Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்து.....

அரசியல் கட்சி ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சிகாக வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல ஆனால் எதிர்க்கட்சியாகவும் வந்து இன்று தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கிகளை தன்னகத்தே வைத்திருக்கும் தே மு தி க தலைவர் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்......

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு வாழ்த்தச்சொல்ல மனம் வருகுதில்லையப்பா

 

கொஞ்சம் அதிகமாக ஆரம்பத்தில் நம்பிவிட்டேனோ  என்னவோ..... :( 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மையான காதல் கதை;

1976ல் சத்தியமங்கலம் காட்டில் யானைகள் இன்று இருப்பதை விட பல நூறு மடங்கு அதிகம் இருந்தன..வனத்துறை இப்போது இருப்பது போல அப்போது அவ்வளவு கெடுபிடி இல்லை.யானை வேட்டையன் சுப்பு என்பவன்,யானை தண்ணீர் குடிக்க வரும்பாதையில்,பெரிய குழி வெட்டி , நின்று கொண்டிருந்தான்..அப்போது தண்ணீர் குடிக்க யானை ஒன்று தனியாக வந்தது...அதனை தயாராக வைத்திருந்த குழிக்கு அருகே விரட்டி விழச்செய்தான்....பின்னர் தனது சகாக்களுடன் சேர்ந்து அதன் தலையை ரம்பத்தால் அறுக்க தொடங்கினான்...தலையை அறுத்தால்தான் யானை தந்தத்தை முழுவதுமாக சேதம் இல்லாமல் எடுக்க முடியும்.அவன் அறுக்க யானை வலி தாளாமல் துடித்து பிளியறியது கண்களில் நீர் ஆறாய் பெருகியஹு அந்த கயவன் விடவே இல்லை...உயிர் போகும் வரை தந்தம் கிடைக்கும் வரை அறுத்தான்..அந்த யானையின் கதறல் சத்தம் கேட்டு ஒரு கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் வந்து கொண்டிருந்த அதன் காதலியான பெண் யானைக்கு கேட்டது உடனே அதுவும் வேகமாக ஓடி வந்தது...தலையை அறுப்பவனின் வியர்வை வாசனையை நுகர்ந்தது பெண் யானை...யானைக்கு மோப்ப சக்தி மிக அதிகம்.

அது வந்து பார்க்கும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது...வேட்டைக்காரர்கள் தந்தத்துடன் ஓடியிருந்தனர்..தலை அறுபட்ட நிலையில் தன் காதலனை பார்த்த யானை பிளிறிக்கொண்டே இருந்தது....அந்த இடத்தை விட்டு நகரவில்லை குழியை சுற்றிக்கொண்டே இருந்தது கிட்டத்தட்ட ஒரு மாதம் உணவில்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்...அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ்..

தந்தத்துடன் போன சுப்பன்..விற்று பணம் வாங்கி அதை செலவழித்துவிட்டு மீண்டும் யானை வேட்டைக்கு அதே இடத்துக்கு வந்தான்..ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே அவன் வருவதை வியர்வை வாசனையை வைத்து உணர்ந்துகொண்டது பெண் யானை மறைவாக ஒரு புதர் பக்கம் நின்றது.அவன் வந்தான்....உடன் ஓடி சென்று அவன் காலகள் இரண்டையும் தும்பிக்கையால் பிடித்து தூக்கியது...கிடைத்த மரம்,பாறை என அவனை தூக்கி அடித்தது..துணி துவைப்பது போல அடித்துக்கொண்டே இருந்தது..அவன் உயிர் போனபின்பும் விடவில்லை...ஒருநாள் முழுக்க அடித்துக்கொண்டே இருந்தது சதை,எலும்பு என கொஞ்சமும் மிஞ்சவில்லை என்கிறார்கள்..அதன் பிறகுதான் அந்த யானை அந்த இடத்தை விட்டு சென்றதாம்....

விலங்குகளுக்கும் காதல் உண்டு,வலி உண்டு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.

நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.

அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

முடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி எப்படி அந்தப் பெண் யானை காதலி என எப்படி சொல்கிறார்கள்? தாயாகவும் இருக்கலாம் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக வழங்கும் முப்பெரும் விழா விருதுகளில் நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.

வாழ்த்துக்கள் குமரிமுத்து.......தி மு க வில் எத்தனயோ நடிகர்கள் இருந்து சரியான முறையில் கவனிக்கபடாமல் வேறு கட்சி தொடங்கியது இல்லது போனது என்பது வரலாறு.......

MGR ,சரத்குமார்,S S சந்திரன் ,ராதாரவி,குஷ்பூ என்று பட்டியல் நீளும் ஆனாலும் குமரிமுத்து அன்று தொடக்கம் இன்று வரை எந்தப்பலனையும் எதிர்பாராது கட்சியில் இருந்துவருபவர்......தேர்தல் பிரச்சாரங்களுக்கு இந்த வயதிலும் சளைக்காமல் மேடை மேடையாக எறிவருபவர்......

கட்சி இப்பொழுதாவது அவர்பக்கம் பார்வைய திருப்பியது மகிழ்ச்சி....

  • கருத்துக்கள உறவுகள்

திமு.க அவர் பக்கம் பார்வையை  திருப்பியது மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்..

 

தங்களின் 'கன்னித் தீவு' தொடரை நிறைவு செய்ய பார்வையை திருப்ப மாட்டீர்களா? :o

 

ஏதும் கன்னி க(கி)ட்டியபின்தான் என்ற முடிவோட இருக்கிறீர்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திமு.க அவர் பக்கம் பார்வையை  திருப்பியது மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்..

 

தங்களின் 'கன்னித் தீவு' தொடரை நிறைவு செய்ய பார்வையை திருப்ப மாட்டீர்களா? :o

 

ஏதும் கன்னி க(கி)ட்டியபின்தான் என்ற முடிவோட இருக்கிறீர்களா? :lol:

 

அப்போ  குஷ்பூ

கன்னியில்லையா?

அல்லது

கிட்டவில்லையா? :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் ஆனால் உண்மை: சிறுத்தையை வெறுங்கையால் அடித்துக் கொன்ற பெண்

சிறுத்தைக்கே இந்த அடினா.....அப்போ அவா வீட்டுக்காரருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் ஆனால் உண்மை: சிறுத்தையை வெறுங்கையால் அடித்துக் கொன்ற பெண்

சிறுத்தைக்கே இந்த அடினா.....அப்போ அவா வீட்டுக்காரருக்கு?

 

 

எனது அறிவுரை..

 

சுண்டல் கடலை போடுவதோடு நிறுத்துவது நல்லது... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை மோடி அரசு ஒதுக்குவதாக பலருடைய குற்றச்சாட்டு .....

ஏன் புதியவர்களையும் சுறுசுறுப்பாக கட்சி பணி ஆற்றக்கூடியவர்களையும் கட்சியில் முதன்மைபடுத்துவது தப்பில்லை தானே 80 வயதுக்கு அதிகமானவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவது தான் அவர்கள் கட்சிக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவியாய் இருக்கும் இல்லது கட்சியே அவர்களை ஒதுக்கி இளைஞர்களுக்கும் துடிப்பாக செயல்ப்பட கூடியவர்களுக்கும் வாய்ப்பளிப்பது தான் முறையாக இருக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகம் வாழும் மாநில வரிசையில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பது அவமானம். நிகழ்கால, வருங்கால சமுதாயத்துக்கு, தான் செய்யும் மிகப் பெரிய கெடுதல் இது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரங்கள் : இம்சை அரசன்;, மங்குனி அமைச்சர்,அரண்மனை பல்லி

காலம்.. கணினி கண்டுபிடிக்கப்பட்டு இன்டர் நெட் இல்லாத காலம்

மன்னருக்கு ஒரு டவுட்டு

இம்சை அரசன்; : ஏனைய்யா அமைச்சரே..

மங்குனி அமைச்சர் : மன்னா!

இம்சை அரசன்; :கணினியிலுள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை..

மங்குனி அமைச்சர் : புரிந்துவிட்டாலும்...

இம்சை அரசன்; : என்ன...

மங்குனி அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னார்;

இம்சை அரசன்; : உமக்குதான் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியுமே..

மங்குனி அமைச்சர் : கூறவந்ததை கூறுங்கள் மன்னா..

இம்சை அரசன்; : உடனே அந்த ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவரை கூட்டி வாரும்..

மங்குனி அமைச்சர் : ஏன் மன்னா?

இம்சை அரசன்; : அதான் முதல்லயே சொன்னேனே..

மங்குனி அமைச்சர் : என்ன மன்னா..

இம்சை அரசன்; : உமக்குதான் ஒன்றும் இல்லை..

மங்குனி அமைச்சர் : !!!!?

இம்சை அரசன்; : நீர்தானா அந்த ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர்

ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : அகிலாவுக்கு மட்டுமல்ல.. அனைத்துக்கும் சொல்வேன்..

இம்சை அரசன்; : அகிலா இல்iலையடா முட்டாள்... ஆங்கிலம்...

ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : சாரி மன்னா..

இம்சை அரசன்; :சாரி பூரி..

ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : மன்னித்து விடுங்கள் மன்னவா..

இம்சை அரசன்; : மறந்து விட்டேன்..

மங்குனி அமைச்சர் மைன்ட் வாய்ஸ் ( யாரை அகிலாவையா...? )

இம்சை அரசன்; : யோவ்.. நான் சொல்லும் ஆங்கில் சொற்களுக்கு தமிழில் அதுவும் மெட்ராஸ் தமிழில் சொல்ல வேண்டும்..

ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : ஓ.கே.. கிங்..

இம்சை அரசன்; : தமிழ்

ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் : சரி மன்னவா..

இம்சை அரசன்; : அது..

மங்குனி அமைச்சர் மைன்ட் வாய்ஸ் ( எது..? )

(அரசர் சொல்ல சொல்ல ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவர் தமிழில் அதுவும் மெட்ராஸ் லோக்கல் பாஷையில் மொழி பெயர்க்கிறார்...)

Open = தொற நைனா

Close = பொத்திக்கோ

Print Preview = பாத்து ப்ரிண்டடி

View = லுக்கு வுடு

Cut = vetu - குத்து

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்சய தொட்டு ஒட்டு

File = பைலு

Save = வெச்சுக்கோ

Save as = ஐயே இப்டி வெச்சுக்கோ

Save All = அல்லாத்தையும் வெச்சுக்கோ

Find = தேடுபா

Find Again = இன்னோரு தபா தேடுபா

Move = ஜகா வாங்கு

Zoom = பெர்சா காட்டு

Zoom Out = சிர்சா காடு

New = புச்சு

Old = பழசு

Replace = இத தூக்கி அப்பால போடு அத தூக்கி இப்பால போடு

Run = ஓடு நைனா

Execute = கொல்லு

Delete = கீசிடு

To! ols = இஸ்பேனரு

Toolsbar = இஸ்பேனரு செட்டு

Exit = ஓட்றா டேய்

Compress = அமுகிபோடு

Next = அப்பால

Previous = முனாகடி

Trash bin = குப்ப தொட்டி

Drag & hold = நல்லா இஸ்து புடி

Double click = ரண்டு தபா

Do you want to delete selected item?= மெய்யாலுமே தூக்கிறவா..?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிறவா..?

Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சுக்கவா..?

Abort, Retry, Ignore = இஷ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes,No,Cancel= இப்ப இன்னா சொல்லிக்கீறே நீ

General protection fault = அல்லாம் காலி

Access denied = கை வெச்சே, கீசிடுவெண்

Unrecoverable error = படா பேஜாருபா

Operation illegal = பேமானி..சாவு கெராக்கி...கய்த..கஸ்மாலம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. - கருணாநிதி

தலிவர் மறைமுகமா ஸ்டான்லின்க்கு ஏதோ சொல்ல வர்ரா போல இருக்கே.....

  • கருத்துக்கள உறவுகள்

என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. - கருணாநிதி

தலிவர் மறைமுகமா ஸ்டான்லின்க்கு ஏதோ சொல்ல வர்ரா போல இருக்கே.....

 

 

மக்கள்  எங்களது பொய்களை  நம்பவது கறைவடைந்திருக்கு

ஆனால் கட்சி  நடாத்தக்கூடிய பணப்பலம்  எம்மிடமிருக்கு என்கிறார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் துர்கிஸ்தான் போராளிகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா மற்றும் மேற்க்கத்திய நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு துருக்கிக்கு ஆதரவு வழங்கின ஆனா இப்போ துருக்கியின் எதிர்ப்பையும் மீறி துர்கிஸ்தான் போராளிகளுக்கு அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்கள் வழங்குகின்றார்கள் ஈராக் கிளர்ச்சியாளர்களை அடக்க .....

சோ இதில இருந்து ஏன்னா தெரிதுன்னா வாழ்க்கை ஒரு வட்டம்....நாளைக்கு ஈழத்தமிழர் தரப்புக்கும் நிச்சியம் உலக நாடுகள் ஆதரவளிக்கின்ற ஒரு சூழல் வந்தே தீரும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீண்ட இழுபறிக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் இந்த நேரம் இந்திய நீதித்துறை அமைச்சர் அவசர அவசரமாக அம்மாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததன் நோக்கம் என்னவோ?

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பும் ,பேரம் பேசுதல்களும் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.....அடகு வைக்கபடபோவது என்னமோ தமிழர்,தமிழ் நாடு சார்ந்த நலனாக தான் இருக்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தலிவர் உள்ளாட்சி இடைத்தேர்தல்கள புறக்கநிப்பாம்

எப்பிடியோ ஆளும் கட்சி தான் ஜெயிக்க போகுதெண்டு தலிவருக்கு தெரியும்.....அதுவும் தேர்தல் தென்மாவட்டங்கள்ல வேற நடக்குது.....வேட்பாளர்கள நிறுத்தினா அழகிரியும் சும்மா இருக்க போறதில்ல.....தலிவருக்கு தலையிடி தான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான் யூ

இவரு இத எத்தின வாட்டி தான் சொன்னதா செய்தி போடுவீங்க .....எப்போவோ வந்த செய்திய எத்தின வாட்டி தான் உங்க இணைய தளங்கள்ள போடுவீங்க ....சரி இப்பிடி சொல்லுற இவரு சிங்கப்பூர் பிரதமரா இருக்கிற தன்னோட மகன் கிட்ட சொல்லி தமிழ் ஈழத்த அங்கீகரிக்கலாமே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி அரசியலில் என்ன தான் பெரிய நடிகரா இருந்தாலும் அவர் அரசியலில் சாதிக்க போவதில்லை....தமிழ் நாட்டு அரசியலில் நீச்சல் போட ரஜினி போன்றவர்களால் முடியாது இதை சவால் விட்டே சொல்லலாம் வேணும் என்றால் சில பல லட்சம் வாக்குகளை பிரிக்கலாம் இவருடைய பாபா படத்துக்கு எதிராக பா ம க வின் போராட்டத்தையே அவரால் சரியான முறையில் கையாளாமல் படம் படுத்தது....... உணர்ச்சி வசப்படும் சில இளைஞர்களையும் ரசிகர்களையும் வைத்துக்கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆகலாம் என்றால் அது வெறும் பகல் கனவு தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி மு க 2016 இல் ஓரளவாவது தேரனும் எண்டா அதனை தலைமையேற்க போவது யாரு என்ற அறிவிப்பை துணிந்து செய்ய வேண்டிய கட்டாயம் கலைஞர் வசம் இருக்கு சும்மா கனி மொழி அழகிரி ஸ்டான்லின் என்று தொண்டர்களும் குழம்பிக்கொள்ள மாட்டார்கள்....... முலாம் சிங் துணிவு பஞ்சாபின் பாதலின் துணிவு கலைஞருக்கு இல்லாதது ஆச்சரியமே.....எப்பிடியோ 2016இல் கலைஞர் active politics செய்ய போவதில்லை சோ இப்பவே கட்சியையும் தொண்டர்களையும் அதற்க்கு தக்க மாதிரி மாத்திக்கலாமே......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலும் இனி "தெலுங்கு தேசம்"... தலைவர் "மாங்கனி" முருகேசன்

தமிழ் நாட்டு மக்களின் தாராள மனசுக்கு இவர முதல்வர் ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சதாமை பழி வாங்க போய் இன்று நூற்றுக்கணக்கில் சதாம்கள் உருவாகி கொண்டு இருக்கின்றார்கள் ஏற்கனவே மேற்க்கத்திய நாடுகளில் நிலவி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களுக்கு இது ஒரு தீராத தலைவலியாக உருவெடுத்து இருக்கின்றது.......இன்று Australia வும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட குர்டிஷ் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவெடுத்து இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிள்ளயார விநாயகர் சதுர்த்தி விழாவில தண்ணியில கரைக்க சனம் அடிக்கிற அடி இருக்கே.... சொல்லி வேலை இல்லை அந்த வருஷம் பூரா சேர்த்து வைச்ச கோபத்த பிள்ளையார் மேல தான் காட்டுறாங்க.... பாவம் அவரால மட்டும் பேச முடிஞ்சா ஓ... எண்டு கதறி கதறி அழுவார் .... அவரோட அம்மா அப்பாட்ட கூட இம்புட்டு அடி வாங்கி இருக்க மாட்டார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.