Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாணவர்களே! ஊடகம் நம்முடைய போராட்டத்தை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்திய நாட்டின் வரலாற்றில் நடந்த மிகப் பெரும் போராட்டங்களில் ஒன்று ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தமிழ்நாட்டு மாணவர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டம். இந்தப் போராட்டத்தை மறைத்தும் , இதன் நோக்கங்களை திரித்தும் இந்த ஊடகங்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

இன்று இந்த ஊடகங்களையும் மீறி தமிழ்நாட்டு மாணவர்களின் முகநூல் பக்கம் மிகப் பெரும் செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்களை விட அதிகம் பேர் வந்து படிக்கும் இடமாக மாறியுள்ளது. மாணவர்களின் இந்த நேர்த்தியான செயல்பாடு வடநாட்டு ஆங்கில ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசியதுடன் , தேவைப்பட்டால் தமிழ் மாணவர்கள் தங்களுக்கான ஊடகங்களை சில நாட்களில் எற்படுத்திக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

இந்தப் பக்கத்தின் நிருபர்கள் போராட்டத்தை நேரடியாக நடத்தும் மாணவர்கள். இந்த பக்கத்தை விளம்பரப் படுத்துவது மாணவர்களின் போராட்டத்தில் இருக்கும் நேர்மை. இந்தப் முகநூல் பக்கத்தின் வெற்றி போராடும் ஒவ்வொரு மாணவனின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

ஒரு முறை அனைவரும் இந்த மாணவர்களுக்கு கை தட்டுங்கள்!.

http://www.facebook.com/tamilnaduhungerstrike?ref=stream

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி அரசினர் வைத்தியசாலையில் புதிதாக கடமையேற்றுள்ள வைத்திய கலாநிதி திருமதி செல்வராசா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ள வைத்திய கலாநிதி சேத்திரபாலன் அவர்களுக்கும் கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற இடமாற்றம் பெற்ற அலுவலர்களுக்கும் பிரியாவிடை வழங்கும் வைபவமும் மதியபோசன விருந்துபசாரத்துடன் கடந்த 02.03.2012 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

Alaveddy.ch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்த காங்கிரஸ் பன்றிகளும் வேண்டாம். பிஜேபி வானரங்களும் வேண்டாம். சந்தர்பவாத உளுத்தம் பருப்புகளும் வேண்டாம். திராவிடம் பேசும் திலலங்கடிகளும் வேண்டாம். பஞ்ச் டயலாக் சொல்லும் பன்னாடைகளும் வேண்டாம். சூம்பி போன சூப்பர் ஸ்டாரும் வேண்டாம். சாதி வச்சு ஜால்ரா போடுற சாபணிகளும் வேண்டாம். போதும்டா உங்க நாடகம். எங்களுக்கு நாங்களை போதும். இனி தமிழ் எங்கள் சாதி. இனி தமிழ் எங்கள் சமயம். இனி தமிழ் எங்கள் மூச்சு. இனி தமிழ் எங்கள் வாழ்கை. மத்தவன் எல்லாம் கொஞ்சம் சாத்திட்டு போறிங்களா...

Fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தது போதும் இந்தியனாய்

திக்கற்று திரிந்தது போதும் திராவிடனாய்

திரண்டு வா தமிழனாய்

உன் முப்பாட்டன் வள்ளுவன் அன்றே உலகப் பொது மறை பாடிய அறிஞன்

உன் பாட்டன் ராஜா ராஜனும் ராஜேந்திர சோழனும் இலங்கை முதல் இந்தோனேசிய வரை வென்று வந்த வீராதி வீரர்கள்

அடே தமிழா உன் உள்ளே அவன் ரத்தம் ஓடுவதை மறக்கலாமோ!

வீரம் கொண்ட வேங்கையாய் வெற்றி நடை போடடா...

பூ மகள் பூரிப்புடன் அந்தத் தருனதுற்காக கண் இமைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறாள் பாரடா...

வெற்றி வலம் வந்து தமிழின் புகழ் வான் முட்ட வெற்றிப் பேறகை செய்யடா என் தமிழா...!

Fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.

களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

போராட்டத்தை ஃபேஸ் புக் புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்குத் தேவையான பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும் ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.

கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால் மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.

கல்லூரி நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல், உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி. தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டும்.

பெற்றோரின் கடின உழைப்பையும், காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும். இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.

“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள் பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம், எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப் பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு வாழ்வது அவசியம்.

இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம் உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள். ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால் உருவாகட்டும்!

சுப. உதயகுமாரன்

இடிந்தகரை

மார்ச் 21, 2013

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவைச் சேர்ந்த கலூப் என்ற நிறுவனம், "அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது?' என்ற ஆய்வை நடத்தியது. இதில், முதலிடம் பிடித்திருப்பது, கனடா. 92 சதவீதம் பேர், கனடாவை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.

அமெரிக்கர்களின் விருப்ப பட்டியலில், பிரிட்டனுக்கு இரண்டாவது இடமும், ஜெர்மனிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் அமெரிக்கர்கள், இந்தியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, இஸ்ரேலுக்கு, இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக, ஏழாவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம் தான். அதே நேரத்தில், அமெரிக்கர்கள், மிகவும் வெறுக்கும் நாடுகளில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதில், முதலிடத்தை பிடித்துள்ளது, ஈரான். இரண்டாவது இடம், வட கொரியாவுக்கு கிடைத்துள்ளது.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணர்ச்சி 2009 இல் வந்திருந்தால் இறப்புகளையாவது தடுத்திருக்கலாம். காலம் கடந்து வரும் எதுவும் பயனற்றதே.

 

2015 2016 இல் நடைபெற இருக்கும் இன அழிப்பை இது தடுக்காது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
நாமும் 1940 ஆண்டு ஈழம் கேட்டு போராடியிருக்கலாம் அல்லவா?
அவர்கள் இதை 1999இல் செய்திருப்பார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவைச் சேர்ந்த கலூப் என்ற நிறுவனம், "அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது?' என்ற ஆய்வை நடத்தியது. இதில், முதலிடம் பிடித்திருப்பது, கனடா. 92 சதவீதம் பேர், கனடாவை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.

அமெரிக்கர்களின் விருப்ப பட்டியலில், பிரிட்டனுக்கு இரண்டாவது இடமும், ஜெர்மனிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் அமெரிக்கர்கள், இந்தியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, இஸ்ரேலுக்கு, இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக, ஏழாவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம் தான். அதே நேரத்தில், அமெரிக்கர்கள், மிகவும் வெறுக்கும் நாடுகளில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதில், முதலிடத்தை பிடித்துள்ளது, ஈரான். இரண்டாவது இடம், வட கொரியாவுக்கு கிடைத்துள்ளது.

Dinamalar

 

கனடாவிற்கு அருகில் இருக்கும் ஒரு சிட்டியில் இந்த ஆய்வை செய்திருப்பார்கள்.
அவர்களுக்கு கனடா மட்டுமே தெரிந்திருக்கும்.
 
ஒருவர் சொல்லும் விடை என்பது கேட்கப்படும் கேள்வியையும் பொறுத்து இருக்கிறது.
எனக்கு தெரிந்த சில அமெரிக்கர்களுக்கு கனடாவே தெரியாது.
நான் இருக்கும் மாநிலம் மட்டுமே தெரியும். அவர்களைபோய் எந்த நாடு பிடிக்கும் என்றால்............ மூளிப்பார்கள். 
பின்பு கனடாவா? இந்தியாவா? சிங்கபுரா ? பூட்டான? என்று தொடங்க.... சொல்லியதில் அவர்கள் தற்காலிக மேமொரியில் பதிந்த இரு நாட்டை சொல்லுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிற்கு அருகில் இருக்கும் ஒரு சிட்டியில் இந்த ஆய்வை செய்திருப்பார்கள்.
அவர்களுக்கு கனடா மட்டுமே தெரிந்திருக்கும்.
 
ஒருவர் சொல்லும் விடை என்பது கேட்கப்படும் கேள்வியையும் பொறுத்து இருக்கிறது.
எனக்கு தெரிந்த சில அமெரிக்கர்களுக்கு கனடாவே தெரியாது.
நான் இருக்கும் மாநிலம் மட்டுமே தெரியும். அவர்களைபோய் எந்த நாடு பிடிக்கும் என்றால்............ மூளிப்பார்கள். 
பின்பு கனடாவா? இந்தியாவா? சிங்கபுரா ? பூட்டான? என்று தொடங்க.... சொல்லியதில் அவர்கள் தற்காலிக மேமொரியில் பதிந்த இரு நாட்டை சொல்லுவார்கள்.

 

அப்ப.. பல அமெரிக்கர்களின் நிலைமை கவலைக்கிடமாத்தான் இருக்கு??!! :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாகவே பொது அறிவு விடையத்தில் அமெரிக்கர்கள் கொஞ்சம் அப்பிடி இப்பிடி தானாம்.... தங்களுக்கு பக்கத்தில் இருக்கும் நாட்டின் பெயர்களே பல பள்ளி மாணவர்களுக்கு தெரியாதாம்....

அவர்களின் ஐம்பது மானிலமும் ஐரோப்பிய 50 நாடுகளுக்கு சமன். இதுவே நினைவில் வைத்துகொள்ள பெரிய பாடான விடையம். 

 

FM வானொலியில் தங்கள் ஊர் புதினங்களை மட்டும்தான் கேட்க விரும்புவார்கள். தமிழ் நாட்டு சினிமா போல நியாமான அளவு பாடல்கள், டிவி சீறிஸ், விளையாட்டு என்று ஆர்வம் காட்டுவார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 பேர் கொண்ட குடும்பத்தில்..... 4 துண்டு கேக் இருந்தால் ...."எனக்கு கேக் பிடிக்காது" என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய் தான்.....

தாயை நேசி....

  • கருத்துக்கள உறவுகள்

5 பேர் கொண்ட குடும்பத்தில்..... 4 துண்டு கேக் இருந்தால் ...."எனக்கு கேக் பிடிக்காது" என்று சொல்லும் ஒரே ஜீவன் தாய் தான்.....

தாயை நேசி....

 

அது ஒரு  நடமாடும் அதிசயம் ராசா

எனது தாய் செய்தவற்றையும்

எனது பிள்ளைகளின் தாய் செய்து கொண்டிருப்பதையும் பார்த்து அதிசயித்தவன்.

நம்மால் எல்லாம் இந்த மாதிரி  முடியவே முடியாதப்பா.. :wub:

அதனால்தான் அந்த இருவரையும் அதிகம் நேசிக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.

பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.

'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மக்களின் கடைசி கவிதை

எங்கள் கல்லறையில் எழுதுங்கள்

எங்கள் மரணத்திற்கு காரணம் நாங்கள் பேசிய

"தாய் மொழி தமிழ் என்று"

Fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகனே அவள் நம் குலத்துக்கு ..

ஒத்துவரமாட்டாள் அவளை மறந்திடடா ...?

முடியாதம்மா என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

அண்ணா என் நண்பிகள் எல்லோரும் ...

கேலிசெய்கிறார்கள் ...தயவு செய்து அவளை

மறந்திடடா ....?

முடியவே முடியாது என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

டேய் நண்பா அம்மாவுக்கு தங்கைக்கு அவளை பிடிக்கவில்லை அவளை மறந்திடடா ...?

முடியவே முடியாது என் உயிர் உள்ளவரை நான் அவளை மறக்கமாட்டேன் ....!

அருமை மகனே உனக்கு என் நண்பனின் மகளை சிறுவயதில் பேசிவைத்துவிட்டேன் அவளை மறந்திவிடு இவளை திருமணம் செய்யடா ...?

அவளைஎன் உயிர் உள்ளவரை மறக்கமுடியாதப்பா ..! ஆனால் இவளை திருமணம் செய்கிறேனப்பா... !

(அப்பாவை தவிர மற்றவங்க எல்லோரும் அவளை மறந்திடடா ...? அவளை மறந்திடடா ...?

சொன்னாங்களே தவிர வேறு கலியாணம் செய்யடா என்று சொல்லவே இல்ல )...அதுதான்

அப்பாவின் சொல்லைக்கேட்டேன் ...நான் எடுத்த முடிவு சரிதானுங்களே...?

:( :( :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் ராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு என்று மிருகங்களை வைத்தே அதிகப்படியான படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் சந்தானம் - பவர் ஸ்டார் சீனிவாŒன் நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது தன், 126வது படமாக, நான் சரக்கு நீ ஊறுகாய் என்றொரு படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில், பவர் ஸ்டாருடன், ஒரு குரங்கும் முக்கிய வேடத்தில் இடம் பிடித்துள்ளது.

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ஸ்ரீகாந்த் எழுதுகிறார்:

ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் "யாருக்காக அழுதான்?' நாவலை படித்த போது, கண்டிப்பாக இவரை சந்தித்தே தீர வேண்டுமென்று நான் முடிவெடுத்து விட்டேன்.

ஒரு நாள் மதியம் கவிஞர் வாலியுடனும் (அப்போது அவர் சினிமா கவிஞர் வாலி அல்ல) ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மற்றும் பிற நண்பர்களான மேஜர் சுந்தரராஜன், மணவாளன் ஆகியோருடன் ஜெயகாந்தன் குடியிருந்த எழும்பூர் வீட்டிற்கு சென்றேன்.

ஆஜானுபாகுவாக, ஒரு பயில் வானைப் போன்று, தலை நிறைய சுருள் சுருளான முடியுடன் கதர் சட்டை, கதர் வேட்டியுடன், "யாரப்பா?' என்ற கேள்வியுடனும், ஒரு கம்பீர பார்வையுடனும் அவர் தரிசனம் தந்தார்.

"வாருங்கள், திண்ணையிலே உட் கார்ந்து பேசுவோம்...' என்ற வாறு, தெரு வாசற்படிக்கு அருகே இருந்த அந்த ஒற்றையடிப் பாதை போன்ற திண்ணையில், அவரைப் பின் தொடர்ந்து போய் உட்கார்ந்தோம்.

"உங்களது, "யாருக்காக அழுதான்' கதை ரொம்ப நல்லாயிருக்கு. இதை நீங்கள் நாடகமாக்கி தர வேண்டும்...' என்று நான் சொல்லவும், நண்பர்கள் என்னைத் தொடர்ந்து கோரஸ் பாடினர்.

"காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே...' என்றவாறு அவர் எழுந்து, எதிர் சாரியில் இருந்த ஓட்டலை நோக்கி நடக்க, நாங்களும் பின்தொடர்ந்து ஓட்டலுக்குள் நுழைந்தோம்.

காபி சாப்பிட்டு முடித்து விட்டோம். எங்களை பார்த்து நட்புடன், "நீங்கள் இருக்கிற இடத்தை சொல்லுங்கள். நான் அங்கேயே வந்து நாடகமாக்கி, தருகிறேன். எனக்கென்னமோ, நாடகமெல்லாம் என்னால் எழுத சரிப்படாது என்று தான் தோன்றுகிறது...' என்றார்.

மறுநாள் நாங்கள் எதிர்பாராத வகையில், எங்கள் அறைக்கு வந்தார். எங்களுக்கு மகிழ்ச்சி தாள முடியவில்லை. பேப்பர் பேனாவை கொடுத்தோம்.

"உங்க சவுகர்யம் போல் இருந்து எழுதி விட்டு, போகும் போது பூட்டி விட்டு போங்கள்...' என்று சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, நாங்கள் எங்கள் அலுவலகத்திற்கு புறப்பட்டு போனோம். அக்காலத்தில், நாங்கள் முற்றிலும் தொழில் நடிகர்களாக மாறியிருக்கவில்லை.

தினமும் நாங்கள் மாலையில் வெகு ஆர்வத்துடன் அவர் எழுதியதை படிக்கலாம் என்று அறைக்கு திரும்புவோம். அறை பூட்டி இருக்கும். அறையின் மூலையில், கிழித்துப் போட்ட காகிதங்கள் பந்து போல் சுருட்டிப் போடப்பட்டு குவியலாய் இருக்கும்.

இவ்விதம் மூன்று நாட்கள் சென்றன. நான்காவது நாள் மாலை, நாங்கள் அறைக்கு திரும்பும் போது, அவரே அங்கு இருந்தார். எங்களுக்கு ஒரே குஷி... எழுதியிருப்பார் என்று.

எங்களைப் பார்த்ததும், ஒரு புன்முறுவலுடன் மீசையை நீவியவாறு, "எல்லாரும் இப்படி உட்காருங்கள்...' என்றார். நாங்கள் வட்டமாக கூடி அமர்ந்தோம். எங்கள் கண்கள் அறையைச் சுற்றி நோட்டமிட்டன. எங்களது, "ஸ்கிரிப்ட்' தென்படுகிறதா என்று!

அவர் சொன்னார்: இத்தனை நாட்களாக நன்றாக காபி, டிபன் சாப்பிட்டேன். சாப்பாடும் சாப்பிட்டேன், தூங்கினேன். நல்ல, "ரெஸ்ட்டுப்பா!' ஏம்ப்பா, உங்களுக்கு நெசமாலும் நாடகம் தேவைதானா? அதுவும் என் நாடகம் தேவைதானா? என் கதையை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு மிக்க நன்றி. வரட்டுமா. என் மேல் வருத்தப்படாதீர்கள்... என்று எழுந்து விட்டார்.

நாங்கள் ஒன்றும் பேசவில்லை. மவுனமாக வாசல் வரை வந்து அவரை வழியனுப்பி வைத்தோம்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

]

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,

.........

அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, ..................???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"...!

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,

.........

அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, ..................???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"...!

:(:D. :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தர் : சாமியாரே…எதுக்காக என் சம்சாரத்தை கொலை செஞ்சீங்க…

சாமியார் : என் கஷ்டத்தை தீர்த்து வைங்க..னு

நீதானே கேட்ட

:D:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைக்காரர் ஒருத்தர்: சார் எறும்புக்கு பவுடர் தரட்டுமா?

கஸ்டமர்: வேண்டாம்பா.... இண்டைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போனா, நாளைக்கு கொசு லிப்ஸ்டிக் கேக்கும்......

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் ஆணின் பக்கத்தில் பெண் உட்கார்ந்தால்

உரிமையாம்,

பெண்ணின் பக்கத்தில் ஆண் உட்கார்ந்தால் எருமையாம்.

நல்ல சமத்துவம்ய்யா..

:( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கோர் கெட்ட செய்தி.. காலாவதியாகப் போகிறார்களாம் ஆண்கள்!

சிட்னி: உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பரபரப்பு கிளம்புவது வாடிக்கை. ஆனால் தற்போது பகீர் பரபரப்பு ஒன்றை கிளப்பியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். அதாவது உலகிலிருந்து ஆண் இனமே அழியப் போகிறதாம். அந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாம்.

பெண்களுக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியாக இருக்க முடியாது. ஆனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

இந்தத் தகவலை சொல்லியிருப்பது ஒரு பெண் விஞ்ஞானிதான். அவரது பெயர் பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...

அழியத் தொடங்கி விட்டது ஆண் இனம்

உலகில் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பை அடைந்துள்ளன. அதில் ஒன்றாக ஆண் இனமும் சேர்ந்திருப்பது அதிர்ச்சியான செய்திதான்.

ஏற்கனவே தொடங்கி விட்டது

ஆனால் இதுதான் உண்மை. இந்த அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தியாகும்.

குரோமோசோம்கள் குறைகின்றன

பெண் பாலினத்தை நிர்ணயிப்பது எக்ஸ் குரோமோசம்கள் ஆகும். இதில் ஒரு குரோமோசோமில் 1000 ஜீன்கள் இருக்கும். அதேபோல ஆண் பாலினத்தை நிர்ணயிக்கும் ஒய் குரோமோசோமிலும், ஆரம்பத்தில் ஒரு குரோமோசோமில் ஆயிரம் ஜீன்கள் இருந்திருக்க வேண்டும்.

100 ஜீன்கள் குறைந்து விட்டன

ஆனால், தற்போதைய ஆண்களின் குரோமோசோமில் 100 ஜீன்கள் மட்டுமே உள்ளன. காணப்படுகிறது. அதில் முக்கியமான ஜீன் எஸ்ஆர்ஒய் ஜீனும் அடக்கம். Male master switch என்று அழைக்கப்படும் இந்த ஜீன்தான் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கும் மிக முக்கியமான ஜீன் ஆகும்.

பெண்களுக்கு இரண்டு.. ஆண்களுக்கு ஒன்று

தற்போதைய பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு ஒரு ஒய் குரோமோசோம் மட்டுமே உள்ளது. இதனால் ஆண் இனத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கி விட்டதை அறியலாம்.

50 லட்சம் ஆண்டுகளுக்கு ஆம்பளைங்க இருப்பாங்களாம்

இருப்பினும் ஆண் இனம் முழுமையாக அழிவதற்கு 50 லட்சம் ஆண்டுகள் பிடிக்குமாம். அதுவரை பிரச்சனை இல்லை என்கிறார் ஜென்னி கிரேவ்ஸ்.

ஆண்களே உலகில் இல்லயென்றால்...

33 சதவீதம் கேட்டு போராட வேண்டி இருக்காது... ஆனால் நூறு சதவீதத்தை வைத்து என்ன செய்ய முடியும்?

உருவாகலாமோ விந்தணு வங்கிகள்...

டைனோசரஸ் முட்டை மாதிரி, ஆண் விந்தணுவை சேகரித்து வைக்கும் வங்கிகள் அதிகமாகலாம். இல்லையென்றால் அறிவியல் இன்னும் பல நினைத்துப் பார்க்க இயலாத கண்டுபிடிப்புகளைத் தரலாம்.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் கழுதாய்?”

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப் போகிறாதா?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, பொது மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம்.. எஜமானர்களின் பெயர் மட்டுமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைய‌ன் : உங்க‌ குடும்ப‌ ந‌ன்மையை உத்தேசித்து இந்த‌ கேள்வி?

பெண் : கேழுப்பா

பைய‌ன் : எப்ப‌ நீங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப் போரீங்க‌?

பெண் : செருப்பாலே அடிப்பேன், அதைக் கேட்க‌ நீ யாரு

பைய‌ன் : உங்க‌ த‌ங்க‌ச்சியோட‌ ல‌வ்வ‌ர்.

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.