Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஸ் கண்டெக்டர் : யோவ் உள்ளே தான் கடல் மாதிரி இடம்

இருக்கே ... உள்ள வா

யோகத்தார் : பருவால்ல அண்ணே எனக்கு நீச்சல் தெரியாது ..... நான் கரையிலேயே நிக்குறேன்

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வளவையும் தாண்டி ரஷ்யா மீண்டு எழுந்ததை போல என்றோ ஒரு நாள் ஈழத்தமிழினமும் மீண்டு எழும்......அதுவரை உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள் ......அதுவரை உங்கள் அடக்குமுறைகளால் அகம் மகிழ்ந்திருங்கள் .....

நிச்சையம் ஒரு நாள் எழுவோம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிட்சா சதுர பெட்டியில் வருகிறது .

பெட்டியை திறந்தால் அது வட்டமாக இருக்கிறது.

அது சாப்பிடும்போது முக்கோண வடிவத்தில் இருக்கிறது .

மனிதர்கள்

கூட பிட்சா மாதிரிதான் .

இயல்பு ஒருமாதிரி .

தோற்றம் புதுமாதிரி.

பழகுதல் முற்றிலும் வேறுமாதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

இவ்வளவையும் தாண்டி ரஷ்யா மீண்டு எழுந்ததை போல என்றோ ஒரு நாள் ஈழத்தமிழினமும் மீண்டு எழும்......அதுவரை உங்கள் வெற்றிகளை கொண்டாடுங்கள் ......அதுவரை உங்கள் அடக்குமுறைகளால் அகம் மகிழ்ந்திருங்கள் .....

நிச்சையம் ஒரு நாள் எழுவோம்....

 

ரஷ்யர்கள் சுலபமாக மீண்டும் எழுந்தற்கு முக்கிய காரணி அவர்களிடம் இருக்கும் வளம்மிக்க இயற்கை வளங்கள் மட்டுமே.

 

ஆனால் ஈழத்தவரிடம் ?????? :(  இருக்கும் சந்தர்ப்பங்களையும் தட்டி வீழ்த்தும் பரம்பரையாச்சே!!!!  :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழரிடம் யாரிடமும் இல்லாத உழைப்பு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பிட்சா சதுர பெட்டியில் வருகிறது .

பெட்டியை திறந்தால் அது வட்டமாக இருக்கிறது.

அது சாப்பிடும்போது முக்கோண வடிவத்தில் இருக்கிறது .

மனிதர்கள்

கூட பிட்சா மாதிரிதான் .

இயல்பு ஒருமாதிரி .

தோற்றம் புதுமாதிரி.

பழகுதல் முற்றிலும் வேறுமாதிரி.

 

உண்மை..உண்மை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahaha

கத்தி படம் குறித்துப் பேசினாலே சீறிப் பாய்கிறார் சீமான், கேள்வி எழுப்புவர்கள் மீது.

விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க... கத்தி படத்தை எதிர்க்க முடியாது... என்னய்யா செய்வ.. என்று கடுங் கோபத்துடன் கேட்கிறார் தன் முன்னால் நின்று கேள்வி எழுப்பும் நிருபர்களிடம்.

எல்லாத்துக்கும் இந்த சீமான்தான் போராடணுமா... எனக்காக ஏன் காத்திருக்கணும்... இறங்கிப் போராடுங்க.. ஆனா கத்தி படத்துக்காக நான் போராட மாட்டேன்.. லட்சம் பிரச்சினையை வச்சிக்கிட்டு போராடிக்கிட்டிருக்கேன், வந்துட்டாங்க கத்தி சுத்தின்னு..', என்று அடித்துச் சொல்கிறார் சீமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100 Km வேகமாக போக வேண்டிய நெடுஞ்சாலைகளில் 60 Km வேகத்தில் ஹாயாக போகின்றவர்களிடம்

ஏன்டா டேய் உங்க கிட்ட இருந்தெல்லாம் லைசன்ஸ் புடுங்க மாட்டாங்களா எண்டு விவேக் வாய்ஸ் ல கேக்க தோணுது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர்., ஆட்சியில், மதுரையில் பிரதமர் இந்திராவுக்கு கறுப்பு கொடி காட்டப்பட்டபோது, கருணாநிதி உட்பட தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரையில் போராட்டம் நடந்தது. இதுதான், அழகிரி பங்கேற்ற முதல் போராட்டக்களம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் நடித்து வந்த அத்தனை படங்களையும் தூக்கிப் போட்டு விட்டாராம் பவர் ஸ்டார் அதேசமயம் ஆனந்தத் தொல்லை படத்தை மட்டும் எப்படியாவது ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

அந்தத் தொல்லையோடு எல்லாத் தொல்லையும் ஒழியட்டும்.. .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அமிர்தால படிச்சா தலையெழுத்து மாறும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே படிச்சிருப்பனே....

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அமிர்தால படிச்சா தலையெழுத்து மாறும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே படிச்சிருப்பனே....

 

'அமிர்தா' ங்றது கேர்ள் ஃப்ரண்டா...? :icon_idea:

அப்படியாவது உங்களுக்கு கால்கட்டு நடந்தால் சரிதான்...

இங்கே திரியில் கடலை போடுவது குறையுமே! :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் : 2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு வண்டிக்கு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்

அது வரைக்கும் வண்டிய என்ன தள்ளிட்டா திரிய முடியும்.....நல்லா போடுறாங்கையா நீயுசு....

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ் : 2 நாளுக்குள்ள யாரும் அவசரப்பட்டு வண்டிக்கு பெட்ரோல் போடாதீங்க... லிட்டருக்கு 2 ரூபாய் குறையுமாம்

அது வரைக்கும் வண்டிய என்ன தள்ளிட்டா திரிய முடியும்.....நல்லா போடுறாங்கையா நீயுசு....

 

 

ஏனப்பா சுண்டல்

அது என்னைப்போல நிறைகுடங்களுக்கு சொன்னது :lol:

காலியானவங்களுக்கு இல்லைப்பா... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்ச பாடல்களிலே உருப்படியான பாட்டெண்டா அஞ்சான் பட ஏக் தோ தீன் பாட்டுத்தான்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையில் அம்மாவின் அறிவிப்பை கேட்டு பின்னாடி இருக்கிற அமைச்சர் கோகிலா இந்திரா அழுவிறா......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி மு க ஒரு பழைய அம்பாசிடர் கார்

நாஞ்சில் சம்பத்

அம்மா குடுத்த இன்னோவா கார் எப்பிடிலாம் பேச சொல்லுது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைச்ச பாடல்களிலே உருப்படியான பாட்டெண்டா அஞ்சான் பட ஏக் தோ தீன் பாட்டுத்தான்.....

 

அல்லாவுக்கு மாறினது வேலை செய்யுது போலை...

 

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவுக்கு மாறினது வேலை செய்யுது போலை...

அல்லாவுக்குத்தான்

பகிடிக்கும்   வெற்றிக்கும் வித்தியாசம் தெரியாதே... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பால் விளைந்த வரம்

வளர்ப்பில் இட்ட உரம்

களைப்பில் நாம் இருந்தால்

மறக்கும் நம் குணம்

ஆழம் அறியாமல் அலைக்கழிந்து

மேலே நுணிப்புல் மேய்ந்து

தானே உணராமல் தறிகெட்டு

வேறிடம் நோக்கி இடம்பெயர்ந்தால்

இல்லை என்றால் எங்குமில்லை

மதங்களை மனிதன் படைத்தானா

மதமாய் மனிதன் ஜனித்தானா

பார்த்து பரவசத்தில் தனதாக்க

வாணிகப் பொருளா மதம்

விளம்பரம் செய்து வீடுபெற

விளையாட்டு பொருளா மதம்

ஒருவர் நிலை தாழ்ந்து பரிதவிக்க

உதவிக் கரம் நீடடி உதவுங்கள்

உதவாத மதம்தான் தீர்வு என

கொம்பு சீவி கூர் பாய்ச்சாதீர்

மீளா துயர் வறுமை தீர

மனதிற்கு ஆறுதல் உதவியே தவிர

மதமாற்றம் தீர்வு அல்ல மாறாய்

மனதை எமாற்ற மயக்கும் வித்தை

தன் மதம் தன்னை அறியாதான்

புகுந்த மதம் எவ்வாறு அறிவான்

தாய் பால் குடித்து வளர்ந்தபின்

டப்பா பாலே சிறந்தது என்பானோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த என்.டி.ஆர். தெலுங்கு தேசத்தை உருவாக்கியபோது, கட்சியின் சட்ட விதிகளை உருவாக்க நினைத்தார். அப்போது தி.மு.க.வின் பை-லா பற்றி அறிந்திருந்ததால் அதன் மீது அவருக்கு ஈர்ப்பு வந்து உபேந்திரா என்பவரை கலைஞரிடம் அனுப்பி வைத்தார். அதன்படி அமைந்ததுதான் தெலுங்கு தேசத்தின் சட்ட விதிகள். இன்றைக்கும் அந்த கட்சி இயங்குவது தி.மு.க.வின் சட்ட விதிகளின்படிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் பாக்கணும் வித்தியாசமா இருக்கும் எண்டு நினைக்கிறன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயச்சந்திரன் அவர்கள் கூறியது போல வாழ் நாளில் சில வருடங்களாவது தனித்தமிழீழ அரசில் வாழ்ந்த திருப்த்தி கடைசி வரை எனக்குள் இருக்கும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தகவல்களின் படி அஞ்சான் ஊத்திக்கிச்சாமே .......

என்னோட செல்லத்தோட படம் எண்டு சொல்லிட்டு திரிஞ்ச கொஞ்ச பொண்ணுங்கள தேடிட்டு இருக்கன்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது.

ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார்.

சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார்.

அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார்.

அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.