Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கியூபா தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை தோல்வி அடைந்துவிட்டது... இந்த காலாவதியான அணுகுமுறையை முடிவுக்கு கொண்டு வருவோம். இரு தேசங்களிடையே புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பறி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் பிறந்தேன்..... பனிப்போர் காலத்தில் நாம் வியட்நாமுக்காக யுத்தம் நடத்தினோம்.. அதே வியட்நாமுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தினோம்.. அதே பாதையில்தான்..." என்று நீளும் இந்த "சரணாகதி" உரைதான் கம்யூனிச கியூபா தேசத்தினருக்கான சர்க்கரை செய்தி.. இந்த உரையை நிகழ்த்தியது.....தங்களை பரம எதிரியாக கருதி முழுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து- தங்களது தேசத்தின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொலை செய்ய முயன்ற அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய பேரரசின் அதிபர் ஒபாமா என்கிற போது உண்மையிலேயே இது கியூபா குடிமக்களுக்கு மட்டுமல்ல.. உலகத்துக்கே இன்ப அதிர்ச்சிதான்... இங்கே வென்றிருப்பது 'நிஜமான' மக்களின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவும் வீரகாவியமான சே உள்ளிட்ட அவரது சகாக்களும். இன்றும் அவருக்கு உற்ற உறுதுணையாக இருக்கும் கியூபா மக்களும்தான்..

பொருளாதார தடைகளையும் அடக்குமுறைகளையும் மிரட்டல்களையும் கண்டு அஞ்சிடமால் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு.......தேசத்தையும் அந்நிய சக்திகளால் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு Cuba நல்ல உதாரணம்........

உலக வரலாறுகள் பல ஈழத்தமிழர்களுக்கு உதாரணமாகி முன்னிற்கின்றது............ஈழத்தமிழர்களுக்கு தற்பொழுதைய தேவை நல்ல ஒரு தலைமை....

 

தலைமை என்பது கொலுப் பொம்மையோ அல்லது வாரிசுகளோ அல்ல அப்படியே தூக்கி நாற்காலில அமர்த்துறதுக்கு, அது தான் எதுவென்றே தெரியாமல் கிடந்து காய்ந்து நனைந்து வெந்து பற்பல தடைகலால் புடமிடப்பட்டு சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி /தாங்கி  நீர் மட்டத்தின் மேல் நீளும் மொட்டுப் போல் அப்பப்ப தனது இருப்பையும்  கம்பீரத்தையும் தன்னுனர்வின்றிக் காண்பிக்க நேரும்போது "இரவு நேரப் பனியில் காலைப் பூமி  முற்றுமாய் நனைந்து இருப்பதுபோல் மக்களின் இதயத்தில் ஊறி எதிர்பாராத வேளையில் அவர்கள் விரலால் சுட்டும் ஒருவரே தலைமையாளராக இருப்பார் / இருந்தார்.

 

இனி அப்படியொருத்தர் பிறக்கவில்லை என்பதைவிட , பிறந்திருக்கிறார். இப்ப எங்க கிடந்து காய்ந்து வெந்து கொண்டு இருக்கின்றாரொ தெரியவில்லை...! விடிவெள்ளி முளைக்கும் பார்த்திருப்போம்...!!

  • Replies 3.2k
  • Views 177.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேபப் கடை வைச்சிருக்கிற துருக்கி காரன் mcdonalds ல போய் சாப்பிடுறான் எண்டா அவனுக்கே அவன் விக்கிற சாப்பாடு மேல நம்பிக்கை இல்லை போல......

  • கருத்துக்கள உறவுகள்

கேபப் கடை வைச்சிருக்கிற துருக்கி காரன் mcdonalds ல போய் சாப்பிடுறான் எண்டா அவனுக்கே அவன் விக்கிற சாப்பாடு மேல நம்பிக்கை இல்லை போல......

 

 

திருமணம் செய்தவனே

வெளியில் சாப்பிடும் போது :icon_mrgreen:  :lol:

சாப்பாட்டுக்கடை வைத்திருப்பவன்

அங்க தான் ஒவ்வொரு வேளையும் சாப்பிடணும் என்று எதிர்பார்ப்பது.....?? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கங்கை அமரன், குட்டி பத்மினி , நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பா.ஜனதாவில் இணைந்தனர்////////

சீக்கிரம் தமிழ்நாட்டின் ஆட்சி பா ஜ க வின் கைக்களுக்கு போய் தமிழ் நாடு வல்லரசு ஆக போகுது......

சேர்ந்திருக்கும் ஆக்களிட டிசைன் அப்பிடி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க இராணுவத்தால் சூழப்பட்ட யாழ்மாவட்டத்தில் நின்று கொண்டு புலிகளையும் தமிழர்களின் வீரத்தையும் புகழ்ந்து பேச இயக்குனர் பாரதி ராஜாக்கு ஒரு தில்லு இருந்திருக்கணும்

#பாரதிராஜா உண்மை தமிழன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் குடித்துவிட்டு வாகனம் ஓடி விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் மற்றும் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிட்னி வீதிகள் எங்கும் காவல்துறையினரை கானக்கூடியதா இருக்கு ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஊத விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் யார் பிடிபட்டாலும் எங்க தமிழாக்கள் பிடிபட மாட்டினம் அவையள் தான் தாங்க குடிச்சா உடன பொண்டாட்டிய கார் டிரைவ் பண்ண விட்டிட்டு தாங்க பக்கத்தில இருந்திடுவினமே......

பாதிபேர் ஆத்துக்காரிய licence எடுக்க சொல்லுறதே இதுக்கு தான்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதி ராஜா யாழ் மண்ணில் நிக்கும் போது முழுக்க முழுக்க இராணுவ மயபடுத்த பட்ட மண்ணில் நிக்கும் போது திடீர் என்று அரசுடன் இருக்க கூட டக்கி மாமா வந்து சந்திக்கணும் என்றால் அவர் அதை மறுக்க முடியாது....ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி அந்த மண்ணில் வைத்தே அத்தனை ஆயிரம் இராணுவங்களுக்கு முன்னாள் வைத்தே புலிகளையும் தமிழரின் வீர போராட்ட வரலாற்றையும் எடுத்து கூறுகின்ற துணிவு யாருக்கும் வராது..... அந்த வகையில் பாரதி ராஜா சார் நீங்க கிரேட்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கு பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி இருக்கும் பிரதமர் கடல் வழியாக ஆஸ்திரேலியாக்கு கள்ளமாக நுழையும் அகதிகளின் வருகையை கட்டுபடுத்திய குடிவரவு அமைச்சர் மொறிசன் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அமைச்சை கொடுத்து பதவி உயர்வு வழங்கி இருக்கின்றார் இனி வேலைக்கு போகாமல் அரசாங்க காசை எடுத்திட்டு இருப்பவர்களுக்கு எல்லாம் ஆப்பு தான்..... விட்டு கலைக்க போறார்...... வேலைக்கு போக சொல்லி.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள் ஏற்றுமதி: மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்////

இன்னும் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை கைது செய்ய வசதியா இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிங்க இந்துக்கள் மதம் மாற்றுகின்றார்கள் என்று பாராளுமன்றில் இருந்து பாரிமுனைவரை நீங்கள் பொங்கி எழுவது நியாயம் தான் ஆனால் இந்துக்களை மதம் மாற்றும் போது மதம் மாறுவதென்பது மக்களின் உரிமை மனித உரிமை என்றெல்லாம் அள்ளி விட்டீங்களே? நீங்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் இந்துக்கள் மதமாற்றப்படும் போது கண்ணை மூடி மௌனமாக இருந்திருக்க மாட்டீர்களே ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோக்கு தமிழகத்தில் செல்வாக்கு இருக்கோ இல்லியோ....பஞ்சாப் முதல்வர் முதல்வர் முதல் மேற்கு வங்க முதல்வர் வரை நல்ல நண்பர்கள்.........

இன்று தமிழகத்தில் நடைபெற்ற வைக்கோ தலைமையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பங்கேற்ப்பு.......

இதுவே வேறு ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் இப்பிடியான தொடர்புகளை தங்கள் தொழில் வளங்களை பெருக்கிக்கொள்ள பயன்படுத்துவார்கள்.......அப்பிடியான ஒருவராக வைக்கோ இருந்திருந்தால் இன்று அவரின் நிலைமை வேறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே.- எனவும் தெரிவித்துள்ளார்./////

எது முழு நாடு? ஒரு சகோதரர் பாராளுமன்ற சாபாநாயகர்.....இன்னுமொரு சகோதரர் அமைச்சர்.....இன்னுமொரு சகோதரர் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செயலாளர்......

மகன் பாராளுமன்ற உறுப்பினர்.....மற்றும் சகல அரச விவகாரங்களிலும் தலையிடும் ஒருவர்.....உறவினர்கள் பலர் அரசியலோடு மட்டுமல்லாமல் அரசு நிர்வாகத்திலும்.....இவர்கள் தான் முழு நாடுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்த்தவ உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்......

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்ற பாலனின் பிறந்ததினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றையை நத்தாரை மிகவும் மகிழ்வுடன் கொண்டாடி சற்று ஓய்வாக இருந்த மக்களின் மனங்களை புரட்டிபோட்ட நாள் நாளை.....ஆம் உலகெங்கும் 170,000 மக்களை காவுகொண்ட சுனாமி பேரழிவு ஏற்பட்ட நாள்.....ஏற்கனவே யுத்த வடுக்களால் வாடி இருந்த ஈழத்தமிழர்களையும் ஆர்பரித்து எழுந்து வந்த அலைகள் தங்கள் கோரப்பசிக்கி ஆளாக்கிய நாள்.......எங்களுடைய போராட்டத்தையும் அதற்க்கு ஆதரவாய் இருந்த மக்களையும் கடும் இழப்புகளுக்குள் உள்ளாக்கிய நாள்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றையை நத்தாரை மிகவும் மகிழ்வுடன் கொண்டாடி சற்று ஓய்வாக இருந்த மக்களின் மனங்களை புரட்டிபோட்ட நாள் நாளை.....ஆம் உலகெங்கும் 170,000 மக்களை காவுகொண்ட சுனாமி பேரழிவு ஏற்பட்ட நாள்.....ஏற்கனவே யுத்த வடுக்களால் வாடி இருந்த ஈழத்தமிழர்களையும் ஆர்பரித்து எழுந்து வந்த அலைகள் தங்கள் கோரப்பசிக்கி ஆளாக்கிய நாள்.......எங்களுடைய போராட்டத்தையும் அதற்க்கு ஆதரவாய் இருந்த மக்களையும் கடும் இழப்புகளுக்குள் உள்ளாக்கிய நாள்........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பா ஜ கவின் அருமையான ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவர் கூட்டணி கட்சிகளை நன்கு மதிக்க தெரிந்த வாஜ்பாயி அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது பொருத்தமானதே....

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு வந்த சிறுத்தையால் தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை –

ஓடாம என்னைய்யா பண்ணுவான் நம்ம ஆளு....பொண்ண கூட்டிட்டு வருவாங்கன்னா....சிறுத்தையை எல்லா கூட்டிட்டு வந்திருக்கானுங்க பாவிங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாஸ் படத்தில் வித்தியாச நயன்தாரா... புகழும் சூர்யா////

அண்ணன் இப்பிடித்தான் அஞ்சான் படத்தில சமந்தாக்கும் buildup கொடுத்தாப்ல......படம் ஊத்திகிச்சு.....இப்போ நயந்தராக்கும் buildup கொடுத்து படம் என்னாக போகுதோ....

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்கு வந்த சிறுத்தையால் தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை –

ஓடாம என்னைய்யா பண்ணுவான் நம்ம ஆளு....பொண்ண கூட்டிட்டு வருவாங்கன்னா....சிறுத்தையை எல்லா கூட்டிட்டு வந்திருக்கானுங்க பாவிங்க.....

 

மாப்பிள்ளை என்றால்.... ஒரு கெத்தாக இருக்க வேண்டும்.

அதனை... சோதிப்பதற்காக, பெண் வீட்டுக்காரரே... சிறுத்தையை, அங்கு வரவழைத்திருக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை என்றால்.... ஒரு கெத்தாக இருக்க வேண்டும்.

அதனை... சோதிப்பதற்காக, பெண் வீட்டுக்காரரே... சிறுத்தையை, அங்கு வரவழைத்திருக்கலாம். :D

 

 

ஏற்கனவே  செய்தியைப்பார்த்து

சுண்டல் நடுங்கிப்போயிருக்கு :icon_mrgreen:

நீங்க வேற பயமுறுத்துகின்றீர்கள் :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானையா

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா எங்கிருந்து தோன்றியதோ?

யார் தோற்றியதோ?

அது கி.பி. ----ல் தோன்றியிருக்கலாம்.

ஆனால் என் சினிமா என்பது K.Bயிலிருந்து தான் தோன்றியது.

'அ.ஒ.தொ' படத்தை பத்து முறையும், போஸ்டரை ஆயிரம் முறையும் பார்த்தபடி நின்றவன் நான்.

என் மூலம் சினிமாவில் எது நடந்திருந்தாலும் அதன் மூலம் நீங்களே!

என் பட போஸ்டர்களில் உங்கள் சாயல் இருக்கும்.

கொஞ்சம் பின்னோக்கி கழுவி பார்த்தால் அதன் சாயம் வெளுக்கும்.

உங்கள் ரசிகர்களில் ஒருவனாக தொடங்கி,

உங்க காதலர்களில் ஒருவனாக சுருங்கி,

பின் நீங்கள் நேசித்தவர்களில் ஒருவனாக இருப்பதென் பாக்கியம்.

சார்!

உங்கள் மகனை இழந்து நீங்கள் மயானமாய் அந்த பால்கனியில் அமர்ந்திருந்த வேளையில் நான் உங்கள் காலருகில் அமர்ந்தேன். நீங்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு "உன் படம் (க.தி.வ.இ) நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டேன்.. தோ.. இவன் இப்படி போய்ட்டானேப்பா!" என்று இரண்டாவது வரியில் தான் மரணம் சொன்னீர்கள். முதலுரிமை சினிமாவுக்கு தந்தீர்கள்.

உங்கள் உடலிலிருந்து உயிரை பிரிக்கலாம்.

ஆனால் உங்கள் உயிரிலிருந்து சினிமாவை பிரிக்க முடியாது.

அஃதே என் உயிரிலிருந்தும் உங்கள் சினிமாவை பிரிக்க முடியாது.

இதோ...

இப்படி எழுதுவது கூட உங்களிடமிருந்து கற்றுக்கொண்டது தான்.

தமிழ் ஹிந்துவிலிருந்து K.Bசார் பத்தி ஒரு பத்து வரி சொல்லுங்க என்றதும் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டாமல் உங்களைப்போலவே "கொஞ்சம் time கொடுங்க.. நானே எழுதிட்டு உங்களை கூப்பிடுறேன்" என்று என் இழப்பில் ஒரு சதவிகிதத்தை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.

நேற்றிரவு ஆஸ்பத்திரியில் எப்போதும் காட்சி தரும் white & whiteல் நீங்கள்.

நெற்றிமேட்டில் அந்த வெள்ளை வெளீர் திருநீறு..

இல்லாமல் பார்த்ததில்லை உங்களை நான்.

ஆனால் உங்கள் மூக்கின் துவாரங்களில்..

வெள்ளையாய் பஞ்சடைத்து கிடந்தீர்களே!

நெஞ்சடைத்துப் போனேன்!

கண்ணில் கால் பாதம் தொட்டேன்.

ஆம்புலன்ஸில் கிடத்தும் போது அதில் என் கைகளும் இருந்ததே..

அது போதும் எனக்கு!

Thanks to actor Parthipan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகள்… தமிழ்நாடு நம்பர் 1////

இதுக்கு தாய்யா சிங்க போல சிங்கிளா வாழ எங்க வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில சேரனும் எண்டிறது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பெரஷயா ஈரானை வென்ற முகலாயரகள் அந்நாட்டை 25 ஆண்டுகளில் 100 % முகலாய நாடாக்கினர். ஈராக், அரேபியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை வென்று 50 வருடங்களில் 100% முஸ்லீம் நாடாக்கினர், கிரித்தவர்கள் முழு ஐரோப்பாவையும் 150 வருடங்களில் கிரித்தவ மயமாக்கினர், ஆனால் இஸலாமியர்கள் இந்தியாவில் பரவலாக பல இடங்களில் சுமார் என்னூறு வருடங்களும், கிரித்தவர்கள் முழுமையாக சுமார் 250 வருடங்களும் ஆண்டனர், ஆனாலும் அவர்களால் இந்தியாவை மத அடிப்படையில் வெல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்துமதம் எனும் கடலை குரான், பைபிள் எனும் ஆற்றை கலந்து நிரப்ப முயன்றனர். இந்துமதம் எல்லா மதங்களையும் விழுங்கி ஜீரணிக்கும். பல வெளி மதத்தினர் கரையில் நின்று கொண்டு கடல் ஆழமில்லை என கூறுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பெரஷயா ஈரானை வென்ற முகலாயரகள் அந்நாட்டை 25 ஆண்டுகளில் 100 % முகலாய நாடாக்கினர். ஈராக், அரேபியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை வென்று 50 வருடங்களில் 100% முஸ்லீம் நாடாக்கினர், கிரித்தவர்கள் முழு ஐரோப்பாவையும் 150 வருடங்களில் கிரித்தவ மயமாக்கினர், ஆனால் இஸலாமியர்கள் இந்தியாவில் பரவலாக பல இடங்களில் சுமார் என்னூறு வருடங்களும், கிரித்தவர்கள் முழுமையாக சுமார் 250 வருடங்களும் ஆண்டனர், ஆனாலும் அவர்களால் இந்தியாவை மத அடிப்படையில் வெல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்துமதம் எனும் கடலை குரான், பைபிள் எனும் ஆற்றை கலந்து நிரப்ப முயன்றனர். இந்துமதம் எல்லா மதங்களையும் விழுங்கி ஜீரணிக்கும். பல வெளி மதத்தினர் கரையில் நின்று கொண்டு கடல் ஆழமில்லை என கூறுகின்றனர்

 

இந்துமதம் எல்லா மதங்களையும் விழுங்கிச் சீரணிக்கும் எனக்கேட்கும்போது உலகக் கிண்ணத்தையே வென்ற ஆனந்தத்தில் மனம் துள்ளுகிறது, :D  :lol:  மதமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழரையும் அது விழுங்கிச் சீரணிக்கிறது என்பதை மறந்துவிட்டு...... :o  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.