Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரிஹரன் வருவதில் சந்தேகம்

Featured Replies

[size=5]இந்திய பாடகர் ஹரிஹரன் இலங்கை வருவதில் சந்தேகம்[/size]

கொழும்பில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவிருந்த இந்திய பாடகர் ஹரிஹரனின் விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர், இலங்கை வருவதில் சந்தேகம் நிலவுகின்றது.

ஹரிஹரினின் இலங்கை விஜயத்துக்கு தமிழகத்தின் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு தமிழக அமைப்புக்கள் விடுத்துள்ள கண்டனத்தை அடுத்தே அவரது விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசு கடந்த 2009இல் நடத்திய யுத்தத்தின்பொது தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனை மறைக்க இலங்கை அரசு இசை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்திய கலைஞர்களை அழைத்து நடத்த எண்ணுகிறது.

அதன் சதியை புரிந்துகொண்டு திரையுலகினரும், இசையுலகினரும் விழாவை புறக்கணித்து வருகின்றனர்.

2010இல் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் புறக்கணித்தனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாடகர் மனோ உள்ளிட்டோர் எதிர்ப்பினால் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். தமிழ் நெஞ்சங்களுக்கு சிறு கஷ்டம் வருவது போலவும் நடக்க மாட்டோம் என்று மனோ அப்போது பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த 'பிக்மவுண் டெய்ன்' இசைக்குழுவும் தனது நிகழ்ச்சியை ரத்து செய்தது. தமிழா தமிழா நாளை நம்நாளே என்று நம்பிக்கையூட்டும் ஹரிஹரன் குரலையே உலகம் கேட்க விரும்புகிறது. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் ரத்து செய்யவேண்டும்' என்று அவ்வறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே ஹரிஹரனின் இலங்கை விஜயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://tamilmirror.l...6-10-53-17.html

602623_4179312559368_271045883_n.jpg

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]இவரின் முகலூலில் சிங்கள தேசத்திற்கு போகவேண்டாம் எனப்பதியுங்கள் :[/size]

[size=4]http://www.facebook....238306366236216

http://www.facebook....133184263390040[/size]

Edited by akootha

மின்னல் அஞ்சல் விலாசம் இருந்தால் பதிந்துவிடுங்கள். முகநூல் இல்லை. தொலைபேசி அழைப்பு சாத்தியம் குறைவு. மின்னல் அஞ்சல் தான் இதுவரையில் பழக்கத்தில் இருந்து வருகிறது. தேவையானால் தபால் போட முடியும். அது போய்ச்சேர நாள் எடுக்கும்.

நன்றி.

Edited by மல்லையூரான்

தான் இலங்கை பயணத்தை ரத்து செய்வாதாக உறுதி அளித்தார். தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் களஞ்சியம் இந்த தகவலை நம்மிடையே உறுதி படுத்தினார். தமிழர் நலம் பேரியக்கத்தின் மராட்டிய மாநில பொறுப்பாளர்கள் பாடகர் ஹரிஹரன் வீட்டை முற்றுகைஇட்டு ..

கொட்டும் மழையிலும் காலையில் இருந்து போராடி முடிவில் .தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் அவர்கள் ஹரிஹரனிடம் அலை பேசியில் பேசி பணிய வைத்தார்...ஹரிஹரன் இலங்கை போகமாட்டேன் என்று எழுத்தில் உறுதி அளித்தார். தமிழர் நலனுக்காக கொட்டும் மழையிலும் ஹரிஹரன் வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்திய மராட்டிய வாழ் தமிழர்களுக்கு தமிழக தமிழகளின் சார்பில் நெஞ்ச, நிறைந்த வாழ்த்துக்கள் . தமிழர் நலம் பேரியகத்திற்கும், இயக்குனர் களஞ்சியத்திற்கும் நம் பாராட்டுகள்.

http://www.newsalai.com/2012/07/blog-post_1862.html

நன்றி vendan அண்ணா, அறிய தந்தமைக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]ஹரிஹரன் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது![/size]

[size=3]

[size=4]hariharan-1-100x100.jpg[/size][/size]

[size=3]

[size=4]கொழும்பில் மிக பிரமாண்டமாக நடைபெற இருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த தென்னிந்த பாடகர் ஹரிஹரனின் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.[/size][/size][size=3]

[size=4]சிறீலங்காவின் கொழும்பில் நடைபெற இருந்த இசைநிகழ்சிக்கு தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் செல்வுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் மே17 இயக்கம் உள்ளிட்ட தமிழ்உணர்வாளர்கள் மற்றும் கலைத்துறைசார் தமிழ்உணர்வாளர்கள தங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளதை தொடர்ந்து இசை நிகழ்சி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பினை மே 17 இயக்கம் ‘பாடகர் ஹரிகரன் அவர்களளே! இலங்கை பாடல்விழாவிற்கு சொல்லாதீர்கள் புறக்கணியுங்கள்.உங்கள் நிகழ்ச்சி சிங்களஅரசினை காப்பாற்றும் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை நியாயப்படுத்தும் இருவாருத்திற்கு முன்புஸ்ரேலுக்கு பாடச்செல்வதை ரத்துசெய்த இசை கலைஞர் ஜாகீர் உசேனைப்போல மனிதஉரிமைக்கு மதிப்பளியுங்கள் என்று மே 17 இயக்கம் துண்டுபிரசுரங்கள் மூலம் தமது இனஉணர்வின் வெளிப்பாடுகளை எடுத்துக்காட்டியுள்ளதை தொடர்ந்து தவிர்க்கமுடியாத காரணத்தால் தான் இலங்கை செல்லவில்லை என்று பாடகல் ஹரிஹரன் அறிவித்துள்ளதை தொடர்ந்து அந்த இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிறுவனம் இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதுடன் முன்பதிவுகள் செய்து சீட்டுக்களை பெற்றவர்கள் பணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என் அறிவித்துள்ளது.[/size][/size][size=3]

[size=4]http://www.saritham.com/?p=63760[/size][/size]

இதற்காக போராடிய கவிஞர் தாமரை மற்றும் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி என்ற வார்த்தை போதாது உறவுகளே.

சிரம் தாழ்த்தி வணங்ககின்றேன்.

உங்கள் உழைப்பும் நேரமும் வீண்போகாது

தர்மமே வெல்லும்

தமிழ் நாட்டில் கருணாநிதி போனபின்னர் தமிழ் மக்கள் பல உதவிகள் செய்துவிட்டார்கள்.

நன்றி மகாராஸ்டிர தமிழருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் இனமானத்தமிழருக்கு..!!

தமிழ் நாட்டில் கருணாநிதி போனபின்னர் தமிழ் மக்கள் பல உதவிகள் செய்துவிட்டார்கள்.

நன்றி மகாராஸ்டிர தமிழருக்கு.

பாராளுமன்ற தேர்தலில் மீதியை செய்து விடுவார்கள்..........

நன்றி சொல்லக்கூட எமக்கு அருகதை இல்லை ... வெட்கம் ... தமிழகத்தில் அல்ல சிங்களத்தின் தலைநகரிலேயே நடைபெற இருந்த இந்நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள், தமிழக மானத்தமிழர்கள்! ஆனால் நாமோ??? ... பாரிஸில் சிங்கள கொலையாளிகளை கூட்டி வந்து ந்ம் சிறார்களுக்கு பரிசளிக்கிறோம்! .. கேட்டால் நாமில்லை அவர்கள்? இல்லை நாமில்லை அவர்கள்தான்?? ...

இப்போ தமிழ்நாட்டில் நடப்பதை பார்க்கும் பொது... 1987 'லே இருந்தே இப்படி ஏதேனும் அவர்கள் மூலமா செய்திருக்கலாமோ

என்று ஒரு நப்பாசை..ம்ம் என்ன செய்வது..எல்லாம் விதி

ஹரிஹரனும் தமிழன் தானே...

மலையாலகாரனுங்களையும் திருப்பனும் அப்போது தான் முழுவெற்றி.

நன்றி எனக் கூறி நாம் வேறு தமிழக உறவுகள் வேறு என பிரிப்பது போல் உள்ளது.

ஈழத்து உறவுகள், புலம் பெயர்ந்துள்ள நாம் மற்றும் தமிழக உறவுகள் இணைந்து பயணித்தால் நிச்சயம் தமிழனுக்கு ஒரு விடிவு கிடைக்கும்.

கனடிய சிறுமி மகிசா விஜய் டிவிஇல் தோன்றி தமிழக உறவுகளுடன் பயணித்தது போன்று பல்வேறு மட்டங்களிலும் ஈழ / புலம்பெயர் மக்களின் பங்களிப்பு தமிழகத்தில் இடம்பெறவேண்டும்.

கள உறவு, புரட்சி அடிக்கடி கூறுவது போன்று புலம் பெயர் மக்களின் பொருளாதார வசதிகள் தமிழக உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும். தமிழக உறவுகளின் உறுதியான ஆதரவுத்தளத்தின் மூலமே எமக்கான தீர்வு சாத்தியமாகும்.

புலம் பெயர் மக்களின் பொருளாதார வசதிகள் தமிழக உறவுகளுக்கும் கிடைக்க வேண்டும்.

[size=5]புலம் பெயர் ஈழத்தமிழரின் பொருளாதார வளத்தின் மீது பலருக்கு ஒரு கண்!

தமிழின அழிப்புக்கு துணை போகும் காட்டுமிராண்டி ஜனநாயக - இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு என்றும் ஆதரவான (1) இந்து சேவா சங்கம் (HSS), (2) விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) (3) SEWA International (4) ராமகிருஷ்ண மிஷன் (5) சின்மயா மிஷன், (6) வாழும் கலை (7) தென்னிநிதிய திருச்சபை, கரித்தாஸ் முதலிய மதமாற்றும் பல கிறிஸ்தவ அமைப்புக்கள் (8) சிங்கள ஆக்கிரமிப்புக்கு துணை போகும் சர்வோதயா போன்ற பல அமைப்புக்களுக்கு புலம் பெயர் ஈழத்தமிழரின் பொருளாதார வளத்தின் மீது ஒரு கண்!

புலம் பெயர் ஈழத்தமிழர் ஏமாந்துவிட மாட்டார்கள் !!! [/size]

கருணா, பிள்ளையான், மகிந்தா, கோட்டபாய, டக்கிலஸ் ஏன் இவர்களை விட்டுவிட்டீங்கள்.......

நானும் உப்பிடித்தான் நினைத்திருந்தேன்.. ஆனால் நாம் இங்கிருந்து செய்ததை விட அவர்கள் (தமிழக உறவுகள்) எமது தாயக மக்களுக்காக செய்தவை, மற்றும் செய்துகொண்டிருப்பவை நிறைய.

நன்றி சொல்லக்கூட எமக்கு அருகதை இல்லை ... வெட்கம் ... தமிழகத்தில் அல்ல சிங்களத்தின் தலைநகரிலேயே நடைபெற இருந்த இந்நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள், தமிழக மானத்தமிழர்கள்! ஆனால் நாமோ??? ... பாரிஸில் சிங்கள கொலையாளிகளை கூட்டி வந்து ந்ம் சிறார்களுக்கு பரிசளிக்கிறோம்! .. கேட்டால் நாமில்லை அவர்கள்? இல்லை நாமில்லை அவர்கள்தான்?? ...

மன வேதனையான விடையம். நமது மொழியையும், கலைகளையும் அழிக்க இப்படியும் ஒரு நடிப்பு. கமீது "ஜேயம் புகழும் புண்ணிய கதை ஸ்ரீ ராமனின் கதையே" ராமாயண பாராயணம் பண்ணியதைப்போன்றது. இவர் மிக ஆழமாக தமிழருக்குள் ஊடுருவி ராசபக்சாக்களைவிட பலமாக குத்தி வருகிறார். சந்திரிக்காக என்ற குளுமாடு தமிழரைக்குத்தியது கதிர்காமர், தாயான் என்ற இரு கொம்புகளை பாவித்து.

Edited by மல்லையூரான்

ஹரிஹரனின் இலங்கை விஜயத்தை நிறுத்துவதற்காக போராடிய தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஏற்கனவே இலங்கைக்கு போனவர்கள் பிரச்சினைப்பட்டார்கள், இலங்கைக்கு போக முயற்சித்தவர்களும் தமிழக மக்களின் போராட்டத்தின் பின் அதனை கைவிட்டார்கள். இது அனைவருக்கும் தெரியும்.

எனவே இனிமேல் இலங்கை அரசாங்கம் தமது எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தமிழக நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வேறு கலைஞர்களை அழைத்தால் தமிழக மக்கள் போராட்டம் நடத்த முன்னமே உரியவர்கள் தமது மறுப்பை அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்லக்கூட எமக்கு அருகதை இல்லை ... வெட்கம் ... தமிழகத்தில் அல்ல சிங்களத்தின் தலைநகரிலேயே நடைபெற இருந்த இந்நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள், தமிழக மானத்தமிழர்கள்! ஆனால் நாமோ??? ... பாரிஸில் சிங்கள கொலையாளிகளை கூட்டி வந்து ந்ம் சிறார்களுக்கு பரிசளிக்கிறோம்! .. கேட்டால் நாமில்லை அவர்கள்? இல்லை நாமில்லை அவர்கள்தான்?? ...

முற்றிலும் உண்மை.வெட்கப்பட வேண்டியவர்கள் நாங்கள் தான்.

நன்றி சொல்லக்கூட எமக்கு அருகதை இல்லை ... வெட்கம் ... தமிழகத்தில் அல்ல சிங்களத்தின் தலைநகரிலேயே நடைபெற இருந்த இந்நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்கள், தமிழக மானத்தமிழர்கள்! ஆனால் நாமோ??? ... பாரிஸில் சிங்கள கொலையாளிகளை கூட்டி வந்து ந்ம் சிறார்களுக்கு பரிசளிக்கிறோம்! .. கேட்டால் நாமில்லை அவர்கள்? இல்லை நாமில்லை அவர்கள்தான்?? ...

ம்ம்ம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் சிங்களவர்களை அழைக்காமல் தம்மில் ஒருவரை விட்டாவது பரிசளித்திருக்கலாம்.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டால் வெளியில் நின்று கேள்வி கேட்காமல் உரிய அமைப்புக்கு உள்ளுக்கு போய் நின்று நான் விரும்பும்படி எல்லாவற்றையும் செய்ய சொல்லி மருதங்கேணி அண்ணா சொல்லிப்போடுவார். :wub: எதற்கும் பேசாமல் இருக்கிறன். :rolleyes::lol::icon_idea:

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.