Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரேக்கத்தில் தேர்தல்: யூரோ வலயத்தின் எதிர்காலம்?

Featured Replies

[size=5]கிரேக்கத்தில் தேர்தல்: யூரோ வலயத்தின் எதிர்காலம்?[/size]

[size=4]யூரோ வலயத்தில் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான தேர்தலொன்றில் கிரேக்க மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.[/size]

[size=4]கிரேக்கத்தின் நிதிநெருக்கடி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிக இறுக்கமான சிக்கன நடவடிக்கைகளை வற்புறுத்தும் 'கடன்மீட்சிக்கான உடன்படிக்கையை' ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது அதனை நிராகரித்துவிட்டு சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களை ஊக்குவிப்பதா என்ற பிரச்சாரங்களை முன்வைத்து வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியும் இடதுசாரிகளின் கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதுகின்றன.[/size]

[size=3][size=4]தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புகள் இரண்டு வாரங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளன.[/size][/size]

[size=3][size=4]ஆனால் உத்தியோகபூர்வமற்ற கணிப்புகளின்படி, இரண்டு அணிகளுக்குமிடையில் மிக நெருக்கமான போட்டி இருக்கும் என்று கூறப்படுகின்றது.[/size][/size]

[size=3][size=4]கிரேக்க மக்கள் கடன்மீட்சித் திட்டத்தை நிராகரிப்பார்களேயானால் அந்நாடு யூரோ வலயத்திலிருந்து விலக நேரிடலாம்.[/size][/size]

[size=3][size=4]ஆறு வாரகாலத்தில் கிரேக்கம் சந்தித்துள்ள இரண்டாவது பொதுத்தேர்தல் இது. ஏற்கனவே கடந்த மே 6ம் திகதி நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் எதனையும் எட்ட முடியாமல்போனது.[/size][/size]

[size=4]உலகம் அவதானிக்கிறது[/size]

[size=3][size=4]கிரேக்கத்தில் இன்று நடக்கின்ற தேர்தலை முழு உலகமும் அவதானித்துக்கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]கிரேக்கம் யூரோ வலயத்திலிருந்து விலகினால், அவ்வாறான நிலைமை மற்ற யூரோ வலய நாடுகளுக்கும் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் உலகப் பொருளாதாரமும் ஆட்டங்காணக்கூடிய நெருக்கடி ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு கடன்மீட்சி உதவித்திட்டங்கள் மூலம் நிர்ப்பந்திக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கம் எதிர்நோக்கியிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]2010இல் ஆரம்ப கட்டமாக வழங்கப்பட்ட 110 பில்லியன் யூரோ உதவித்திட்டத்துக்குப் பின்னர் கடந்த ஆண்டிலும் 130 பில்லியன் யூரோ பெறுமதியான உதவித்திட்டம் கிரேக்கத்துக்கு வழங்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் அன்டோனிஸ் சமராஸ் ஆரம்பத்தில்,2010இல், கடன்மீட்சித் திட்டத்தை எதிர்த்த போதிலும் இரண்டாவது கட்ட உதவித்திட்டத்தின் பின்னர் அதனை ஆதரித்தார்.[/size][/size]

[size=3][size=4]இடதுசாரிகள் கூட்டணியின் தலைவர் அலெக்ஷிஸ் சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள உதவித்திட்ட நிபந்தனைகளுக்கு இணங்கமுடியாது என்று வாதிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3]http://www.bbc.co.uk...eelection.shtml[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]அமேரிக்க சனாதிபதி தேர்தல் இந்த கார்த்திகை மாதம் முடியும்வரை பெரிய தாக்கங்கள் ஏற்படமாட்டா என நம்பப்படுகின்றது. [/size]

[size=1]

[size=4]அதன்பின்னர் பல சுமைகளையும் தாங்கும் ஜெர்மனியின் கையில்தான் உள்ளது, யூரோ நிலைக்குமா இல்லை நிலைக்காதா என்பது. [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]கிரேக்க மக்கள் ஐரோப்பிய யூனியனின் பண உதவியை ஆதரிக்கும் கட்சியை கிரேக்க மக்கள் தேர்ந்து எடுத்துள்ளனர்,[/size][size=1]

[size=4]அவர்களும் மற்றைய கட்சிகளை தம்முடன் இணைந்து செயற்பட அழைத்துள்ளனர்.[/size][/size][size=1]

[size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போக விரும்பிய கட்சிக்கு இளையவர்கள் அதிகமாக ஆதரவு கொடுத்துள்ளனர். [/size][/size]

[size=1]

http://www.theglobeandmail.com/news/world/greek-pro-bailout-party-proposes-coalition-after-election-win/article4299237/[/size]

  • தொடங்கியவர்

[size=4]கிரேக்க பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி[/size]

[size=3][size=4]சர்வதேச மீட்பு உதவி மற்றும் செலவுக் குறைப்பை தொடர்தல் ஆகியவற்றுக்கு ஆதரவான மைய வலதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கிரேக்க நாடாளுமன்றத் தேர்தலில் சொற்ப பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.[/size][/size]

[size=3][size=4]கிரேக்கம் யூரோ வலயத்தில் தொடரவேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் தலைவரான அந்தோனிஸ் சமராஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையில் கிரேக்கத்தில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டியது மிகவும் அவசியம் என்று கிரேக்க அதிபரான கார்லோஸ் பப்போலியாஸ் கூறியுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]அதேவேளை, கிரேக்கத்துக்கான மீட்பு உதவிக்கான நிபந்தனைகளை சிறிது தளர்த்துவதற்கான சமிக்ஞைகள் ஜேர்மனியில் இருந்து வந்துள்ளன.[/size][/size]

[size=3]http://www.bbc.co.uk...eeknewele.shtml[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சீர்திருத்தம் வேண்டாம்.. காசைமட்டும் குடு என்கிறார்களா கிரேக்க மக்கள்? :D

  • தொடங்கியவர்

[size=4]கிரேக்க நாடு யூரோ வலயத்தை விட்டு தானாக சென்றால் அது எல்லோருக்கும் நல்லது, கிரேக்க மக்களை தவிர. [/size]

[size=4]இது அந்த வரி செலுத்தாமல் வாழும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் தாங்களாகவே போகமாட்டார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கிரேக்க நாடு யூரோ வலயத்தை விட்டு தானாக சென்றால் அது எல்லோருக்கும் நல்லது, கிரேக்க மக்களை தவிர. [/size]

[size=4]இது அந்த வரி செலுத்தாமல் வாழும் மக்களுக்கு நன்றாகவே தெரியும். [/size]

[size=4]அதனால் அவர்கள் தாங்களாகவே போகமாட்டார்கள்.[/size]

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்கம் யூரோ வலயத்தை விட்டு வெளியேறினால் அது ஐரோப்பாவின்

பல நாடுகளுக்குச் சிக்கலை உருவாக்கும்.

அதையடுத்து இத்தாலி போர்த்துக்கல் ஸ்பெயின் எனப் பல நாடுகளினால்

தலைவலி அதிகரிக்கும்.

ஐரோப்பாவும் இலகுவில் கிரேக்கத்தை வெளியேற விடாது.

முக்கியமாக ஜேர்மனி கிரேக்கம் யூரோ வலயத்தில் இருப்பதற்க்காக மிகுந்த

பிரயத்தனம் செய்கின்றது.

அதேவேளை கிரேக்கத்தின் சகல கடன்களையும் தன் தலைமேற் சுமக்கவும் தயாராக இல்லை.

ஆனால் பல உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஐரோப்ப சார்ந்த சமொராயின் கட்சியும் பசுமைக் கட்சியும் கிரேக்கத்தில் ஆட்சி அமைத்தால் கிரேக்கத்தின் எதிர்காலத்தில் குறுகிய கால அடிப்படையில் இல்லாமல் நீண்டகால நோக்கில் ஒளி வீசலாம்.

  • தொடங்கியவர்

பலரின் கணக்கின் படி ஜெர்மனியும் ஐரோப்பிய மத்திய வங்கியும் (ECB) இணைந்து நிரந்த காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய காலம் வந்துள்ளது. ஜெர்மனி நாட்டு பொருளாதாரம் சிக்கலுக்குள் உள்ளாகும் பொழுது சடுதியாக யூரோ இல்லாமல் போகும்.

  • தொடங்கியவர்

[size=5]புதிய கூட்டணியால் கிரேக்கத்தைக் காப்பாற்ற முடியாது[/size]

[size=2][size=4]கிரேக்கத்தில் நேற்று நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகளை ஏற்கும் கட்சியினர் சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். [/size][size=4]ஆனால் இவர்களால் [/size][/size]

[size=2][size=4]இன்றுள்ள கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடிக்கு யாதொரு தீர்வும் காண முடியாதென கொன்ஸ்சவேட்டிவ் கட்சி தீர்க்கமாக தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]தேர்தலில் வெற்றி பெற்ற புதிய டெமக்கிரட்டி கட்சியின் தலைவர் அன்ரோனிஸ் சாம்ராசை மூன்று தினங்களில் ஆட்சி அமைக்கும்படி நாட்டின் அதிபர் கார்லோஸ் கேட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]தேர்தலில் வெற்றி பெற்ற புதிய ஜனநாயகக் கட்சியும், சோசலிஸ்ற் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் இரண்டினதும் நிபந்தனைகளை ஏற்று செயற்பட முன் வந்துள்ளன.[/size][size=4]ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் நாயும், பூனையும் போலவே ஒற்றுமையின்றி நடந்துள்ளன.[/size][/size]

[size=2][size=4]ஆகவே இப்போது இருவரும் புதிய தேனிலவை கண்டாலும் நீண்ட நாளைக்கு வண்டியோட்ட முடியாது என்றும் கொன்ஸ்சவேட்டிவ் தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]மேலும் யூரோ நாணயத்தில் இருந்து கிரேக்கம் வெளியேறக்கூடிய அதிரடி நிலையை இந்த வெற்றியானது சில காலம் பின் போடலாம் ஆனால் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்த இயலாது என்றும் தெரிவித்தார்கள். [/size][size=4]ஆனால் புதிய கூட்டணி நாளை ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயாராகிவிடுமென்று சற்று முன் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]யூரோ நாணயத்தை வீசிவிட்டு வெற்றிடத்தில் இருந்து ஆரம்பிக்காமல் ஏதோ ஒரு பற்றுக்கோலை பற்றி முயற்சிக்க புதிய கூட்டணி விரும்புகிறது.[/size][size=4]130 பில்லியன் யூரோ உதவியை பெற்றுக்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனையை ஏற்று கிரேக்கத்தைக் காப்பாற்ற புதிய கூட்டணி முயலும்.[/size][/size]

[size=2][size=4]300 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றில் புதிய கூட்டணி 162 ஆசனங்களை பெற்றுள்ளது.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=108362

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]இத்தாலி : ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். ஆனால் ஐரோப்பாவில் பொருட்களை செய்தலில் ஜெர்மனிக்கு அடுத்ததாக உள்ளது.[/size]

[size=4]உலகில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்த கடன் கூடிய நாடாயும் உள்ளது. இங்கே தான் பிரச்சனை. தனது உற்பத்தி பொருட்களை யூரோ வலயத்திற்குள் ஏற்றுமதி குறையத்தொடங்கியுள்ளது என்கிறது இத்தாலி. [/size]

[size=4]சரிந்து வரும் ஐரோப்பிய பொருளாதாரத்தை காப்பாற்றி வரும் நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் இத்தாலி உதவி கேட்கும் பொழுது நிச்சயம் யூரோ வலயம் உடையும்.[/size]

[size=4]அப்படி உடையும் பொழுது யூரோ வலயம் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து அமரிக்காவும் இதர நாடுகளும் தம்மை பாதுகாக்க விரும்பும். இது மீண்டும் ஒரு உலக பொருளாதார நெருக்கடியை உருவாக்கும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி கனக்க முக்குது....எங்கைபோய் முடியப்போகுதோ தெரியேல்லை :D

Poll: Obama, Romney even amid economic worries

தொடர்ந்த பங்கு சந்தை சரிவு ஒபாமாவின் தேர்தலை கேள்விக்குறியாக்கிவிட்டது. இன்று மட்டும் டவ் யோன் 250 புள்ளிகள் சரிந்திருக்கிறது. இனி பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் மனநிலை திருந்துமா என்ற கேள்வி எழத்தொடங்கிவிட்டது. ரோமினி பொருளாதாரத்தை திருத்தக்கூடியவர் என்று மக்கள் நம்பாவிட்டாலும் ஆட்சியிலிருப்பவர் மீது தமது பிரச்சனைகளுக்கான கோபத்தை காட்டுவது அமெரிக்க மக்களின் வழக்கம். கடைசி நேரத்தில் ரோமினியால் திறமையான பிரசாரம் செய்ய முடியாவிட்டாலும் பொருளாதார நிலையை சாடையாக மக்களுக்கு நினைவூட்டினால் அது ஒபாமாவுக்கு பெரிய ஆபத்தாக முடியும்.

இப்போது பொருளாதார நிபுணர்கள் ஐரோப்பிய பொருளாதாரத்தை பிழை சாட்டுகிறார்கள். புஸ்சின் தொடர் சண்டை நடவடிக்கைகளும் வேறும் பணத்தில் லாபமீட்டும் பொருளாதாரக் கொள்கைகளாலும்தான் பிரச்சனையே உருவானது. ஐரோப்பிய அமெரிக்க வங்கிகள் தலை குத்துக்கரணம் அடித்து விழுந்தது அமெரிக்காவின் கொள்கைகளால். தேர்தலில் ஒபாமா பழைய கதையை இழுக்க முடியாது. ஊரோடு ஒத்தூதி தானும் ஐரோப்பாமீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்க வேண்டும்.

Besides weak job growth and still high unemployment, Obama is at the mercy of European countries struggling with a debt crisis that has already sent ripples across the Atlantic.

http://www.rr.com/po...conomic_worries

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.