Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கெஜிரிவாலுக்கு வால் பிடிச்சிட்டு திரிஞ்ச அந்த பாப்பாவ தேடிட்டு இருக்கன்..... கையில கிடைச்சா கைமா தான்

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவ கார்த்திகேயன் போன்ற பக்கா தமிழர்கள் அழகாக தமிழில் பேசக்கூடியவர்கள் தமிழ் திரையுலகின் உச்சத்திற்கு வர தொடக்கி இருப்பது இது வரை வந்தாரை வாழவைத்த தமிழகம் தனது சொந்த இனத்தில் இருந்து கலைஞர்களை அடையாளம் காணத்தொடங்கி இருப்பதையே காட்டுகின்றது....

இதுவரை கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் ஆண்ட தமிழ் திரை உலகு தமிழர்களின் கைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கி இருக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துரோகங்கள் எத்தனை துரோகங்களடா: காங்.-திமுக துரோகங்களை பட்டியலிட்ட ஜெ.

இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இலங்கை நாட்டு ராணுவத்திற்கு பயிற்சியையும், ஆயுதங்களையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியபோது திமுக அதை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்தது,

இலங்கை இனப் போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங்குள்ள இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது,

Sundal: இலங்கை தமிழர்களை வைச்சு அம்மா அடுத்தடுத்து ஒரே சிக்ஸர் சிக்ஸர்ரா அடிச்சிட்டு இருக்கா.....

தி மு க பேட் பண்ணினாலும் மேட்ச் வின் பண்ண போறது அம்மா மாதிரி தான் இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் என்ன இருந்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் எப்பொழுதும் மனது எதையோ தேடிக்கொண்டு தான் இருக்கு.....ஆசைப்பட்டுகொண்டே தான் இருக்கு

நான் நினைக்கிறன் இறக்கும் வரைக்கும் இந்த தேடல்கள், ஆசைகள் முற்றுப்பெறாது எண்டு.....

வேலை இருந்தா இதை விட நல்ல வேலை வேணும்.....

வீடு இருந்தா இதை விட நல்ல வீடு வாங்கணும்....

கார் இருந்தா இதைக்காட்டிலும் நல்ல கார் வாங்கணும்......

இந்த பொண்ண விட அந்த பொண்ணு சூப்பர் பேசாமா அவள லவ் பண்ணி இருக்கலாமோ.....

இப்பிடி தேடல்களும், ஆசைகளும் தொடர்ந்துகிட்டே தான் இருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாகவும், அதிகமாகவும் உயிர் வாழ பேருதவியாக இருப்பது பவள உயிரிகள் எனப்படும் பவளப்பாறைகள்.

பவளப்பாறைகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை,
கண்டத்திட்டுப் பவளப்பாறைகள்,தடுப்புப் பவளப்பாறைகள்,
வட்டப் பவளத்திட்டுகள் எனப்படும்....

கடலை வாழ்விடமாக கொண்ட இப் பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக அடர்ந்து விரிந்து வாழக்கூடியவை. இக்கூட்ட மானது கால்சியம் கார்பனேடால் (calcium carbonate) ஆன கடினக் கூட்டை கொண்டுள்ளது. இவ்வகை பவளப் படுக்கைகள் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படும். மிகுந்த ஆழமான கடல் பகுதிகளில் வாழும் இப் பவளப் பாறைகளுக்கு ஒளிச்சேர்க்கை உயிரிகளான டைனோப்ல ஜெல்லேட் (Dinoflagellates) உடன் நட்புகொண்டிருக்கிறது. டைனோப்லஜெல்லேட் சூரிய ஒளி யை பயன் படுத்தி பவளப் பாறைகளுக்கு சக்தியூட்டுகிறது மேலும் அச் சூரிய ஒளியின் மூலம் கணிமக்கூட்டை(mineralized skeleton) பாதுகாப்பிற்காக உருவாக்குகின்றது இது பவள கால்சிபிகேசன்(Coral Calcification) எனப்படும்.

இவை முழுமையான சுண்ணாம்புக் கற்களால் ஆன ஒரு உயிரினமாக இருந்தாலும் மற்ற நுண்ணுயிரிகளைத்தான் உணவாக உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. பொதுவாக பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் எனவும் சொல்லலாம். இப்பாறைகளில் உள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் உயிரிழந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து விடும்.

இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.கடலில் ஆழ மில்லாத பகுதிகளில் அதிகம் காணப்படும் பவளப் பாறைகள் குழிமெல்லுடலிகள் என்ற வகையை சேர்ந்த உயிரினங்க ளாகும்.

இவற்றின் இளம்பருவம் பிளானுலா எனப்படுகிறது.கட்டியான பாறை போன்ற இடங்களில் ஒட்டி வாழ்ந்து பின்னர் வளர்ச்சி யடைந்து பாலிப் என்ற பருவத்தை அடைந்து பாலிப் கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளால் ஆன ஒரு குடுவை போன்ற கூட்டிற்குள் இருக்கும். பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன.

இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது.பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன.இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது.

இந்தியாவில் மட்டும் 200 வகைகள் இருக்கும் இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம். கடினமான வகை பவளப் பாறைகளில் மனிதமூளை வடிவம், மான்கொம்பு வடிவம்,மேஜை மற்றும் தட்டு வடிவம் ஆகியனவும் அடங்கும்.கடல் விசிறி உயிரினம் மிருதுவான பவளப்பாறை வகையை சேர்ந்தது. இவை பார்ப்பதற்கு செடிகள் அல்லது சிறு கொடிகள் போலவும் நீண்டும் காணப்படும்.
 
1959805_665394473502487_889936420_n.jpg
 
 
இன்று படித்ததில் பிடித்தது.. 
 
  • கருத்துக்கள உறவுகள்

குவாத்தமாலா நாட்டின் தேசிய பறவை [ கெட்ஸ் சால் - quetzal ] அந்த நாட்டின் ரூபாய் நோட்டுக்கும் இதுதான் பெயர்..

1907581_425855347558645_605570371_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

FIFA World Cup 2022 Football Stadium located on the Arabian Gulf of Qatar.

 

1901258_552401801524604_771641382_n.jpg

யாயினி புதுத் திரி திறந்தால் நல்லது இது சுண்டலின் திரியல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி புதுத் திரி திறந்தால் நல்லது இது சுண்டலின் திரியல்லவா!

 

 

ஓம் ..நீங்கள் சொல்பவற்றை கவனத்தில் எடுக்கிறன்..இருந்தாலும் ஏற்கனவே சுண்டுவிடம் அனுமதி பெற்றே சிலவற்றை இணைக்கிறனான்.

ஓம் ..நீங்கள் சொல்பவற்றை கவனத்தில் எடுக்கிறன்..இருந்தாலும் ஏற்கனவே சுண்டுவிடம் அனுமதி பெற்றே சிலவற்றை இணைக்கிறனான்.

 

 

ஓ.... ஓக்கே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்டு ஜி : சுண்டு ஜி....பெரிய ஸ்க்ரீன் நோக்கியா மொபைல் வாங்கியும் பிரயோஜனம் இல்லாம போய்டிச்சு

சுண்டல் ஜி : ஏண் அண்ணே ...என்னாச்சு?

நண்டு ஜி : நோக்கியா மொபைல ஆன் பண்ண உடனே ரெண்டு பேர் கைய குடுத்துகிறாங்களே, அது யாருன்னு பாக்கலாமுன்னு பாத்தா,அந்த பெரிய ஸ்க்ரீன்லயும் கை மட்டுந்தான் தெரியுது.....ச்சே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்:

வறுமையில் உள்ள வெள்ளையர்களே இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகின்றனர்!- சரத் பொன்சேகா

hahahah சூப்பர் .... 100 ல ஒரு வார்த்தை

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்:

வறுமையில் உள்ள வெள்ளையர்களே இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகின்றனர்!- சரத் பொன்சேகா

hahahah சூப்பர் .... 100 ல ஒரு வார்த்தை

 

 

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. வறுமையாக இருப்பதனால் சுற்றுலா போகினமாம்...ம்ம்ம்..வேறை.....வேறை. :lol:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிறிலங்கா கௌரவத் தூதரகம் ஒன்றை இன்று திறக்கவுள்ளது.

சுண்டல்: எல்லாம் தேங்க்ஸ் டு அசின் .... அசினின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிறிலங்கா கௌரவத் தூதரகம் ஒன்றை இன்று திறக்கவுள்ளது.

சுண்டல்: எல்லாம் தேங்க்ஸ் டு அசின் .... அசினின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி.

 

அதென்ன கௌரவத் தூதரகம்? அங்கை என்னென்ன வேலையெல்லாம் செய்வினம்?  :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் கதர் வேஷ்டிகளுக்கும் கருப்பு சட்டைகளுக்கும் சண்டை.....

இடையில் புகுந்த பல பேருக்கு உடைந்தது மண்டை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: விமானப்படைத்தளபதி ஓய்வு பெறுகின்றார்......

சுண்டல்: அப்பிடியே அண்ணைக்கு ஒரு வெளிநாட்டு தூதுவர் பதவி பார்சல் plz ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாழ்க்கையடா ... வெளிநாட்டில பிறந்து வளந்த இந்த பொண்ணுங்களுக்கு ஒழுங்கா தமிழும் தெரியா எங்களுக்கு french , german , எண்டு எதுவும் தெரியா.... இதுக்காக நடுவுல ஒரு interpreter ah. உக்கார வைச்சா பேசமுடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வருடங்களில் australia பாதுகாப்பு செலவீனம் 50 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட இருக்கின்றது.

இவனுங்க யாரு கூடா சண்டைக்கு போக போறாங்க?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வருடங்களில் australia பாதுகாப்பு செலவீனம் 50 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்பட இருக்கின்றது.

இவனுங்க யாரு கூடா சண்டைக்கு போக போறாங்க?

 

நேரடியாய் சன்டை போடும் நாடுகளைவிட ,  முன்னால் நல்ல முகத்தைக் காட்டிக்கொண்டு பின்னால் மூன்றாந்தர நாடுகளுக்கு ஆப்படிக்கிற அவுஸ் ,நோர்வே , ஜப்பான் போன்ற நாடுகளுக்குத்தான் செலவு கூட...!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களில் சும்மார் 83 பக்கங்களை தாண்டி கிட்டத்தட்ட 35000 தடவைகள் பாக்கப்பட்டு யாழ் கருத்துக்களத்தில் வெற்றி நடை போடுகின்றது சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது..... நன்றி உறவுகளே உலகெல்லாம் வாழும் உங்கள் ஆதரவும் யாழ் கள நிர்வாகத்தின் ஆதரவுமே இந்த பக்கம் இந்தளவிற்கு வளர்ச்சியடைய காரணம்....

அனைவருக்கும் நன்றி......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு

இந்தளவுக்கு முட்டுக்கொடுக்கும்  போதே தெரியாதா  சுண்டல்

உள்ளே  பயம்  வந்திருக்கும் என்று...... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முந்தி எல்லாம் சிட்னி il சிவராத்திரி எண்டா இரவுல முழிச்சு சரியா 12 மணிக்கு பிறகு நண்பர்களோட ஒரு வெள்ளை வீட்ட மாங்கா ஆய போறது.... பொறுத்துப்பார்த்த வெள்ளை இப்போ மாமரம் முழுக்க மணிய கட்டி விட்டுட்டான்.....

எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரம் என்றால் என்னவென்று தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

#கருணாநிதியிடம்

@மோடி எனது நல்ல நண்பர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.