Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைவர்ஸுக்குப் பிறகு ஆண்கள் சுதந்திரப் பறவைகளாக உணர்கின்றனர்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் கருத்துக்கு.

இங்கு பெண்கள் தவறு விடவில்லை என்று எங்கும் நான் கூறவில்லை. இதே திரியில் அவர்களில் ஒருபகுதியினர் தவறு விட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது பெண்களின் தவறுகளை நான் இனங்காட்ட விரும்பாமல் இருக்கிறேன் என்று கூற முடியாது. :rolleyes:

அதே போல் எல்லா ஆண்களும் தவறானவர்கள் என்றும் நான் கருத்து எழுதியிருக்கவில்லை. :rolleyes:

பெண்கள் மேல் குற்றச்சாட்டுகளை வைக்கும் நீங்கள் ஆண்கள் விடும் தவறுகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கருத்து எழுதும் போது அதிலுள்ள உண்மைகளை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து தனியே அவர்கள் கருத்துகளை பிழை பிடித்து பதில் எழுதுவது நியாயமில்லை.

ஒரு கணவன் மனைவி divorce எடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் கூறுவதோ அனைத்துக்கும் பெண்கள் தான் காரணம், பெண்கள் தான் விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும் என்று. :rolleyes:

பெண்கள் தவறிழைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அவை எவ்வகையானவை அவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவது எவ்வகையில் என்றெல்லாம் எழுதுவதில்லை. பொதுப்படையாக எழுதிவிட்டு அப்புறமா.. பெண்கள் ஆண்களுக்கு இழைக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால்.. அதையே மாற்றி ஆண்களுக்கு எழுதிவிட்டுப் போகிறீர்கள். அது எல்லாம் சந்தர்ப்பத்திலும் பொருந்தாது.. என்பதை நீங்களும் விளங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அப்படி எழுத வேண்டி வராது.

பிழை பிடிப்பதல்ல. விடயங்கள் உள்ளடக்கப்படாமல் மறைக்கப்படுவதை.. அல்லது விடப்படுவதையே சுட்டிக்காட்டுகின்றோம். நாம் அடுத்தவர்களில் பிழைபிடித்து அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தான் முதலில் வழிகாட்டிகளாக நடந்துகாட்ட வேண்டும். அதன் பின்னர் தான் மற்றவர்களை திருந்த எதிர்பார்க்க வேண்டும். மாறாக திருத்த முற்படக் கூடாது. ஏனெனில் நீங்கள் உட்பட இங்குள்ளவர்கள் பெரியவர்கள். உங்களுக்கு என்றான சுயம்.. சுதந்திரத்தை நாம் மதிக்கிறோம். அதேபோல் எம் சுயம் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். அது கருத்துக்களில் கூட அமைதல் வேண்டும். அதுதான் ஜனநாயகமும் கூட..!

கணவன் விவாகரத்து எடுப்பது பற்றியல்ல தலைப்பு. நாம் சுட்டிக்காட்டிய விடயம்.. விவாகரத்தான ஆண் தான் சுதந்திரம் பெற்றதாக உணரச் செய்யப்படும் நிலைக்கு ஏன் அவனை... அப்படியான ஒரு சூழலுக்குள் விவாகத்தின் பின் பெண்கள் கொண்டு செல்கின்றனர் என்பது தான். அந்த சூழலை தவிர்த்துக் கொண்டு.. புரிந்துணர்வை.. நெருக்கத்தை.. அந்நியோன்னியத்தை.. அன்பை.. வளர்த்துக் கொண்டு நடந்தால்.. அந்த ஆணிடம் விவாகரத்துக்கான சிந்தனை வர வாய்ப்புக் குறைவாகவே இருக்கும்... இதுதான் எங்கள் கருத்து இங்கு..!

விவாகரத்தான ஆண் அந்த ஒரு விடயத்தில் தவிர வேறு விடயங்களில் எல்லாம் மனைவியை புரிந்து கொள்ள அவளின் பிரிவை இட்டு வேதனைப்பட முனைகிறான். ஆனால்.. பிரதானமாக ஒரு மனிதனுக்குள்ள சுதந்திர உணர்வை பெண்கள் பறிப்பதானது.. நிச்சயம் குடும்பச் சூழலில் புரிந்துணர்வை அதிகரிக்க உதவுமா.. என்பது இன்னும் கேள்விக்குரியாகவே இருக்கிறது.

இது விடயத்தில் பெண்களிடம் ஒரு அறிவூட்டலை செய்யவே இத்தலைப்பும் விடயமும் இணைக்கப்பட்டது. ஆனால் அது.. விவாகரத்து நல்லமா கூடாதா.. விவாகரத்தால்.. பிள்ளைகள் பாதிப்பு.. ஆண்கள் தான் இதற்கு காரணம்.. என்ற ஒரு பக்க குற்றச்சாட்டுகளால் வளர்ந்து இப்போது இந்த நிலையில் வந்து நிற்கிறது.

நான் இந்த விடயத்தை இத்தோடு 3ம் தரம் ஞாபகப்படுத்தியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. மாறாக என் மீதே (நீங்கள் உட்பட) பழி சுமத்திச் செல்கிறார்கள். ஏதோ நான் விவாகரத்தை ஆதரிக்கிறவன் என்பது போலவும்.. அதற்கு பெண்களே முழுக்காரணம் என்று சொன்னது போலவும் விவாதம் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது..! ஆனால் எனது நோக்கம் அது அல்ல..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • Replies 59
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனது நோக்கம் அது அல்ல..! :icon_idea::)

ஏனுங்க.. உங்கள் நண்பர்கள் எல்லாம் திருமணமாகி அல்லது சோடிகளோடு திரிவதால் நீங்கள் தனியனாகிவிட்டீர்களா? திருமணமான நண்பர்களை விவாகரத்துச் செய்து விட்டு மீண்டும் தனிக்கட்டை வாழ்க்கைக்குத் திரும்ப ஊக்கப்படுத்தவா இந்தப் பதிவு? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க.. உங்கள் நண்பர்கள் எல்லாம் திருமணமாகி அல்லது சோடிகளோடு திரிவதால் நீங்கள் தனியனாகிவிட்டீர்களா? திருமணமான நண்பர்களை விவாகரத்துச் செய்து விட்டு மீண்டும் தனிக்கட்டை வாழ்க்கைக்குத் திரும்ப ஊக்கப்படுத்தவா இந்தப் பதிவு? :icon_mrgreen:

இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியது எம்மிடம் அல்ல. இப்படியான ஒரு ஆய்வை நடத்தியவர்களிடமும்... அதை வெளியிட்டவர்களிடமும்..!

மேலும்.. நண்பர்களின்.. நண்பிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாம் நாங்கள் தலையீடு செய்வதில்லை. சோடி பிடிக்கிறதும்.. விடுறதும் அவங்கட சொந்தப் பிரச்சனை. அதுகளில் எல்லாம் நாங்கள் அவர்களுக்காக உழைப்பதில்லை. அந்தளவுக்கு உழைக்கிற.. நட்புகளை நாங்கள் பராமரிப்பதும் இல்லை..! அதேபோல் அவர்கள் எங்கள் சொந்த சுயத்தில் சுதந்திரத்தில் தலையீடு செய்வதில்லை..!

இந்த உலகில் யாருமே தனிக்கட்டை இல்லை. சொந்தங்கள்.. பந்தங்கள்.. நட்புகள்.. சக மனிதர்கள்... என்று சமூகமாகவே உள்ளனர். நாமும் அதற்கு விதிவிலக்கல்ல.

நாங்கள் ஏலவே தெளிவுபடுத்தி இருக்கிறம்.. இந்த தலைப்பின் நோக்கத்தை. அதைப் புரிஞ்சு கொள்ளாமல்.. இப்படியான விசமத்தனமான கேள்விகள் எழுப்புவது.. அநாவசியமானது என்று நினைக்கிறன். அதை நீங்கள் செய்வது.. உங்கள் மீதான மதிப்பிறக்கத்தையே செய்யும்..! :):icon_idea:

மீண்டும் ஒருமுறை.. இந்தத் தலைப்பின் நோக்கம் இது தான்...

கணவன் விவாகரத்து எடுப்பது பற்றியல்ல தலைப்பு. நாம் சுட்டிக்காட்டிய விடயம்.. விவாகரத்தான ஆண் தான் சுதந்திரம் பெற்றதாக உணரச் செய்யப்படும் நிலைக்கு ஏன் அவனை... அப்படியான ஒரு சூழலுக்குள் விவாகத்தின் பின் பெண்கள் கொண்டு செல்கின்றனர் என்பது தான். அந்த சூழலை தவிர்த்துக் கொண்டு.. புரிந்துணர்வை.. நெருக்கத்தை.. அந்நியோன்னியத்தை.. அன்பை.. வளர்த்துக் கொண்டு நடந்தால்.. அந்த ஆணிடம் விவாகரத்துக்கான சிந்தனை வர வாய்ப்புக் குறைவாகவே இருக்கும்... இதுதான் எங்கள் கருத்து இங்கு..!

விவாகரத்தான ஆண் அந்த ஒரு விடயத்தில் தவிர வேறு விடயங்களில் எல்லாம் மனைவியை புரிந்து கொள்ள அவளின் பிரிவை இட்டு வேதனைப்பட முனைகிறான். ஆனால்.. பிரதானமாக ஒரு மனிதனுக்குள்ள சுதந்திர உணர்வை பெண்கள் பறிப்பதானது.. நிச்சயம் குடும்பச் சூழலில் புரிந்துணர்வை அதிகரிக்க உதவுமா.. என்பது இன்னும் கேள்விக்குரியாகவே இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், நீங்கள் பாவம்!

உங்கள் மனைவியை, நீங்கள் மூன்றாமவராக, நினைக்கும் வரைக்கும், உங்கள் சிந்தனையில், பெரிதாக மாற்றங்கள் ஏற்பட்டுவிட மாட்டாது!

உங்கள் தாயைப் போல, உங்கள் சகோதரியைப் போல, அவளையும் உங்கள் குடும்ப அங்கத்தவராக, ஏற்றுக் கொள்ளுங்கள்!

அவளுக்கும், உங்களைப் போலவே ஒரு மனமும், உணர்வுகளும் உண்டு!

எனது உடுப்புகளை, அவள் தோய்க்க வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதில்லை!

அதனால் எனக்கு, ஏமாற்றங்களும் இல்லை!

விவாகரத்து, என்பது என்னைப் பொறுத்த மட்டில் , அக்கரையில் தெரியும் 'பச்சை".

மனநோயாளியாய் இல்லாதவிடத்து, ஒரு பெண்ணோடு, விட்டுக்கொடுப்புடன் வாழமுடியாத ஒருவன் அல்லது ஒருத்தி, இன்னொருத்தியுடன் அல்லது இன்னொருவனுடன், எவ்வாறு வாழமுடியும் என்று எனக்குப் புரியவில்லை!

இந்தப் பரிசோதனையில், ஈடுபட்ட பலரை அறிந்திருக்கின்றேன்!

மிக நெருக்கமாக அவர்களுடன் பழகியிருக்கின்றேன்!

இந்த 'டைவேர்சை' செய்யாமல் இருந்திருக்கலாம் என்பதே, அவர்களில் பலரின், ஆழ்மனத்தின் ஆதங்கமாக இருக்கின்றது!

கண்ணதாசனின் அருமையான பாடலின் வரிகள், இவை!

சென்றவனைக்கேட்டால் வந்து விடு என்பான்,

வந்தவனைக் கேட்டால், சென்று விடு என்பான்!

மிகவும் அர்த்தமுள்ள ஒரு பாடல்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

DIVORCE???? No way :wub:

கலியாணம் கட்டினால் ஆண்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள் என்பதே என்னைப் பொறுத்த வரைக்கும் பிழையான கூற்று. அப்பிடி சுதந்திரத்தை இழந்ததாக ஒரு ஆண் உணர்ந்தால் அவர் கட்டினது பிழையான ஆளை. இன்றுவரை நான் கலியாணம் கட்டினதால சுதந்திரத்தை இழந்தது எண்டு ஒரு நாள் கூட நினைக்கவில்லை. அதே same bachelor life style தான் இப்பவும். அவள் கண்டிசன் போடக் கூடிய மாதிரி நான் நடந்து கொள்ளுவதில்லை நானும் ஒரு கொண்டிசன் கூடப் போடுவதில்லை. ஒன்றே ஒன்று சொல்லுவாள் "மோட்ட சைக்கிளைத் தொட வேண்டாம்" எண்டு. அது கூட எனது பாதுகாபிற்காத்தான்.(போன கிழமையும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி அநியாயமாய் செத்துப் போனான்). ஆண் உருப்படியாக நடந்தால், பெண்ணும் உருப்படியாக நடப்பாள் (அனுபவத்திலிருந்து). ஆளையாள் நம்ப எலாட்டிக்கு என்ன இழவுக்கு வாழ்க்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன்.. ஏன் என்னைப் பார்த்து பாவம் என்றீங்க.. இதொன்றும் நான் செய்த ஆராய்ச்சியல்ல. எவனோ செய்தது.. எவனோ பிரசுரித்தது.. நான் இங்கு ஒட்டினது.

மேலும்.. நீங்கள் பலர் கருத்தெழுதும் போது.. ideal world இல் இருப்பது போல கருத்தெழுதுறீங்க. அவங்க.. real world இல் இருந்து ஆராய்ச்சி செய்யுறாங்க..!

விவாகரத்தே நடக்காத ஒரு உலகில் இருப்பது போல.. சிலரின் கருத்துக்கள் உள்ளன. ஏதோ இந்த தலைப்புத்தான் விவாகரத்தை தூண்டுகிறது என்றதாயும் எழுதத் தலைப்படுறாங்க..!

தினமும் உலகம் பூராவும் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து என்ற மனித ஆண் - பெண் கூட்டுறவு ஒப்பந்தம் முறிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. திருமணம் என்பது.. சட்ட அடிப்படையில்.. ஒரு சிவில் ஒப்பந்தம். ஒப்பந்த நகல்களும்.. நடைமுறைகளும் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை சரிவர நடைமுறையில் இருந்தால் அன்றி.. அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது. இது திருமணத்திற்கும் பொருந்தும்.

இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்படாமல் தான் பிற உயிரினங்கள் எல்லாம் வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் ஒப்பந்ததால் சட்ட ரீதியில் ஆளப்படச் செய்யப்படுகிறான்..! ஆண் - பெண் இணைவுக்கு ஆண் பெண் என்ற இயற்கை தகுதிகளுக்கு அப்பால் சட்டமும் அவசியமாகிறது மனிதனில்.. என்ற யதார்த்தத்தை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்..!

இங்கு பேசப்படும்..பொருள்.. விவாகரத்து அல்ல.ஏதோ காரணத்திற்காக விவாகரத்தான ஆண்களில் எழும் மனநிலை.. உளவியல் என்ன என்பது தான்..!

அந்த உளவியலுக்கான.. காரணம் என்ன.. அதை ஏன் திருமணமான பெண்கள் ஏற்படுத்தனும்.. அதை ஏன் தவிர்க்கக் கூடாது.. அப்படி தவிர்த்தால்.. இந்த திருமண ஒப்பந்தம் நீடித்து நிலைக்குமே... அதுக்கும் மேலால் ஆண் - பெண் இணைவு என்பது நீடிக்குமே என்பதுதான் எங்களின் கருத்து இங்கு. அதையொட்டி யாரும் கருத்துச் சொல்லுறதாக் காணேல்ல.

மாறாக.. மீண்டும் மீண்டும் விவாகரத்து.. பண்ணுறதுன்னா.. எதுக்கு கலியாணம் முடிக்கிறே.. அவளைப் புரிஞ்சுக்க முடியல்லைன்னா எதுக்கு ஒரு வாழ்வு.. இப்படி சர்வ சாதாரணமாக் கேள்வி கேட்டிட்டு போறீங்க..!

உலகத்தில எவனுமே.. விவாகரத்துக்காக திருமணம் செய்வதில்லை...(எங்கும் விதிவிலக்குகள் உண்டு). ஆனால் ஒருவன் அதற்கான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது.. அவன் அதனை நாடுவதும் நடந்தே வருகிறது. இதுதான் நிஜ உலகின் யதார்த்தம். அப்படி பெறுபவனின் விவாகரத்துப் பெற்ற பின்னான மனநிலை தான்.. இந்த ஆய்வின் கருப்பொருள்..! ஒரு பொதுமைப்பாடான ஆய்வும் கூட..!

ஆனால் நீங்கள் எல்லோரும்.. அவன்.. ஒருத்தி... கூட சேர்ந்து வாழ முடியல்லைன்னா.. இன்னொருத்தி கூட வாழ முடியாது.. என்று..மீண்டும் மீண்டும் ideal கருத்துத்தான் முன் வைக்கிறீங்க. நிஜம் அதுவல்ல. பல்வேறு காரணங்களுக்காக குறித்த பெண்ணை நிராகரிக்கும் நிலைக்கு ஒரு ஆண் வரவேண்டியும் ஏற்படும். இதுதான் real world நியாயம். அங்கு நின்று கொண்டு தான்.. விவாகரத்தான ஆண்களின் பொதுவான மனநிலை என்பது ஆராயப்பட்டுள்ளது. அதன் படிதான் நாங்க கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கிறம்.

எந்தப் பெண்ணும்.. ideal கிடையாது. அதேபோல்.. 100% ஆண்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பெண்ணும் இந்த உலகில் இல்லை. எனவே விட்டுக் கொடுப்பு இன்றி குடும்ப வாழ்வு என்பதே இல்லை. இதுதான் திருமணத்தின் அடிப்படையே. இதில் இருந்து தான் திருமண பந்தமே ஆரம்பமாகிறது... ஒப்பந்தமே போடப்படுகிறது. அப்படி ஆரம்பமாகி அது விவாகரத்தில் முடிந்தால்.. அங்கு ஆண்களின் சிந்தனை என்ன என்பது தான்.. இங்கு பேசு பொருளாகி உள்ளது..! அதை இட்டு கருத்துச் சொன்னால்.. அது பெண்களுக்கு.. சமூகத்திற்கு வழிகாட்டியாக இருந்தால்.. அதனை ஏற்றுக் கொள்ளலாம். அதைவிடுத்து.. வெறும்.. ideal கதை கதைப்பதால்... அது சமூகத்திற்கு உதவாத ஏட்டுச் சுரக்காயாகவே இருக்கும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றிகள், நெடுக்கர்!

எனக்கு, இந்த divorce இல் அவ்வளவு நம்பிக்கை இல்லை!

ஏதோ, divorce செய்பவர்கள் எல்லாம், சந்தோசமாக இருப்பது மாதிரி!

என்மீது எந்த விதமான அழுத்தங்களும், எனது மனைவியால் பிரயோகிக்கப் படாததால், இது பற்றிக் கருத்துக் கூற என்னால் முடியவில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DIVORCE???? No way :wub:

கலியாணம் கட்டினால் ஆண்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள் என்பதே என்னைப் பொறுத்த வரைக்கும் பிழையான கூற்று. அப்பிடி சுதந்திரத்தை இழந்ததாக ஒரு ஆண் உணர்ந்தால் அவர் கட்டினது பிழையான ஆளை. இன்றுவரை நான் கலியாணம் கட்டினதால சுதந்திரத்தை இழந்தது எண்டு ஒரு நாள் கூட நினைக்கவில்லை. அதே same bachelor life style தான் இப்பவும். அவள் கண்டிசன் போடக் கூடிய மாதிரி நான் நடந்து கொள்ளுவதில்லை நானும் ஒரு கொண்டிசன் கூடப் போடுவதில்லை. ஒன்றே ஒன்று சொல்லுவாள் "மோட்ட சைக்கிளைத் தொட வேண்டாம்" எண்டு. அது கூட எனது பாதுகாபிற்காத்தான்.(போன கிழமையும் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி அநியாயமாய் செத்துப் போனான்). ஆண் உருப்படியாக நடந்தால், பெண்ணும் உருப்படியாக நடப்பாள் (அனுபவத்திலிருந்து). ஆளையாள் நம்ப எலாட்டிக்கு என்ன இழவுக்கு வாழ்க்கை.

ஒரே ஒரு கேள்வி...

மோட்டார் சைக்கிள் ஓடும் உங்களுக்கு உங்களை பாதுகாக்கனும் என்ற பொது அறிவு தானே வரும் தானே..! வாகன வழிகாட்டிகளிலும் அது சொல்லித் தாறாங்க தானே. அதுமட்டுமன்றி.. உங்க மனைவி தொட வேண்டாம் என்று சொல்லவா.. மோட்டார் சைக்கிள வேண்டி வைச்சிருக்கீங்க... இல்லைத் தானே.. பாவனைக்கு என்று தானே வாங்கினீங்க.. ஏதோ மோட்டார் சைக்கிள் விபத்துக்கே உட்படாது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டா அதை வாங்கினீங்க.. இல்லைத் தானே.. மோட்டார் விபத்துக்கள் உலகம் பூராவும்...நடக்கிறது.. நீங்க அதை வாங்கும் போது அறியவில்லையா.. அப்போ ஏன் உங்க மனைவி அதை ஆரம்பத்திலேயே தடுக்கல்ல.. வாங்கினாப் பிறகு.. தொடாத என்றதால என்ன நன்மை...????! :lol:

வேணாப்பா.. இந்த விவகாரத்தை வைச்சே.. சீராய் போய்க்கிட்டு இருக்கிற.. ஒரு குடும்பத்தில குழப்பத்த உண்டு பண்ணிடாத.. அண்ணன் தும்பளை.. பாவம்.. எவ்வளவு கஸ்டப்பட்டு..அந்த அக்காச்சியை கைபிடிச்சிருப்பார்...! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்தோசத்துடன் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஜேர்மனியிலும் அரசியல்வாதிகள் தொடக்கம் தொலைக்காட்சி பிரபல்யங்கள் வரை அநேகமானோர் ஓரினச்சேர்கையாளர்கள்தான். நோ ரெஞ்சன்...நோ புடுங்குப்பாடு... ஒரே என்ஜோய் :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கையாளர்கள் சந்தோசத்துடன் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஜேர்மனியிலும் அரசியல்வாதிகள் தொடக்கம் தொலைக்காட்சி பிரபல்யங்கள் வரை அநேகமானோர் ஓரினச்சேர்கையாளர்கள்தான். நோ ரெஞ்சன்...நோ புடுங்குப்பாடு... ஒரே என்ஜோய் :icon_mrgreen:

கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்ததுகளும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகுதுகள் என்று உலகச் செய்திகள் கூறுகின்றன. ஆண் பெண் என்ற வேறுபாடின்றி. அதுகளும் விவாகம் செய்து வைச்சு.. விவாகரத்தும் செய்யுதுங்க.. தான். அதைப் பற்றி எல்லாம் நாங்க இங்க கதைக்கல்ல..! இது.. straight ரான திருமணங்களுக்கும்... straights ருகளுக்குமான பதிவு.

சாறி.. கலியாணம் கட்டியும்.. கட்டாமலும்.. ஓரினச்சேர்கையில் ஈடுபடுறவங்க.. அதற்குரிய தலைப்பு இடப்பட்டால் அங்கு வந்து அந்தத் தலைப்பில் இதனை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்..! வேணுன்னா.. உங்களுக்காக அந்த ஆராய்ச்சி தகவல்கள் கிடைத்தால் சேகரித்து இணைத்துவிடுகிறோம். பாவங்கள் அதுகளும் வாழத்தானே வேணும். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

பெண்கள் தவறிழைக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அவை எவ்வகையானவை அவற்றால் ஆண்கள் பாதிக்கப்படுவது எவ்வகையில் என்றெல்லாம் எழுதுவதில்லை. பொதுப்படையாக எழுதிவிட்டு அப்புறமா.. பெண்கள் ஆண்களுக்கு இழைக்கும் தவறுகளை சுட்டிக்காட்டினால்.. அதையே மாற்றி ஆண்களுக்கு எழுதிவிட்டுப் போகிறீர்கள். அது எல்லாம் சந்தர்ப்பத்திலும் பொருந்தாது.. என்பதை நீங்களும் விளங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அப்படி எழுத வேண்டி வராது.

எந்த வகையில் பெண்கள் ஆண்களுக்கு தவறிழைக்கிறார்கள் என்று எழுத வேண்டுமென்றால் புதிதாக திரி திறந்து எழுத வேண்டும். ஆனால் இந்த திரியில் நீங்கள் கூறியதற்கு பதில் எழுதும் போது நீங்கள் எந்த தவறை பெண்கள் செய்வதாக் கூறினீர்களோ அது என் பார்வையில் சரியா பிழையா என்று தான் கருத்து எழுத முடியும். ஒருபகுதி பெண்கள் அப்படி உள்ளார்கள் தான் என்பதை ஏற்றுக்கொண்டு கருத்து எழுதினேன்.

இங்கு நான் அனைத்தையும் அப்படியே ஆண்களுக்கு மாற்றி பார்க்கும்படி கூறவில்லை. பெண்கள் விடும் தவறுகள் என்று நீங்கள் கூறியவை பெண்களை விட ஆண்கள் அதிகமாக செய்வதால் அதனை மாற்றிப்பார்க்கும் படி கூறினேன். அதுவும் சிலர் விதிவிலக்கு என்று கூறியபடி.

பிழை பிடிப்பதல்ல. விடயங்கள் உள்ளடக்கப்படாமல் மறைக்கப்படுவதை.. அல்லது விடப்படுவதையே சுட்டிக்காட்டுகின்றோம். நாம் அடுத்தவர்களில் பிழைபிடித்து அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தான் முதலில் வழிகாட்டிகளாக நடந்துகாட்ட வேண்டும். அதன் பின்னர் தான் மற்றவர்களை திருந்த எதிர்பார்க்க வேண்டும். மாறாக திருத்த முற்படக் கூடாது. ஏனெனில் நீங்கள் உட்பட இங்குள்ளவர்கள் பெரியவர்கள். உங்களுக்கு என்றான சுயம்.. சுதந்திரத்தை நாம் மதிக்கிறோம். அதேபோல் எம் சுயம் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். அது கருத்துக்களில் கூட அமைதல் வேண்டும். அதுதான் ஜனநாயகமும் கூட..!

ஒரு கருத்தை நாம் சொன்னவுடன் உங்களை பிழை பிடிப்பதற்காக நாம் சொல்கிறோம் என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்க சார்பான கருத்துகள் தொடரும். அண்ணா இங்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் பக்கச்சார்பாக எழுதுவதை நிறுத்த வேண்டும். அப்பொழுது தான் மக்கள் உங்கள் கருத்துகளில் உள்ள உண்மை பொய்யை இனங்கண்டு ஏற்றுக்கொள்வார்கள்.

உங்கள் கருத்துகள் அனைத்தும் பிழை என்றோ அவ்வாறு இனி எழுத வேண்டாமென்றோ நாம் சொல்லவில்லை. ஆனால் அதை ஒட்டுமொத்த பெண்களுக்கும் சொல்வது போல் எழுதாமல், ஆண்கள் எல்லோரும் நல்லவர்கள் போல் எழுதாமல் உங்கள் கருத்துகள் அமைய வேண்டும் என்று தான் சொல்கிறோம்.

ஒன்றை சொன்னவுடன் உங்களை திருந்துமாறு நாம் சொல்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இங்கு நீங்கள் திருந்துவதை விட மக்களுக்கு பக்கச்சார்பற்ற கருத்துகள் சென்றடைய வேண்டுமென்று நாம் நினைக்கிறோம்.

கணவன் விவாகரத்து எடுப்பது பற்றியல்ல தலைப்பு. நாம் சுட்டிக்காட்டிய விடயம்.. விவாகரத்தான ஆண் தான் சுதந்திரம் பெற்றதாக உணரச் செய்யப்படும் நிலைக்கு ஏன் அவனை... அப்படியான ஒரு சூழலுக்குள் விவாகத்தின் பின் பெண்கள் கொண்டு செல்கின்றனர் என்பது தான். அந்த சூழலை தவிர்த்துக் கொண்டு.. புரிந்துணர்வை.. நெருக்கத்தை.. அந்நியோன்னியத்தை.. அன்பை.. வளர்த்துக் கொண்டு நடந்தால்.. அந்த ஆணிடம் விவாகரத்துக்கான சிந்தனை வர வாய்ப்புக் குறைவாகவே இருக்கும்... இதுதான் எங்கள் கருத்து இங்கு..!

இங்கு கூட பெண்களை குற்றம்சாட்டி உங்கள் கருத்து உள்ளது.

தன் மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் / பெண்களுடன் குடும்பம் நடத்தும் ஒரு ஆண் பற்றி மனைவி அறிந்து கொண்டால் அவள் என்ன செய்ய வேண்டும்? பதில் கூறுங்கள்.

இங்கு அது தெரிந்த பின் கணவனுடன் வாக்குவாதப்பட்டதாலோ அல்லது பின்னர் பல கெண்டிசன் போட்டதாலோ அந்த ஆண் விவாகரத்து பெற்றிருந்தால் அப்பொழுதும் அப்பெண்ணில தான் பிழையா?

அல்லது ஒருத்தியுடன் மட்டும் வாழும் பழக்கமில்லாத சில ஆண்கள் தம் பெற்றோரின் கட்டாயத்திற்காக திருமணம் செய்தபின் தாமாக விவாகரத்து பெற்று சுதந்திர பறவைகளாக இருக்கவும் நினைப்பார்கள். இந்நிலையிலும் அவ் ஆண்களின் மனைவியில் தான் பிழையா?

விவாகரத்தான ஆண் அந்த ஒரு விடயத்தில் தவிர வேறு விடயங்களில் எல்லாம் மனைவியை புரிந்து கொள்ள அவளின் பிரிவை இட்டு வேதனைப்பட முனைகிறான். ஆனால்.. பிரதானமாக ஒரு மனிதனுக்குள்ள சுதந்திர உணர்வை பெண்கள் பறிப்பதானது.. நிச்சயம் குடும்பச் சூழலில் புரிந்துணர்வை அதிகரிக்க உதவுமா.. என்பது இன்னும் கேள்விக்குரியாகவே இருக்கிறது.

இங்கும் ஆணின் சுதந்திர உணர்வை பெண்கள் பறிப்பதாக உங்கள் கருத்து உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது விவாகரத்தான ஆண்களின் உணர்வுகள் பற்றிய தலைப்பு. இதில் பெண்களை முன்னிலைப்படுத்த முடியாது தானே.

எது பக்கச்சார்ப்பு.. ஒரு ஆணின் தவறை.. ஆணாதிக்கமாக காட்டி ஒட்டுமொத்த ஆண்களின் மீதும் அந்தப் பழியை போடுவதை காலம் காலமாகச் செய்து வரும் பெண்கள்.. பெண்ணாதிக்கத்தை என்றாவது இனங்காட்டி இருக்கிறார்களா..???! இல்லவே இல்லை. ஆனால் நிஜ உலகில்.. எத்தனையோ ஆண்கள் வீடுகளில்.. பேச்சுரிமை மறுக்கப்பட்டு.. சுதந்திர முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டு.. கொத்தடிமைகள் போல.. கூலிகள் போல.. பெண்களால் நடத்தப்படுகின்றமையை காண்கிறோம் தானே. இதெல்லாம்.. பெண்ணாதிக்கம் இல்லையா. இப்படியான வாழ்க்கையை எந்த ஆண் விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்வான்..???!

ஒருவன் ஒருத்தி கூட வாழ முடியவில்லை என்றால் அதற்கு அவன் மட்டுமே காரணம் என்பது தான் பக்கச் சார்ப்பு. அதற்கு அவளும் ஒரு காரணம் என்பது தான் எங்கள் கருத்து..! இதில் எது பக்கச் சார்ப்பு. ஒரு திருமணமான ஆண் பல பெண்களோடு தொடர்பு வைக்கிறானுன்னா.. அதற்கு அந்த மனைவியின் நடத்தைகளும் காரணமாக இருக்கலாம். அதனை ஆராயாமல்.. அந்த ஆணின் மீதே மொத்தப் பழியையும் போடுவது தான் உண்மையில் பக்கச் சார்ப்பு. அதையே பல பெண்கள் செய்கிறார்கள். இதன் மூலம் பெண்களை அப்பாவிகள் போல காட்டவிளைகின்றனர். ஆனால் உண்மை அதுவாக இருக்காது. அந்தப் பெண்ணின் தொல்லை தாங்காது.. பழிவாங்கும் எண்ணம் மேலிட ஆண்கள் பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க.. சிதைக்கவும் செய்கின்றனர். இப்படியான நிலைக்கு ஆண்களைக் கொண்டு வருவதும்.. ஒரு பெண் தான்..! இங்கு வெறுமனவே ஆண்களில் மட்டும் குறை கண்டு கொண்டிருப்பது தான் பக்கச் சார்ப்பு...! தீர விசாரித்து.. ஆதாரங்களின் அடிப்படையில்.. தவறுக்குரியவர் இனங்காணப்பட்டு அவருக்கு நல்ல ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கப்படுவதை விடுத்து.. ஆண் என்றால் ஆதிக்க சக்தி.. பெண் என்றால் அப்பாவி என்று காட்டும் அந்தப் பழைய சித்தாந்தம்.. எனியும் இந்த உலகில் வேலைக்கு ஆகப் போறதில்லை. அந்தளவுக்கு பெண்கள் வெளிப்படையாகவும்.. ரகசியமாகவும்.. குடும்ப.. சமூக விரோத செயல்களில் ஈடுபடுறாங்க. அதனை யாருமே நிராகரிக்க முடியாது..! இங்கு பெண்கள் என்பது எல்லோரையும் அல்ல. குற்றம் இழைப்பவர்களையே நாம் குறித்து நிற்கிறோம்..!

ஆண்கள் என்பது எல்லோரையும் அல்ல.. திருமணமான.. விவாகரத்தான ஆண்களை குறிக்கிறோம்..! :):icon_idea:

நெடுக்ஸ், இன்றும் பல குடும்பங்களில் நீங்கள் குறிப்பிடும் ஆண்களின் நிலையில் பல பெண்கள் தமது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள்.. அவர்களை அந்தக் கோலத்தில் தினமும் பார்க்கும் குடும்பத்தினருக்குத் தான் அதன் வலியும், வேதனையும் புரியும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரை.. ஊர் பெயர் சொல்ல விரும்பல்ல.. அநேக.. வீடுகளில் பெண்கள்.. அதுவும் தமிழ் பாரம்பரியத்தில் வந்தவர்கள்.. வருமானத்திற்காக (சிங்கிள் மதர்) கணவன்மாரை வம்புக்கு இழுத்து.. விவாகரத்து செய்துவிட்டு.. குடியும் குடித்தனமும் நடத்துவதை அறிய முடிகிறது..! பிள்ளைகள் இந்தத் தாய்மாரின் செயலை இட்டு மிகவும் வேதனையோடு இவற்றைப் பள்ளி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் இருந்து இவை வெளி வருகின்றன.

எங்கும்.. எதிலும்.. தவறுகளும் தப்புக்களும் பெண்களாலும் ஆண்களுக்கு நிகராகச் செய்யப்படுகின்றன என்ற உண்மையை நீங்களும் குட்டி ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

அதை மறைச்சுக் கொண்டு ஆண்களையே குற்றம் சாட்டிக் கொண்டு பெண்களின் தவறுகள் பெருகுவதை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அதனால் ஆண்கள் தாம் பெண்களால் வஞ்சிக்கப்படுவதாக சமூகத்தால் கவனிப்பாரற்று விடப்படுவதாக எண்ணி.. பெண்கள் மீதான அவர்களின் வெறுப்பு.. வஞ்சகம்.. பழி தீர்ப்பு.. இன்னும் அதிகமாக.. பாதிக்கப்படுவது இன்னும் இன்னும் பெண்களாகவே இருப்பர்..! இதுதான் அதிகம் நிகழ்கிறது..! :icon_idea::)

தமிழர்களிடையே திருமண முடிவு, விவாகரத்து அதிகரிக்கிறது என்பதை மறுக்கவில்லை, ஆனால் அது ஒருவரின் முடிவாக/ நடத்தையின் காரணமாக மட்டும் இருக்குமென நினைக்கிறீர்களா?

எங்கும்.. எதிலும்.. தவறுகளும் தப்புக்களும் பெண்களாலும் ஆண்களுக்கு நிகராகச் செய்யப்படுகின்றன என்ற உண்மையை நீங்களும் குட்டி ஏற்றுத் தான் ஆக வேண்டும்.

அதை மறைச்சுக் கொண்டு ஆண்களையே குற்றம் சாட்டிக் கொண்டு பெண்களின் தவறுகள் பெருகுவதை அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அதனால் ஆண்கள் தாம் பெண்களால் வஞ்சிக்கப்படுவதாக சமூகத்தால் கவனிப்பாரற்று விடப்படுவதாக எண்ணி.. பெண்கள் மீதான அவர்களின் வெறுப்பு.. வஞ்சகம்.. பழி தீர்ப்பு.. இன்னும் அதிகமாக.. பாதிக்கப்படுவது இன்னும் இன்னும் பெண்களாகவே இருப்பர்..! இதுதான் அதிகம் நிகழ்கிறது..! :icon_idea::)

தவறுகளை இருபக்கத்தினரும் செய்யும் போது ஒருபக்கதினரை மட்டும் குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் என்பது எல்லோரையும் அல்ல.. திருமணமான.. விவாகரத்தான ஆண்களை குறிக்கிறோம்..! :) :icon_idea:

நீங்கள் எழுதும்போது, ஏன் எப்போதும், 'படர்க்கையில்' எழுதுகின்றீர்கள்?

சில விரும்பத் தகாத , கடந்த கால மனக்கசப்புக்களால்' கள உறவுகள், எழுதும் தமிழில் குற்றம் காண்பதில்லை, என முடிவு செய்திருந்தேன்!

ஆனால், நீங்கள் யாழ் களத்தின் நட்சத்திர, பங்களிப்பாளர்! தினமும் உங்கள் பதிவுகளை வாசிப்பதால், எழுதுகின்றேன்!

படர்க்கை, பொதுவாக, மன்னர்கள், மற்றும் கடவுள்களால், மட்டும் தமிழில் உபயோகப் படுத்தப் படுகின்றது!

உதாரணமாக, சுந்தரரிடம், சிவபெருமான், ' நாம் உம்மைத் தடுத்தாட் கொண்டோம்' என்று கூறுவதில் படர்க்கை வரலாம்!

அல்லது பாண்டியமன்னன், இன்று முதல், உம்மை எமது, ஆஸ்தான வித்துவானாக, நியமிக்கின்றோம்" எனும்போது படர்க்கை வரலாம்!

உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது, நீங்கள் ஒரு ஆசிரியர் போலவும், நாங்கள் மாணவர்கள் போலவும், ஒரு உணர்வே வருகின்றது!

தும்பளையானும், இது பற்றி முன்னர் ஒரு பதிவில், குறிப்பிட்டிருந்தார் என நினைக்கின்றேன்!

எனது கருத்துத், தவறு எனின் மன்னிக்கவும்! அல்லது கள விதிகளுக்கு எதிரானது எனினும் தெரியப் படுத்தவும்!

ஏனெனில் நானும் ஒரு புலத்துத் தமிழன்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சும், குருவிகளும் ஒரே அணி என்பதால் படர்க்கை..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளை இருபக்கத்தினரும் செய்யும் போது ஒருபக்கதினரை மட்டும் குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?

இந்தத் தலைப்பு.. பெண்ணால் பாதிக்கப்பட்டோ.. பிரச்சனைப்பட்டோ.. வாழ்க்கை வெறுத்தோ.. விவாகரத்து வாங்கும் ஆண்களின் உணர்வைக் குறிப்பதால்.. அந்த உணர்வுத் தூண்டலுக்கு காரணமான பெண்களைப் பற்றிய கருத்துக்களை முதன்மைப்படுத்துகிறோம்.

எத்தனையோ தலைப்புக்களில்.. ஆண் ஆதிக்கம்.. ஆண் அடிக்கிறான்.. கொல்லுறான்.. என்று பெண்கள் ஒருதலைப்பட்சமா எழுதும் போது.. நீங்கள் இதனை அவர்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறீர்களா..???!

ஆனால் நான்.. அவதானித்தால்.. செய்திருக்கிறேன். இன்றைய இந்த உலகில் ஆணுக்கு நிகராக பெண்கள் தவறு செய்யுறாங்க. சமூகம் திருந்தனுன்னா..வெறுமனவே ஆணையே திட்டிக் கொண்டிருப்பதால் எந்த விமோசனும் வரப் போறதில்ல. பெண்களை நோக்கியும் அவங்க தவறுகளும்.. சுட்டிக்காட்டப்பட்டு சீர்திருத்தப்படனும்.

இங்கு பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விவாகரத்தின் பின்னான அந்த உணர்வுக்கு ஏன் பெண்கள் குடும்பத்தில் இடமளிக்கினம் என்ற கேள்வியை கேட்பதே பொருத்தம். ஆனால் நீங்கள் கேட்பது.. ஆணும் தப்புப் பண்ணுறா.. பெண்ணும் தப்புப் பண்ணுறா... யார் செய்தாலும் தப்பு தப்புத் தானேன்னு...??!

நாங்க அதைப் பற்றி கதைக்கேல்ல. நாங்க கதைக்கிறது.. பெண்களின் தப்பான நடவடிக்கைகளால் வெறுத்துப் போய் விவாகரத்து ஆகும் நிலைக்கும் ஆன பின் தன்னை சுதந்திரப் பறவையாக ஒரு ஆண் என்ன தூண்டும் நிலைக்கும்.. பெண்கள் ஏன் குடும்பத்தில ஆண்களோடு..நடந்து கொள்ளினம்.. அவன் விவாகரத்து வாங்காமலே அதனை குடும்பத்தில் உணரச் செய்ய ஏன் அவர்கள் முயல்ல.. என்பது தான்..!

எனக்குப் புரியல்ல.. பெண்கள் ஆண்கள் மீது பழி சுமத்து போதும்.. அதை ஏற்றுக் கொள்ளும் சில ஆண்கள்.. தங்கள் மீதே அந்தப் பழிகள் போடப்படுகின்றன.. என்ற அறிதல் இன்றி தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் ஆதரவாகப் பேசுவது.. நீங்கள் பெண் சகோதரிகளோடு பிறந்தீர்கள் என்பதற்காக.. பெண்கள் தப்பே பண்ணல்ல.. அவங்க அப்பாவிக்க.. என்ற தோற்றப்பாடு காட்டுவதை இன்றைய உலகில் ஒரு சராசரி முட்டாள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டான்.. குட்டி..! பெண்கள் தப்புப் பண்ணுறாங்க.. அதனாலையும் ஆண்கள் தப்புப் பண்ண தூண்டப்படுறாங்க.. என்ற அடிப்படை உண்மைகளில் இருந்தும்.. நாங்கள் ஆண்களின் உணர்வுகளை பகுத்துப் பார்த்து ஆராய வேண்டும். தீர்வுகளை சமூகத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும். அதைத்தான் நாங்க வழியுறுத்திறம்..! :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதும்போது, ஏன் எப்போதும், 'படர்க்கையில்' எழுதுகின்றீர்கள்?

சில விரும்பத் தகாத , கடந்த கால மனக்கசப்புக்களால்' கள உறவுகள், எழுதும் தமிழில் குற்றம் காண்பதில்லை, என முடிவு செய்திருந்தேன்!

ஆனால், நீங்கள் யாழ் களத்தின் நட்சத்திர, பங்களிப்பாளர்! தினமும் உங்கள் பதிவுகளை வாசிப்பதால், எழுதுகின்றேன்!

படர்க்கை, பொதுவாக, மன்னர்கள், மற்றும் கடவுள்களால், மட்டும் தமிழில் உபயோகப் படுத்தப் படுகின்றது!

உதாரணமாக, சுந்தரரிடம், சிவபெருமான், ' நாம் உம்மைத் தடுத்தாட் கொண்டோம்' என்று கூறுவதில் படர்க்கை வரலாம்!

அல்லது பாண்டிய மன்னன், இன்று முதல், உம்மை எமது, ஆஸ்தான வித்துவானாக, நியமிக்கின்றோம்" எனும்போது படர்க்கை வரலாம்!

உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது, நீங்கள் ஒரு ஆசிரியர் போலவும், நாங்கள் மாணவர்கள் போலவும், ஒரு உணர்வே வருகின்றது!

தும்பளையானும், இது பற்றி முன்னர் ஒரு பதிவில், குறிப்பிட்டிருந்தார் என நினைக்கின்றேன்!

எனது கருத்துத், தவறு எனின் மன்னிக்கவும்! அல்லது கள விதிகளுக்கு எதிரானது எனினும் தெரியப் படுத்தவும்!

ஏனெனில் நானும் ஒரு புலத்துத் தமிழன்!

இந்தக் கேள்வி தலைப்புக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல என்ற காரணத்தினால்.. இதற்கு பதில் அளிப்பதில் தயக்கம் இருந்தாலும்.. இதையே தனி ஒரு விவாதமாக இங்கு நீட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

மேலும்.. நான் எப்போதும் நாம்.. நாங்கள்.. என்று மொழிவதில்லை. பெரும்பாலும்.. மொழிவதுண்டு..!

அதற்கு பல காரணங்கள் உள்ளன.. முதன்மைக் காரணம்...

பொதுவாக.. விடயங்களை நான்.. எனது நண்பர்கள்.. நண்பிகளோடு விவாதித்து அங்கு உதிரும் கருத்துக்களை எல்லாம் இயன்றவரை.. ஒருங்கிணைத்து கொண்டு வருவேன். சில தடவைகள்.. பெரியவங்க கிட்ட கூட கலந்தாலோசிச்சு எழுதுவன். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் விடயங்களுக்காகக் கூட ஆக்கங்கள் எழுதி இருக்கிறேன். எனது குலாமில்.. பொதுக்கருத்துக் கொண்ட விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது படர்க்கை (பன்மை) அதிகம் விளிக்கப்படுகிறது.

மேலும்.. நண்பர்களின் வழிகாட்டலில் தான் யாழில் இணைந்து கொண்டேன். அந்த நண்பர்களின் பங்காளியாகவே தான் பல தடவைகள் கருத்துப் பகிர்ந்திருக்கிறேன்..! உங்களுக்கு நல்லா தமிழ் வருது.. இங்க எழுதுங்கோவன்.. என்ற உற்சாகப்படுத்தலில்.. அவர்களுக்காக எழுத ஆரம்பித்தது. அந்த வகையில்.. எங்கள் கருத்துக்களில் பன்மை குணம் தென்பட வேண்டிய இடங்களில் அது தென்படும். அதற்குக் காரணம்.. நான் தனித்து அக்கருத்தை முன் வைக்கவில்லை. அந்தக் கருத்தின் உருவாக்கத்திற்கு பின்னால்.. பலர் இருக்கிறார்கள் என்பதை இனங்காட்டவே ஆகும்.

மேலும்.. சில இடங்களில் நான் தனித்து வாழ்த்துச் சொல்லவதில்லை. எம் குலாம் சார்பாக வாழ்த்துச் சொல்வேன். அதனால் அங்கு பன்மை விளியும். நான் மட்டும் அறிந்து பகிர்ந்து கொள்ளும் விடயங்களில் ஒருமை விளியும்..!

யாழ் சார்ந்து.. எங்கள் ஆரம்ப கால நண்பர்களை நண்பிகளைப் பற்றி.. யாழ் கள மூத்த கருத்தாளர்கள் சிலருக்கும் தெரியும். நாங்கள் எல்லாம்... தமிழ் பேச முடியாத இடத்தில்.. வாழ்ந்த போது.. தமிழில் பேச.. தமிழில் எழுத யாழை கருவியாக்கினோம்..! அப்போது அறிமுகமான யாழ் கள மூத்த கருத்தாளர்கள் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள். சிலர் பயன்படுத்தி விட்டு (அறிவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்களைப் பெற்றுவிட்டு) நடையைக் கட்டியும் இருக்கினம்..! ஆனால் இப்பவும் யாழில் இருக்கினம்..!

நாங்கள் தனித்தவர்கள் அல்ல.. நாங்கள்.. ஒரு குலாம். ஆளாளுக்கு எழுதுவதிலும்.. ஒருவன் அல்லது சிலர் எழுத அவனை .. அல்லது அந்தச் சிலரை பலர் இயக்குகிறார்கள்.. இது ஒரு நண்பர்களின் நண்பிகளின் கூட்டு முயற்சி...! ஆரம்பத்தில் இருந்து நாங்கள் அப்படித்தான் எழுதி வருகிறோம். நான் அவர்களில் ஒருவன்...!

இதில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.. தமிழ் எழுத வராத ஆனால் தமிழ் பேச வரும் நண்பர்களின் நண்பிகளின் கருத்துக்களின் காவியாகவும் நான் உள்ளேன்..! :):icon_idea:

இதுதான் இதற்கான முதன்மைக் காரணம்..!

நெடுக்சும், குருவிகளும் ஒரே அணி என்பதால் படர்க்கை..! :icon_idea:

குருவி கூட... குருவிகள் என்று தான் போட்டிருக்காரு. குருவின்னு போடல்ல. ஏன்னா அவரும் நம்ம குலாமில இருந்த ஒருவர் தான்.. ஆனால் நாங்க மட்டுமே அந்த குலாமிற்கு உரியவர்கள் அல்ல. பலர் இருக்கிறோம்.... அதனால்.. பன்மை... தொனிக்கிறது..! அதற்காக ID பன்மை என்றல்ல அர்த்தம்.. பங்காளிகள்.. பன்மை என்று அர்த்தமாகும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வி தலைப்புக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல என்ற காரணத்தினால்.. இதற்கு பதில் அளிப்பதில் தயக்கம் இருந்தாலும்.. இதையே தனி ஒரு விவாதமாக இங்கு நீட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

சரீ ........ நீட்டும் உத்தேசமில்லை! நெடுக்கர்!

கருத்துக்குப் பதிலளித்த உங்கள் பெருந்தன்மையை மிகவும் மதிக்கின்றேன்!

நன்றிகள்! :D

நீங்கள் எழுதும்போது, ஏன் எப்போதும், 'படர்க்கையில்' எழுதுகின்றீர்கள்?

சில விரும்பத் தகாத , கடந்த கால மனக்கசப்புக்களால்' கள உறவுகள், எழுதும் தமிழில் குற்றம் காண்பதில்லை, என முடிவு செய்திருந்தேன்!

ஆனால், நீங்கள் யாழ் களத்தின் நட்சத்திர, பங்களிப்பாளர்! தினமும் உங்கள் பதிவுகளை வாசிப்பதால், எழுதுகின்றேன்!

படர்க்கை, பொதுவாக, மன்னர்கள், மற்றும் கடவுள்களால், மட்டும் தமிழில் உபயோகப் படுத்தப் படுகின்றது!

உதாரணமாக, சுந்தரரிடம், சிவபெருமான், ' நாம் உம்மைத் தடுத்தாட் கொண்டோம்' என்று கூறுவதில் படர்க்கை வரலாம்!

அல்லது பாண்டியமன்னன், இன்று முதல், உம்மை எமது, ஆஸ்தான வித்துவானாக, நியமிக்கின்றோம்" எனும்போது படர்க்கை வரலாம்!

உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது, நீங்கள் ஒரு ஆசிரியர் போலவும், நாங்கள் மாணவர்கள் போலவும், ஒரு உணர்வே வருகின்றது!

தும்பளையானும், இது பற்றி முன்னர் ஒரு பதிவில், குறிப்பிட்டிருந்தார் என நினைக்கின்றேன்!

எனது கருத்துத், தவறு எனின் மன்னிக்கவும்! அல்லது கள விதிகளுக்கு எதிரானது எனினும் தெரியப் படுத்தவும்!

ஏனெனில் நானும் ஒரு புலத்துத் தமிழன்!

அண்ணா,

நான் என்பது தன்மை ஒருமையாகவும் நாம் என்பது தன்மை பன்மையாகவும் இருக்கிறது. அவர் அல்லது அவர்கள் என்பதை தான் படர்க்கை என்று கூற முடியும். இது உங்களுக்கு தெரியாததல்ல. ஆனால் மாறி எழுதி விட்டீர்களோ தெரியவில்லை. அல்லது நான் மாறி எழுதியிருப்பின் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். :(

ஆக நானும் தன்மை பன்மையில் எழுதியுள்ளேன்.

நானும் "நாம் விரும்புகிறோம்", "நாம் கூறுகிறோம்" என்று சில நேரம் எழுதுவதுண்டு. (அனைத்து கருத்துகளிலும் அல்ல). ஆனால் குறிப்பிட்ட திரியில் வேறு யாராவது என் கருத்தை ஒத்ததாக கூறியிருந்தால் அவர்களையும் உள்ளடக்கி நான் கருத்து எழுதுவது வழமை. :D (இந்த திரியில் ஒரு கருத்தில் தான் அவ்வாறு எழுதியுள்ளேன்)

மற்றபடி நான் தன்மை ஒருமையில் தான் கருத்து எழுதுவேன். :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

நான் என்பது தன்மை ஒருமையாகவும் நாம் என்பது தன்மை பன்மையாகவும் இருக்கிறது. அவர் அல்லது அவர்கள் என்பதை தான் படர்க்கை என்று கூற முடியும். இது உங்களுக்கு தெரியாததல்ல. ஆனால் மாறி எழுதி விட்டீர்களோ தெரியவில்லை. அல்லது நான் மாறி எழுதியிருப்பின் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். :(

ஆக நானும் தன்மை பன்மையில் எழுதியுள்ளேன்.

நானும் "நாம் விரும்புகிறோம்", "நாம் கூறுகிறோம்" என்று சில நேரம் எழுதுவதுண்டு. (அனைத்து கருத்துகளிலும் அல்ல). ஆனால் குறிப்பிட்ட திரியில் வேறு யாராவது என் கருத்தை ஒத்ததாக கூறியிருந்தால் அவர்களையும் உள்ளடக்கி நான் கருத்து எழுதுவது வழமை. :D

மற்றபடி நான் தன்மை ஒருமையில் தான் கருத்து எழுதுவேன். :)

நீங்கள் சொல்வது சரி, காதல்.

நாம் என்பது, தன்மைப் பன்மையே!

தன்மைப் பன்மையில், எழுதப் படும் கருத்தையே 'படர்க்கை' எனக் குறிப்பிட்டேன்!

சுட்டிக் காட்டியமைக்கு, நன்றிகள், காதல்!

  • கருத்துக்கள உறவுகள்

பழைய வாத்தியார் புங்கையூரன் எழுதினதை அப்பிடியே நம்பினது தப்பாய்ப் போச்சு.. :D தெளிவுபடுத்திய காதலுக்கு நன்றிகள்.. :rolleyes:

நினைக்கிறோம், எழுதுகிறோம் என்று நெடுக்ஸ் சொல்வது உயர்திணை, பலர்பால், தன்மை ஆகும். :icon_idea: இந்த தமிழ் இலக்கணத்தைப் பலகாலங்களுக்குப் பின் நினைவுபடுத்திய நெடுக்சின் திரிக்கு நன்றிகள்.. :wub:

நினைக்கிறோம், எழுதுகிறோம் என்று நெடுக்ஸ் சொல்வது உயர்திணை, பலர்பால், தன்மை ஆகும். :icon_idea: இந்த தமிழ் இலக்கணத்தைப் பலகாலங்களுக்குப் பின் நினைவுபடுத்திய நெடுக்சின் திரிக்கு நன்றிகள்.. :wub:

எனக்கென்னமோ நெடுக்ஸ் அண்ணா அஃறிணையாக உள்ள மிருகங்களையும் உள்ளடக்கி தான் கருத்து எழுதுகிறார் போல் தோணுது. :lol:

நினைக்கிறோம் எழுதுகிறோம் என்பது பலர்பால் தான். ஆனால் நெடுக்ஸ் அண்ணா பெண்களுக்கெதிராக எழுதும் போது பலர்பால் இல்லாமல் ஆண்பாலை தான் குறிப்பிட்டு எழுதுகிறார் என்று நினைக்கிறேன். :rolleyes:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ நெடுக்ஸ் அண்ணா அஃறிணையாக உள்ள மிருகங்களையும் உள்ளடக்கி தான் கருத்து எழுதுகிறார் போல் தோணுது. :lol:

நினைக்கிறோம் எழுதுகிறோம் என்பது பலர்பால் தான். ஆனால் நெடுக்ஸ் அண்ணா பெண்களுக்கெதிராக எழுதும் போது பலர்பால் இல்லாமல் ஆண்பாலை தான் குறிப்பிட்டு எழுதுகிறார் என்று நினைக்கிறேன். :rolleyes:

பூவுலகின் மூத்த மும்மொழியாம் தமிழதன் இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில் உற்றுநோக்கும்போது பலர்பால் என்றே வகைப்படுத்தக்கூடியதாக உள்ளது.. :D நெடுக்சின் ஆணதிகாரத் தோரணை ஆண்பாலாகக் காட்டினாலும், அதற்காக இலக்கணத்தை மாற்ற முடியாதல்லவா??!! :lol:

நினைக்கிறான், எழுதுகிறான் என்பனவே ஆண்பாலாக வருவன. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.