Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]26-money53-300.jpg[/size]

[size=3][size=4]பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.[/size][/size]

[size=3][size=4]தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.[/size][/size]

[size=3][size=4]பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு. அந்த கல்விக்கும் விளையாட்டிற்கும் தேவையான பணம் பற்றியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மீதான அருமை தெரியும் என்கின்றனர் நிபுணர்கள்.[/size][/size]

[size=3][size=4]பண்டைய காலங்களில் குலகுரு கல்வி முறையில் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்தும் விதமான கல்வி கற்பிக்கப்பட்டது சிறிய வயதில் குருவின் ஆசிரமத்திற்கு வந்து தங்கி பயிலும் மாணவன் கல்வி கற்று பெற்றோரிடம் செல்லும் போது அவன் கையாலேயே குருவிற்கு தட்சிணை அளிப்பான். இதுதான் வழக்கம். இதன் மூலம் பணத்தின் அருமையும் அதன் தேவையும் சிறு வயதிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இன்றைய கல்வி முறை மாறிவிட்டது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து லட்சம் லட்சமாக கொட்டி படிக்க வைக்கின்றனர். எனவே இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.[/size][/size]

[size=3][size=4]எந்த முறைகளில் கற்பிக்கலாம்?[/size][/size]

[size=3][size=4]குழந்தைகளின் கையில் பணத்தைக் கொடுத்து எண்ணச் சொல்லலாம். இந்த பணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் போராடி வேண்டியிருக்கிறது எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு கூறலாம். பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் கதைகள், விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.[/size][/size]

[size=3][size=4]குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களின் கையில் பணத்தை கொடுத்து வாங்கி வரச்சொல்லலாம். மீதமுள்ள பணத்தை சேமிக்க கூறலாம்.[/size][/size]

[size=3][size=4]குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்கள் எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.[/size][/size]

[size=3][size=4]பணத்தினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதற்கு செலவழிக்க வேண்டும்? எதற்கு செலவழிக்கக் கூடாது என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.[/size][/size]

[size=3][size=4]சில சமயம் குழந்தைகளிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி சில நாட்கள் கழித்து அதற்கு வட்டியுடன் திருப்பி தரலாம். இதனால் பணத்தை முதலீடு செய்தால் அதன்மூலம் வருவாய் பெருகும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.[/size][/size]

[size=3][size=4]பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.[/size][/size]

[size=3][size=4]http://tamil.goodret...out-000036.html[/size][/size]

[size=4]'பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும்' [/size]

[size=4]புலம்பெயர் நாடுகளில் எமது அடுத்த சந்ததிக்கு நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டியன :[/size]

[size=4]- பணம் (உழை, சேமி, முதலிடு)[/size]

[size=4]- நேரம் (= பணம்)[/size]

[size=4]பொதுவாக பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை உடனடியாக வாங்கிக்கொடுக்காமல் சேமிப்பு ஊடாக (உண்டியல்) வாங்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தல்வேண்டும்.[/size]

[size=4]பெற்றோர் தாம் படும் துன்பங்களை (பணம் சம்பாதிக்க) பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் (மணித்தியால சம்பளம், வரி ....)[/size]

[size=4]பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்[/size]

[size=4]பெரும்பாலான எம்மவர்கள் புலம்பெயர் தேசங்களில்[/size]

[size=4]- கடன் மட்டைகள், அவற்றின் வட்டி வீதங்கள் பற்றி முழுமையாக அறியாமலேயே அவற்றை பாவிக்கின்றனர். [/size]

[size=4]- வங்கிகள் கடன்களை தரும்பொழுது அவற்றை முழுமையாக பாவிக்கின்றனர். [/size]

[size=4]உதாரணத்திற்கு வங்கி ஐந்து இலட்சம் டாலர் கடன் தரும் என உறுதி அளித்தால் அந்த தொகைக்கே வீட்டை வேண்டுதல். இதன்மூலம் அதிக வட்டியும் தாம் கட்ட வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பல பிள்ளைகளின் பொக்கற் மணி, கைத்தொலைபேசிக்கு அநியாயமாய் போவதைப் பார்க்க... வயித்தெரிச்சலாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி தமிழரசு.

[size=4]சில வங்கிகளில் பெற்றோருடன் இணைந்து பிள்ளைகளுக்கும் (பதினெட்டு வயதிற்குள்) கணக்கை திறந்து அவர்களுக்கும் பணத்தை நிர்வகிப்பது பற்றி சில பெற்றோர் பழக்கி வருகின்றனர்.[/size]

[size=4]இதன் மூலம் பிள்ளைகள் எவ்வாறு பொறுப்பாக செலவழிப்பது என்பதை கற்பதுடன் தாங்களே மாதாந்த கட்டணங்களை (உதாரணம் தொலைபேசி :D ) கட்டும்பொழுது தமது வரவு செலவுகளை தீர்மானிக்கும் பக்குவம் பெறுகின்றனர். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு கொண்டு வந்தமைக்கு நன்றி...கண்டிப்பாக பணத்தின் அருமையை சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிப் பழக்கனும்.தேவை அற்ற செலவுகளை அவர்கள் தாங்களாகவே உணர்ந்து அதனைத் தவிர்த்து வாழப்பழகனும்..பெற்றோர்களாக இருக்ககூடியவர்கள் தாங்கள் ஏன் நீண்ட நேரம் பிள்ளைகளை குழந்தைகள் காப்பகத்திலயோ இல்லை வேறு பொறுப்பளார்களிடமோ விட்டுட்டு வேலை,வேலை என்று போகிறம்..எவ்வளவு தூரம் பிள்ளைகள்,பெற்றோர் பார்த்து பேசும் நேரத்தை மிஸ்பண்ணுகிறார்கள்..இது எதனால் நடக்கிறது போன்ற விடையங்களை சொல்லி பழக்கி பணத்தின் அருமையை அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது..சிறுவயதிலயே அவர்கள் கேட்பது எல்லாம் செய்து பழக்கினால் வளர்ந்த பின் பெற்றோரும்,பிள்ளைகளுக்கும் இடையில் இந்த பணம் ஒன்ற ஒரு விடையத்தினாலயே விரிசல் வந்துடும்..பிள்ளைகள் வளர்த்ததும் பெற்றோரால் அவர்கள் கேட்கும் தொகைக்கு சில விடையங்களை செய்ய முடியாது போனால் பிள்ளைகள் அவற்றை யோசிச்சு,யோசிச்சே தவறான வளிகளில் இறங்குவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது...இப்போது மிகவும் மலிந்து விட்டது போன்று காணப்படும் ஒரு பொருள் கைத் தொலைபேசி...உயர் தரம் படிக்கும் பிள்ளை கைப் போண் வைத்திருப்பதைப் பார்த்துட்டு வந்து 3ம் வகுப்பு படிக்கும் பிள்ளை தனக்கும் கைப் போண் வேணும் என்று கேக்கிறது..எப்படி பில் கட்டுவாய் என்று கேட்டால் நின்று முழுசுது...இப்படியாக ஒவ்வொன்றையும் புதுசு,புதுசா தெரிஞ்சு கொள்ளவேணும் மற்றவர்கள் வைத்திருந்தால் தாங்களும் எது என்றாலும் வைச்சு இருக்கனும் செய்து பார்க்கனும் என்று நினைக்கிற பிள்ளைகளாகத் தான் வளர்கிறார்கள்..

ஏன் நான் கூட இதை எழுவதற்கு உரிய காரணம்...எனக்கு தெரிந்த ஒரு பிள்ளை இந்த மாத முன் பகுதியில் 3ம் வகுப்புக்கு உரிய ஈ.கியு.ஏ.பாடசாலை ரீதியாக நடைபெறும் பரீட்சை எழுதி இருந்தார்..பரீட்சை தொடங்கும் முதலே எனக்கும் அவரது தாய்க்கும் போட்ட கட்டளை பரீட்சை முடிந்ததும் தாயார் பைசிக்கிள் வாங்கித் தரனும்,நான் றிப்ஸ்ரிக் வாங்கித் தரனும் என்பது.தரமாக வாங்குவதாக இருந்தால் இரண்டு பொருட்களுக்குமே கிட்டத் தட்ட 100 டொலர்களு;ககு மேல் தான் தாயாரும் செலவளிக்க வேணும், நானும் செலவளிக்க வேணும். .கண்டிப்பாக வாங்கிக் கொடுக்க வேணும்..செய்வேன்....ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு பேரும் செய்யக் கூடாது என்பதற்காக நான் கொஞ்சம் நாள் போகட்டும் வாங்கித் தாறன் என்று சொலிக் கொண்டு இருக்கிறன்..அப்படி நான் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு காரணம் முன்னமே சில,பல பிழைகளை அவர்கள் மத்தியில் கண்டு பிடிச்சு இருக்கிறன்..எனக்கு சிறு பிள்ளைகள் அழுது அடம் பிடித்து விசயம் சாதிப்பவர்களாக இருந்தால் அறவே பிடிப்பதில்லை...முடிந்த மட்டுக்கு இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லிப் பார்ப்பேன் மீறினால் பணிஸ்மன்ற் தான்..ஏன் இவற்றை சொல்கிறன் என்றால் உண்மையான தேவை என்ன என்பதை அறிந்து அந்தப் பிள்ளைக்கு அதை வாங்கிக் கொடுக்கலாம்..பக்கத்து வீட்டுப் பிள்ளை கூடிய விலையில் வாங்கிய சில பொருட்கள் வைச்சு இருக்கிறது என்றால்....கிறடிட் கார்ட்டில் பணம் எடுத்தாவது தாங்கள் விரும்பும் விடையங்களை பெற்றோர்,அன்ரி,அத்தையாக இருக்கக் கூடியவர்கள் செய்யலாம் தானே என்ற எண்ணம் எங்கள் பிள்ளைகள் மத்தியில் வளர விடக் கூடாது..

[size=1]

[size=4]நன்றி யாயினி![/size][/size][size=1]

[size=4]அடம்பிடிக்கும் பிள்ளைகளை முழுமையாக குறை கூற முடியாது. நாம் தான் அவர்களுக்கு வேறு விதமாக கூற வேண்டும் என எண்ணுகிறேன். ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு மாதிரி. அதற்கேற்ப நாம் நிலைமைகளை கூறவேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]எனது நண்பர் ஒருவரின் மகளுக்கு வயது ஒன்பது. அவரின் பிறந்தநாளுக்கு ஒரு ஈ- ரீடர் வேண்டிக்கொடுத்தேன். மூன்று மாதங்களின் பின்னர் நண்பர் சொன்னார் ஆசிரியர் நூலகத்தில் புத்தகங்களை இரவல் வேண்ட யார் யாரிடம் ஈ- ரீடர் உள்ளது எனக்கேட்ட பொழுது தனது மகள் மட்டுமே கையை தூக்கினாராம். இவர் மட்டும் தான் வகுப்பில் வெள்ளை இனத்தவர் அல்லாதவர். இவ்வாறு எமது பிள்ளைகளை சரியான முதலீடு செய்து முன்னே விட்டுவிட வேண்டும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]'பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும்' [/size]

[size=4]புலம்பெயர் நாடுகளில் எமது அடுத்த சந்ததிக்கு நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டியன :[/size]

[size=4]- பணம் (உழை, சேமி, முதலிடு)[/size]

[size=4]- நேரம் (= பணம்)[/size]

[size=4]பொதுவாக பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை உடனடியாக வாங்கிக்கொடுக்காமல் சேமிப்பு ஊடாக (உண்டியல்) வாங்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தல்வேண்டும்.[/size]

[size=4]பெற்றோர் தாம் படும் துன்பங்களை (பணம் சம்பாதிக்க) பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் (மணித்தியால சம்பளம், வரி ....)[/size]

தாயகத்தில் இருந்த நல்ல ஒரு நடைமுறை புலம்பெயர் நாடுகளில் இல்லாமை கண்டுவியக்கிறேன்.

தாயகத்தில் பாடசாலை வங்கிக் கணக்கு நடைமுறையில் இருந்தது. நாங்கள் சேமிக்கும் பணத்தை எமது பாடசாலையூடான வங்கிக் கணக்கில் அதற்குரிய ஆசிரியரிடம் கையளித்து வைப்பில் வைக்கலாம். பின்னர் தேவை ஏற்படும் போது பெற்றோரிடம் கடிதம் வாங்கி அதை சமர்ப்பித்தால் தேவையான பணத்தை மீளப் பெறலாம்.

நாங்கள் எல்லாம் இந்தக் கணக்கை சிறிய வயதில் பாவித்திருக்கிறோம். அதன் பின்...

16 வயதை அடைந்ததும்.. தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) முதலாவது வங்கிக் கணக்கை ஆரம்பித்தேன். வைப்பிலிடும் தொகைக்கு ஏற்ப.. அதில் அழகான பண முத்திரைகள் ஒட்டி விடுவார்கள். 5 ரூபா.. 10 ரூபா.. 20 ரூபா.. 50 ரூபா.. 100 ரூபா முத்திரைகள். வைப்பிலிடும் தொகைக்கு ஏற்ப முத்திரைகள் ஒட்டப்படும். அந்த வயதில் அதில் ஒரு போட்டி. யார் அதிகம் சேமிப்பது என்று. இன்றும் அதில் போட்ட தொகையை அப்படியே சேமிப்பில் வைத்திருக்றேன்..! (சிறீலங்கா அரசு கொள்ளை அடிச்சிராட்டி அது இருக்கும்.. என்று நம்புகிறேன்.)

இந்த நடைமுறைகள் இங்கு இல்லை. இங்கு பெற்றோரின் கீழ்.. சிறுவர் வங்கிக் கணக்கை ஆரம்பிக்கிறார்கள். அரச உதவித் தொகைகள் அங்கு போகின்றன. பிள்ளைகளின் பெயரால்.. பெற்றோர் எடுத்துச் செலவு செய்கின்றனர். இதில் சேமிப்பு என்ற ஒன்றே இல்லை. அரசு தான் பாவம்.. சேமிச்சுப் பழகுது...???! பெற்றோரும் பிள்ளைகளும் சேமிப்புப் பற்றிய அறிவின்றி ஊதாரிகளாக உள்ளனர்.

தாயகத்தில் 1 ரூபாவைக் கூட மாணவர்கள் தாம் உணர்ந்து சேமிக்க பாடசாலை வங்கிக் கணக்கு உதவியது. ஏன் 50 சதம் கூட சேமிக்கலாம். அதற்கு கீழ் வைப்பிலிட அனுமதியில்லை. சேர்த்து வைத்து வைப்பிலிட வேண்டும்.

இப்போதும் இந்த நடைமுறைகள் அங்கு இருக்கோ தெரியவில்லை... 1990 களில் நடைமுறையில் இருந்தது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அகோதாண்ணா சொல்லி இருப்பது போல் பிள்ளைகளின் உண்மையான தேவை அறிந்து ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை..அதை வாங்கிக் கொடுப்பதற்கு சற்று சுணங்கினாலும் அதற்கு உரிய காரணத்தையும் மெதுவாக எடுத்து சொன்னால் பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள்....ஈ.றீடர் படிக்கும் பிள்ளைகளுக்கு தேவையான பொருள் தான்..தேவை அறிந்து வாங்கிப் பரிசளித்த உங்களுக்கு நன்றிகள்.

சிறு பிள்ளைகள் வங்கி கணக்கு வைத்திருப்பது முற்று முழுதாக நன்மை பயக்கும் என்று இல்லை..ஊரில் பிள்ளைகள் பாடசாலை ஆசிரியரிடம் கொடுத்து அவர் ஊடாகத் தான் அந்த வங்கியில் பணத்தை இடுவது,எடுப்பது போன்ற விடையங்களை செய்வார்கள்..அது மட்டுமில்லை அதற்கு உரிய ஊக்குவிப்பும் செய்வார்கள் என்னும் போது பிள்ளைகளுக்கு பணத்தை விரயம் செய்ய மனம் வராது..ஆனால் வெளி நாடுகளைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை..சொல்லப் போனால் வங்கி கணக்கோ இல்லை வேறு விடையங்களோ செய்ய ஆரம்பிக்கும் போது தான் பெற்றோரின் அனுமதி கேட்பார்கள்..கொஞ்சம் பணத்தைக் கண்டுட்டுட்டால் பெற்ற தகப்பனையே கேட்பார்கள் ஆ....நீர் வேலைக்கு போனனீரா...எவ்வளவு உளைச்சு எங்களுக்கு தந்ததனீர் என்று கேட்பார்கள்..கடந்த மாதம் எனது கண்ணால் இப்படி ஒரு மகன் தகப்பனரை கேட்டு சண்டை போட்ட சம்பவம் ஒன்று நடந்தது...

ஆனால் அந்த தந்தையார் அவர்களுக்காக இதுவரைக்கும் மிகுந்த கஸ்ரமான வேலை எல்லாம் செய்கிறார்..பிள்ளை வங்கியில் பணம் சேகரிச்சு வைச்சு இருந்து சினிமா பார்ப்பதில் இருந்து எது எல்லாம் செய்யக் கூடாதோ அது எல்லாம் செய்கிறது..இப்போ தான் உயர் தரம் முடித்து கல்லுரிக்கு போவதற்கு உரிய அனுமதி கிடைத்திருக்கிறது அதற்கு இiயில் governageneral என்ற நினைப்பு..ஆகவே சிறுவயது முதலே பெற்றோரின் கஸ்ரங்களைப் புரிந்து நடக்கிற பிள்ளைகளாக இருந்தால் பணம் கொடுத்து சேமிக்க பழக்குவதில் தப்பில்லை..ஆனால் பணம் தான் பிரதானம் என்று நினைக்கிற பிள்ளைகளுக்கு பணத்தினாலயே வாழ்க்கையை பாழாக்கிறவர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலாது....எல்லா பெற்றோரும் பிள்ளைகளுக்கு வரும் பணத்தை செலவு செய்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது..அவர்களுக்கு உரிய பணத்தை அப்படியே குழந்தைகளின் எதிர்கால உயர் கல்விக்கு உரிய சேமிப்பாக அந்தப் பிள்ளைகளுக்கு தெரியாமலே வைப்பிடும் பெற்றோரும் இருக்கிறார்கள்..பணம் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண சேமிப்பு இல்லாமல் வாழ்ந்த நாங்கள்,நான் பட்ட கஸ்டங்களை,ஊர் அவலங்களை படங்கள் மூலமாகவும் நேரடியாகவும் சொல்லி என் பிள்ளைகளை வளர்த்தேன்...வளர்க்கின்றேன்.பணத்தின் அருமை என்னைவிட என் மனைவிக்கும்,பிள்ளைகளுக்கும் நன்கு தெரியும். :wub:

[size=4]பயனுள்ள கருத்துக்கள். [/size]

[size=4]

ஆனால் அந்த தந்தையார் அவர்களுக்காக இதுவரைக்கும் மிகுந்த கஸ்ரமான வேலை எல்லாம் செய்கிறார்..பிள்ளை வங்கியில் பணம் சேகரிச்சு வைச்சு இருந்து சினிமா பார்ப்பதில் இருந்து எது எல்லாம் செய்யக் கூடாதோ அது எல்லாம் செய்கிறது..இப்போ தான் உயர் தரம் முடித்து கல்லுரிக்கு போவதற்கு உரிய அனுமதி கிடைத்திருக்கிறது அதற்கு இiயில் governageneral என்ற நினைப்பு..ஆகவே சிறுவயது முதலே பெற்றோரின் கஸ்ரங்களைப் புரிந்து நடக்கிற பிள்ளைகளாக இருந்தால் பணம் கொடுத்து சேமிக்க பழக்குவதில் தப்பில்லை..ஆனால் பணம் தான் பிரதானம் என்று நினைக்கிற பிள்ளைகளுக்கு பணத்தினாலயே வாழ்க்கையை பாழாக்கிறவர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலாது....எல்லா பெற்றோரும் பிள்ளைகளுக்கு வரும் பணத்தை செலவு செய்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது..அவர்களுக்கு உரிய பணத்தை அப்படியே குழந்தைகளின் எதிர்கால உயர் கல்விக்கு உரிய சேமிப்பாக அந்தப் பிள்ளைகளுக்கு தெரியாமலே வைப்பிடும் பெற்றோரும் இருக்கிறார்கள்..பணம் நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும்.

[/size]

மிகவும் யதார்த்தமான, கசப்பான உண்மை.

பண சேமிப்பு இல்லாமல் வாழ்ந்த நாங்கள்,நான் பட்ட கஸ்டங்களை,ஊர் அவலங்களை படங்கள் மூலமாகவும் நேரடியாகவும் சொல்லி என் பிள்ளைகளை வளர்த்தேன்...வளர்க்கின்றேன்.பணத்தின் [size=4]அருமை என்னைவிட என் மனைவிக்கும்,பிள்ளைகளுக்கும் நன்கு தெரியும். :wub:

[/size]

[size=4]இப்படி நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்த்தமை ஒரு சாதனை. நான் எனது வாழ்க்கையில் க.பொ.த. உயர்தரம் கற்கும்பொழுது ஒரு அரைக்களுசானுடன் மட்டுமே படித்தேன், ஆனால், மூன்று நேரமும் சாப்பிடும் வசதி இருந்தது.எனது தந்தையோ இரண்டு நேர சாப்பாட்டுடன் மட்டுமே வளர்ந்தவர். பழையதுகளை, இன்றைய தாயக நிலைமைகளை எனது பிள்ளைகளுக்கும் கூறி வளர்கின்றேன், பார்க்கலாம். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.