Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தியிடமிருந்து விடுதலையடைந்திருப்பேன்

பலரிடம் சிறையாகி  இருப்பேன் என்பதை அவர் சொல்லமாட்டார் :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தெருமுனையில் அவனை மடக்கி

ஐஸ்க்ரீமு சாக்லேட்டு

சீஸ் பீட்ஸா பர்கர்னு

வகை வகையா வாங்கித் தந்து

பொடிசுக்கு நெருக்கமானேன்

எங்க போயி நான் சொல்ல

என் சோக காதல் கதையை...!

 

இனிமேல் சொக்லட் வாங்கிக் குடுக்க முதல் அம்மாவா அக்காவா என்று கேட்டுவிட்டு வாங்கிக் குடுங்கோ. :D

 

முதலில் நல்ல  கண் வைத்தியரை  நாடவும் என்றுதான் எழுத நினைத்தேன்

 

இது

அதையும்  தாண்டி

அதையும்  தாண்டி

நல்ல மனநல வைத்தியரை  நாடவும்......... :lol:  :D  :D

(அவசரமாக)

 

ஏன் அந்த அவசரம் :o . பஞ்சி அலுப்பு வந்தால் மாடும் கண்டுமாய் அவிட்டுக்கொண்டுவாறத்துதானே. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடாப் படுத்துதடா இந்த

பிப்ரவரி பதினாலு

நம்பிக்கையா நான் வாங்குன

கார்டு கொடுக்க ஆளில்லை

காலேஜ் கிளாஸ்மேட்டை

கணக்கு பண்ணப் பாத்தேன் - அவ

என் பிரெண்டை கணக்கு பண்ணி

பீச்சோரம் ஒதுங்கிட்டா

எதிர் வீட்டு மிடி பொண்ணை

சைலண்ட்டா சைட்டடிச்சேன்

இன்னிக்கு பாக்குறேன்

சிவத்த பய ஒருத்தனோட

பைக்கிலே பறக்குறா

பஸ்ஸில் அடிக்கடிக்கு

அழகாப் நான் பாத்த

ஒருத்தி அவகிட்ட

பக்குவமா பேசிப் பாத்தேன்

அறிவாப் பேசி எனைய

அண்ணனா ஆக்கிப்புட்டா

பேஸ்புக்கு பிகரெல்லாம்

கடலுக்கு அப்பால

நன் கொஞ்ச உள்ளூரில்

ஒரு ஆளு இப்ப இல்ல

கழுதை கெட்டா குட்டிச்சுவர்

எனக்கு ஏத்த ஆள் நீ தானடி

உனக்குந்தான் ஆளில்லை

எனக்குந்தான் எனக்குந்தான்

சேர்ந்து கொண்டாடுவோம் இந்த

பிப்ரவரி பதினால

கோவிலுக்கு போவோம் டி - நமக்கு

சீக்கிரமே சீக்கிரமே

கல்யாணம் ஆகணுமின்னு

சாமிகிட்ட கேப்பம் டி

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷெல்ஃபில் பிள்ளையார், முருகன் என சாமி படங்கள் இருந்தன. மேல் தட்டில் குர்-ஆன் இருந்தது. ''வெள்ளிக் கிழமைன்னா, அவளைக் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய் விட்ருவேன். நான் கரெக்ட்டா மாஸ்க்குக்குப் போயிருவேன். அவ அவ சாமியக் கும்பிட்டுக்குவா, நான் எங்க சாமியத் தொழுதுக்குவேன். அதுல ஒரு சிக்கலும் இல்லண்ணே... வாழ்ற வாழ்க்கதாண்ணே முக்கியம்...'' என்ற நண்பனிடம், ''சரி... கொழந்த பொறந்தா எப்பிடி வளப்பீங்க..?'' என்றேன். சட்டென்று அவன் சிரித்தபடி சொன்னான், ''ஆம்பளப் புள்ளன்னா, மனுஷனா வளப்போம்... பொம்பளப் புள்ளன்னா மனுஷியா வளப்போம்ணே!''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன் விபரங்களையும் காணலாம். உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)..!

நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..

“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.

அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.’என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.

அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.

“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.

ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.

அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.

இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.

டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..

“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....

நன்றி -அருண்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய மண்டபத்தில் சங்கீத கச்சேரிக்கு 5 பேர் மட்டும் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக்கொண்டு

இருந்தனர் ஆக இந்த 5பேர்மட்டுமே கச்சேரி பார்த்துக்கொண்டு இருந்தனர் மேடையில் 5பேர் கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்தனர் ...!

இரண்டு மணிநேரம் கச்சேரியில் பாடி முடித்தனர்.

பாடியவர்களில் தலைவர் கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு நன்றி சொன்னார்

இவளவு நேரம் எங்கள் கச்சேரியை கேட்டதுக்கு நன்றி என்றார்

சும்மா போங்க சார் அடுத்த கச்சேரி நாங்க தான் நடத்த போகிறோம் ...!

கீழ இறங்கி வந்து நீங்க கச்சேரியை கேளுங்க சார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

ஆண் என்பவன் யார்..?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி

தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

சூப்பர் சிந்தனை பாஸ் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Boy:-I Love you.

Girl:-நான் உன்னை love பண்ணலனா என்னா பண்ணுவ

Boy:-இப்படியே Bus பிடிச்சு போய் "கேப்டன்" படம் பார்க்க போய்விடுவேன்

Girl:-எப்போ நீ எனக்காக உயிரை விட நெனச்சாயோ அப்பவே நான் உன்னை விரும்பிட்டேன்

I Love you'டா :D :d

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு.. சிரிப்பு.. :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : கண்ணே செல்லம் கதவ திற நான் இண்டைக்கு தண்ணியடிக்கெல்ல ..நேற்று உனக்கு சொன்னான் தானே இனிமேல் தண்ணியடிக்க மாட்டன் எண்டு ....! பிளீஸ் கதவத்துற ...!

மனைவி : என்னங்க ஏங்க ஏன் பக்கத்து வீட்டு கதவ தட்டுரியல் ...இங்க இருக்கு நம்ம வீடு ......!வாங்க .

கணவன் : கண்ணே செல்லம் கதவ திற நான் இண்டைக்கு தண்ணியடிக்கெல்ல ..நேற்று உனக்கு சொன்னான் தானே இனிமேல் தண்ணியடிக்க மாட்டன் எண்டு ....! பிளீஸ் கதவத்துற ...!

மனைவி : என்னங்க ஏங்க ஏன் பக்கத்து வீட்டு கதவ தட்டுரியல் ...இங்க இருக்கு நம்ம வீடு ......!வாங்க .

மாதவி வெளியிலை வந்தாவென்றால் கண்ணகியின் கொடுக்கிலைதான் பிடிப்ப(என்ரை வீட்ட வாறவையை மறிக்க நீயார்?). நேரத்திற்கு கதவை மூடட்டும். :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம் லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

# ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ

்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

# எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

# அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

# செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

#நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

# இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

# சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வந்தாலும் வரலாம் போல இருக்கு அண்மையில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது அப்பிடி தெரிகின்றது சோ

அப்பிடி வந்தா

ஊருக்கு ஊர் குஷ்பூக்கு கோயில் கட்டுவாங்க நம்ம உடன் பிறப்புக்கள்

அப்புறம் தமிழக அரசு இப்பொழுது மலிவு விலையில் உணவு கொடுப்பது போல குஷ்பூ இட்லி குஷ்பூ குண்டு தோசை குஷ்பூ காரக்குழம்பு என்று மலிவு விற்பனையில் மூலைக்கு மூலை கடை போட்டு கொடுப்பாங்க

நம்ம எதிர்கால தமிழக மாண்புமிகு முதல்வர் அம்மா குஷ்பூ அவர்கள்.

சொல்லவே நல்லா இருக்கில்ல :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த

சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர

மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க

வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் விருப்பத்திற்காக இளமை துறந்து பதவியை உதறிய பீஷ்ம பிதாமகர் மறைந்த நன்னாள் பீஷ்மாஷ்டமி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பிப்ரவரி 18ம் தேதி பீஷ்மாஷ்டமி தினம் என்பதால் பீஷ்மரின் தியாகத்தை இந்த நாளில் அறிந்து கொள்ளலாம். சந்தனு மகாராஜாவிற்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர்தான் தேவவிரதன் என்ற காங்கேயன்.

இளவரசான இவர் தனது தந்தை சந்தனுவிற்காக யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்துள்ளார். தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளமை விட்டுக்கொடுத்தார். அவர்களின் வாரிசுகள் அரசாளா வேண்டும் என்பதற்காக திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் ஏற்றார். அவரது தியாகம் கண்டு உலகமே அதிசயத்தது. தந்தையின் ஆசையை நிறைவேற்ற தியாகம் செய்தவர் ‘பீஷ்மர்' என்று போற்றப்பட்டார். பீஷ்மர் என்றால் யாருமே செய்ய முடியாத தியாகத்தை செய்தவர் என்று பொருள். மகனின் தியாகத்தைக் கண்டு மகிழ்ந்த சந்தனு, மகனுக்கு மிகப்பெரிய வரம் ஒன்றை அளித்தார். "தீர்க்காயுளுடன் இருக்கும் நீ விரும்பும் நாளில்தான் உயிர்துறப்பாய்" என்பதுதான் அந்த வரம். சந்தனு மகாராஜாவின் இரண்டாவது மனைவி மூலம் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். அவர்களுக்கு அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை பீஷ்மர் மனமுடித்து வைக்கிறார். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்தனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராய்க்கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்பபாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளம் வயதிலேயே விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி, பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. அப்போது விரதத்தை விட்டு வம்சவிருத்தி செய்ய உதவவேண்டும் என்று என்று இரண்டாவது அன்னை கேட்டுக்கொண்ட போதும் சபதத்தை கைவிடவில்லை பீஷ்மர். இதனையடுத்து வியாசர் மூலம் அம்பிகா, அம்பாலிகாவிற்கு பிறந்தவர்கள்தான் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர். இதில் திருதராஷ்டிரன் கண்பார்வையற்றவன். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள், திருதராஷ்டிரன் மக்கள் கவுரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தீயவர்கள் என்று தெரிந்தும் கவுரவர்களின் பக்கம் நின்றார் பீஷ்மர். அர்ஜூனன் விட்ட அம்புப் படுக்கையில் பல நாள் இருந்தாலும் உத்தராயண காலத்தில் உயிர் விட வேண்டும் என்று காத்திருந்து ரத சப்தமிக்கு மறுதினம் அஷ்டமி நாளில் உயிர்நீத்தார். எனவேதான் இந்த நாளினை பீஷ்ம தர்ப்பண நாள், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கின்றனர்.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான். அவர் அவனை விசாரித்தார்...

குடிப்பாயா..? இல்லை, சார்...

சிகரெட் பிடிப்பாயா..? இல்லை, சார்...

ரேசுக்கு போவாயா..? இல்லை, சார்...

சூதாட்டம்..? கிடையாது, சார்...

பெண் சிநேகிதம்..? சத்தியமா இல்லை, சார்...

உனக்கு இருபது ரூபாய் தருகிறேன். என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்...

ஏன் சார் ..........................?

ஏன் மனைவி ஒரே என்ன திட்டுவா ..இப்படி குடிச்சு குடிச்சு பார் நீ பிச்சைக்காரன் ஆகப்போகிறாய்

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையும் இது தான் என்று...!

:D : d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிதை சொல்லவா!

விடியும் முன் கொக்கரக்கோ என்றேன்

விடிந்த பின் குக்கருக்குள் வெந்தேன்

இப்படிக்கு சேவல்

:D :d :D:( :( :(

....... தந்தை விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும்.........

 

இந்த சந்தனு மகராசா தான் விரும்பிய பெண்ணை கலியாணம் செய்ய முடியாத, கூரை ஏறத்தெரியாத குருக்கள்.

 

 "தீர்க்காயுளுடன் இருக்கும் நீ விரும்பும் நாளில்தான் உயிர்துறப்பாய்"
பின்னர் அந்த குருக்கள் காட்டி வைத்ததுதான் மகனுக்கு எந்த நாளில் இறந்து வானம் ஏறி வைகுண்டம் போகலாம் என்பது. அகையால்  அந்த நாளுக்கு வைத்திருக்க வேண்டிய பெயர் சந்தனாஷ்டமியே அல்லாமல் பீஷ்மாஷ்டமி. 
 
என்ன செய்ய நம்ம! முன்னோர்கள் நம்மை விட உண்மையானவங்கள், உயர்வானவங்கள் என்பது மறு மறுக்க முடியாத உண்மை என்றாலும், அறிவில் நம்ம மதிரியே இருந்திருக்காங்கள். நம்மை மாதிரியே அவ்வப்போது இப்படி மிஸ்டேக்கும் விட்டிருக்கிறாங்க.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் ...!

ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ......!

கடவுளே என்று உரத்து கத்தினான் ...என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் ...!

கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்

**தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்****

விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்

**வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****

விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்

**அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்**

ஆமா சாமி ..என்றான்

கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம்

நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் ...

நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம்

கூட்டிச்செல்ல மன்றாடினாள்

அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில்

காணாமல் போய்விட்டாள்...!

கடவுளே என்று உரத்து கத்தினான் ...என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் ...!

கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்

**நமிதாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் ...?

அவன் ஆமாசாமி என்றார்

கடவுள் திகத்துவிட்டார் ...என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே ...?

இல்ல சாமி நீங்கள் .....!

**முதல் நமிதாவ காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் ...

அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன்

என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் ஆம் என்பேன்

நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள்

நானோ விறகு வெட்டி எப்படி சாமி ...?

மூன்றுபேரையும் வைத்து வாழுறது அதுதான் சாமி நமீதாதான் என் மனைவி என்றேன் சாமி ...

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sundhal : ஐ லவ் யூ, சங்கீதா...

சங்கீதா : நான் போய் இத boss

கிட்ட சொல்றேன்,.

Sundhal : அட...!லூஸூ.,

இதெல்லாம் அவர்கிட்ட சொல்லாத..

அவருக்கு ஏற்க்கெனவே

கல்யாணம் ஆகியிருச்சு..

சங்கீதா : டேய்ய்ய்ய்ய்.......

Sundhal:escapeeeeeeeee

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரால் என்ன பிரச்சினை? :D தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் வித்துக் காலத்தை ஓட்டுறதுதானே??!! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டையும் வித்து காலத்தை ஓட்டலாம் ஆனா ஆனா..... சொல்ல முடியல்ல வெட்டி புடுவாக :(:D :d

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.