Jump to content

சீமானுக்கு கல்யாணம்…அக்டோபர் முதல் தேதி பிரபலமான பெண்மணி ஒருவருடன் .


Recommended Posts

நாற்பது வயது கடந்தும் திருமண வாழ்வில் விருப்பமின்றி தமிழ் ஈழ முன்னெடுப்புகளில் தீவிரமாக இயங்கிவரும் நாம் தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சீக்கிரமே கால் கட்டு! எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி சீமானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்பதை கும்பல் பெருமையுடன் தெரிவிக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த பிரபலமான பெண்மணி ஒருவர்தான் சீமானை மணக்க இருக்கும் அதிர்ஷ்ட சாலி ( மணப்பெண் யார் என்பதையும், அவரது புகைப்படத்தையும் வெகுவிரைவில் ) விடுதலை புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மதிவதனியை மணந்த தினம் அக்டோபர் ஒன்று. அதனால், அன்றைய தினத்தையே தனது திருமண நாளாக திட்டமிட்டிருக்கும் சீமான், வெகு விமர்சையாக திருமணத்தை நடத்த இருக்கிறார், இருபத்தி ஐயாயிரம் பேருக்கு கறி விருந்தும், மூவாயிரம் பேருக்கு சைவ விருந்தும் இப்போதே ஏற்பாடாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மான் தலைமையில் நடக்க இருக்கும் திருமணத்தில் வைகோ, திருமாவளவன், கனிமொழி, கிருஷ்ணசாமி, கொளத்தூர் மணி, வேல்முருகன்,தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்ள இருக்கிறார்.

சீமான் மீது செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பிய சினிமா நடிகை விஜயலட்சுமி தான் கொடுத்த புகாரை விரைவில் வாபஸ் வாங்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தையில் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் உள்ளிடோர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே சீமானுக்கு இல்லாமலே போயிருந்தது. ஆனாலும், சீமானின் அதீத வளர்ச்சியை முடக்கும் வகையில் பெண்கள் சம்மந்தபட்ட சர்ச்சைகளை போலிஸ் தரப்பும் பொறமை கொண்ட அரசியல் தரப்பும் தொடர்ந்து கிளப்பி வந்தது. விஜயலக்ஷ்மியின் விவகாரமும் அப்படிபட்ட ஒன்றுதான். விஜயயலக்ஷ்மி பரபரப்பு கிளப்பிய பின்னணியில் சீமானுக்கு மிக நெருக்கமான இயக்குனர்கள் சேரன், தங்கர் பச்சான் இருவரும் தீவிரமாக செயல்பட்டது சீமானை மனரீதியாக மிகவும் நொறுங்க வைத்துவிட்டது. பெண்கள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாகவும், மன நிம்மதிக்கான வழியாகவும் திருமண முடிவை எடுத்திருக்கிறார் சீமான்.

ஈழ தமிழர் முன்னெடுப்புகளிலும், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களிலும் தீவிரம் காட்டும் சீமானுக்கு திருமண வாழ்கையும் பெரிய அளவில் கை கொடுக்கட்டும்!

- கும்பல்

http://thaaitamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D/

Link to comment
Share on other sites

கொஞ்சநாள் பொறுத்தால் தெரிந்து விடும் சீமான் திருமணம் செய்வது இலங்கை பெண்ணா இல்லையா என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்கட்டுப் போட்டாலும் சீமான் அவர்கள் ஈழ உணர்வாளராக இருக்க வேண்டும்.

இருப்பார் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் திருமண செய்யவிருப்பது தமிழகத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் இரண்டாவது மகள் என்று முன்னர் எமக்கு கிடைத்த தகவல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.