Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் பற்றிய செய்தி மீண்டும் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவரத்தொடங்கி இருக்கின்றது...... அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாக.......

சில நாடுகளுக்கு ஜனநாயகத்தை விட சர்வாதிகாரம் நிறைந்த சதாம் உசேன் போன்றவர்களின் ஆட்சி தான் சிறந்தது என்பதனை மீண்டும் இப்பிடியான செய்திகள் சொல்லி நிற்கின்றன சதாம் ஆட்சியின் போது நிச்சியமாக இத்தனை குண்டுகள் வெடித்திருக்காது.... தினமும் 100,200 என்று மக்கள் பலியாகி இருக்க மாட்டார்கள்...... செத்த வீட்டில் குண்டு, சந்தையில் குண்டு, தொழுகை நடாத்தும் இடங்களில் குண்டு என்று தினமும் வெடித்துக்கொண்டே தான் இருக்கின்றது...... ஜனநாயகத்தின் காவலனாக தன்னை அடையாளம்

காட்டிக்கொண்டு படையெடுத்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இராக்கில் இருந்து மெல்ல கழண்டு கொண்டு விட்டன..... ஆனால் ஜனநாயகம் இருந்ததை விட படுகுழிக்குள் கொண்டு செலப்பட்டு இருகின்றது........

அதே போல எகிப்த்தின் நிலைமை முபாரக்கின் ஆட்சி இறக்கப்பட்டதன் பின்பு அங்கே ஒரு நிலையான ஆட்ச்சியை அமைக்க முடியவில்லை......

...

லிபியாவின் நிலைமையும் அதே........

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈராக் பற்றிய செய்தி மீண்டும் பரபரப்பாக ஊடகங்களில் வெளிவரத்தொடங்கி இருக்கின்றது...... அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாக.......

சில நாடுகளுக்கு ஜனநாயகத்தை விட சர்வாதிகாரம் நிறைந்த சதாம் உசேன் போன்றவர்களின் ஆட்சி தான் சிறந்தது என்பதனை மீண்டும் இப்பிடியான செய்திகள் சொல்லி நிற்கின்றன சதாம் ஆட்சியின் போது நிச்சியமாக இத்தனை குண்டுகள் வெடித்திருக்காது.... தினமும் 100,200 என்று மக்கள் பலியாகி இருக்க மாட்டார்கள்...... செத்த வீட்டில் குண்டு, சந்தையில் குண்டு, தொழுகை நடாத்தும் இடங்களில் குண்டு என்று தினமும் வெடித்துக்கொண்டே தான் இருக்கின்றது...... ஜனநாயகத்தின் காவலனாக தன்னை அடையாளம்

காட்டிக்கொண்டு படையெடுத்த அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இராக்கில் இருந்து மெல்ல கழண்டு கொண்டு விட்டன..... ஆனால் ஜனநாயகம் இருந்ததை விட படுகுழிக்குள் கொண்டு செலப்பட்டு இருகின்றது........

அதே போல எகிப்த்தின் நிலைமை முபாரக்கின் ஆட்சி இறக்கப்பட்டதன் பின்பு அங்கே ஒரு நிலையான ஆட்ச்சியை அமைக்க முடியவில்லை......

...

லிபியாவின் நிலைமையும் அதே........

 

 

ஏன் ராசா  கனதூரம் போவான்?

நம்ம நிலமை என்ன?

 

இணைத்த தலமை  என்றும் சமாதானத்தூதுவர் என்றும்

கண்காணிப்பாளர்கள் என்றும் வந்து

மோசம் செய்து

விடுவித்த மக்களின் இன்றையநிலை என்ன???

மக்களின் அழிவுகள்போதும் போதும் என்பதால்

குண்டுகளை  வெடிக்கவைக்க தமிழர்கள் விரும்பவில்லை

அவ்வளவு தான்..

ஆனால் அதற்கான காரணங்கள் அத்தனையும்

முன்னரைவிட ஆயிரம் மடங்கு தற்பொழுது உள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்ப்பந்தில் கத்துக்குட்டியான ஆஸ்திரேலியா மிகப்பெரிய மலையான சில்லி நாட்டுடன் மொத இருக்கின்றது...... முடிவுகள் பெரும்பாலும் என்னவாக இருக்கும் என்று தெரிந்தாலும் கால்பந்தில் ஆஸ்திரேலியா மிக வேகமாக வளர்ந்து வருகின்றது......... பெரும்பாலும் ரக்பி , கிரிக்கெட் விளையாட்டுடன் இருந்த ஆஸ்திரேலியர்கள் இப்பொழுது மெல்ல மெல்ல கால்பந்தின் ரசிகர்களாகவும் மாறி வருகின்றார்கள்........ இன்னும் சில வருடங்களில் கால்பந்தின் அசைக்க முடியாத சக்திகளில் ஒன்றாக வரும்...... அது வரை அவர்களுக்கு இப்பிடியான போட்டிகள் பயிற்சியாக அமையும்......அவர்கள் இவளவு பாதை கடந்து பிரேசில் வரை வந்ததே பெரிய விடையம்

பெரிய மலைகளை சரித்த கத்துக்குட்டி அணிகளும் உண்டு என்பதனையும் மறுபதற்கு இல்லை......

போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல தமிழ் எழுத்தாளர் + இலக்கியவாதி ஆகணுமா?

உங்களுக்கு தேவையான தகுதிகள்

புலி வாந்தி எடுக்க தெரியனும்

அப்பிடியே பெண்ணியம் , பெண் விடுதலை போன்றவை பேச தெரிந்திருக்கணும்......

இத்தோட சேர்த்து சாதியமும் பேச தெரிந்திருப்பது நீங்கள் பிரபல தமிழ் எழுத்தாளர்+ இலக்கியவாதி ஆக முக்கிய தகுதிகள்.....

அதுக்கு பிறகு மாதம் மாதம் நடைபெறும் இலக்கிய கூட்டங்களில் புலிவாந்தி எடுத்து இன்புறலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்கு தேவையான தகுதிகள் புலி வாந்தி எடுக்க தெரியனும் அப்பிடியே பெண்ணியம் , பெண் விடுதலை போன்றவை பேச தெரிந்திருக்கணும்...... இத்தோட சேர்த்து சாதியமும் பேச தெரிந்திருப்பது நீங்கள் பிரபல தமிழ் எழுத்தாளர்+ இலக்கியவாதி ஆக முக்கிய தகுதிகள்.....
அதுக்கு பிறகு மாதம் மாதம் நடைபெறும் இலக்கிய கூட்டங்களில் புலிவாந்தி எடுத்து இன்புறலாம்..... எனக்கு இந்த ஆசை முள்ளிவாய்காலுக்கு முதலே இருந்தது ....இப்ப துணிச்சிட்டன்...இனி நானும் ஒரு இலக்கியவாதி....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போல்லாம் புலிகளை சிங்களம் மறந்தாலும் தினமும் நினைச்சிட்டு இருக்கிறது இந்த மாற்றுக்கருத்தாளர் தானாம் ..... புலிகளிட்ட வாங்கி கட்டினத இன்னும் மறக்க முடியாம தவிக்கிணமாம்...., கனவுல கூட அது தான் வந்து வந்து போகுதாம் ..... அதனால ஒரே வாந்தியா இருக்காம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இட்ஸ் ஓகே ஆஸ்திரேலியா தோத்தாலும் ஓரளவு கவுரவமா தான் தோத்திருக்கு...... ஸ்பெயின் தான் நாறிடிச்சு........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அட இங்க பார்ரா ஹக்கீமுக்கு இலங்கையில இனப்பிரச்சனை இருக்கெண்டு தெரிஞ்சிருக்கு, அதிசியம்த்தேன்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து நீ பிறந்து வளர்ந்த உனது சொந்த ஊருக்கு போயிட்டு வந்து எழுதினால் நீயும் ஒரு பயணக் கட்டுரையாளனே.....,

‪#‎அப்போ‬ நான் வட்டா....

  • கருத்துக்கள உறவுகள்

இட்ஸ் ஓகே ஆஸ்திரேலியா தோத்தாலும் ஓரளவு கவுரவமா தான் தோத்திருக்கு...... ஸ்பெயின் தான் நாறிடிச்சு........

 

 

இங்கு இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் விளையாட்டு  தொடங்க  இருந்தது

11.30 க்கு மகன் சொன்னான் 5-0 சிலிக்கு என.

 சுண்டலுக்கு வருத்தம் :D தெரிவித்துவிட்டு போய்ப்படுத்துவிட்டேன்

விடிய  எழும்பி  முதலாவது வேலையாக செய்தியைக்கேட்டால்

அந்தளவுக்கு இல்லை. :icon_idea:

பெரிய உலகத் தலையெல்லாம் 5-1 என்று தோற்கும் போது........

வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன!– பிரித்தானியா

சுண்டல்:

இப்பிடியே எம்புட்டு காலம் தான் கவலப்பட்டிட்டே இருப்பீங்க......ஒரு நடவடிக்கையும் எடுக்காம? அப்பிடின்னு மக்கள் கேக்குறாங்க

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்பட்டு,கவலைப்பட்டே கரியா போன ஒருவர் ஓய்வு பெறும் எண்ணத்தை எடுத்துள்ளாராம் அறிந்தீர்களோ சுண்டு பிரதர்.. :)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

55 வருட அரசியல் வாழவில் நான் எதிர் பார்த்த சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதால், பாராளுமன்ற அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன். என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஹா ஹா ஹா இதான் மிகப்பெரிய காமடி ......இம்புட்டு நாளும் உங்க காமடி பேச்சாலும் காமடி கடிதங்களாலும் எங்கள சிரிக்க வைச்சதுக்கு ரொம்ப நன்றி......

தமிழ் தேசியத்தில் இருந்து வழி தவறியதால் இன்று முகவரி அற்ற மனிதனாக மூலையில் ஒதுங்க வேண்டிய துயரமான முடிவு உங்களுக்கு வந்தது ஏன் என்று இனியாவது சிந்திப்பீர்கள் என்று நம்புகின்றேன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் ஆரியர்கள் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் திராவிடர்கள் என்றும் இந்திய மத்திய கொள்கை வகுப்பாளர்கள் நினைக்கும் வரை இலங்கை விடையத்தில் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் தம்பிங்க அடிச்சிகிறாங்க நாம விலத்தி இருப்பம் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ உலகின் அதிசயம் தான்......

கோமாவில் இருந்த பார்முலா ஒன் லெஜன்ட் மைக்கேல் ஷூமாக்கருக்கு நினைவு

திரும்பியது: டிஸ்சார்ஜ் ஆனார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைக்கேல் ஷூமாக்கரிடம் பணம் இருந்ததால் 6 மாதம் கழித்தும் அவர் காப்பாற்ற பட்டிருகின்றார் இதுவே ஒரு சாதாரண ஆளா இருந்திருந்தா லைப் சப்போர்ட் எப்பவோ எடுக்கப்பட்டு அவர் இறந்தும் இருப்பார்.....

இப்பிடியான சில சம்பவங்கள் தான் அவ்வபோது பணத்தின் அவசியத்தை சொல்லி செல்கின்றன...

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்டூஸ் உணவகத்தில போய் போர்த்துக்கல் ஸ்டைல் சிக்கன் வெட்டிற ஆக்கள் எல்லாம் போர்த்துக்கல்லுக்கு சப்போர்ட் பண்ணியே ஆகணும் ....

  • கருத்துக்கள உறவுகள்

மைக்கேல் ஷூமாக்கரிடம் பணம் இருந்ததால் 6 மாதம் கழித்தும் அவர் காப்பாற்ற பட்டிருகின்றார் இதுவே ஒரு சாதாரண ஆளா இருந்திருந்தா லைப் சப்போர்ட் எப்பவோ எடுக்கப்பட்டு அவர் இறந்தும் இருப்பார்.....

இப்பிடியான சில சம்பவங்கள் தான் அவ்வபோது பணத்தின் அவசியத்தை சொல்லி செல்கின்றன...

 

சந்தோசமான  செய்தி

 

அவர் செய்த நல்ல காரியங்கள்

புண்ணியங்களை

அவரைக்காப்பாற்றியுள்ளன

வாழ்க  வளமுடன்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அ தி மு க பிறகு தி மு க இப்போ பா ஜ க அடுத்து எந்த கட்சி குஸ்பு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வார நீயா நானா நிகழ்வில் பங்கு பற்றிய அத்தனை பெண்களும் ஒரு சினிமாவில் மட்டுமே காணப்படும் வாழ்கையை எதிர்பாக்கிறாங்க.......பாவங்க சினிமாவில் இருந்து நிஜ வாழ்க்கைக்குள் வரும் போது.......வாழ்க்கை கசக்க போகுது....

#பாவம் பசங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆருக்குப் பின், மாறிவிட்ட அரசியல் தட்பவெட்ப நிலையில், ஜெயலலிதா, தனக்கான அரசியல் பின்புலமாக தேவர்களையும், வெள்ளாள கவுண்டர்களையும் கொண்டு அரசியல் செய்து வருகிறார். அதனால் தான், அவர்கள், 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பரிசாக கிடைத்த போதும், தேவர்களும், வெள்ளாள கவுண்டர்களும், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, 66 தொகுதிகளில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தனர்.

லோக்சபா தேர்தலில் அ.திமு.க.,வுக்கு, 75 சதவீத தேவர்களும், 55 சதவீத வெள்ளாள கவுண்டர்களும் ஓட்டளித்து, கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தென் மாவட்டங்களிலும் மத்திய மாவட்டங்களிலும் கட்சி கூடுதலான ஓட்டுகளை பெற்றதற்கான காரணம் இதுதான்.சங்கரன் கோவில் இடைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு டிபாசிட் பறிபோனது. ஆனால், முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி போன்றவர்களை வைத்து, வன்னியர்களை முக்கியத்துவப்படுத்தி ஒருங்கிணைத்ததால், ஏற்காட்டில், 30 சதவீத ஓட்டுகளைப் பெற்று, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், ஜாதி கட்சிகள் சில, தி.மு.க., கூட்டணியில் இருந்தும், லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது.அதனால், எதிர்காலத்தில், வட மாவட்டங்களில் வன்னியர்களையும், தென் மாவட்டங்களில் நாடார்களையும் பிரதானமாகக் கொண்டு, தி.மு.க., அரசியல் செயல்பட வேண்டும். தி.மு.க., வின் பிரதான பின்புலமாக அவர்களை ஆக்க வேண்டும். அப்படி செய்தால் தான், கட்சிக்கு புதிய தெம்பு கிடைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி வளைச்சு இவா அடுத்த தேர்தலில் அமெரிக்க மக்களே நீங்க என்னைய தெரிவு செயிங்க என்று சொல்ல வாரா போல.....

US should have female leader: Clinton

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்ப்பந்து உலக கிண்ண போட்டிகளில் மைதானத்தில் விளையாடும் வீரர்களை விட டிவி க்கு முன்னாடி நிண்டு சவுண்டு விடுபவர்கள் தான் ஜாஸ்தியா இருக்கு

#அவதானிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் அதி தீவிர விசுவாசி நம்ம ஆல் இன் ஆல் அஸ்வர் MP இருக்கும் போது முஸ்லிம் மக்களுக்கு என்ன கவலை எல்லாம் அவர் பாத்துப்பார் கவலைய விடுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.