Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல பேரோட கடலை போடும் போது வார ஒரு முக்கியமான பிரச்சனை......ஏதோ ஒரு கட்டத்தில இங்க சொல்லுற பேர அங்க சொல்லி அங்க சொல்லுற பேர இங்க சொல்லி எண்டு ஒரே கலவரம் ஆகி போய்டும்...... உடன நீங்க அந்த சிட்டிவேஷன சமாளிக்க தெரியனும் அப்போ தான் தப்பிக்கலாம்.....

உடன அவா கேப்பா ஹலோ என்னோட பேரு இது நீ யார சொல்லுறான்னு உடன நீங்க உஷாராகி சாரிங்க எங்க வீட்டு நாய்க்குட்டி பேரு அது குறைச்சிட்டே இருந்திச்சா அதான் கூப்பிட்டு அதட்டினான் அப்பிடியே மாறி இங்க டைப் பண்ணிட்டன் அப்பிடி எதாச்சும் சொல்லி எஸ்கேப் ஆகணும் இல்லைனா பிகரு உஷாராகி அடுத்தவன் கூட பிஸி ஆகிடும்.....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

மீண்டும் தன்னுடைய தீர்ப்பை உறுதிபடுத்தி இருக்கின்றது நீதிமன்றம் இனியாவது இவர்களுடைய விடுதலையை இழுத்துக்கொண்டு போகாமல் இவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும் இவர்களின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றிகள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன் சிங்கர் சீசன் 3 ஆரம்பம் ஆகிட்டுது.... நடுவரா இருந்த குப்புசாமியை தூக்கிட்டு ஜென்சி அந்த இடத்துக்கு வந்து இருக்காக..... இவருடன் வழமை போல அனுராதா ஸ்ரீராம் .....

பல்லாயிரகணக்கான குழந்தைகளில்

மொத்தம் 60 குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டு நடுவர்களின் இறுதி தெரிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம அர்ஜுன் அண்ணா ஆசைப்பட்ட மாதிரி குப்புசாமிய தூக்கியாச்சு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி என்பவர் தண்டனை கொடுப்பவர் மட்டுமே என்கிற எண்ணத்தை மாற்றியிருக்கும் அய்யா சதாசிவம் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளி முத்துவின் ஆவி சீமானுக்குள் புகுந்து அ தி மு க விற்க்காக களமாட போகின்றதாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி அழைப்புக்கள் பதிலின்றி போக தொடர்பும் தொலைவானதுபோல ஆக எதனாலே இதுவென்று காரணங்கள் தேட உறவின் பிரிவாலே உள்ளம் உருகி வாட உன் உரிமைகளையும் உணர்வுகளையும் உருக்குலைத்த உறவுகளுக்கு பயந்தாயோ இல்லை இவன் பிதற்றுகிறான் என்று என்னை பரிகாசிக்க நினைத்தாயோ நேற்று வரை எவரும் எனை தேடியதில்லை நான் உன்னை தேடியபின் நாளும் நீ என்னை தேடினாய் நீடிக்கும் நேசம் என்றாய் இன்று எங்கே ஓடி ஒளிந்து கொண்டாய் வாடி நிற்கிறேன் தெரியவில்லையா ? சூழ்நிலை தடுக்கிறதே நேரமில்லையோ

இன்றுவரை உனக்கு நான் தந்த மதிப்பு இன்னொருவருக்கு தந்ததுமில்லை இனியும் தரப்போவதில்லை உள்ளத்து உணர்வுகளை உள்ளபடி பகிர்ந்து கொண்டேன் உன்னாலே பல நாட்கள் ஆறுதல் கண்டேன் அதிகளவில் உரிமையை எடுத்துக்கொண்டேன் அது தவறோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருமான வரியை பதவிக்கு வந்தவுடன் உயர்த்தியை பிரெஞ்சு ஜனாதிபதி இப்பொழுது வருமான வரியை குறைக்க போகின்றாராம்.... எல்லாம் தேர்தலில் மக்கள் அளித்த அதிரடி தீர்ப்பு பிரதமரில் இருந்து அனைவரையும் பதவி விலக வைத்து இருக்கின்றது போற போக்கில் ஜனாதிபதியாக இவர் மீண்டும் தெரிவு செய்யப்பட மாட்டார் என்றே தோன்றுகின்றது மக்கள் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள தெரியாத மனிதர்....

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோ கர்ணன் இறுதி யுத்தம் வரை நின்றவராம் ஒரு காலை இழந்தவராம் அதனால் அவர் என்ன வேணும் எண்டாலும் எழுதலாமாம் யோ கர்ணன் வெறும் காலை மட்டும் தான் இழந்தார் ஆனால் எத்தனை 1000 கணக்கான போராளிகள் தங்களையே இழந்தார்கள்.... முதலில் இறந்த தனது நண்பர்களை கொஞ்சமாவது மதிக்க பழகட்டும் கர்ணன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு லவ் பண்ணின,

வீட்ல எதிர்ப்பு. அப்புறம் சமாதானமாகி

பாக்கணும்னாங்க. பையன வீட்டுக்கு

கூட்டி வந்தா

.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச

ஆரம்பிச்சாங்க.

என்னப்பா உன் எதிர்காலத் திட்டம்

என்ன?ன்னாரு.

பையன் யோசிக்காம, அதெல்லாம்

கடவுள் பாத்துப்பார்னான்.

-

சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு

இருக்க?

அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்

கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த,

குழந்த குட்டி பணத்துக்கு?

அதெல்லாம் கடவுள் பாத்துப்பார்

-

பொண்ணு வந்து கேட்டா, பையன் எப்படிப்பா?

-

ஓ தங்கமான பையன், என்னை கடவுளா

நினைக்கிறான்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும், இதே நிலை நீடித்தால், சீமான் அண்ணாச்சி சொன்னது என்னாச்சி என்ற தலைப்பிட்டு போஸ்டர் ஓட்ட சில தமிழ் அமைப்புகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

Hahahhah super

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரையுலகில் மார்க்கெட் போன நடிகைகளை கனடாவிற்கு அழைத்து கவுரவித்து வாழ்க்கை கொடுக்கும் கனடிய தமிழர்களின் நல்லெண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது

வாழ்க கனடிய தமிழர்களின் கலைச்சேவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தங்களையே அழித்து கொண்டாலும் யோ கர்ணன் போன்றவர்களுக்கு இன்னும் சோறு போட்டுக்கொண்டு தான் இருக்கின்றார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீர் என்று ஒரு நாள் ஐக்கிய நாடுகளின் படைகள் தாயக பிரதேசம் எங்கும்......

யோ கர்ணன் எழுதுகின்றார் .....

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு என் வீட்டை சுற்றி சிலர் வாளுகள் பொல்லுகளுடன் நின்று...... என்னை இப்பிடி எல்லாம் எழுத சொன்னார்கள்..... இப்பொழுது இந்த படை வந்திருப்பதால் எனக்கு குச்சி ஐசும் குருவி மிட்டாயும்

வாங்கி தருவார்கள்.....அதனால் 2009 kku பிறகு நடந்த அவலங்களை கதையாக எழுத போகின்றேன்.....

கதையாக .... :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோ கர்ணன் மீதானா என்னுடைய விமர்சனங்கள் சிலருக்கு பிடிக்குது இல்லை..... அவர் செய்த தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும் என்கின்றார்கள்.....

அனைத்து போராளிகளையும் எனது நெஞ்சங்களில் வைத்திருப்பவன் நான் தியாங்களை போற்றுபவன் நான் மாறாக யாரையும் மிதிக்க நினைத்ததது இல்லை.... அதனால் தான் எனக்கு பல்வேறு இயக்கங்களை சேர்ந்த அண்ணன் மார்களை தெரியும் முஸ்லிம் நண்பர்கள் சிங்கள நண்பர்கள் என்று அனைவருடனும் பழக்கம் உண்டு.......

புலிகள் ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்டவர்களும் கிடையாது

விமர்சனங்களை இடம் , பொருள் ஏவல் .....காலம் அறிந்து வைக்க வேண்டும்.... அதுவும் முக்கியமான ஒரு கால கட்டத்தில் தமிழ் இனம் நிக்கும் போது தன்னை பிரபலபடுத்தி கொள்வதற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தியாகங்களுக்கு மேல் ஏறி நின்று தன்னை பிரபலபடுத்த நினைப்பதும்..... விமர்சனம் செய்வதும் தவறு...

நன்றி  சுண்டல்....

கிட்டத்தட்ட எனது நிலையும் இது தான்

இலக்கு நோக்கிய  பயணத்துக்கு தடையாக

அல்லது 

இடைஞ்சலாக அமையும் எதையும் தற்பொழுது செய்யக்கூடாது என்பதே எனது நிலை

இலக்கை  அடைந்த பின்

அவர்களுக்கான கௌரவப்படுத்தல் என்று வரும் போது

விமர்சனங்களை பதிவிடலாம்

அந்த நேரம் பிரான்சின் பதிவை நானே இடுவேன்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்தாளரின் காமடி

"நாங்க எல்லாத்தையும் பாத்துக்கொண்டு தான் இருக்கிறம்"

சுண்டல்: புலிகளுக்கு முன்னரும் பாத்துக்கொண்டு தான் இருந்தீங்க...... புலிகள் இருக்கும் போதும் பாத்துக்கொண்டு தான் இருந்தீங்க.... புலிகள் இல்லாத போதும் பாத்துக்கொண்டு தான் இருக்கீங்க..... இனியும் பாத்துக்கொண்டு தான் இருப்பீங்க .... ஏன் என்றால் உங்களால் முடிந்தது அம்புட்டு த்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேமாதிரி இன்னும் வரட்டும் சுண்டல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா ஆட்சியில சாம்பார் சூப்பரா இருக்கு… அதனால ஓட்டு போடுங்க: ராமராஜன்

சாம்பாரு சூப்பரா இருந்து என்னண்ணே பண்ணுறது.... சாராயம் quality கம்மியா இருக்காமே அண்ணே....குடிமகன்கள் எல்லாம் புலம்புறாங்க...... டாஸ்மார்க் ல சரக்க குவாலிட்டியா ஊத்தி குடுத்திட்டு ஒட்டு கேளுங்கண்ணே..நாளை நமதே...நாற்பதும் நமதே.....

  • கருத்துக்கள உறவுகள்

-----

விமர்சனங்களை இடம் , பொருள் ஏவல் .....காலம் அறிந்து வைக்க வேண்டும்.... அதுவும் முக்கியமான ஒரு கால கட்டத்தில் தமிழ் இனம் நிக்கும் போது தன்னை பிரபலபடுத்தி கொள்வதற்காக ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தியாகங்களுக்கு மேல் ஏறி நின்று தன்னை பிரபலபடுத்த நினைப்பதும்..... விமர்சனம் செய்வதும் தவறு...

இந்தப் பக்கத்தில் உள்ள...

சுண்டலின்... பார்த்தது, கேட்டது, படித்தது அவ்வளவும் அருமையான கருத்துக்கள்.

சில கருத்துக்கள்..... மீண்டும், மீண்டும் வாசிக்கத் தூண்டின. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சுண்டல்....

கிட்டத்தட்ட எனது நிலையும் இது தான்

இலக்கு நோக்கிய  பயணத்துக்கு தடையாக

அல்லது 

இடைஞ்சலாக அமையும் எதையும் தற்பொழுது செய்யக்கூடாது என்பதே எனது நிலை

இலக்கை  அடைந்த பின்

அவர்களுக்கான கௌரவப்படுத்தல் என்று வரும் போது

விமர்சனங்களை பதிவிடலாம்

அந்த நேரம் பிரான்சின் பதிவை நானே இடுவேன்........

சரியான கருத்து விசுகு.

ஆனால்... சில சனங்களுக்கு, அது புரியுதில்லையே....

இவர்களின்... விமர்சனத்தால், எதிரிக்கு உதவி செய்வதுடன்... நிர்கதியாய் நிற்கும் பல தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை... எப்போது உணரப் போகின்றார்கள்.

அல்லது வேண்டுமென்றே... செய்கிறார்களா? :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் அந்த புல் இந்த புல் என்று விதம் விதமா energy drinks வந்தாலும் சுடச்சுட cafe குடிச்சா பிறகு வருகின்ற உற்சாகமும் உத்வேகமும் எந்த ஒரு பாணத்திலும் இருப்பதில்லை.....

நண்டு ஜி: யோவ் சுண்டு நான் குடிக்கிற சோம பாணத்த குடிச்சு பாரு காத்தில பறப்பா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி பொண்ணுங்க பையன்களை எல்லாம் பின்னாடி லோ லோ எண்டு அலைய வைச்சு சாதாரண தர பரீட்சையில் யாழ் மாவட்டத்திலையே முன்னுக்கு வந்து இருக்காக அதனால இது செல்லாது செல்லாது... நாட்டாண்மை தீர்ப்ப மாத்துலே...

மாற்றுக்கருத்தாளரின் காமடி

"நாங்க எல்லாத்தையும் பாத்துக்கொண்டு தான் இருக்கிறம்"

சுண்டல்: புலிகளுக்கு முன்னரும் பாத்துக்கொண்டு தான் இருந்தீங்க...... புலிகள் இருக்கும் போதும் பாத்துக்கொண்டு தான் இருந்தீங்க.... புலிகள் இல்லாத போதும் பாத்துக்கொண்டு தான் இருக்கீங்க..... இனியும் பாத்துக்கொண்டு தான் இருப்பீங்க .... ஏன் என்றால் உங்களால் முடிந்தது அம்புட்டு த்தேன்

சூப்பர் பாஸ் இப்பதான் இவற்றை எல்லாம் பார்க்க நேரம் கிடைத்தது .தொடருங்கள் .மீண்டும் வருவேன்  :D  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.