Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். முகமாலையில் கண்ணிவெடி வெடித்து மூவர் படுகாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mines.jpg

[size=4]யாழ். முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் போது கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது 32), பரமசிவம் பாவானி (வயது 20), யேசுதாசன் ஜெப்ரியூட் (வயது 34) என்பவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (23) சனிக்கிழமை காலை 7 மணியளவில் கண்ணிவெடியகற்றும் வேளையில் கண்ணிவெடி வெடித்துள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர்களை கலோரஸ் வாகனத்தில் உடனடி முதலுதவி கொடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் பெண் ஒருவருக்கு இடுப்புக்கு கீழ்பகுதியில் பாரிய காயம் காணப்படுகிறது, மற்றை தனபாலசிங்கம் குலசிங்கம் எனபவருக்கு நெஞ்சுப்பகுதியும், யேசுதாசன் ஜெப்ரியூட் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காயம்பட்டவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்.. :( தொழில்வாய்ப்பு இல்லாததால் ஆபத்தான வேலைகளைச் செய்யவேண்டிய அவலநிலை.. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளை கையாளாமல் இவ்வாறு கண்ணிவெடிகளை அகற்றும்போது வேடிக்கை பார்க்கும் ஐநா மூனை ஓங்கிக் குத்தவேண்டும்போல் இருக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காயம்பட்டவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன் .

அவர்களின் குடும்பச்சுமைகாரனமாகவே இப்படியான ஆபத்தான வேலைகளைக்கூட செய்யவேண்டியுள்ளது இவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இருந்தால் நிச்சயமாக இப்படியான வேலைக்கு போகமாட்டார்கள் . அரசாங்கம் பெருமளவு நிதியை வெளிநாடுகளில் இருந்து பெற்று தாங்கள் அனுபவித்துக்கொண்டு வேலை செய்பவர்களுக்கான சரியான பாதுகாப்பு உபகரங்களை வழங்கினால் இப்படியான சம்பவங்களை தவிர்க்கமுடியும் .

நாங்கள் கண்ட இடமெல்லாம் புதைப்போம் .அதை சரி என்று காசும் அள்ளி வழங்குவோம் .யு .என் கேட்டால் எமக்கு எல்லாம் தெரியும் என்ற அலட்சியம் வேறு .

இப்ப எல்லாம் முடிந்து அதை சுத்திகரிக்க வெளிக்கிடுபவனில் பிழை வேறு பிடிப்போம் .

பாழாய் போன இருபது வருட யுத்தம் தந்த விலை மிக மிக அதிகம் .உயிரின் மதிப்பு தெரியாத ஜென்மங்கள் .அது முடிந்தது கூட பலருக்கு பெரும் மனவருத்தம் ஆண்டு திகதி போட்டு பட்டியலை இன்னமும் நீட்ட முடியவில்லையே என்று . அந்த மூவருக்கும் நலம் பெற வேண்டுகின்றேன் .

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி தமிழரசு.

Edited by arjun

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கண்ட இடமெல்லாம் புதைப்போம் .அதை சரி என்று காசும் அள்ளி வழங்குவோம் .யு .என் கேட்டால் எமக்கு எல்லாம் தெரியும் என்ற அலட்சியம் வேறு .

இப்ப எல்லாம் முடிந்து அதை சுத்திகரிக்க வெளிக்கிடுபவனில் பிழை வேறு பிடிப்போம் .

பாழாய் போன இருபது வருட யுத்தம் தந்த விலை மிக மிக அதிகம் .உயிரின் மதிப்பு தெரியாத ஜென்மங்கள் .அது முடிந்தது கூட பலருக்கு பெரும் மனவருத்தம் ஆண்டு திகதி போட்டு பட்டியலை இன்னமும் நீட்ட முடியவில்லையே என்று . அந்த மூவருக்கும் எனது அஞ்சலிகள் .

அர்ஜுன் அவர்கள் உயிருடன் உள்ளார்கள் அவர்களுக்கு ஏன் அஞ்சலி சொல்லுகின்றீர்கள் ?

செய்தியை படித்தீர்களா ?

இலங்கை கடற்படையினரால் மீண்டும் நிலக்கண்ணிகள் புதைக்கப்படுகின்றன!

kannivedi1.jpg

வன்னி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் இலங்கை கடற்படையினர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக தமிழ்நெற் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் உள்ள மாதகல் பகுதியில் கடற்படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துக் கொண்டிருப்பதை, பொது மக்கள் சிலர் நேரில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கின்றநிலையில் இந்த பகுதியில் உள்ள தமது வீடுகளை அதன் உரிமையாளர்கள் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

எனினும் கடந்தவாரம் இவ்வாறு தமது வீடுகளை பார்வையிட சென்றவர்களை கடற்படையினர் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கடற்படையினருக்கு தெரியாமல் அந்த பகுதிக்குள் நுழைந்த சிலர், கடற்படையினரே கண்ணி வெடிகளை மீண்டும் புதைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் தமிழ்நெற்றின் இந்த செய்தி தொடர்பில் இலங்கைப் படையினர் இன்னும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்த செய்தி பற்றி உங்களின் கருத்து என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கண்ட இடமெல்லாம் புதைப்போம் .அதை சரி என்று காசும் அள்ளி வழங்குவோம் .யு .என் கேட்டால் எமக்கு எல்லாம் தெரியும் என்ற அலட்சியம் வேறு .

இப்ப எல்லாம் முடிந்து அதை சுத்திகரிக்க வெளிக்கிடுபவனில் பிழை வேறு பிடிப்போம் .

பாழாய் போன இருபது வருட யுத்தம் தந்த விலை மிக மிக அதிகம் .உயிரின் மதிப்பு தெரியாத ஜென்மங்கள் .அது முடிந்தது கூட பலருக்கு பெரும் மனவருத்தம் ஆண்டு திகதி போட்டு பட்டியலை இன்னமும் நீட்ட முடியவில்லையே என்று . அந்த மூவருக்கும் நலம் பெற வேண்டுகின்றேன் .

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி தமிழரசு.

புதைப்போம்; வழங்குவோம்; பிழைபிடிப்போம் என்று உங்களுடன் சேர்த்து யாரையெல்லாம் சொல்லுறீங்கள்? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கட்டாய வேலையில் சேர்க்கப்பட்டவர்களா?

சிங்கள அரசு இவர்களுக்குத் தகுந்த நஸ்ட ஈடு வழங்கவேண்டும்.

விரைவில் குணமடைய வேண்டுகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.