Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோடை கால சுருட்டல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோடை கால சுருட்டல்!

சாத்திரி (ஒரு பேப்பர்)

கோடை காலக் கொண்டாட்டம் குளு குளு ஊட்டி செல்லவேண்டுமா? பழனிக்கு மொட்டை போடவேண்டுமா திருப்பதியில் நாமம் போடப் போகிறீர்களா ? அழையுங்கள் குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனம் .. அல்வா சாப்பிட ஆசைiயா? திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்கிறோம் அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கோயில்களை தரிசனம் செய்யவும் .ஊருக்கு உறவுகளை பார்க்க போகவும். இந்தியா மற்றும் இலங்கைக்கான ரிக்கற்றுக்களை குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யக் காத்திருக்கிறார்கள் சவுத் ஹரோ பகுதியில் உள்ள நோத்தோல்ட் வீதியில் (nort halt road ) வீதியில், முன்பு தபாலகம் அமைந்திருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனத்தினர். இப்படியொரு விளம்பரத்தை இலண்டன் தமிழர்கள் கடந்த காலங்களிலில் கேள்விப் பட்டிருப்பீர்கள். இப்படி விளம்பரத்தை பார்த்த பலர் குளோபல் ரவல்ஸ் நிறுவனத்திற்கு போய் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பயணச் சீட்டுக்கள் விலையை அதன் உரிமையாளர் சேகரிடம் கேட்கிறார்கள் நம்பமுடியாத ஆச்சரியம் என்னவெனில் மற்றைய நிறுவனங்களை விட சுமார் 100 பவுண்சுகள் மலிவில் இவர் பயண சீட்டுக்களை பெற்றுக் கொடுக்கிறார். பயண சீட்டை பெற்றவர்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் போய் திரும்புகின்றனர். அவர்களிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி றவல்ஸ் எண்டா இப்பிடியல்லோ இருக்க வேணும் என்ன மலிவு .. மற்றவங்களும் ரவல்ஸ் நடத்துறாங்கள் கள்ள பயலுகள் சனத்திட்டை கொள்ளையடிக்கிறாங்கள் என்று மற்றய பயண முகவர்களை திட்டிவிட்டு தங்கள் உறவுகள் நண்பர்கள் என்று வாய் காது வழியாக குளோபல் ரவல்ஸ்சின் அருமை பெருமைகள் இலண்டனில் மெல்ல பரவத் தொடங்குகின்றது.

global.jpg

இந்தக் கோடை கால விடுமுறைக்கு இலங்கை இந்தியா செல்வதற்காக பலர் முண்டியடித்து முற்பதிவுகளை குளோபல் ரவல்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்கிறார்கள். இப்பொழுதுதான் நிறுவனத்தின் உரிமையாளர் சேகர் இன்னொரு புதிய திட்டத்தினை அறிவிக்கின்றார். அது என்னவெனில் வர்த்தக வியாபார நிறுவனங்களை நடத்தும் தனது வாடிக்கையாளர் களிடம் நீங்கள் பத்துபேரை எனக்கு வாடிக்கையாளராக்கி கொடுத்தால் உங்களிற்கு ஒரு பயணச் சீட்டு இலவசம் இதுதான் திட்டம். வியாபாரிகளோ வெண்ணை தின்னக் கூலியா என்று புழுகத்துடன் குளோபல் ரவல்சின் மலிவு விலைத் திட்டத்தை தங்களின் வாடிக்கையாளர்களின் மனதில் ஆசைகளாக்கி அவர்களை பயணசீட்டு பதியவைத்து விடுகிறார்கள். இது இப்படி நடந்து கொண்டிருக்க இலண்டனில் உள்ள அம்மா பகவானின் தரகர் (இவர்களை இப்படித்தான் அழைக்கலாம் பக்தர் என்பது உண்மையான பக்தர்களை கேவலப்படுத்திவிடும்) ஒருவரிற்கும் மலிவு விலை விளம்பரம் கிடைத்துவிட இந்த வருட கோடைக்கு ஆந்திராவிற்கே நேரேபோய் அம்மா பகவானிடம் ஆசிகள் வாங்குவதற்காக 40 பேர் கொண்ட ஒரு கும்பலையும் தயார்பண்ணி பயண சீட்டும் பதிவு செய்து விட்டார். இவரிடம் பதிவுகள் செய்பவர்கள் அனைவரிற்கும் சேகர் மின் பயண சீட்டு கொடுத்து விடுவார்( e.ticket ).

Balu-small.jpg

இப்படியாக கோடைகாலத்து பயண பதிவுகள் வேகமாக பதிவுகள் முடிவிற்கு வந்து கொண்டிருக்கும் சமயம் குளோபல் ஏயார் ரவல்சில் பயண பதிவு செய்த ஒருவர் தமிழ்நாட்டில் வேண்டுதல் வைத்த கோயிலிற்கு போவதற்காக நேர்த்தி வைச்சு முடிஞ்சு வைச்ச காசையும் எடுத்துக்கொண்டு மனைவி பிள்ளைகளுடன் விமான நிலையத்திற்கு போய் தங்களுடையை கடவுச் சீட்டையும் பயண முகவர் வழங்கிய மின் பயண சீட்டையும் நீட்டுகிறார் குறித்த விமானத்திற்கு அனுமதி சீட்டு வழங்குபவர் கணணியில் கடகட வென்று தட்டியவர் நெற்றியை சுருக்கி கணணியை உற்று பார்த்துவிட்டு மீண்டும் கடகடவெ ஏதோ தட்டினார் அவருக்கு ஒன்றும் புரியவில்லை மேலதிகாரி ஒருவரை அழைத்து மின் பயண சீட்டையும் கணணி திரையையும் காட்டி எந்த பதிவையும் காணவில்லை யென்கிறார். அந்த அதிகாரி வேறு தன் பங்கிற்கு மிண்டும் கணணியில் தட்டிவிட்டு பயணியிடம் மன்னிக்கவும் உங்கள் பெயரில் எந்த பதிவுகளும் இல்லை என்கிறார். பயணிக்கோ கோபம் தலைக்கேற என்ன விளையாடுறீங்களா? நேத்திக்கடன் வேறை வைச்சிருக்கிறன் போகாமல் விட்டால் சாமி குற்றமாயிடும் மரியாதையாய் என்னை பிளேனிலை ஏத்துங்கோ எண்டு சத்தம் போடவே அந்த அதிகாரியோ நீங்கள் சத்தம் போடவேண்டியது உங்களிற்கு பயண சீட்டு பதிவு செய்தவரிடம் இங்கு அல்ல என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

அந்த நபரும் விமான நிலையத்திலிருந்து நேராக குளோபல் ரவல்ஸ்சிற்கு வந்து எம்பிக் குதிக்க அவரை சமாதானப் படத்திய சேகர்.. அண்ணை எங்கையோ பிரச்சனை நடந்திட்டுது நாளைக்கு வாங்க சரி பாத்திட்டு கட்டாயம் இன்னொரு ரிக்கற் தாறன் என்று சமாதானப் படுத்தி அனுப்பி விடுகிறார். மறுநாள் ரிக்கற் கிடைக்கும் என்று நம்பி வந்தவரிற்கு அதிர்ச்சி கடை இழுத்து சாத்தப்பட்டிருந்தது அங்கு வேறு தமிழர்களும் காவல் நின்றனர் போனடித்து பார்த்தார்கள் இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று அழகான பெண் குரொலன்று ஆங்கிலத்தில் சொன்னது. அதன் பின்னர்தான் விடயம் மெல்ல மெல்ல வெளியே வரத் தொடங்கியது.

சேகரால் குறைந்தது 200ற்கு மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். இவர் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே தன்னுடைய பணத்தில் ஒரு பகுதியை போட்டு மிக குறைந்த விலையில் பயணசீட்டுக்களை இலண்டனில் உள்ள பிரபல தமிழ் பிரயாண முகவரிடம் பெற்று கொடுத்திருக்கிறார். அப்படி மலிவு விலையில் இலங்கை இந்தியா போய் வந்தவர்கள் மூலமாக அடுத்த வலையை வரித்திருக்கிறார். அவர் எதிர் பார்த்த அளவிற்கு ஏமாந்தவர்கள் மாட்டியிருக்கிறார்கள். பயண சீட்டுக்களின் கழிவு என்பது ஒரு முகவரை விட மற்றையவ்களால் மிஞ்சிப் போனால் ஆகக்கூடியது 30 பவுண்சுகளோ அல்லது ஈரோக்களோதான் குறைக்க முடியும் அதற்கு அதிகமாக அதுவும் 100 பவுண்சுகள் மலிவு என்றால் கொஞ்சாமது யோசிக்க வேண்டும்.

rajasekar-pp.jpg

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து தற்சமயம் சேகர் என்பவரிற்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 0845 4040 506 என்கிற இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். கடைசியில் சேகர் தன்னிடம் பயண சீட்டு பதிவு செய்தவர்களிற்கு இந்தியாவிற்கு போகமலேயே மொட்டையும் போட்டு நாமமும் இழுத்து அல்வாவும் கொடுத்துவிட்டார் .இந்த அம்மா பகவான் கோஸ்ரிகள் என்ன செய்யப் போகினம் எண்டுதான் தெரியேல்லை. வழமைபோல் skype ல் தரிசனத்தை காண வேண்டியதுதான்.

Edited by sathiri

லண்டனிலையோ??????? சாய் ............. அப்பிடி இருக்காது . எல்லாம் படிச்ச கோஸ்ரியள் அல்லோ :lol: ?? இங்கையெண்டால் நாங்கள் அகதியள் ( அசைலிகள் ) படிப்பறிவில்லாதனாங்கள் , பினாட்டு தீத்த சுகம் எண்டுதான் கன லண்டன் ஆக்கள் சொல்லுறவை <_<:D . சிலநேரம் அறப்படிச்ச பல்லியளோ சாத்திரியார் :lol: ?? நம்ப கஸ்ரமாய்க் கிடக்கு......... :lol: :lol: :icon_idea: :icon_idea: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சாத்திரி அண்ணை அதிர்விலை வந்ததை சுட்டுப்போட்டியளோ? :rolleyes:

என்ன கொஞ்சம் உங்க ஸ்டைல்ல சேஞ் பண்ணியிருக்கிறியள்.. :lol:

[size=2](சும்மா பகிடிக்கு கோவிக்காதையுங்கோ)[/size]

புல நாய் இப்ப எல்லா இடமும் வாய்வைக்குது .அதுக்கு என்ரை கணக்கில ஒரு ஊர்க்கோழி பிரியாணி கடிக்க கொடுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

.இந்த அம்மா பகவான் கோஸ்ரிகள் என்ன செய்யப் போகினம் எண்டுதான் தெரியேல்லை. வழமைபோல் skype ல் தரிசனத்தை காண வேண்டியதுதான்.

skype il தரிசிக்கலாம் அம்மாவை கட்டி தழுவலாமா?

பக்தனுக்குதான் அதன் வலி தெரியும் உங்களுக்கு வெட்டி பேச்சு......

  • கருத்துக்கள உறவுகள்

முதல் விட்டுதான் வியாபாரம் செய்திருக்கிறான்.

மிகவும் புத்திசாலி. இவர்கள் வழக்கு போடலாம் அவனை ஒன்றும் செய்ய முடியாது.

அதில் இருந்து தப்புவதற்கு ஓட்டை இருப்பதை அவன் அறிந்த பின்தான் இதை செய்யவே தொடங்கியிருப்பான். பேசாம விட்டால் கோர்ட் செலவு மிச்சம்.

தமிழ்நாட்டு பெடியன்போல் இருக்கு சொந்த ஊரில் இந்த கதையை பரப்புவதன் மூலம் இவன் பற்றி கொஞ்சம் யாகிரதையாக அடுத்தவர் இருக்க வாய்ப்பிருக்கு.

சூது மாது ஆசை கொண்டவர்கள்தான் இப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுவார்கள், இவர் சுருட்டிய காசை வைத்து ஒரு இரண்டு வருடம் ஓட்டலாம். அது ஆசையை இன்னமும் தூண்டிவிடும். அவனுடைய அடுத்த வலை விரிப்பு இன்னமும் இரண்டு வருத்தில் எங்கோ இருக்க போகிறது....

அதை தடுப்பதே பயன்தரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரி அண்ணை அதிர்விலை வந்ததை சுட்டுப்போட்டியளோ? :rolleyes:

என்ன கொஞ்சம் உங்க ஸ்டைல்ல சேஞ் பண்ணியிருக்கிறியள்.. :lol:

[size=2](சும்மா பகிடிக்கு கோவிக்காதையுங்கோ)[/size]

அப்பிடியில்லை அந்த இணையததிற்கு செய்தி கிடைக்கமுதல் எனக்கு கிடைத்திருந்தத ஆனால் அது இணையம் என்பதால் அவர் பதிவாக்கி விட்டிருந்தார். ஒரு செய்திக்காக பேப்பர் அடிக்க முடியாது என்பதால் பத்திரிகை வெளிவரும்வரை காத்திருந்து எழுதவேண்டி வந்துவிட்டது

:(

Edited by அலைமகள்

எப்படியும் ஒரு 1 -2 Millions பவுண்ட்ஸ்கு நாமம்.. அவனை இந்தியாவிலோ, வேறே எங்கேயும் பிடிச்சு "தட்டினா" நல்லம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

skype il தரிசிக்கலாம் அம்மாவை கட்டி தழுவலாமா?

பக்தனுக்குதான் அதன் வலி தெரியும் உங்களுக்கு வெட்டி பேச்சு......

கணணி திரையை தடவவேண்டியதுதான். :lol: :lol:

லண்டனிலையோ??????? சாய் ............. அப்பிடி இருக்காது . எல்லாம் படிச்ச கோஸ்ரியள் அல்லோ :lol: ?? இங்கையெண்டால் நாங்கள் அகதியள் ( அசைலிகள் ) படிப்பறிவில்லாதனாங்கள் , பினாட்டு தீத்த சுகம் எண்டுதான் கன லண்டன் ஆக்கள் சொல்லுறவை <_<:D . சிலநேரம் அறப்படிச்ச பல்லியளோ சாத்திரியார் :lol: ?? நம்ப கஸ்ரமாய்க் கிடக்கு......... :lol: :lol: :icon_idea: :icon_idea: .

ஏமாந்தது இலண்டன் அசைலியளாய் இருக்கலாமல்லோ?? படிக்க வந்தவையள் ஏமாற மாட்டினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.