Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்தாவது தமிழ் திரைப்ட விழா: Toronto

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழா சிறப்புற மனசார வாழ்த்துகின்றேன் . :)

  • கருத்துக்கள உறவுகள்

விழா சிறப்புற மனசார வாழ்த்துகின்றேன்

[size=3](பத்தாவது தமிழ் திரைப்ட விழாவா? குறும்பட தமிழ் திரைப்ட விழாவா????)[/size]

  • தொடங்கியவர்

விழா சிறப்புற மனசார வாழ்த்துகின்றேன்

(பத்தாவது தமிழ் திரைப்ட விழாவா? குறும்பட தமிழ் திரைப்ட விழாவா????)

இது வரைக்கும் குறும்பட விழாவாகத்தான் பெயரிட்டு குறும்படங்களை திரையிட்டனர். இம்முறை தம் விளம்பரத்தில் திரைப்பட விழா என்று மட்டுமே போட்டுள்ளனர். போக உத்தேசித்துள்ளேன்; போய் விட்டு வந்து எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பத்தாவது குறும்பட தமிழ் திரைப்பட விழா என்றால் பிரெஞ்சுக்காரர்கள் தான் போனவருடம் போல் இந்த வருடமும் அதி உச்ச வெற்றிகளை ஈட்டுவார்கள். அதற்கு எமது முத்தமிழ் விழாவின் நாவலர் விருது ஊக்குவிப்பும் ஒரு காரணம் என்பதில் பெருமை.[/size]

குறும்பட விழாதான் நடைபெறுகின்றது .இரண்டு திரைப்படங்களும் திரையிடுகின்றார்கள் .ஸ்டார் 67,பாலை.

எழுத்தாளர் ராமகிருஸ்ணன் பிரதம விருந்தினராக வருகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=5]10ஆவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கனடா:-[/size][/size]

[size=3][size=4]canada%20shirt%20film%20festivl_CI.jpg[/size]

[size=4]எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்[/size]

[size=4]ரொரண்ரோவில் ய+ன் 23 சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள திரைப்படவிழாவில் கள்ளத்தோணி குறும் படம் காண்பிக்கப்படவுள்ளது.[/size]

[size=4]கள்ளத்தோணி.[/size]

[size=4]இயக்கம்: அருள் எழிலன்[/size]

[size=4]தயாரிப்பு :நடராஜா குருபரன்[/size]

[size=4]பூரணி கிரியேசன்ஸ்[/size]

[size=4]கடந்த 10 வருடங்களாக நடைபெறும் இத் திரைப்படவிழாவிற்கு இம் முறை 88 குறும் படங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து நடுவர் குழுவால் பின்வரும் படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன[/size]

[size=4]நகல் - பிரான்ஸ்[/size]

[size=4]மாயச்சிறகு இந்தியா[/size]

[size=4]Music for Eyes - France[/size]

[size=4]கள்ளத்தோணி - இந்தியா- இங்கிலாந்து[/size]

[size=4]போராளிக்கு இட்ட பெயர் - பிரான்ஸ்[/size]

[size=4]ஊடல் - பிரான்ஸ்[/size]

[size=4]மெற்றோ – கனடா[/size]

[size=4]ரி2006 – கனடா[/size]

[size=4]வோட்டர் - கனடா[/size]

[size=4]கருக்காய் - பிரான்ஸ்[/size]

[size=4]கண்ணீர் தேசம் - பிரான்ஸ்[/size]

[size=4]இவற்றைத் தவிர கனடாவில் தயாரிக்கப்பட்ட ஸ்ரார் 67, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாலை ஆகிய முழு நீளத்திரைப்படங்களும் திரையிடப்படும்.[/size]

[size=4]இவ் விழாவில் இந்தியாவிலிருந்து திரு.எஸ்.இராமகிருஸ்ணன் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார்.[/size]

[size=4]Canada.jpg[/size]

[size=4]மேலதிக விபரங்களுக்கு[/size]

[size=4]416-450-6833 [/size][/size]416-804-3443

WWW.IAFSTAMIL.COM

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்

இன்று இந்த நிகழ்வுக்கு யாழ் கள உறவுகள் யாராவது வருகின்றீர்களா (அர்ஜுன் கண்டிப்பாக வருவார் என்பது தெரியும், வேறு எவராவது வருகின்றீர்களா)

  • தொடங்கியவர்

இன்று இந்த நிகழ்வுக்கு போயிருந்தேன். திரையிடப்பட்ட குறும்படங்களில், 'T:2006', 'போராளிக்கு இடப்பட்ட பெயர்' எனும் குறும்படமும், 'நகல்' என்ற குறும்படமும் மனதைக் கவர்ந்தன. ஏனைய குறும்படங்கள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. 'போராளிக்கு இடப்பட்ட பெயர்' குறும்படத்தில் துரோகி என முத்திரை குத்தப்பட்ட ஒரு போராளியின் மனவுணர்வையும், அவரால் இந்தியப் படைகளின் காலத்தில் சித்திரவதைக்குள்ளான இளைஞர் ஒருவரின் உணர்வும் சில நிமிடக் காட்சிகளில் அருமையாக படம் பிடித்து இருந்தனர்.

T:2006 குறும்படத்தை இயக்கி நடித்து இருந்தவர்கள் கனடாவில் வளர்ந்த இளைய தலைமுறையைச் சேர்ந்தவர். எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சின்ன வயதில் இருந்தே Gangster ஆக போக விரும்பும் ஒரு தமிழ் இளைஞன் எப்படி ஆகின்றான் என்பதோடு, அநேகமாக நண்பர்களிற்காக செயல் ஒன்றைச் செய்ய முனைவதாலேதான் அவன் குற்றம் செய்ய முனைகின்றான் என்பதை சொல்லிய விதம் அருமை. இயக்கிய இளைஞனுக்கு கை குலுக்கி பாராட்ட சந்தர்ப்பம் வந்தது சந்தோசமாக இருந்தது

சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழக எழுத்தாளர் 'எஸ். ராமகிருஸ்ணன்' னது உரை எனக்கு பிடித்திருந்தது. உலக சினிமா பற்றியும் சினிமா உலகு பற்றியும் உரையாற்றினார். இவரது சில நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் வாசித்து இருந்தமையால் அவருடன் கொஞ்சம் கதைக்கக் கூடியதாக இருந்தது. சேர்ந்து நின்று ஒரு புகைப்படம் எடுப்பமா என யோசித்தேன், ஆனால் வேண்டாம் என்று என் ஆணவம் தடுத்தது (இப்ப கவலையாக இருக்கு)

நான் நினைத்ததை விட அதிகம் பேர் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தனர். ஆனால் இன்னும் அதிகம் பேர் வரவேண்டும். கனடாவில் இடம்பெறும் பல மாற்று மொழி சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காமல் அவதியுறும் அளவுக்கு தரமான சினிமாவை விரும்பும் ரசிகர் கூட்டம் இருக்கும் போது எமக்கு இன்னும் அப்படி இல்லை என்பது கவலையான விடயம். அர்ஜுன் தன் மனைவியுடன் வந்திருந்தார். தமிழ் நதியை சந்திக்க முடிந்ததும் மகிழ்வான விடயம். 1999 படம் எடுத்த லெனின் இன்னுமொரு படம் ஆரம்பித்துள்ளார் என்பது சந்தோசமான செய்தியாக இருந்தது. லெனினது சினிமா புலம் பெயர் தமிழ் சினிமாக்களின் தரத்தில் பாச்சலை ஏற்படுத்தியது என்று சொல்லப்பட்ட விமர்சனம் மிகச் சரியானது.

நிகழ்வின் முடிவில் சிறந்த படம் என்ற பரிசு சில குறும் படங்களுக்கு கொடுத்தனர். விருது விடயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதால் எந்த படத்துக்கு என்ன விருது கொடுத்தனர் என்பதைக் கவனிக்கவில்லை

-----------------------

இந்த நிகழ்வில் திரையிடப்பட்ட கனடிய தமிழ் சினிமாவான 'ஸ்ரார் 67' எனும் திரைப்படம் மகா கொடுமை. தமிழக சினிமாவை பின்பற்ற முனைந்து மிக மோசமாக படம் எடுப்பதை விட சும்மா இருப்பது கனடிய தமிழுக்கு செய்யும் மிகப் பெரும் உதவியாக இருக்கும். இலக்கியம் அல்லது கலை உணர்வு கொஞ்சம் கூட இல்லாதவர்களுக்கு வெறும் தொழில்நுட்பம் மட்டுமே தெரிந்தால் இப்படியான கொடுமையான திரைப்படங்கள்தான் வரும் போலும். என் வாழ்வில் மிகவும் பயனில்லாமல் அமைந்த ஒன்ரரை மணித்தியாலங்கள் இந்தப் படத்தை பார்க்க செலவிட்ட நேரங்கள் தான்.

படவிழாவிற்கு வந்த படங்களின் தரம் சற்று ஏமாற்றம்.ராமகிருஸ்ணனின் பேச்சு பிடித்திருந்தது .

நகலும் மாயசிறகும் எனக்கு பிடித்திருந்தது.

பாரீசில் வீதியில் நின்று இசையமைத்து காசுபெறும் கலைஞர்களையும் எம்மவர் அடித்து பணம் பறிக்கின்றார்கள் என்று ஏன் எடுத்தார்கள் என்று விளங்கவில்லை .

அவதாரில் மனைவியின் படத்தை போட்டிருப்பதை மனைவிக்கு போட்டு கொடுத்த நிழலிக்கு நன்றி.

படவிழாவை விட அதன் பின்னர் போன விழா சிறப்பாக இருந்தது .

நானும் சிறிது நேரம் ராமகிருஸ்ணனுடன் உரையாடினேன் .அவரின் சிறுகதைகள்,பயண அனுபவகட்டுரைகள் ,உலக சினிமாவை பற்றிய கட்டுரைகள பற்றி கதைத்துவிட்டு David Lean இன் DR SHIVAGO நானும் பத்து தடவைகளுக்கு மேல்பார்த்த படம் எமது போராட்டமும் அப்படி ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைபட்டதாக சொன்னேன்.

மனுஷன் அரசியல் பற்றி வாயே திறக்கின்றாரில்லை

Edited by arjun

  • தொடங்கியவர்

அவதாரில் மனைவியின் படத்தை போட்டிருப்பதை மனைவிக்கு போட்டு கொடுத்த நிழலிக்கு நன்றி.

ஏதோ நம்மால முடிந்த உபகாரம் :D

  • கருத்துக்கள உறவுகள்

Short films make it big

This seems to be the season of short films. As many as 10 such movies made their presence felt at the recently concluded 10th International Tamil Film Festival, organized by The Independent Art Film Society, in Canada.

The short movies were made by Tamils living all over the world. The best short film award was bagged by 'Nagal' (from France), while the second prize went to 'Metro' (Canada).

Critic award for best short film went to 'Poralikku Itta Peyar', while Pon Daya bagged the best director award for 'Nagal'. Kadhiravan emerged the best editor for 'T.2006'.

The award for best screenplay was bagged by Prem Kathir for 'Karukkai', while Janesan became the best cinematographer for 'Oodal'. While Stefano Guist was the best music composer for 'Music For Eyes', Sudha Pranavan and Pon Daya emerged the best actress and best actor for 'Poralikku Itta Peyar' and 'Nagal', respectively.

Earlier, Tamil feature film 'Paalai' was screened and its director Senthamizhan interacted with the audience through video conferencing. Tamil writer S Ramakrishnan was present.

http://www.indiaglitz.com/channels/tamil/article/83264.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.