்வளவுதான்

0.jpg

இவரின் அமைப்பாக இருக்கலாம் :D:icon_mrgreen:

லண்டனில் புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை-நடவடிக்கை எடுக்க இலங்கையர் ஒன்றியம்தீர்மானம்

நினைக்க பாவமா இருக்கு! :rolleyes:^_^

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நடவடிக்கை எடுப்பதும் எங்களுக்கு ஒருவிதத்தில் நன்மையே.

சிங்களம் மூக்குடைபடுவது அப்போது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு கொடி, எமக்கு அடையாளம் என்பதை சாதூரியமாக வெளிப்படுத்தும் எம் திறமையில் தான் தங்கியுள்ளது. நாம் கொள்கின்ற பயம் தான் எமது தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆரம்பியுங்கோ

பொல்லைக்கொடுத்து அடிவாங்கியதாகத்தான் முடியப்போகுது

ஏற்கனவே இந்த தடை சரியில்லை என சர்வதேசம் சிந்திக்கத்தொடங்கிவிட்டது.

நீங்களும் கிள்ளி விட்டீர்கள் என்றால் எமக்கு வெளிச்சம் கிடைத்து புண்ணியம் கிடைக்கும்

இந்த அமைப்பின் அம்மாக்களுக்கு சிங்களத்தின் பதவிகளும் பறி போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.

SHORT HISTORY ABOUT OUR NATIONAL EELAM FLAG: National flag is essential to any nation that struggle for independence. It symbolizes national integrity, unity and sovereignty. It also characterizes patriotism of a nation. And it is been the grass root of political freedom. Tamil people of Eelam, who struggle for freedom, do have a national flag. On the second national heroes day(27.11.1990), the Tiger flag has been adopted as national flag Tamil Eelam.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ஒவ்வொரு விடயத்தையும் ஆழமாகக் கையில் எடுக்கின்றது. நாங்கள் வீராப்பு கதைத்துக் கொண்டிருக்கின்றோம்...

எமது இனத்திற்கு உள்ள கொடியை சிங்களம் கையில் விவாதப்பொருளாக எடுத்துக்கொண்டே வருகின்றது. இதன் ஊடாக எமது தாயக மக்களின் இன்றைய நிலைமையும் இறுதி யுத்த போர்க்குற்றங்களும் தொடர்ந்து தலையங்களை இடம்பிடிக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன.

சிங்களம் கொடியை வைத்து பிரச்சினையை ஆரம்பிக்கும் என்று முதலே தெரியும். ஆனால் நாமும் சளைக்காமல் அவர்களுடன் இந்த விடயத்தில் போராட வேண்டும்.

மகிந்த இனி என்ன சொன்னாலும் எம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் எம் பிரச்சினை தெரியும். எனவே அவர்கள் விரும்பினால் கூட அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. இதுவரை புலிக்கொடி பிடிப்பது பிழை என்று நாம் தான் கூறிக்கொண்டிருக்கிறோமே தவிர எந்த நாட்டு அரசாங்கமும் பேரணிகளில் புலிக்கொடி பிடிக்க வேண்டாம் என்று கேட்கவில்லை. மீறி கேட்டாலும் இக்கொடிகளில் ஆயுத படம் அகற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற வாசகமும் அகற்றப்பட்டிருப்பதால் இது மக்களுக்கான கொடி என்று நாமும் சந்தர்ப்பத்திற்கேற்ப அவர்களுக்கு பதில் கூறலாம்.

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் இருக்கும் சிலரே தேசியக்கொடி விடயத்தில் சுயதணிக்கை செய்கின்றனர், மற்றவர்களையும் குழப்பி வருகின்றார்கள் .

நாம் வாழும் இந்த நாடுகள் ஜனாயக விழுமியங்களை மதிக்கும் நாடுகள் ஆகவே ஜனாயக ரீதியிலான போராட்டங்களில் எமது தேசியக்கொடி பிடிப்பது குற்றமாகாது ,

மேலதிகமாக யாரவது நீதி மன்றம் சென்றாலும் தமிழ் தேசியக்கொடியினை தடை செய்ய முடியாது ஏற்க்கனவே சிங்களம் அதற்க்கு உதவும் குழுக்களும் இதற்க்கான வேலைகளை செய்யாது இருந்திருப்பார்களா ? செய்தும் தடை விதிக்க முடியவில்லை இப்போது மீண்டும் சும்மா வெருட்ட பார்க்கின்றார்கள் இதற்க்கு நாம் அடிபணியக்கூடாது .

ஏப்பை பிடிக்கிறவன் நம்மாளானால் அடிப்பந்தி என்ன நுணிப்பந்தி என்ன ? உள்ளே போட நினைத்த காலத்தில் புலிக்கொடி பிடிக்காமலேதான் பலரை உள்ளே போடுவித்தவர்கள். இனி மகிந்த, போர்குற்றவாளி இங்கிலாந்து வரக்காரணமான ஸர்மா போன்றவர்கள் மீதி வழக்குகளைப்போட தமிழ் அமைப்புகள் சட்ட அறிஞர்களை நாட வேண்டும்.

கொடி புலிக்கொடியாகவும் இருக்கலாம்; இல்லை சிங்ககொடியாகவும் இருக்கலாம். பிடிதவர்கள் புலம் பெயர் தமிழராகவும் இருக்கலாம். இல்லை Hilton Hotelயை குத்தகைக்கு எடுத்தவர்களாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பிரித்தானியர்கள் சீனாகம்யூனிச தொழு நோய்கள் அங்கு பரவ இடம் கொடுக்க மாட்டார்கள். அங்கே இரண்டாம் எலிசபெத் மகாராணி அரியணையில் இருக்க, அவர்கள் ராசபக்சாகூட்டம் பிருத்தானியாவில் துட்ட கைமுனு ராஜ்யம் அமைத்து முடிசூட இடம் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் இங்கிலந்து போய் லண்டன் ZOOவ்லிருக்கும் புலிகளை சுடவேண்டும் என்று வழக்கு தொடர முடியாது.

எல்லாருக்கும் எல்லாம் விளங்கும். "Lies Agreed Upon" என்ற மூவியை இலங்கை எடுத்த போது "நாங்கள் உந்த பொய்களுகெல்லாம் ஒத்து போவதாக வாக்குறுதி தரவில்லையே" என்று மேற்கு நாடுகள் கூறிவிட்டன.

Edited by மல்லையூரான்

எம்முடைய கடமைகளை நாம் செவ்வன செய்து முடிப்போம்.அவன் தனது கடமையை செவ்வன செய்துகொண்டிருக்கிறான்.ஆதலால் தான் அது எம்மை வந்தடைகிறது.இது யதார்தம்.எம்முடையபாதையை நெரிசலாக்கி பயணிப்போம்.பெரிய தூரங்களையும் கல் முள் எல்லாம் கடந்து வந்துவிட்டோம்.தற்போது ஓய்வெடுக்கவோ நியாயம் சரி பிழை கதைக்கவோ கூடாது.எமது இலக்கை அடைந்தபிந்தான் மிகுதி..........

இம்முறை பலர் முன்னிலையில் மகிந்தவுக்கு ஏற்பட்ட அவமானம் தான் இப்படி அவர்கள் கொதிப்படைவதற்கு காரணம். எனவே அவர்கள் இப்படி தான் ஏதாவது சொல்லி குமுறுவார்கள்.

எந்த கொடி பிடிப்பது என்பது மக்கள் விருப்பம். அதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் அமைப்பு, ஆயுத போராட்டம், புலிகளுக்காக பணம் சேகரித்தல் போன்றவற்றுக்கு தடை செய்வது வேறு. ஆனால் கொடி என்பது ஆயுதம் அல்ல. எனவே அதை நாம் பிடிப்பதற்கு இலகுவில் தடை விதிக்க மாட்டார்கள்.

அத்துடன் தற்போதைய எம் நிலையும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெரியும்.

இதையும் கொஞ்சம் வாசியுங்கள். வேறு பக்கத்தால் எமக்கெதிராக இன்னொரு பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

http://www.yarl.com/...howtopic=103570

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.