Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றொனியன்

Featured Replies

63409483149852828514522.jpg

எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்டேன் . வந்தவளிடம் எடுத்த எடுப்பிலேயே ,

" றொனியன் எங்கை "?

" உனக்குத் தெரியாதே ? அம்மா போனகையோட வடிவாய் சாப்பிடுறேல . அங்கை கக்கூசுக்குப் பக்கத்திலை ஆள் படுத்திருக்கும் , நீ பாக்கேலையே ? சும்மா நேரம் எண்டால் இப்ப நீ இங்கை உள்ளடேலாது" .

நான் அண்ணையின் மகனுடன் றொனியனைப் பார்க்கப் போனேன் . அங்கே எலும்பும் தோலுமாகப் றொனியன் படுத்திருந்தான் . நான் அருகே போய் அவனுடைய தலையைத் தடவினேன் . அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான் , அவனுடைய வாய் திறந்து இருந்து . அதனால் துர்நாற்ரத்துடன் வீணீர் வடிந்து கொண்டிருந்தது . அவனது நிலமையை என்னால் துல்லியமாக உணர முடிந்தது . அண்ணையின் மகன் தான் இவனைக் குட்டியாகக் கொண்டு வந்தான் . நான் அவனிடம் ,


" ஏன்ராப்பா இவனை டொக்ரரிட்டைக் காட்டேல "?

" நான் குட்டி மாமீட்டைச் சொன்னான் சித்தப்பா , அவாக்கு நேரமில்லையாம்".
அவனுடைய முகம் சோகத்தில் மூழ்கியது . எனக்குத் தங்கைச்சியில் கோபம் கோபமாக வந்தது . என்ன மனிதர்கள் இவர்கள் ? உயிர்கள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகப்போய்விட்டதோ ?


" சரி நீ ஒண்டுக்கும் யோசிக்காதை . நாளைக்கு இவனை டொக்ரரிட்டைக் கூட்டிக் கொண்டு போவம் .

அவனின் முகத்தில் மகிழச்சியின் ரேகை ஓடியது. இந்த நிலையில் இவனை தூக்கிக் கொண்டு டொக்ரரிடம் போகமுடியாது , அவரைத்தான் இங்கு வரப்பண்ணவேணும் என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுளைந்தேன். தங்கைச்சியின் மகள் மாமா என்றவாறே ஓடியந்து காலைக் கட்டிக்கொண்டாள். அவளைத் தூக்கிக் கொண்டேன் . நேரம் 8 மணியைக் கடந்திருந்தது . நான் முற்ரத்தில் மாமரத்துக்குக் கீழ் கதிரையைப் போட்டு இருந்தேன் . அண்ணை அண்ணி பிள்ளைகள் என்னைச் சுற்ரிவர இருந்தார்கள் . அண்ணை பழைய கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார் . நானோ சுவாரசியமில்லாமல் " உம் " கொட்டிக்கொண்டிருந்தேன் . என் மனமோ றொனியனைச் சுற்ரிவட்டமிட்டது .

" எங்கடை பாலசந்திரன் மச்சான் இப்பவும் இருபாலையிலை கிளினிக் வச்சிருக்கிறாரோ " ?

" ஏன் கேட்டனி "?


" இல்லை , இவன் றொனியனை ஒருக்கால் காட்டவேணும் . ஏன் அண்ணை இதுகளை நீ எல்லாம் பாக்கிறேலையே ? நீ ஒரு பெரிய எழுத்தாளன் , இயற்கை ஆர்வலன் , உனக்குமே எல்லாம் செத்துப்போச்சுது ? "

என்று சாட்டை அடியாக வார்த்தையைத் துப்பினேன் . அண்ணை என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் .

" உனக்கு இங்கதையான் நிலமை விளங்குதில்லை . என்ரை வேலை அப்பிடி , விதானையார் எண்டால் சும்மாவே ? எனக்கு ஒண்டில்லை 3 அதிகாரங்களிட்டை வேலை செய்ய வேண்டிக்கிடக்கு . எனக்கு 24 மணித்தியாலமும் காணுதில்லை ".

" அப்ப அண்ணை , நானும் என்ர மனிசியும் பிரான்ஸ்சில என்ன களவுக்கே போறம் " .
நானும் பதிலுக்கு எகிறினேன் . சாப்பாட்டை முடித்து விட்டு வந்த தங்கைச்சி முகத்தில் கலவரத்துடன் , என்ன உங்கை ரெண்டுபேரும் புடுங்குப்பாடு ? , சாப்பிட வாங்கோ என்று வாய்க்கால் வெட்டினாள் . நான் சிரித்தபடி வா அண்ணை சாப்பிடுவம் என்றபடியே , பிள்ளைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனேன் . முன்பு என்றால் அப்பாவுடன் நாங்கள் ஆறு பேரும் சாப்பிடும் பொழுது , சாப்பாட்டு மேசை எவ்வளவு கலகலப்பாக இருக்கும் ? ஆனால் இப்பொழுது சிரிப்பைக் கடன் கேட்கின்றோம் . பாழாய்ப்போன யுத்தமும் ஒவ்வொருவர் தனி வாழ்கை முறைகளை புரட்டியடித்ததைக் கண்கூடாகவே கண்டேன் . வீடியோ பிளேயரில் உள்ளது போல் றீப்பிளே பட்டன் இருந்தால் ஒருவேளை வாழ்க்கை நல்ல சுவாரசியமாக இருந்திருக்குமோ ?


நான் விரைவாக சாப்பாடை முடித்து விட்டு , சிகரட்டுடன் தனிமையை நாடினேன் . அந்த இருட்டில் சிகரட்டின் முனையே வெளிச்சமாக இருந்தது . இருட்டில் வௌவால்கள் கூடிக் கும்மாளமிட்டன . கோப்பாயும் பாழடைந்து விட்டதோ ? நாங்கள் எல்லோருமே படுத்து விட்டோம் . வெக்கையைப் போக்க மின்வசிறி பெரும் சத்தத்துடன் காற்ரை வாரியடித்தது . மனைவி படுத்தவேகத்திலேயே என்னை அணைத்தவறு உறங்கிப்போனா . எனக்கு மட்டும் கடவுள் சயனசுகத்தைத் தருவதில் கஞ்சத்தனம் காட்டகின்றார் . மனைவியின் கையை மெதுவாக எடுத்து வைத்துவிட்டு , கட்டிலில் எழுந்து இருந்து அம்மாவின் படத்தை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன் . நேரம் 12 மணயைக் கடந்து விட்டிருந்தது . திடீரென முழித்த மனைவி ,

" ஏன் நித்திரை கொள்ளேல "?

" வருகுதில்லை".

" ஏன் "?

நான் கண்ண இறுக்க மூடிக்கொண்டு வராத நித்திரையை வரச்செய்யத் தாக்குதல் நடத்தினேன் . அதிகாலை பிள்ளையார் கோயில் மணியோசை என்னைக் கலைத்தது . ஒருவரும் எழுந்திருக்கவில்லை , ஞாயிற்ருக் கிழமையின் சோம்பேறித்தனம் அவர்களுக்கு . நேரம் ஆறுமணியைத் தொட்டுக்கொண்டிருந்தது . மனைவி எழுந்து தனக்கும் எனக்கும் கோப்பி போட்டுக்கொண்டிருந்தா . நான் கையில் உமிக்கரியுடன் றொனியனைப் பர்க்கப் போனேன் . அவனது நிலை மோசமாக இருந்தது அவனால் எழும்பிக்கூட நிற்கமுடியவல்லை . என்னை அவன் பரிதாபமாகப் பார்த்தான் . எனக்கு அம்மா என்னைப் பார்ப்பது போல் இருந்தது . நான் அவசரமாகக் கரியால் பல்லை மினுக்கிக் , கிணற்ரில் இருந்து வாழியால் அள்ளி அள்ளிக் குளித்தேன் . சூரியன் மெதுவாக ஏறத் தடங்கி வெளிச்சம் வரத்தொடங்கியது . நான் உடுப்புகளை மாற்ரிக் கொண்டு வந்ததும் மனைவி கோப்பியை நீட்டினா . கோப்பியை வாங்கியவாறே முன் கேற்ருக்கு நகர்ந்தேன் . மனவியும் தனது கோப்பியுடன் என்னுடன் வந்தா .


" இண்டைக்கு றொனியனுக்கு ஒரு முடிவு கட்டவேணும்ப்பா".

" ஏன் "?

" நீங்கள் அவனைப் பாத்தனிங்கள் தானே , அவனைப் பாக்க எனக்கு அம்மான்ர ஞாபகம் வருது ".

" இப்ப என்ன செய்யப்போறியள் ?

பாலச்சந்திரன் மச்சானைக் கூப்பிட்டுக் காட்டுவம் . நீங்களும் அவரைப் பாக்கேலத்தானே . சரி போட்டுக் கெதீல வாங்கோ .

ஒழுங்கையால் மாடுகளும் , ஆடுகளும் மேச்சலுக்கு வரிசை கட்டிப் போய்க்கொண்டிருந்தன . பிறந்த கன்றுக் குட்டிகள் தாய் மாட்டுக்குப் பின்னால் பால்குடித்த வாயால் நுரை தள்ளத் தளிர் நடை போட்டன . நான் குடித்த கோப்பையை மனைவியிடம் கொடுத்து விட்டு , மச்சானைப் பார்க்கப் பெறாமகனின் சைக்கிளில் வெளிக்கிட்டேன் . நான் ஒருவாறு தட்டத்தடுமாறி சைக்கிளில் ஏறி உழக்கினேன் . கனகாலம் சைக்கிள் ஒடாததால் சைக்கிள் தண்ணி அடித்தமாதிரி ஓடியது . நான் றோட்டிற்கு வந்ததும் சைக்கிள் பலன்ஸ்சைச் சரியாக எடுத்தேன் .

நெரிசல் குறைந்த றோட்டில் சைக்கிளை எட்டி மிதித்தேன் . எனக்குப் பாலச்சந்திரன் மச்சானில் சின்னவயதில் இருந்தே ஒரு பிடிப்பு . இலங்கையின் மிகச் சிறந்த மிருகவைத்தியர் , பல பதவிகள் அவரது திறமையால் தேடிவந்தன . பல மகாநாடுகளுக்கு அரசசார்பில் ஐரோப்பா முழுவதும் வருவார் . ஒரு முறை 90 களில் பிரான்சில் என்னைச் சந்தித்தார் . இறுதியாக கால்நடைவளர்புப் பணிப்பாளராக இருந்தார் கோப்பாயை விட்டு நீங்காதவர்களில் அவரும் ஒருவர் . அவரை எந்த இடப்பெயர்வும் பாதிக்கவில்லை . ஓய்வெடுக்கும் வரை தனது நாட்டுமக்களுக்காகச் சேவையாற்ரிய ஒரு உதாரணமகன் . நான் அவரது வீட்டு வாசலில் சைக்கிளைக் கொண்டுபோய் நிப்பாட்டினேன். என்னைக் கண்டதும் வாய்கொள்ளாச் சிரிப்புடன் ,

" வாடாப்பா எப்ப வந்தனி "?

"ஒருகிழமை மச்சான் ".

"எனக்கு ஒரு உதவி உங்களாலை வேணும் ".

" எங்கட றொனியனுக்குச் சுகமில்லை . ஒருக்கா வீட்டை வங்கோவன் மச்சான் . என்ர மனிசியும் உங்களைப் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறா".

" ஏன் அவனுக்கு என்ன நடந்தது ? இரு வெளிக்கிட்டுக் கொண்டு வாறன் ".
நான் அவரின் வரவேற்பு அறையை நோட்டமிட்டேன். ஒரு புறத்தே மீன் தொட்டியில் மீன்கள் துள்ளி விளையாடின . ஒரு கூட்டில் இரண்டு சோடி காதல் பறவைகள் கிலுகிலுத்தன . வெளிக்கிட்டு வெளியே வந்தவர் கையில் ஒரு மெடிக்கல் கிட் இருந்தது. இருவரும் சைக்கிளில் வீட்டிற்குப் போனோம் . மச்சான் றொனியனை வடிவாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் . அவரைச்சுற்ரி எல்லாச் சின்னப்பட்டாளமும் நின்றனர் . மச்சான் சோதித்து விட்டு என்னைப் பார்த்தார் . றொனியனும் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான் .


" என்ன மச்சான் ஏதவது சொல்லவேணுமே "?

" இவங்களைப் போகச்சொல்லடாப்பா ".

பிள்ளையள் குட்டிமாமி வரட்டாம் என்று மனைவி கூப்பிட்டா .

" சொல்லுங்கோ மச்சான் .

கண்ணன் இவனைக் காப்பாத்தேலாது . ஆள் கனகாலம் இருக்காது . தொண்டைலை கான்ஸ்சர் வந்திருக்குது . வெள்ளனக் கூட்டியந்திருந்தால் ஆளை ஏதாவது செய்திருக்கலாம் ".

" இப்ப என்ன செய்வம் மச்சான்".

"உனக்கு ஓம் எண்டால் சொல்லு . ஒரு ஊசி போட்டுவிடுறன் கருணைக்கொலைக்கு.
நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன் . பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக ,


"சரி மச்சான் அப்பிடியே செய்வம் ."

மச்சான் தனது கிட்டில் இருந்து ஊசியை எடுத்துச் சரி பார்த்து விட்டு , றொனியனின் முதுகில் ஊசியை ஏற்ரினார் . சிறிது நேரத்தில் அவனது உடல் சிறு துடிப்புடன் அடங்கியது . அண்ணையின் மகன் அழத்தொடங்கி விட்டான் . அவனை , வேறொரு நாய்க்குட்டி வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப் படுத்தினேன் . உள்ளே மச்சான் தங்கைச்சியைப் பேசுவது காதில் விழுந்தது . நான் மச்சானைச் சாப்பிட்டு விட்டுப்போகும்படி சொல்லியிருந்தேன் . நான் எனது மனதைத் தேற்ரியவாறு மல்கோவா மா மரத்தடியில் றொனியனுக்கு கிடங்கு வெட்டினேன் . அவனை அதில் வடிவாகக் கிடத்தி விட்டு மண்ணை அள்ளி மூடினேன் . அதில் ஒரு வேப்ப மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்ரினேன் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]கத்தி முனையில் வாழ்வதுதான் வாழ்க்கை [/size][size=1]

[size="4"]ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.[/size][/size]

[size=1]

[size="4"]நன்றி கோமகன் [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]கத்தி முனையில் வாழ்வதுதான் வாழ்க்கை [/size]

[size=1][size=4]ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.[/size][/size]

[size=1][size=4]நன்றி கோமகன் [/size][/size]

உண்மைதான் லியோ . எப்படியான வாழ்க்கைமுறை வாழ்ந்தாலும் வெளிப்பார்வை இல்லாமல் இருப்பது நியாயமாக எனக்குப்படவில்லை . உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதேங்கோ கோமகன் அண்ணா இது முதலே இணைக்கப்பட்டது போலுள்ளது ஒருக்கா சரி பாக்கிறீங்களோ

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்காதேங்கோ கோமகன் அண்ணா இது முதலே இணைக்கப்பட்டது போலுள்ளது ஒருக்கா சரி பாக்கிறீங்களோ

வாதவூரனுக்கு ஞாபகசக்தி அதிகம் :rolleyes: .

எனக்கும், கோமகனின் இலங்கை பயணக்கட்டுரையில்... றொனியனைப் பற்றி வாசித்த ஞாபகம் உள்ளது :) .

கோமகன்.... ஞாபகசக்தி அதிகரிக்க வெண்டிக்காய் சாப்பிடுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படித்தேன் ...நன்றாகவுள்ளது....என்ன பச்சையில் இருந்து கறுப்புக்கு போய்விட்டியள்? எழுத்தை சொன்னேன்....

  • தொடங்கியவர்

வாதவூரனுக்கு ஞாபகசக்தி அதிகம் :rolleyes: .

எனக்கும், கோமகனின் இலங்கை பயணக்கட்டுரையில்... றொனியனைப் பற்றி வாசித்த ஞாபகம் உள்ளது :) .

கோமகன்.... ஞாபகசக்தி அதிகரிக்க வெண்டிக்காய் சாப்பிடுங்கோ. :lol:

வாதவூரான் , சிறியர் நீங்கள் இருவரும் சொல்வது சரிதான் . நெருடிய நெருஞ்சியில் உள்ள சிறிய கதைகளை கதைகளாகத் தொகுக்கின்றேன் . ஒரு சிறுகதைத்தொகுதியாக இதே தலைப்பில் வெளியிடுவதற்கு முயற்சிக்கலாம் என இருக்கின்றேன் . அதனால் ஒரு சில திருத்தங்களுடன் முதலில் " பாமினி " என்று கதையும் , இப்பொழுது இந்த றொனியனையும் தந்துள்ளேன் . இதற்கு கிடைக்கும் வரவேற்புகளைப் பொறுத்தே ஒரு முடிவிற்க வருவேன் . உங்கள் கருத்திற்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

கோமகன், நீங்கள் எழுதத் தொடங்கி பாதியில் (அல்லது கால்வாசியில்) நிற்கும் மற்றக் கதையையும் கவனியுங்கோ! :lol:

  • 1 year later...
  • தொடங்கியவர்

றொனியன் போன்ற பலர் அன்றைய கால கட்டத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளர்கள் . இராணுவத்தினரின் முதல் எதிரியே இவர்கள்தான் . அவ்வளவு தூரத்திற்கு மக்களைப் பாதுகாத்தவர்கள் . இந்த  றொனியன் கதையை இன்றைய தெரிவாக எடுத்துப் போட்ட நிர்வாகத்திற்கு மிக்க நன்றிகள் :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.