Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!

அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.

அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.

"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார்.

உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.

உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.

அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

:( :( :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க

மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திருப்பேன்.

என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?

கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா

மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச்சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"

தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"

மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"

தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."

தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."

தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."

மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு ....

கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...

தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திப்பு சுல்தான், மலபார் மீது படையெடுத்த போது, குருவாயூரைக் கைப்பற்றினார். அங்குள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள், திப்புவின் படை வீரர்களால் கோவிலுக்கு சேதம் ஏற்படலாம் என்று அஞ்சி, கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி, ஊருக்கு வெளியே ஏதோ ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர்.

செய்தி அறிந்த திப்பு சுல்தான், அர்ச்சகர்களை அழைத்து, தாமே முன்னின்று, மீண்டும் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வித்தார். அது மட்டுமல்ல; குருவாயூர் வட்டத்தின் வரிவசூல் அனைத்தையும் கிருஷ்ணன் கோவிலுக்கு அளித்தார்.

— ஜி.ஆளவந்தார் எழுதிய, "மாவீரன் திப்பு சுல்தான்' நூலிலிருந்து...

அது தெரிந்ததுதான். அப்பு சுல்தான் மலபாரிகளை விட நல்ல மனிதன் தான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கறுப்பின சிறுவனை பார்த்த ஒரு வெள்ளைக்காரன் ஏளனமாய் சிரித்தானாம்.

எதற்க்காக சிரிக்கிறீர்கள் ? என்று அந்த சிறுவன் கேட்க நானோ வெள்ளை நீயோ கருப்பு எனக்கு தான் எதிலுமே முன்னுரிமை, வெள்ளையர்கள் தான் மேல் இருப்பார்கள் கருப்பர்கள் கீழே தான் இருப்பார்கள் என்று ஏளனம் செய்து சிரித்தான்.

அந்த வெள்ளையனை பார்த்து அந்த சிறுவன் சிரிக்கத் துடங்கினான். ஏனடா சிரிக்கிறாய் ? என்று கேட்டான் அந்த வெள்ளைக்காரன்.

எப்பொழுதும் வெள்ளை தான் மேலே கருப்பு கீழே என்றீர்களே அதை நினைத்துதான் சிரித்தேன்.. என்னை பொருத்தவரை கருப்பு என் தலைக்கு மேலே, வெள்ளை என் காலுக்கு கீழே என்றான்.

ஒன்றும் புரியவில்லை அந்த வெள்ளையனுக்கு.

என்ன சொல்கிறாய் ? என்று கேட்டான்.

கருப்பு என் தலைக்கு மேலே அது " என் தலை முடி"

வெள்ளை என் காலுக்கு கீழே அது "என் கால் பாதம்" என்று விளக்கம் கூறினான் அந்த சிறுவன். வாயடைத்துப் போய்விட்டார் அந்த வெள்ளைக்காரர். எதையுமே வித்தியாசமாக பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.

அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் .

அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .

அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா.. ?

அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .

என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ என்றான்...!

இது தான் பொண்ணுங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் கேப்பானுங்க பொண்ணுங்ககிட்ட நீ யாரவது காதலிச்சியா அப்பிடின்னு நல்லா கேக்குறான்னு உண்மைய சொன்னிங்க உங்க வாழ்க்கை நாசமா போயிரும் நல்லதுக்கு சொல்றேன் பொண்ணுங்க கேளுங்க ....:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்

உங்கள் நம்பிக்கை மாறும்!

உங்கள் நம்பிக்கையை மாற்றுங்கள்

உங்கள் எதிர்பார்ப்பு மாறும்!

உங்கள் எதிர்ப்பார்ப்பை மாற்றுங்கள்

உங்கள் மனப்பான்மை மாறும்!

உங்கள் மனப்பான்மையை மாற்றுங்கள்

உங்கள் நடவடிக்கை மாறும்!

உங்கள் நடவடிக்கையை மாற்றுங்கள்

உங்கள் செயல்திறன் மாறும்!

உங்கள் செயல்திறனை மாற்றுங்கள்

உங்கள் வாழ்க்கை மாறும்!

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில்

பிரச்னை என்று புலம்பினான்..சர்தார் சொன்னார்..

நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை..

ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.?

இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினிஆயிட்டாங்க..

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.

அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது. மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?. கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்

 

(புடிபடலை) :unsure: இதில் எந்த வசனம் சார்த்தாஜி சொல்கிறார் :D ?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சர்தாஜி இல்லை நம்ம யாழ் கள டிக்கால்ஜி...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nandu : படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?

Subesh : மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...? கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே...! ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் கிழமை திடீரென் வந்தாள் ...

செவ்வாய் கிழமை செவ்விதழால் முத்தம் தந்தாள் ..!

புதன் கிழமை புண்ணானேன்...!

வியாழக்கிழமை விடிய வந்தாள் ...!

வெள்ளிக்கிழமை கள்ளி மீண்டும் தந்தாள் ...!

சனிக்கிழமை சரணடைந்தேன் ...!

ஞாயிறு விடுமுறைநாள் ...!

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.

ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார்.

 

திரும்ப வந்து சர்தார்ஜியிடம் சொன்னார். மன்னிக்கவும் அவரை வெளியேற்ற முடியாது. அவர் ஒரு புகையிரத ஊழியர் என்றபடி நகர்ந்தார் T.T.R. சர்தார்ஜி.

 

இது எப்படி இருக்கு சுண்டல். 

 

(இது வானத்தில் இருந்து எழுதியது)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா ஒரிஜினல் ல விட டக்கரா இருக்கு அண்ணா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pakalavan Annaa நீங்களும் இதே மாதிரி ஒரு அழகான விமான பணி பெண்ணை பிடிச்சு try பண்ணலாமே அண்ணா....:D

Edited by SUNDHAL

ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"அது வேறு யாரும் இல்லைங்க! கண்ணாடியில் உங்க உருவம்தான் தெரியுது!" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.

சார்த்தாஜி பங்கிறப் போலை. அதாலை பாத்றூமுக்கு நந்தன் தான் போயிருக்கிறார். அவர் எப்ப கண்ணடியை பார்த்தாலும் வேறு எதுவோதான் கண்ணாடியில்  தோன்றுகிறது. அதுதான் அவருக்கு பிடிபடுகிறதில்லை. :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நீ நேத்து பாடுன பாட்டை திரும்ப பாடேன். கேக்கணும் போல இருக்கு"

"நான் என்ன அவ்வளவு நல்லா பாடினேனா?"

"அப்படி ஒண்ணுமில்லை. ஒரு வார்த்தை கூட உருப்படியா புரியலை. இப்பவாவது புரியுதான்னு பாக்கலாமேன்னு தான்"

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 5 படங்கள் ரிலீஸ்!- எது தேறும்?

பேச்சியக்கா மருமகன்

மாமியார், மருமகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேச்சியக்கா மருமகன். மாமியாராக ஊர்வசியும், பாசமான மருமகனாக தருண் கோபியும் நடித்துள்ளனர்.

ரெண்டாவது படம்

விமல், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, சஞ்சனா சிங் நடித்துள்ள படம் ரெண்டாவது படம். முழு நீள காமெடி படம். தமிழ் படத்திற்கு பிறகு அமுதன் இயக்கியுள்ள படம் இது.

யாருடா மகேஷ்

சந்தீப் கிஷன், டிம்பிள் நடித்துள்ள காதல் காமெடி படம் யாருடா மகேஷ். படத்தை மதன் குமார் இயக்கியுள்ளார்.

நான் ராஜாவாகப் போகிறேன்

வெற்றிமாறன் தயாரிப்பில் பிரித்விராஜ்குமார் இயக்கத்தில் நகுல், சாந்தினி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நான் ராஜாவாகப் போகிறேன். இந்த படம் நகுலுக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவர் மீது இருவர் சாய்ந்து

முக்கோண காதல் கதையான ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் லகுபரன், ஸ்வாதி, சானியா நடித்துள்ளனர். படத்தை பாலசேகரன் இயக்கியுள்ளார்.

Thatstamil

படத்தோட தலைப்புகள பாத்தா எல்லாப்படமும் தேறிடும் போல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.