Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு வந்துள்ள சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் இன்று நண்பகல் சந்திப்பு! பல முக்கியமான விடயங்கள் ஆராயப்படும் என எதிர்பார்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shivshankar-menon_seithy150.jpg

[size=4]உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இரவு கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் பாதுகாப்பத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று நண்பகல் 12.00 மணியளவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு, நில ஆக்கிரமிப்பு என்பன தொடர்பில் இதன்போது முக்கியமாக ஆராயப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்த சம்பந்தன் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பு திரும்பினார். இதனையடுத்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுடன் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்திய சம்பந்தன் இன்று நண்பகல் சிவ்சங்கர் மேனனனுடனான பேச்சுக்களில் பங்குகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]வடபகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட அடிப்படையிலான சிங்களக் குடியேற்றங்கள், இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காணும் விடயத்தில் அரச தரப்பில் காணப்படும் அசமந்தப்போக்கு என்பன தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது சம்பந்தன் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமது நிலைப்பாடு என்ன என்பதையும் சிவ்சங்கர் மேனன் இதன்போது விளக்குவார்.[/size]

[size=4]ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ ஆகியோரையும் சந்திக்கும் சிவ்சங்கர் மேனன், வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார் எனத் தெரிகின்றது. வடமாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் அங்கு நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டியிருப்பதால் 2013 செப்டம்பரில்தான் அதனை நடத்தக்கூடியதாக இருக்கும் என அரசாங்கம் தெரிவிக்கலாம் என வேறு சில தகவல்கள் கூறுகின்றன.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

[size=5]சிவ்சங்கர் மேனன், சம்பந்தன் சந்திப்பு[/size]

[size=4]இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு நாள் விஜயத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தார்.[/size]

[size=4]இலங்கை அரசியல் நிலவரம் குறித்தும் இரு நாட்டுறவுகள் குறித்தும் அவர் விவாதித்த்தாக்க் கூறப்படுகிறது.[/size]

[size=4]இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையாலேயே ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருந்தாலும், இந்த விஷயத்தில் தான் தொடர்ந்து அனைத்து தரப்புகளுடனும் பேசி வருவதாகவும், ஒரு உடன்பாட்டுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், இந்தியாவின் இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.[/size]

[size=4]இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையில் 2008ல் இரு தரப்புகளும் ஒப்புக்கொண்ட யதார்த்த ரீதியிலான ஏற்பாடுகள் தொடரப்படவேண்டும் , ஒரு முறையான மாற்று ஏற்பாட்டை எட்டும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. இரு நாட்டு மீனவர்களும் நடத்திய சந்திப்புகள் மற்றும் விவாதங்கள் மேலும் தொடரப்பட்டு, அந்த முயற்சிகள் ஊடாக வரும் எந்த ஒரு புரிந்துணர்வையும், எதிர்காலத்தில் இந்த மனித நேயப் பிரச்சினைக்குக் காணப்படும் தீர்வின் அடிப்படையாக வைக்கலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.[/size]

[size=5]சம்பந்தருடன் சந்திப்பு[/size]

[size=4]தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் நில அபகரிப்புகள், ராணுவமயமாக்கல் ஆகியவை குறித்து சிவ்சங்கர் மேனனிடம் எடுத்துரைத்த்தாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size]

[size=5]இந்த முறை சிவ்சங்கர் மேனனின் விஜயம் ஒரு தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கு சொல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தான் உணர்வதாக அவர் தெரிவித்தார்.[/size]

[size=4]இது தவிர, இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்த இரு தரப்புப் பேச்சு வார்த்தைகள் நின்று போயிருப்பது, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இனப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசு யத்தனிப்பது ஆகியவையும் விவாதிக்கப்பட்ட்தாக சம்பந்தன் தெரிவித்தார்.[/size]

[size=4]மேலும், நாட்டின் பிற மாகாண சபைகளுக்குத் தேர்தல்களை நடத்தும் சூழல் இருக்கும் போது, வட மாகாணத்துக்கு மட்டும் இன்னும் தேர்தல் நடத்த இலங்கை அரசு முன் வராத பிரச்சினையும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.[/size]

[size=4]ஆனால் இந்தியா, ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கெதிராக வாக்களித்த்தால், இந்தியா மீது இலங்கை வருத்தத்தில் இருப்பதாகவும், எனவே இந்தியாவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் நிலையில் இலங்கை இல்லை என்றும் வரும் செய்திகள் பற்றிக் கருத்து தெரிவித்த சம்பந்தன், இந்தியா இந்த வாக்கெடுப்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் முன்னர் அதன் விளைவுகளைக் கவனத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்திருக்கும் என்று தான் நம்புவதாக்க் கூறினார். மேலும், இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க பிராந்திய வல்லரசு என்ற நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அதன் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் அக்கறையுடன் கவனிக்கும் என்று தான் கருதுவதாகவும், எனவே இந்தியாவுக்கு இலங்கை விஷயத்தில் செல்வாக்கில்லாமல் போய்விடும் என்ற கருத்தை தான் நம்பவில்லை என்றும் கூறினார்.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/06/120629_nsasampanthanmeet.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க பிராந்திய வல்லரசு என்ற நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அதன் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் அக்கறையுடன் கவனிக்கும் என்று தான் கருதுவதாகவும், எனவே இந்தியாவுக்கு இலங்கை விஷயத்தில் செல்வாக்கில்லாமல் போய்விடும் என்ற கருத்தை தான் நம்பவில்லை என்றும் கூறினார்.

சிறிலன்கா விடயத்தில் சந்தேகம் தான்...மாலைதீவு க்கு மட்டும் பிராந்திய வல்லராசக இருக்கமுடியும் ..சிறிலங்காவுக்கு அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவான செய்தியைக் குடுக்கப் போறாராம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

வந்தார் பழைய கணக்கிற்கு விருந்து சாப்பிட்டுப் போறார். இதில எங்கட ஊடகங்களின் ஊகம் இருக்கே.. அதுதான் அவருக்கு வெற்றி. :( :rolleyes:

சிங்களவனுக்கு அக்கறை இருக்கோ இல்லையோ.. ஐக்கிய இலங்கை என்பதில் மேனன் குறியா இருக்கிறாய்யா..! இதில எங்களில இன்னும் சிலதுகள் இந்தியா தமிழீழத்துக்காக உழைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கினம். எங்களைப் பலியிட்டு இந்தியா ஒ(எ)ருமைப்பாடு காத்தது தான் மிச்சம்..! :rolleyes:

--------------------------------

[size=5]வழக்கமான ஆலோசனைகள் நடத்ததான் நான் இலங்கை வந்தேன்: சிவசங்கர் மேனன்[/size]

[size=4]தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தனையும் சந்தித்து பேசினார்.[/size]

[size=4]இந்த சந்திப்பை தொடர்ந்து சிவசங்கர் மேனன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-[/size]

[size=4]இந்தியா எப்போதுமே ஒருங்கிணைந்த இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. அதில், அனைத்து குடிமக்களும் சம உரிமை, நீதி, மதிப்பு, சுயமரியாதை ஆகியவற்றுடன் வாழ வேண்டும். மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு பணிகளில் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது.[/size] (2009 முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் இதையே தான் சொன்ன ஞாபகம். இதையே 1983 இலும் சொல்லித் தொலைச்சிருந்தா.. ஏன் ஒரு முள்ளிவாய்க்கால் வந்திருக்கப் போகுது..!)

[size=4]சமீபத்திய நிலவரம், இரு தரப்பு உறவு, பொதுவான விஷயங்கள் குறித்து விவாதித்தேன். தமிழர் பிரச்சினையில், இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி என்னிடம் கூறப்பட்டது. இது இலங்கை பிரச்சினை என்றாலும், இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினை என்றாலும்கூட, இதில் தொடர்ந்து நாங்கள் கவனம் செலுத்துவோம். இது தொடர்பாக தேவையான உதவிகளை செய்வோம்.[/size]

[size=4]வழக்கமான ஆலோசனைகள் நடத்தவும், இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்தான் நான் இலங்கை வந்தேன்.[/size]

[size=4]தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாவது பற்றியும் விவாதித்தேன். இதில் மாற்று ஏற்பாடு செய்கிற வரை, 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செய்துகொண்ட நடைமுறை ஏற்பாடு பின்பற்றப்படவேண்டும். கடந்த காலத்தில் இந்திய, இலங்கை மீனவர் சங்கங்கள் சந்தித்து பேசி புரிந்துணர்தல் ஏற்பட்டது. அதே போல அந்த புரிந்துணர்வு மேலும் வலுபட மீண்டும் இரு சங்கங்களும் சந்தித்து பேச வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். அதுதான் இந்த (தமிழக மீனவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்துகிற) மனித நேய பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு அடிப்படையாக அமையும்.[/size]

[size=4]இவ்வாறு சிவசங்கர் மேனன் கூறினார்.[/size]

நன்றி:நக்கீரன்.கொம்

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.